Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 18 October 2016

போலி கல்வி சான்றிதழ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக கோரிய மனு தள்ளுபடி !!

போலி கல்வி சான்றிதழ் விவகாரத்தில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி நேரில் ஆஜராக கோரிய மனுவை தில்லி நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

2004-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலிலும், 2011-ல் நடைபெற்ற மாநிலங்களவை தேர்தலிலும், 2014-ல் நடந்த மக்களவைத் தேர்தலிலும் போட்டியிட்ட ஸ்மிருதி இரானி 
தன்னுடைய கல்வித் தகுதியை மூன்று விதமாக குறிப்பிட்டுள்ளார்.
இதுதொடர்பாக தில்லி நீதிமன்றத்தில் எழுத்தாளர் அக்மர் கான் வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு நீதிபதி ஹர்விந்தர் சிங் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.

அப்போது, அமைச்சர் ஸ்மிருதி இரானியின் கல்வித் தகுதி குறித்த ஆவணங்களைத் தாக்கல் செய்ய வேண்டும் என்று தேர்தல் ஆணையத்துக்கும், தில்லி பல்கலைக்கழகத்துக்கும் நீதிபதி உத்தரவிட்டார்.

இதனையடுத்து தேர்தல் ஆணையம் ஸ்மிருதி இரானி தொடர்பான ஆவணங்களை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

இந்நிலையில் இன்று வழங்கப்பட்ட தீர்ப்பில்,  ஸ்மிருதி இரானிக்கு சம்மன் அனுப்ப மறுத்துவிட்டதோடு, மனுவையும் தள்ளுபடி செய்தது. இரானி அமைச்சராக இருப்பதால் தேவையற்ற தொந்தரவு கொடுப்பதற்காக இந்த வழக்கு தொடரப்பட்டுள்ளது. பல வருடங்களாகி விட்டதால் உண்மை சான்றிதழ்கள் சேதமடைந்து விட்டன, நீதிமன்றத்திற்கு நகல் தேவையில்லை. எனவே, ஸ்மிருதி இரானிக்கு எதிராக சம்மன் அனுப்பக் கோரிய மனுதாரரின் கோரிக்கை நிராகரிக்கப்படுகிறது’ என நீதிபதி தெரிவித்தார்.

இனி எட்டு மொழிகளில் அனுப்பலாம் ஈமெயில்!!!

மின்னஞ்சல் தகவல் தொடர்பில் ஒரு புதிய சாதனையாக மும்பையைச் சேர்ந்த நிறுவனம் ஒன்று, ஒரே  நேரத்தில் எட்டு மொழிகளில் மின்னஞ்சல் அனுப்பும் முறையைக் கண்டுபிடுத்துள்ளது.

டேட்டா எக்ஸ்ஜேன் டெக்னாலஜிஸ் என்ற இந்த இந்திய நிறுவனத்தின் கண்டுபிடிப்புக்கு 'டேட்டா மெயில்' என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. முற்றிலும் இலவசமாக தற்பொழுது வழங்கப்படும் இந்த 'மொழி சார் மின்னஞ்சல்' சேவையானது எட்டு இந்திய மொழிகளில் கிடைக்கும்.

மேலும் இந்த சேவையானது ஹிந்தி, குஜராத்தி, உருது, பஞ்சாபி, தமிழ், தெலுங்கு, பெங்காலி மற்றும் மராத்தி ஆகிய மொழிகளில் மின்னஞ்சல் முகவரிகளை உருவாக்கி கொள்ளவும் வழி செய்கிறது.

ஆங்கிலத்தில் தவிர அரபி, ருஷ்யன் மற்றும் சீனம் உள்ளிட்ட சர்வதேச மொழிகளிலும் இந்த மின்னஞ்சல் சேவை வழங்கப்படுகிறது.

இந்த விபரங்கள் அனைத்தும் அந்நிறுவனத்தின் நிறுவனர் அஜய் தத்தா இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

5000 G.K QUESTION & ANSWERS.. HISTORY, GEOGARAPHY, ECONOMY, POLITICS, SPORTS & SCIENCE.

CLICK HERE TO DOWNLOAD - 5000 G.K QUESTION & ANSWERS..

பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதம் மார்க் எடுத்தால் மட்டுமே என்.ஐ.டி.யில் இடம்: புதிய நடைமுறை அமலுக்கு வருகிறது

மத்திய அரசு நாடு முழுவதும் ஐ.ஐ.டி., என்.ஐ.டி. ஆகிய தொழில்நுட்ப கல்லூரிகளை நடத்தி வருகிறது. இதில், ஐ.ஐ.டி. முதன்மை கல்லூரியாக இருக்கிறது. இதற்கு அடுத்த இடத்தில் என்.ஐ.டி. கல்லூரிகள் உள்ளன.

