Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 27 October 2016

மத்திய தொலைத்தொடர்பு துறையில் பணி: 31க்குள் விண்ணப்பிக்க அழைப்பு.

மத்திய தொலைத் தொடர்புத் துறையின் கீழ் செயல்பட்டு வரும் தகவல் தொடர்பு மற்றும் ஐ.டி. பிரிவின் தில்லி மண்டலத்தில் நிரப்பப்பட உள்ள 46 அசிஸ்டன்ட் அக்கவுண்ட்ஸ் ஆபீசர், சீனியர் அக்கவுண்டன்ட், ஜூனியர் அக்கவுண்டன்ட் போன்ற பணியிடங்களுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

பணி: Asstt. Accounts Officer

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,800

பணி: Sr.Accountant

சம்பளம்: மாதம் ரூ.9,300 - 34,800 தர ஊதியம் ரூ.4,200

பணி: Jr.Accountant

சம்பளம்: மாதம் ரூ.5,200 - 20,200 தர ஊதியம் ரூ.2,800

வயதுவரம்பு: 56க்குள் இருக்க வேண்டும்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 31.10.2016

மேலும் தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.prccadelhi.gov.in என்ற இணையதளத்தை பார்த்து தெரிந்து கொள்ளவும்.

தீபாவளிக்கு முதல் நாள் விடுமுறை கிடையாது... பள்ளியை திறக்க வேண்டும் - கல்வித்துறை அதிரடி உத்தரவு !!

தீபாவளி முதல் நாளான வெள்ளிக்கிழமை (27 ஆம் தேதி) அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்ற ஆசிரியர் சங்கத்தின் கோரிக்கையை பள்ளி கல்வித்துறை நிராகரித்துள்ளது. தீபாவளிக்கு முந்திய நாளான வெள்ளிக்கிழமை அன்று முழு நாள் பள்ளி நடைபெறும் என்றும் பள்ளி கல்வி உத்தரவிட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை நாளை மறுநாள் (29 ஆம் தேதி) சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. தீபாவளியையொட்டி அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அளித்துள்ளது.

இந்த நிலையில், தீபாவளிக்கு முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை அளிக்க வேண்டும் என்று ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர். அதாவது தீபாவளிக்கு முன்னதாகவே தங்கள் ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதால் ஆசிரியர் சங்கத்தினர் இவ்வாறு கோரிக்கை வைத்திருந்தனர்.



இதேபோல், விடுதிகளில் தங்கி பயிலும் மாணவ - மாணவியர்கள் வெளியூர்களில் பணிபுரியும் ஆசிரியர்கள் கடும் அவதியறும் நிலை ஏற்படும் என்றும் இதனால் தீபாவளி முதல் நாள் வெள்ளிக்கிழமை அன்று விடுமுறை வழங்க வேண்டும் என்று ஆசிரியர்களும் கோரிக்கை வைத்திருந்தனர்.

ஆனால் இவர்களின் இந்த கோரிக்கைக்கு நிராகரிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாளை பள்ளிகள் வழக்கம்போல செயல்பட வேண்டும் என தொடக்க கல்வி அலுவலர்கள் வலியுறுத்தி உள்ளனர். இது சம்பந்தமாக பள்ளிகளுக்கு அறிக்கையாகவும், வாய்மொழி உத்தரவாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை அக்டோபர் 29ம் தேதியன்று சனிக்கிழமையன்று கொண்டாடப்படுகிறது. அன்று ஒரு நாள் மட்டும் அரசு விடுமுறை அறிவித்துள்ளது.

பணிபுரியும் பெரும்பான்மை ஆசிரியர்கள் தமிழகத்தின் தென் பகுதி மாவட்டங்களில் கடைக்கோடி கிராமங்களில் பணிபுரிகின்றனர். இவர்கள் அனைவரும் வெள்ளிக்கிழமை பள்ளி முடித்து சனிக்கிழமை தீபாவளி பண்டிகைக்காக தங்களது சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும்.

தீபாவளிக்கு முதல்நாள் வெள்ளிக்கிழமையன்று தினம் விடுமுறை அளிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கத்தினர் வலியுறுத்தி வந்தனர்.

தீபாவளி முதல் நாள் பஸ்களில் அதிகப்படியான கூட்டம் காணப்படும்.

இதேபோல், மேல்நிலை மற்றும் உயர்நிலை பள்ளிகளும் வழக்கம்போல் நாளை நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. கல்வி துறையின் இந்த அறிவிப்பு ஆசிரியர் சங்கத்தினரை அதிர்ச்சிக்கு ஆளாகியுள்ளனர்.

TNTET :ஆசிரியர் தகுதித்தேர்வு வழக்கில் தமிழக அரசு எழுத்துப்பூர்வமான வாதம் தாக்கல்.

