Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 26 October 2016

பாதுகாப்பான  தீபாவளி கொண்டாடுவது எப்படி?  தீயணைப்பு  அதிகாரி நேரடி  செயல் முறை விளக்கம் 

பாதுகாப்பாக பட்டாசுகளை  வெடிப்பது எப்படி ? 

      தேவகோட்டை -  தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளியில்பாதுகாப்பான தீபாவளிகொண்டாடுவது எப்படி? பட்டாசுகளை வெடிப்பது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி பள்ளி மாணவர்களுக்கு  நேரடி செயல் முறை விளக்கம் அளித்தார்.

                                                  பயிற்சி முகாமிற்கு பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் தலைமை தாங்கினார் .ஆசிரியை செல்வமீனாள்     வரவேற்புரை வழங்கினார்.

இதில்   தேவகோட்டை தீயணைப்பு அதிகாரி  கருப்பையா   பள்ளி மாணவ-மாணவிகள் எப்படி தீபாவளிபண்டிகையின் போது பாதுகாப்பாக பட்டாசுகளை வெடிக்க வேண்டும்? என்பது குறித்து செயல்முறை விளக்க பயிற்சி அளித்தார்.மேலும் பட்டாசு வெடிக்கும் போது தீ விபத்து ஏற்பட்டால் எப்படி தீயை அணைக்க வேண்டும்?  எப்படி பட்டாசு பாதுகாப்பாக  வெடிக்க வேண்டும் ?எனவும் ,பேரிடர் மேலாண்மை , மீட்புப்பணிகள் பற்றிய செயல் விளக்கம் எப்படி  என்பதையும் விளக்கி சொன்னார்.

பின்னர் விழாவில் தீயணைப்பு அதிகாரி கருப்பையா  பேசியதாவது:-சீன பட்டாசு வேண்டாம்.பள்ளி மாணவ-மாணவிகள் மற்றும் குழந்தைகள் தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை பெரியவர்களின் மேற்பார்வையில் வெடிக்க வேண்டும். பெற்றோர்கள் சீன பட்டாசுகளை வாங்கி தரவேண்டாம். தீ விபத்தை A,B,C,D,E என வகை படுத்துகின்றனர்.A என்பது எரிந்து சாம்பலாகி தண்ணீர் ஊற்றி அணைப்பது ஆகும்.B  என்பது ஆவியாகி எண்ணெயில் பட்டு தீ பிடிப்பது ஆகும்.இதனை.மணல் போட்டு  அணைத்தல் வேண்டும்.

                                                       FIRE விளக்கம்

                           FIRE என்பதில் F என்கிற எழுத்துக்கு  தீயை கண்டுபிடி,I  என்ற  எழுத்துக்கு தீயை தெரியபடுத்துதல் ,R என்ற எழுத்துக்கு தீயில் இருந்து காப்பாற்றுதல், E என்ற எழுத்துக்கு தீயில் இருந்து வெளி ஏறுதல் என்கிற விளக்கத்தை கொடுத்தார்.

 மாணவர்கள் வெடி வெடிக்கும்போது அம்மா ,அப்பாவை பக்கத்தில்  வைத்துகொண்டு வெடிக்கவும்.வெடிக்காத வெடியை  கையில்  எடுக்க கூடாது  .ராக்கெட்  வெடி வாங்க வேண்டாம்.குப்பைகளை பக்கத்தில் போட்டு வெடிக்க வேண்டாம்.இறுகிய உடைகளை போட்டு  கொண்டு வெடி வெடிக்க வேண்டும் . தீ பிடித்து விட்டால் வாளி தண்ணீரை அப்படியே  ஊற்றாமல் கப்பில் அள்ளி தெளிக்க வேண்டும். 

மேலும் தீ காயங்களின் வகைகளையும் ,தீ காயம் ஏற்பட்டா

ல் என்ன செய்ய வேண்டும் என்பதையும் தெளிவாக எடுத்து கூறினார்.