நாடு முழுவதும் 31 என்.ஐ.டி. கல்லூரிகள் இருக்கின்றன. இதில், ஒவ்வொரு ஆண்டும் 18 ஆயிரம் மாணவர்கள் புதிதாக சேர்க்கப்படுகின்றனர்.

அவர்களுக்கு ஜே.இ.இ. என்ற பெயரில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது. அதில் வெற்றி பெற்றவர்கள் சேர்த்து கொள்ளப்படுகின்றனர்.

இதுவரை நுழைவு தேர்வு எழுதும் மாணவர்கள் பொது பிரிவினர் பிளஸ்-2 வில் 70 சதவீத மார்க்கும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 65 சதவீத மார்க்கும் பெற்றிருக்க வேண்டும் என்று விதிகள் இருந்தன.

ஆனால், இப்போது இதில், மாற்றத்தை கொண்டு வர மத்திய மனிதவள மேம்பாட்டு துறை முடிவு செய்துள்ளது. அதன்படி இந்த கல்லூரியில் சேர பொது பிரிவினர் பிளஸ்-2 தேர்வில் 75 சதவீதமும், தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் 70 சதவீதமும் மார்க் பெற்று இருக்க வேண்டும் என்று விதிகள் வகுக்கப்பட்டுள்ளன.

இது தொடர்பான சிபாரிசுகளை மத்திய இடஒதுக்கீட்டு வாரியத்துக்கு அனுப்பி உள்ளனர். அவர்கள் இறுதி முடிவு எடுத்த பிறகு இது நடைமுறைக்கு வரும்.

ஒவ்வொரு ஆண்டும் 12 லட்சத்தில் இருந்து 13 லட்சம் மாணவர்கள் வரை ஜே.இ.இ. நுழைவு தேர்வு எழுதுகின்றனர். புதிய நடைமுறை அமலுக்கு வந்தால் நுழைவு தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை 2 லட்சம் வரையிலேயே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. இந்தியாவில் லோடி பேரரசு முடிவுக்கு வர காரணமான போர் - பானிபட் போர்
2. பானிபட் போர் நடந்த ஆண்டு - 1526
3. பானிபட் போருக்குப்பின் தோன்றிய அரசு - முகலாயப் பேரரசு
4. பானிபட் போர் யார் யாருக்கு இடையே நடைபெற்றது - பாபர் - இப்ராஹிம் லோடி

5. நிலங்களைத் தனமாக வழங்கும் முறைக்குப் பெயர் - ஜாகிர் முறை
6. முகமதியர் அல்லாதவர் மேல் விதிக்கப்பட்ட வரி - ஜிஸ்யா வரி
 7. சுல்தானிய ஆட்சி முறை என்பது - இந்திய, பாரசீக, துருக்கிய ஆட்சிமுறைகளின் கலவை.
8. சுல்தானுக்கு ஆலோசனை வழங்க எத்தனை அமைச்சர்கள் இருந்தனர் - 4 முதல் 6
9. இஸ்லாமிய மதத்தலைவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டார் - உலமாக்கள்
10. சுல்தான்களின் நாடு எவ்வாறு பரிக்கப்பட்டது - மாநிலம்
11. மாநிலத்தின் பொறுப்பாளர் யார் - ராணுவ ஆளுநர்
12. மாநில அளவில் நீதி வழங்கும் பணியைச் செய்தவர் - காஸி
13. சுல்தான்கள் அரசின் முதன்மையான வரி - நில வரி
14. முஸ்லீம்கள் மீது விதிக்கப்பட்ட நிலவரி எவ்வாறு அழைக்கப்பட்டது -  உஷர்
15. இந்துக்களின் மீது விதிக்கப்பட்ட நிலவரி - கிராஜ்
16. சமயவரி எவ்வாறு அழைக்கப்பட்டது - ஜிஸ்யா
17. நீதிவழங்குவதில் அரசருக்கு ஆலோசனை கூறியவர்கள் - காஸிகள்
18. பல கிராமங்களின் தொகுப்பு எவ்வாறு வழங்கப்பட்டது - பர்கானா
19. சுல்தானின் ஆட்சிக் காலம் - 1206 - 1526
20. தில்லி சுல்தானியத்தை ஆண்ட வம்சங்கள் எத்தானை - 5
21. சுல்தானியர்கள் காலத்தில் சமூகத்தில் எத்தனை பிரிவுகள் இருந்தன - 4
22. தில்லி சுல்தான்களின் அரசுக்கு எதிராக உருவான இயக்கம் - பக்தி இயக்கம்
23. பக்தி இயக்கத்தினால் வளர்ந்தது - சூபிசம்
24. ராமனுஜர் காலம் - கி.பி. 12-ஆம் நூற்றாண்டு
25. ராமானுஜரின் கொள்கை - விஜிஸ்டாத்துவைதம்
26. முக்தியை அடையும் வழியாக கூறியது - பக்தி
27. ராமனுஜரின் வழித்தோன்றல் - ராமானந்தர்
28. ராமானந்தரின் சீடர் - கபீர் தாசர்
29. இறைவனின் படைப்பில் அனைவரும் சமம் என்ற கிருஷ்ண பக்தர் - வல்லபாச்சாரியர்
30. பக்தி இயக்கத்தின் தலை சிறந்த வித்தகர் - சைதன்யர்
31. ராமனும் ரஹீமும் ஒருவரே என்றவர் - கபீர்
32. சீக்கிய சமயத்தைத் தோற்றுவித்தவர் - குருநானக்
33. சீக்கியர்களின் புனித நூல் - ஆதிகிரந்தம்
34. பக்தி நெறி பரப்பிய நாமதேவர், ஏகநாதர், துக்காராம் ஆகியோர் எம்மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் - மஹாராஷ்டிரா
35. ராஜஸ்தானில் ஆடம்பர வாழ்வைத் துறந்து கிருஷ்ணபக்தையானவர் - மீராபாய்
36. சூபிகள் யார் - பாரசீகத்திலிருந்து வந்த இஸ்லாமியத் துறவிகள்.
37. சூபிகளின் பக்திப்பாடல்கள் எவ்வாறு அழைக்கப்பட்டன - கவாலிகள்
38. ஆஜ்மீரில் வாழ்ந்த புகழ்பெற்ற சூபி துறவி - நிசாமுதீன் அவுலியா
39. சுல்தான்களின் காலத்தில் உலகிலேயே மிகப்பெரிய கட்டமைப்புகளின் ஒன்று - பீஜப்பூரிலுள்ள கோல்கும்பாஸ்
40. சுல்தான்களின் காலத்தில் தோன்றிய புதிய மொழி - உருது
41. சுலல்தான்களின் காலத்தில் தோன்றிய இசை - இந்துஸ்தானி இசை
42. இந்துஸ்தானி இசையைப் பரப்பியவர்கள் - சூபிகள்
43. குதுப்மினார் யாருடைய காலத்தில் கட்டப்பட்டது - சுல்தான்கள்
44. கிதார் என்னும் இசைக் கருவி யார் காலத்தில் பழக்கத்திற்கு வந்தது - சுல்தான்கள்
45. தில்லியில் உள்ள அழகு வாய்ந்த கல்லறையில் யாருடையவை - லோடி வம்சத்தினர்
46. பாமினி அரசைத் தோற்றுவித்தவர் - அலாவுதீன் பாமன்ஷா
47. பாமினி அரசைத் தோற்றுவித்த ஆண்டு - 1347
48. பாமினிப்பேரரசின் தலைநகர் - தக்காணத்திலுள்ள குல்பர்கா
49. பாமினிப் பேரரசு உட்பகுப்பு முறைக்குப் பெயர் - ஜாஹிர்

உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு நீடிப்பு.

திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள்பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை விதிக்கக் கோரும் மாநிலத் தேர்தல் ஆணைய மனு மீதான விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது சென்னை உயர் நீதிமன்றம்.
இதனால், உள்ளாட்சித் தேர்தல் ரத்து மேலும் 4 வாரங்களுக்கு தொடரும் நிலை ஏற்பட்டுள்ளது.இந்த வழக்கில் திமுக தரப்பும், மாநிலத் தேர்தல் ஆணையமும் 4 வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சித் தேர்தல் ரத்து உத்தரவுக்கு தடை கோரிய மாநிலத் தேர்தல் ஆணையத்தின் மனு இன்று (செவ்வாய்க்கிழமை) சென்னை உயர் நீதிமன்றம் 2-வது அமர்வுமுன் விசாரணைக்கு வந்தது.அப்போது, உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்ட உத்தரவுக்கு தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துவிட்டது. மேலும் வழக்கு விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்திவைத்தது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக தமிழக அரசு மற்றும் திமுக4 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் அனுப்பியது. சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவு மூலம் உள்ளாட்சி தேர்தல் ரத்து செய்யப்பட்டது மேலும் 4 வாரங்களுக்கு தொடர்கிறது.