                                     பின்னர் பள்ளி மாணவ-மாணவிகளுக்கு    தேவகோட்டை  தீயணைப்பு நிலையத்தை சார்ந்த

முன்னனி தீயணைப்போர் ரவி மணி, ராஜவேல்,போக்குவரத்து நிலைய அலுவலர் கிருஷ்ணம், தீயனைப்போர் அருள்ராஜ்,பிரகாஷ்,இளங்கோவன் ஆகியோர்  கலந்து கொண்டுபாதுகாப்பான தீபாவளிகொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களைவழங்கியும்,  பாதுகாப்பாக வெடிப்பது எப்படி ? என்பது  தொடர்பாக செயல் விளக்கம் செய்தும் காண்பித்தனர். மாணவர்களின் பெற்றோர்கள் புவனேஸ்வரி,மகேஸ்வரி,மாலா,பத்மா,ராணி, காமாட்சி,பாகம்பிரியாள் உட்பட பலர்

 கலந்து கொண்டு செயல் விளக்கத்தை  நேரில் பார்த்து பயன் பெற்றனர்.

                                   நிகழ்ச்சியில் சந்தியா , கீர்த்தியா ,ஜெகதீஸ்வரன்,காயத்ரி,அஜய்பிரகாஷ் ,உமா மஹேஸ்வரி,தனலெட்சுமி,ராஜேஸ்வரி உட்பட பல மாணவ,மாணவியர் கேள்விகள் கேட்டு பதில் பெற்றனர்.மாணவ,மாணவியர் இனி வரும் தீபாவளி பண்டிகை அனைத்தையும் பாதுகாப்பானதீபாவளி பண்டிகையாக கொண்டாடுவோம் என உறுதி எடுத்து கொண்டனர்.நிறைவாக ஆசிரியை முத்து லெட்சுமி நன்றி கூறினார்.

பட விளக்கம் : சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் நடுநிலைப் பள்ளியில்பாதுகாப்பான தீபாவளிகொண்டாடுவது எப்படி? என தேவகோட்டை   தீயணைப்பு  அதிகாரி கருப்பையா  பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்கி துண்டு பிரசுரங்களை வழங்கினார்.உடன் பள்ளி தலைமை ஆசிரியர் லெ .சொக்கலிங்கம் உள்ளார்.

பாதுகாப்பான தீபாவளி கொண்டாடுவது தொடர்பாக தீயணைப்பு அதிகாரி  கருப்பையா மேலும் கூறியதாவது : 

* பாட்டாசுகளை கொளுத்தும்போது தளர்வான ஆடைகளை உடுத்துவதை தவிருங்கள் .டெரிகாட்டன்,டெர்லின் ஆகிய எளிதில் தீப்பற்றக்கூடிய ஆடைகளை கண்டிப்பாக அணியக் கூடாது.

* மூடிய பெட்டிகள் ,பாட்டில்களில் பட்டாசுகளை உள்ளிட்டு கொளுத்தி வெடிக்கக் கூடாது.மருத்துவமனைக்கு அருகில் பட்டாசுகளை வெடிக்கக் கூடாது.

*விலங்குகளை துன்புறுத்தும் வகையிலும் அவை பயப்படும் வகையிலும் பட்டாசுகளை வெடிக்கக்கூடாது.அதிக சத்தம் கொண்ட பட்டாசுகளை வெடிக்க வேண்டாம்.ஏனெனில் அது உடலையும்,மனநிலையும் பாதிக்கும்.காதுகளை செவிடாக்கும்.பட்டாசுகளை கொளுத்தி கையில் வைத்து கொண்டோ உடலுக்கு அருகிலோ வெடிக்க வேண்டாம்.மாறாக பாதுகாப்பான தொலைவில் வைத்தே வெடிக்க வேண்டும்.

வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் 28.10.2016 அன்று வழக்கம்போல் பள்ளி வேலை நாள்!! உள்ளூர் விடுமுறை ,அனுமதிக்க கூடாது எனவும் மாவட்ட தொடக்கக் கல்வி அலுவலர் அறிவிப்பு!!

2020 வரை தகுதி தேர்வு தேர்ச்சி பெறவில்லை என்றாலும் ஆசிரியராக பணியாற்றலாம் ?