வழக்கு பின்னணி:

உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை மாநில தேர்தல் ஆணையம் முறைப்படி வெளியிடாததால், தேர்தல் குறித்த அறிவிப்பாணையை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது. இதனால், 17, 19-ம் தேதிகளில் நடக்க இருந்தஉள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. விதிமுறைகளின்படி, புதிய அறிவிப்பாணை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் தேர்தலை நடத்தி முடிக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.இதனை எதிர்த்து தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் சார்பில் மேல் முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், உள்ளாட்சி தேர்தலை ரத்து செய்து தனி நீதிபதி அளித்த தீர்ப்புக்கு தடைவிதிக்க மறுப்பு தெரிவித்தது. மேலும், வழக்கின் அடுத்த விசாரணை 18 ஆம் தேதி (இன்று) நடைபெறும் என்று தெரிவித்திருந்தது.அதன்படி, இன்று வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது தமிழக அரசுக்கும், திமுகவுக்கும் நோட்டீஸ் அனுப்பி வழக்கை மேலும் 4 வாரங்களுக்கு ஒத்திவைத்துள்ளது.

நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...

ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களுக்கு.... நீங்கள் NHIS(New Health Insurance Scheme) சந்தாதாரரா/சார்ந்தவரா...அவசரத்திற்கு மருத்துவ மனையில் சேர்க்க மருத்துவமனை நிர்வாகம் ஒத்துழைப்பு தரவில்லை என்றால் நீங்கள் தொடர்பு கொள்ளவேண்டியது அந்தந்த மாவட்ட(NHIS) ஒருங்கிணைப்பாளர்களைத்தான்...
1. Ariyalur # The District Collector Office, Md India Health Care Services (Tpa) Pvt., Ltd , Jayankondam Main Road, Ariyalur.621 704. Mr.Dhavabalan 7373703101

 2 . Chennai #27, Lakshmi Towers, Dr.Rk Salai, Mylapore, Chennai 6000004 Mr.Jayaraj 7373703102

3.  Coimbatore #89,GreyTown,Near Nehru Stadium ,Gandhipuram, Coimbatore-641018 Mr.Thangarasu 7373703104

4. Cuddalore #No.10 A/1, Siva Complex (Basement), Imperial Road,Cuddalore – 607 002, Mr.Selvakumar 7373703105

5. Dharmapuri #Collectorate Main Building, Dharmapuri-636705. Mr.Mahendiran 7373703106

6 . Dindigul Ak Towers,74/5, Siluvathur Raod, Kamaraja Mahal, Opp. Dindigul-624005. Mr.Bharathiraja 7373703107

7 . Eroad # Selvanayaki Complex, Room No.120, Near Collector Office, Perundurai Road,Teachers Colony Bus Stand, Erode - 638 011 Mr.Manikandan 7373703108

8. Kanchipuram #No.1,Ellapa Nagar, Opp.To Collector Office, Kanchipuram – 631501. Mr.Prabu 7373703109

9 . Kanyakumari# D,No 84, Lweisammal Street, W.C.C. Jn,Nagercoil, Kanyakumari District – 629001 Mr.Suresh Kumar 7373703110

10 . Karur #District Information Centre, District Collector Office,Karur-639005.Mr. Felix 7373703112

11 . Krishnagiri #  3/E11C,2Nd Floor, Opposite.Rayakottai Road, Flyover Near Hotel Sarvanabhavan, Krishnagiri-635001. Mr.Venkatesan 7373703113

12 . Madurai#  46,Thomas Complex Ii Nd Floor,Nethaji Road, Madurai – 625001. Mr.Palani 7373703114

13.  Nagapattinam # No.8, Rajarani Complex, Room No.112, 2Nd Floor, Neela South Street, Nagapattinam-611 001 Mr. Veeramani 7373703164

14 . Namakkal # 14,Ii Nd Floor,Main Campus, Collectorate, Namakkal-637003. Mr.Bakkiaraj 7373703116

15 . Nilgiri (ooty) # 222, J, Sri Ram Nilayam Hospital Road,Udhagamandalam - 643 001 (Nilgiri - Ooty) Mr.Lokesh Kumar 7373703117

16 . Perambalur#  Ground Floor, Collector Office Campus, Perambalur (Dt), Pincode-621212 Mr.Balu 7373703118

17.  Pudukkotai # Shop No-33, Shri Bharathi Complex,East 2Nd Street, Pudukkotai - 622 001Mr. Parimaleeswaran 7373703119

18 . Ramnathapuram# 1/11 Durai Raja Chattiral Steel, Nks Vappa Complex, Velipattinam Post Ramanathapuram 623504 RrSethupathi Nagar, Ramanathapuram. Mr.Usman Ali 7373703123

19 . Salem#  No : 23 / 7 , 1st Floor, Maravaneri 1st Cross, Near Sundar Lodge Auto Stand, Salem – 636 007. Mr.Jameer 7373703124

20 . Sivagangai # District Collectorate, 1st floorDistrict Treasury office, Sivagangai, 630561 Mr.Balaji 7373703125

21 . Thanjavur #Survey No.163/4, Second Floor,Door No.10, Natarajapuram North, Municipal Colony Bus Stop, Medical College Main Road, Thanjavur - 613 004 Mr.Kalaimani 7373703126

22 . Theni # L1/786, Gandhiji Road, ZameendarComplex 1St Floor, Near Theni Bus Stand, Theni-625531 Mr.Sarfraz 7373703127

23 . Thiruvallur # 36/75,Tnhb, Old Collector Office Road,Thiruvallur-602001 Mr.Karthick 7373703128

24 . Thiruvannamalai # No: 16/2 R.V.Complex, Gandhi Nagar Byepass, Tiruvannamalai-606 601 Mr.Fayaz Ahmed 7373703135

25. Thiruvarur # 49, Kamalayam, North Bank, Thiruvarur - 610001 Mr. Vivekanandhan 7373703136

26. Tirunelveli#  4F6/11 Akm Complex, Kailasapuram Middle Street, Tirunelveli – 627001 Mr.Ramasamy 7373703132

27 . Tiruppur # 284,Kumaran Plaza,Kumaran Road Tirupur-641601. Mr.Murugan 7373703133

28 .  Trichy # No.22/7, 1St Floor, M.N.S. Complex, Ulaganathapuram, Tvs Tollgate, Trichy - 620 020 Mr. Rajamanickam 7373703180

29 .  Tuticorin # 36B,In Complex, Opp Kamaraj College, Nr.Head Post Office,Tiruchendur Road,Tuticorin-628003 Mr.Ukkirapandi 7373703129

30 Vellore # 297H,1St Floor,Ktj Complex,Rto Road,Sathuvacheri, Vellore-632009.Mr.Vinayagamoorthy 7373703137

31 Villupuram#  9,2Nd Floor,District Collector Office, Villupuram District-605103. Mr.Raju 7373703138

32 . Virudhunagar # 103/B2, Katcheri Road, 2Nd Floor Bank Of India Upstairs Virudhunagar District – 626001 Mr.Rafik Raja 7373703139

அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் நிரந்தர பணியிடங்களில் பணிபுரிய பின்வரும் பாடப்பிரிவுகளுக்கு ஆசிரியர்கள் தேவை!!

 

அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழ்நாடு தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்தால் 2017 ஜனவரியில் நடத்தப்பட உள்ள அரசு கணினி சான்றிதழ் தேர்வுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.அரசு துறைகளில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Computer on Office Automation) கட்டாயம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, இந்த சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண் ணப்பிக்கலாம்.ஒருவேளை, பணிக்குத் தேர்வுசெய்யப்பட்டால் தகுதி காண் பருவத்துக்குள் கண் டிப்பாக தேர்ச்சி பெற்றாக வேண்டும்.