நேற்றைய கல்விக்கொள்கை கூட்டத்தில் முடிவு !!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.

புதிய வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்., அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது.

நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக் குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர் “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம் வகுப்பு வரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்ப பெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையை கொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம் மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.

இதில் 8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்கு தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவரிடம் பேசினோம்.

 " இரண்டு முக்கியமான அம்சங்கள் இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக இந்த 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து என்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினை தொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது.

அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி 2015 டிசம்பர் வரை மட்டுமே முறையான கல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில் அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும் 2020-ம் ஆண்டு வரை அப்படியான ஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல சமஸ்கிருத பாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன் வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதி முடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன் வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.

TNPSC:அரசுப் பணி தேர்வுகளுக்கான மாதிரி வினா-விடை

1. ஈடன் கார்டன் விளையாட்டு மைதானம் அமைந்துள்ள இடம் - கொல்கத்தா
2. தென்மேற்குப் பருவக்காற்றை சீனாவிற்கு செல்லவிடாம்ல் தடுப்பது - இமயமலை
3. இந்தியாவின் யூதர்கள் வாழும் இடம் - கொச்சி
4. அர்ஜெண்டினா எந்த கண்டத்தில் அமைந்துள்ள நாடு - தென் அமெரிக்கா