அரசு கணினி சான்றிதழ் தேர்வை தமிழ்நாடு தொழில் நுட்பக் கல்வி இயக்ககம் ஆண்டுக்கு 2 முறை நடத்து கிறது. 2016 டிசம்பரில் நடத்தப் பட வேண்டிய சான்றிதழ் தேர்வு 2017 ஜனவரி 7, 8 தேதிகளில் நடத்தப்பட உள்ளது. இதற்கான விண்ணப்பங்களை ஆன்லைனில் (www.tndote. org) நவம்பர் 11-ம் தேதி வரை பதிவிறக்கம் செய்துகொள்ள லாம். பூர்த்தி செய்த விண்ணப் பங்களை, உரிய சான்றிதழ் களுடன் மாநில தொழில்நுட்பக் கல்வி இயக்ககத்துக்கு நவம்பர் 18-ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் திறன் மேம்பாட்டுக்கான 'சென்டா ஒலிம்பியாட்' போட்டி: அக்.31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் டிசம்பர்3-ம் தேதி நாடு முழுவதும் நடத்தப்படவுள்ள ‘சென்டா ஒலிம்பி யாட்’ போட்டிக்கு அக்டோபர் 31-ம் தேதிக்குள் ஆன்லைனில் பதிவு செய்ய வேண்டும்.‘சென்டா டீச்சிங் புரொஃபஷ் னல்ஸ் ஒலிம்பியாட்- 2016’ என்பது ஆசிரியர்களின் திறமையை மேம்படுத்தும் வகையில் தேசிய அளவில் நடத்தப்படும் போட்டி ஆகும். 
இரண்டாவது ஆண்டாக இந்த ஆண்டும் நாடு முழுவதும் 22 நகரங்களில் டிசம்பர் 3-ம் தேதி சென்டா போட்டிகள் நடத்தப்படுகின்றன.இந்த போட்டிகளை ‘தி இந்து’நாளிதழ், மைக்கல் அண்ட் சூசன் டெல் ஃபவுண்டேஷன் ஆகியவை இணைந்து நடத்துகின்றன.தமிழகத்தில் சென்னை, கோவை, மதுரை ஆகிய இடங்களில் 13 பிரிவுகளில் போட்டி நடைபெறும். இதில் ஆரம்பநிலை, இடைநிலை, உயர்நிலை என தங்கள் விருப்பத்துக்கேற்ப ஆசிரி யர்கள் போட்டிப் பாடப் பிரிவை தேர்ந்தெடுக்கலாம். இப்போட்டி யில் பங்கேற்க ஆன்லைனில் பதிவுசெய்ய வேண்டும். ஆசிரி யர்கள், பள்ளி முதல்வர்கள், கல்வி யாளர்கள் என அனைத்து தரப்பி னரும் போட்டிப்போட்டு பதிவுசெய்து வருகிறார்கள். தனியார் பள்ளி ஆசிரியர்கள் மட்டுமின்றி அரசு பள்ளி ஆசிரியர்களும் போட்டியில் பங்கேற்க மிகவும் ஆர்வமாக இருக்கிறார்கள். சென் னையில் அதிகம்பேர் பதிவுசெய் துள்ளனர். இதற்கு அடுத்தபடி யாக டெல்லி, மும்பை உள்ளிட்ட நகரங்களில் அதிகளவில் பதிவு நடக்கிறது. பெங்களூரைச் சேர்ந்த 77 வயது, 68 வயது நிரம்பிய தம்பதியர் கூட சென்டா போட்டிக் காக பதிவுசெய்துள்ளனர்.

3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு

மொத்தமுள்ள 13 பிரிவுகளில் ஒவ்வொரு பிரிவிலும் முதலிடம் பெறுபவர்களுக்கு துபாயில் 2017-ல் நடைபெறவுள்ள உள்ள உலக கல்வி, திறன்மேம்பாட்டு மாநாட்டில் பங்கேற்க வார்கே அறக்கட்டளை சார்பில் வாய்ப்பு அளிக்கப்படும். மேலும் ஒவ்வொரு மாநிலத்திலும் முதலிடம் பிடிப்பவர்களின் பெயர் விவரங்கள் ‘தி இந்து’நாளிதழில் வெளியிடப்படும். இதுதவிர, வெற்றி பெறும்ஆசிரியர்களுக்கு சென்ட்ரல் ஸ்கொயர் அறக்கட் டளை சார்பில் வெளியாக உள்ள புத்தகத்தில் எழுதும் வாய்ப்பும் அளிக்கப்படும். மேலும், வெற்றியாளர்கள் 3 பேருக்கு தலா ரூ.1 லட்சம் பரிசு உள்பட எச்டி பாரேக் அறக்கட்டளை சார்பில் 50 பேருக்கு ரொக்கப்பரிசுகளும் வழங்கப்பட உள்ளன. கணினி மூலம் போட்டி நடத்தப்படும்.தேர்வு செய்துள்ள பாடம், பாடம் நடத்தும் விதம் உள்ளிட்டவை தொடர்பாக ‘அப்ஜெக்டிவ்’வகை யில் கேள்விகள் இடம்பெறும்.

போட்டி குறித்த கூடுதல் விவரங் கள், பெயர் பதிவு தொடர்பான விவரங்களை இணையதளத்தில் (www.tpo-india.org) தெரிந்து கொள்ளலாம். இப்போட்டிக்கு அக் டோபர் 31-ம் தேதிக்குள் பதிவு செய்ய வேண்டும் என்று சென்டர் ஃபார் டீச்சர் அக்ரெடி யேஷன் (சென்டா) அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ரம்யா தெரிவித்துள்ளார்.பெங்களூரைச் சேர்ந்த 77 வயது, 68 வயது நிரம்பிய தம்பதியர்கூட சென்டா போட்டிக்காக பதிவுசெய்துள்ளனர்.