5. புகழ்பெற்ற நூலை மூலதனம் என்ற நூலை இயற்றியவர் - கார்ல் மார்க்ஸ்
6. தமிழகத்தில் உயர் அழுத்த கொதிகலன்கள் தயாராகும் தொழிற்சாலை அமைந்துள்ள இடம் - துவாக்குடி - திருச்சி
7. தமிழகத்தில் துப்பாக்கித் தொழிற்சாலை உள்ள இடம் - திருச்சிராப்பள்ளி
8. வெள்ளைக் கண்டம் என்று அழைக்கப்படும் கண்டம் - அண்டார்டிகா
9. தமிழகத்தில் கரும்பு ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் - கோயம்புத்தூர்
10. இந்தியாவில் மிகக் குறைந்த அளவு காடுகளைக் கொண்ட மாநிலம் - குஜராத்
11. பவளத் தீவுகள் காணப்படும் இடம் - இலட்சத்தீவுகள்
12. தென்னிந்தியாவின் காஷ்மீர் என அழைக்கப்படுவது - கொடைக்கானல்
13. எரிமலையே இல்லாத கண்டம் - ஆஸ்திரேலியா
14. மூலிகை அருவிகளின் நகரம் என்று வர்ணிக்கப்படும் தமிழக நகரம் - குற்றாலம்
15. உலகிலேயே மிகவும் உயரமான இடத்தில் அமைந்துள்ள ஏரி - டிடிகாகா ஏரி - உயரம் 12,500 அடி
16. உலகின் மிக உயரமான ஏஞ்சல் நீர்வீழ்ச்சி அமைந்துள்ள நாடு - வெனிசுலா
17. இந்தியாவில் சம்பல் பள்ளத்தாக்கின் பரப்பளவு - சுமார் 70 மில்லியன் ஏக்கர்கள்
18. கோசி ஆறு எந்த மாநிலத்தின் வழியாகப் பாய்கிறது - பீகார்
19. ஆசியாவின் மிக நீளமான நதி- யாங்சீ - சீனா
20. உலகின் மிகப் பெரிய தாபகற்பம் - அரேபிய தீபகற்பம்
21. புதுப்பிக்கக்கூடிய வளங்கள் என்று வர்ணிக்கப்படுவது - காடுகள்
22. உலகிலேயே மிகப் பெரிய பள்ளத்தாக்கு - அமெரிக்கா
23. இந்தியாவின் எந்தப்பகுதி சூரியன் உதயமாகும் மாநிலம் என்று அழைக்கப்படும் மாநிலம் - அருணாச்சலப் பிரதேசம்
24. பட்டு உற்பத்தியில் முன்னணி வகிக்கும் இந்திய மாநிலம் - கர்நாடகம்
25. ஹிராகுட் அணைக்கட்டு அமைந்துள்ள மாநிலம் - ஒரிசா
26. இந்தியாவில் உப்புச் சுரங்கம் உள்ள இடம் - பஞ்சாப்
27. இந்திய ஜோதிடவியலின் தந்தை - வராகமிகிரர்
28. உலகின் ஒரே இந்து மத நாடு - நேபாளம்
29. உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது - ஐ.நா.சபை
30. ஐ.நா உலகப்பெண்கள் மாநாடு நடைபெற்ற இடம் - பெல்ஜியம்
31. ஐரோப்பாவின் நோயாளி என்று அழைக்கப்படும் நாடு - துருக்கி
32. தமிழகத்தில் பி.சி.ஜி அம்மைப்பால் ஆய்வுக்கூடம் உள்ள இடம் - கிண்டி
33. தேசிய சுற்றுச்சூழல் பொறியியல் ஆராய்ச்சி நிறுவனம் உள்ள நகரம் - நாக்பூர்
34. ஜப்பானின் பிரபல நாடக வடிவத்தின் பெயர் - கபூகி
35. அணுசக்தி தயாரிக்க உதவும் மூலப்பொருள் - யுரேனியம் மற்றும் தோரியம்
36. தமிழகக் கலைக்கு மெளரியர்கள் ஆற்றிய தொண்டு - பிராகிருத மொழி
37. தமிழகத்தில் வெடிமருந்து தயாரிப்பு நிலையம் அமைந்துள்ள இடம் - அரவங்காடு
38. வெலிங்டன் கோப்பை எந்த விளையாட்டுடன் தொடர்புடையது - படகுப்போட்டி
39. தேசிய இதய ஆராய்ச்சிக் கழகம் உள்ள இடம் - தில்லி
40. சைப்ரஸ் நாட்டின் தலைநகர் - நிகோசியா
41. சோயாபீன்சில் அதிகம் உள்ள சத்துப்பொருள் - புரதம்
42. இந்தியாவின் முதல் பாதுகாப்புத்துறை அமைச்சர் - தார் பல்தேவ் சிங்
43. இந்தியாவின் இரண்டாவது செயற்கைக் கோள் - பாஸ்கரா
44. காந்திஜி எந்த நாட்டிற்கு சென்று பாரிஸ்டர் பட்டம் பெற்றார் - இங்கிலாந்து
45. சிறுசேமிப்புக்கு அரசு எத்தனை வரிசையில் பத்திரங்களை வெளியிட்டது - 8 வரிசை
46. லதா மங்கேஷ்கர் விருது வழங்கும் மாநில அரசு - மத்தியப்பிரதேசம்
47. மஜ்லிஸ் என்பது எந்த நாட்டு பாராளுமன்றத்தின் பெயர் - ஈரான்
48. சீனாவிற்கு சென்ற முதல் இந்தியப் பிரதமர் - இராஜீவ்காந்தி
49. உலகிலேயே மிக அதிக அளவில் கார்களைப் பயன்படுத்தும் நாடு - அமெரிக்கா
50. மகாத்மா காந்தியின் தமிழ் ஆசான் - தில்லையடி கன்னியப்பச் செட்டியார்.

TET CASE: இறுதி விசாரணைக்கு பிறகு தேதி குறிப்பிடப்படாமல் ஒத்திவைப்பு- நேற்று நடந்த வழக்கின் முழு விபரம்..

தமிழக ஆசிரியர் நியமன தகுதித்  தேர்வு வழக்கு....

✍தமிழக ஆசிரியர் நியமன தகுதி தேர்வு விவகாரம் தொடர்பான வழக்கில் 
இறுதி வாதங்கள் முடிவடைந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.