மாணவர்கள் ஆங்கில எழுத்துக்களை நான்கு வரி கோடுகளில் எழுதும் முறை

CURSIVE HAND WRITING WORK SHEETS FOR STUDENTS click here ...

ஆதார் சலுகைகள்: ஏழாண்டு சேமிக்க முடிவு

ஆதார்' அட்டையை பயன்படுத்தி, பொதுமக்கள் பெறும் சலுகைகள்மற்றும் மானிய உதவிகளை, ஏழாண்டு வரை சேமித்து வைக்க, மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.நாடு முழுவதும் தற்போது, 100 கோடிக்கும் அதிகமானோருக்கு, ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
எதிர்ப்பு ; வங்கிக் கணக்கு, சமையல் எரிவாயு மானியம் போன்ற பல சேவைகளுக்கு, ஆதார் எண்களை, அரசு கேட்க துவங்கியுள்ளது. ரேஷன் கடைகளிலும், ஆதார் விபரங்கள் இணைக்கப்படுகின்றன. 'அரசு உதவி திட்டங்கள் பெற, ஆதார் அட்டை கட்டாயம் ஆக்கப்படக் கூடாது' என, உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.எனினும் பல்வேறு சேவைகளுக்கு, ஆதார் கட்டாயமாக்கப்பட்டு வருகிறது. ஆதார் திட்டத்தில், தனிநபரின் ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளதால், ஒரு தரப்பினர் தொடர்ந்து எதிர்த்து வருகின்றனர். இந்த சூழலில், மேலும் ஒரு புதிய விதியை, மத்திய அரசு புகுத்தி உள்ளது. அதன்படி, ஆதார் அட்டை மூலம் ஒரு தனிநபர் பெறும் வங்கி மானியம் உள்ளிட்ட சலுகைகள் மற்றும் பல்வேறு பரிமாற்றங்களை, ஏழு ஆண்டுகளுக்கு சேமித்து வைக்க, மத்தியஅரசு முடிவு செய்துள்ளது. கண்டுபிடிப்பது சிரமம் : இதுகுறித்து, ஆதார் ஆணைய அதிகாரிகள் கூறியதாவது: இந்த விபரங்கள், இரண்டு ஆண்டு காலம் மட்டுமே உரிய அதிகாரிகள் மட்டும் பார்க்கும் வகையில், 'ஆன்லைன்' முறையில் சேமித்து வைக்கப்படும். அதன்பின், தேவைப்பட்டால் மட்டும் தேடி எடுக்கும், 'ஆப்லைன்' முறையில், ஐந்து ஆண்டுகளுக்கு தகவல் பாதுகாக்கப்படும்.ஆதார் தொடர்பான சலுகைகள் மற்றும் பணப் பரிவர்த்தனையில் முறைகேடுகள் நடந்தால், அதை கண்டுபிடிப்பது சிரமமாக இருக்கும்; அதற்காகவே இந்த ஏற்பாடு. இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

இதுபற்றி, சமூக சேவகர்கள் கூறுகையில், 'ஆதார் அட்டை, பின்னாளில் கட்டாயமக்கப்பட்டால், தனிநபர் பற்றிய ரகசியங்கள் கசியும் அபாயம் உள்ளது; அரசும் ரகசிய வேவு பார்க்கமுடியும். அதுவும், ஏழாண்டு என்பது ரொம்ப அதிகம்' என்றனர்.

பொது மக்கள் அறிய வசதி! : ஆதார் எண் அடிப்படையில், தாங்கள் பெற்ற ஆதாயங்களின் விபரங்களை, பொதுமக்கள் தெரிந்து கொள்ளவும் வசதி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், அதற்கு அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும்; இரண்டாண்டு வரையிலான தகவல்களை மட்டுமே காண முடியும். தனிநபர்கள், தாங்களாகவே விபரங்களை பார்த்து, தெரிந்து கொள்ளும் வசதியை தந்தால், அது அபாயத்தில் முடியும் என்கின்றனர் அதிகாரிகள்.

இடமாறுதல் கலந்தாய்வு முடிவுகள் தாமதம் - பேராசிரியர்கள் புகார்..

அறிவியலாளர் விருது பெற விண்ணப்பிக்கலாம்: தமிழக அரசு

அறிவியலாளர் விருதுகள் பெற விண்ணப்பிக்கலாம் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.2015-ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு இளம் அறிவியலாளர் விருது, தமிழ்நாடு வாழ்நாள் அறிவியல் சாதனையாளர் விருதுகளுக்கான விண்ணப்பப் படிவம், அடிப்படை தகுதிகள், 
விதிகள் ஆகியன அறிவியல் நகர இணையதளமான www.sciencecitychennai.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை அறிவியல் நகரத்துக்கு நவம்பர் 28-ஆம் தேதி பிற்பகல் 5 மணிக்குள் தபாலிலோ அல்லது நேரிலோ அளித்திட வேண்டும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.