அரசாணை

✍தமிழக அரசின் சார்பில் வெளியிடப்பட்ட அரசாணை எண் 25–ல் ஆசிரியர் தகுதித்தேர்வு எழுதும் அனைத்து வகையான இட ஒதுக்கீட்டு பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அரசாணை 71–ல் ‘வெயிட்டேஜ்’ முறையும் பணிநியமனத்தின்போது கருத்தில் கொள்ளப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

✍ஆனால், மதிப்பெண் விலக்கை எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு மட்டுமே வழங்க வேண்டும் என விதிகள் இருக்கும்போது அனைவருக்கும் வழங்குவது சரியல்ல; வெயிட்டேஜ் முறை பின்பற்றப்படுவதால் 5 முதல் 10 ஆண்டுகளுக்கு முன்பாக படிப்பை முடித்தவர்களுக்கு பாதிப்பு ஏற்படும் என கூறி, சென்னை ஐகோர்ட்டிலும், அதன் மதுரை கிளையிலும் சிலர் வழக்கு தொடர்ந்தனர்.

ஐகோர்ட்டு தீர்ப்பு

✍இந்த விவகாரம் தொடர்பாக சென்னை ஐகோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், தமிழக அரசின் அரசாணையில் அறிவிக்கப்பட்டுள்ளது சரி என உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

✍ஆனால் இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தமிழக அரசின் முடிவு தேர்வு எழுதுபவர்களுக்கு பாதகமாக இருப்பதாகவும், அரசாணைக்கு தடை விதிப்பதாகவும் உத்தரவு பிறப்பித்தது.

சுப்ரீம் கோர்ட்டு விசாரணை

✍இதைத் தொடர்ந்து ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான ஒரே வழக்கில் சென்னை ஐகோர்ட்டு, அதன் மதுரை கிளை ஆகிய இரு வேறு அமர்வுகளின் கருத்து வேறுபாடு அச்சத்தை தருவதாக இருப்பதாகவும், எனவே, சுப்ரீம்கோர்ட்டு தலையிட்டு அனைத்து பிரிவினருக்கும் 5 சதவீத மதிப்பெண் விலக்கு மற்றும் ‘வெயிட்டேஜ்’ முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என்றும் கோரி இந்த தேர்வில் கலந்து கொண்ட லாவண்யா உள்ளிட்டோர் சுப்ரீம்கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர்.

இந்த மனு மீதான விசாரணை நீதிபதிகள் சிவகீர்த்தி சிங், ஆர்.பானுமதி ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது.

அரசாணை செல்லும்

✍மனுதாரர்கள் தரப்பில் மூத்த வக்கீல்கள் நளினி சிதம்பரம், அஜ்மல்கான், சுப்ரீம் கோர்ட்டு வக்கீல் சிவபால
முருகன்,  தமிழக அரசு தரப்பில் மூத்த வக்கீல் பி.பி.ராவ் ஆகியோர் ஆஜரானார்கள்.

✍தமிழக அரசு தரப்பில் வாதாடிய பி.பி.ராவ், ‘வெயிட்டேஜ்’ முறையை அமல்படுத்த மாநில அரசுக்கு அரசியல் சட்டத்தின் அடிப்படையில் அதிகாரம் உள்ளது. 5 சதவிகிதம் ‘வெயிட்டேஜ்’ அளித்தும், இடஒதுக்கீட்டில் நிரப்புவதற்காக 625 இடங்கள் காலியாக இருக்கின்றன. எனவே, தமிழக அரசு ‘வெயிட்டேஜ்’ முறையில் இடங்களை நிரப்புவது தவறு கிடையாது.  தமிழக அரசு பிறப்பித்த அரசாணை செல்லும் என்று வாதிட்டார்.

தீர்ப்பு ஒத்திவைப்பு

✍மனுதாரர் தரப்பில், ‘தேர்வு முடிவுகள் வெளிவந்த பிறகுதானே நிரப்ப வேண்டிய இடங்கள் குறித்து அரசுக்கு தெரியும்?  அதற்கு முன்பே இது குறித்து எப்படி முடிவு எடுக்கப்பட்டது?  தேர்வு முடிவுகள் வெளிவந்து சான்றிதழ்கள் சரிபார்க்கப்படும் தருணத்தில் இந்த 5 சதவிகித ‘வெயிட்டேஜ்’ பற்றி அரசாணை வெளியிடுகிறது. இதனால் மனுதாரர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.  எனவே, அனைத்து பிரிவினருக்கும் 5 சதவிகித மதிப்பெண் விலக்கு மற்றும் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்’ என்று வாதங்கள் முன்வைக்கப்பட்டன.

✍அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

கல்வி உரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு.தமிழ்நாடு

சமஸ்கிருத கல்வி, 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் ரத்து - தமிழக அரசு எதிர்ப்பு!
மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது.
புதிய வரைவு கல்விக் கொள்கையை உருவாக்க மத்திய அரசின் சார்பில், ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ்.,அதிகாரி டி.எஸ்.ஆர்.சுப்ரமணியன் தலைமையில் குழு அமைக்கப்பட்டது. நாடு முழுவதும் பல்வேறு இடங்களில் இந்தக் குழுவினர் கருத்துக் கேட்புக்களை நடத்தினர். அதன் பின்னர் “புதிய கல்விக் கொள்கை வரைவு” ஒன்றை மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகத்துக்கு அனுப்பினர்.

புதிய கல்விக் கொள்கை குறித்து விவாதிக்க மத்திய, மாநில அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் பங்கேற்கும் மத்திய கல்வி ஆலோசனைக் குழு கூட்டம் தலைநகர் தில்லியில் இன்று நடந்தது. இந்தக் கூட்டத்தில் அனைத்து மாநில கல்வி அமைச்சர்கள் பங்கேற்றனர். புதிய கல்விக் கொள்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது.
இந்த மாநாட்டில் கவனத்தில் கொள்ளவேண்டிய முக்கிய தீர்மானங்களாக 8-ம் வகுப்பு வரை உள்ள "ஆல்-பாஸ்' முறையை திரும்ப பெற்று மீண்டும் கட்டாய தேர்வு முறையை கொண்டு வருவது, சமஸ்கிருத பாடத்திட்டம் மற்றும் கல்வியல் தேர்ச்சி பெறாத தனியார் பள்ளி ஆசிரியைகளுக்கான தடை போன்றவை பேசப்பட்டது.
இதில் 8-ம் வகுப்பு வரையிலான ஆல்-பாஸ் ரத்து திட்டத்துக்கு தமிழக அரசின் சார்பில் கலந்துகொண்ட தமிழக பள்ளிக்கல்விதுறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் கடும் எதிர்ப்பு தெரிவித்தார். இது குறித்து அவரிடம் பேசினோம்.
" இரண்டு முக்கியமான அம்சங்கள் இன்று முடிவு செய்யப்பட்டது. முதலாவதாக இந்த 8-ம் வகுப்பு ஆல்-பாஸ் திட்டம் ரத்து என்பதை பல்வேறு மாநிலங்களின் எதிர்ப்பினை தொடர்ந்து மத்திய அரசு கைவிட்டுள்ளது. அந்த முடிவினை எடுக்கும் அதிகாரத்தினை மாநில அரசுகளுக்கு வழங்க முடிவு செய்துள்ளது. கல்வி உரிமைச்சட்ட பரிந்துரைப்படி 2015 டிசம்பர் வரை மட்டுமே முறையான கல்வி தேர்ச்சி அற்றவர்கள் ஆசிரியர்களாக பணியாற்றலாம் என இருந்தது. தமிழகத்தில் அப்படியான ஆசிரியர்கள் குறைவு என்ற போதிலும் 2020-ம் ஆண்டு வரை அப்படியான ஆசிரியர்கள் பணியாற்ற மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. அதே போல சமஸ்கிருத பாடத்திட்டத்தை அமுல்படுத்த ஒரு கருத்துரு முன் வைக்கப்பட்டது. வடகிழக்கு மாநிலங்கள் மற்றும் தமிழகத்தின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அப்போது இது இறுதி முடிவு அல்ல. இப்படியான கருத்துக்கள் எங்களுக்கு ஆயிரக்கணக்கில் வந்துள்ளது. அதில் 143 கருத்துருக்களை உங்கள் முன் வைத்துள்ளோம். உங்களின் கருத்துக்களையும் கவனத்தில் கொள்வோம் என தெரிவித்துள்ளனர்." என்று கூறினார்.