TODAY ALL CEO,DEO,DEEO,AEEO MEETING !!!

இன்று வீடியோ CONFERENCES மூலம் அனைத்து முதன்மை கல்வி அலுவலர்கள்,மாவட்ட கல்வி அலுவலர்கள்,மாவட்ட தொடக்கக்கல்வி அலுவலர்கள் ,உதவிதொடக்கக்கல்வி அலுவலர்கள் கூட்டம் காலை 11.00 மணியளிவில் EMIS சார்பாக ...

M.Phil Application PDF format !!

CBSE - Central Teacher Eligibility Test (CTET) Sept - 2016 OMR Sheet, Answer key & Submission of Key Challenge.

மேல்நிலை பொதுத்தேர்வு-மாரச்-2017 OFFLINE-ல் பெயர்ப்பட்டியல் தயாரித்தல்-விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையரிசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

 மேல்நிலை பொதுத்தேர்வு-மாரச்-2017 OFFLINE-ல் பெயர்ப்பட்டியல் தயாரித்தல்-விவரங்களை உள்ளீடு செய்யும்படி அனைத்துவகை மேல்நிலைப்பள்ளி தலைமையரிசிரியர்கள் மற்றும் மெட்ரிக் பள்ளி முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்

Click Here

தென் மத்திய ரயில்வே பணிக்கு விண்ணப்பிக்க அழைப்பு!

தென் மத்திய ரயில்வேயில் அதலெடிக்ஸ், பேட்மிண்டன், குத்துச்சண்டை, கிரிக்கெட், ஹேண்ட் பால், கூடைப்பந்து உள்ளிட்ட விளையாட்டுகளில் நிரப்பப்பட உள்ள பணியிடங்களுக்கு தகுதியும் விருப்பமும் உள்ள இருபாலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

விளையாட்டு பிரிவுகள் வாரியான தகுதி மற்றும் காலியிடங்கள் விவரம்:
1. Athletics (Men): 100M/ 200M/ Triple Jump, Pole Vault - 04
2. Athletics (Women): 100M/ Triple Jump/ Heptation, High Jump - 04
3. Badminton (Men): Singles - 01
4. Basketball (Women) : Point Guard, Forward - 02
5. Boxing (Men): Welter Weight (69 Kgs), Light Heavy Weight (81 Kgs), Heavy Weight (91 kgs) - 03
6. Cricket (Women): Batswoman-Cum-Medium Pacer, Medium Pacer - 02
7. Handball (Women): Centre Position - 01
8. Kabaddi (Women): All Rounder- 02
9. Volley Ball (Women): All Rounder, Attacker - 02

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 + தர ஊதியம் ரூ.1,900 அல்லது ரூ.2,000.
வயது வரம்பு: 1.1.2017 தேதியின்படி 18 முதல் 25க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: 10ம் வகுப்பு, +2 தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து சம்பந்தப்பட்ட விளையாட்டு பிரிவுகளில் மாநில, தேசிய, பல்கலைக்கழக, சர்வதேச போட்டிகளில் பங்கு பெற்று குறைந்தது 3-வது நிலையை பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை: உடல் தகுதி, விளையாட்டு தகுதி, கல்வித்தகுதி, பொது அறிவு, நேர்முகத் தேர்வு போன்ற தகுதிகளின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்ந்தெடுக்கப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை Financial Advisor & Chief Accounts Officer, South Central Railway என்ற பெயரில் செகந்திராபாத்தில் மாற்றத்தக்க வகையில் டி.டி அல்லது போஸ்டல் ஆர்டர் எடுத்து செலுத்த வேண்டும். பெண்கள், எஸ்சி, எஸ்டி, சிறுபான்மையினர், பொருளாதாரத்தில் பின்தங்கிய பிற்பட்டோர்களுக்கு விண்ணப்ப கட்டணம் கிடையாது.

விண்ணப்பிக்கும் முறை: www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள மாதிரி விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கணினியில் தட்டச்சு செய்து பின்னர் தெளிவாக பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:

The Assistant Personnel Officer (Rectt., & HQ),
Room No: 416,
Office of the Chief Personnel Officer,
4th Floor,
Rail Nilayam,
Secunderabad- 500 071.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 17.10.2016.
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.scr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும்.