ஆசிரியர் தகுதித்தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தும் கடந்த 25ம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

விசாரணையில் இரு தரப்பு வழக்கறிஞர்களும் வாதத்தினை முன் வைத்தனர்.இருதரப்பு வாதத்தையும் தொடர்ந்து இரு நாட்களில் எழுத்துப்பூர்வமான வாதத்தை இருதரப்பும் தாக்கல் செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டார்.
இதனை தொடர்ந்து தமிழக அரசு இன்று தனது எழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்துள்ளது.

மேலும் TET தேர்வு முறையில் எந்த குளறுபடியும் நடைபெறவில்லை என்று தமிழக அரசு தனது வாதத்தில் முன்வைத்துள்ளது.

இருதரப்பும் தனது அஎழுத்துப்பூர்வமான வாதத்தை தாக்கல் செய்த உடன், இதனை தொடர்ந்து அனைவரும் எதிர் நோக்கியுள்ள தீர்ப்பானது 10 தினங்களுக்குள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

RTI LETTER : ஒரே கல்வியாண்டில் M.A மற்றும் B.ED படித்தவருக்கு ஊக்க ஊதியம் வழங்க அரசாணை இல்லை

Flash News:மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

தீபாவளியை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்வு வழங்க மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

புது தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.இந்த கூட்டத்தில், மத்திய அரசு ஊழியர்களுக்கும், ஓய்வூதியதாரர்களுக்கும் 2% அகவிலைப்படியை வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இதன் மூலம் 50 லட்சம் மத்திய அரசு ஊழியர்களும், 58 லட்சம் மத்திய அரசு ஓய்வூதியதாரர்களும் பயன்பெறுவார்கள் என்று கூறப்படுகிறது.

அரசு பள்ளிகளில் 'கழிப்பறை வசதி' கணக்கெடுப்பு

மதுரை, திண்டுக்கல், தஞ்சை மாவட்டங்களில் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதிகள் குறித்து கல்வி அதிகாரிகள் அவசர ஆய்வில்ஈடுபட்டுள்ளனர். 'தினமலர்' நாளிதழில் 2014 ஆக., 8ல் வெளியான செய்தி அடிப்படையில், மதுரை உயர் நீதிமன்றத்தில்தாக்கலான வழக்கு ஒன்றில், 'அக்.,27ல் திண்டுக்கல், தஞ்சையிலும், அக்.,31ல் மதுரை மாவட்டத்திலும் அரசு பள்ளிகளில் உள்ள கழிப்பறை வசதியை 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' ஆய்வு செய்ய வேண்டும்' எனஉத்தரவிடப்பட்டது.

இதன்படி, இம்மூன்று மாவட்டங்களிலும் கல்வி அதிகாரிகள் அவசர ஆலோசனை நடத்தி, கழிப்பறை விபரங்களை உடனடியாக தெரிவிக்க டி.இ.ஓ.,க்கள், தலைமை ஆசிரியர்களுக்கு உத்தரவிட்டனர். இதற்காக பிரத்யேக படிவம் தயாரித்து, 'பள்ளி, மாணவர் எண்ணிக்கை விபரம், பள்ளியில் பயன்பாட்டில் உள்ள கழிப்பறை எண்ணிக்கை, தண்ணீரின்றி பயன்படுத்த முடியாத கழிப்பறை எண்ணிக்கை, கூடுதல் கழிப்பறை தேவைப்படும் பள்ளிகள், கட்டட இடவசதி உள்ள பள்ளிகள்...' என விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன.

புதிய சிக்கல்: கழிப்பறை வசதிகள் குறித்து தலைமை ஆசிரியர் அளித்த விபரங்கள் அடிப்படையில்தான் பயன்பாட்டில் உள்ள கழிப்பறை எண்ணிக்கை கணக்கிடப்பட்டது. அரசு பள்ளிகளில் 'கழிப்பறை பிரச்னை' எழும்போதெல்லாம், இந்த ஆதாரங்களைதான் கல்வித்துறை தெரிவித்தது.ஆனால், தற்போது 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' பள்ளிகளில் ஆய்வு செய்து, உண்மை நிலவரத்தை தெரிவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டதால்,கல்வித்துறை அதிகாரிகள் அதிர்ச்சியில் உள்ளனர்.

அதிகாரி ஒருவர் கூறியதாவது:கழிப்பறை பயன்பாட்டில், அடிப்படையிலேயே குழப்பம் நீடிக்கிறது. மாணவர், கழிப்பறை விகிதம் குறித்து அனைவருக்கும் கல்வி திட்டத்திலும் (எஸ்.எஸ்.ஏ.,), அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்திலும் (ஆர்.எம்.எஸ்.ஏ.,) மாறுபடுகிறது. உயர்கல்வி அதிகாரிகளும் இதுகுறித்து தெளிவான விபரம் தெரிவிக்கவில்லை.தலைமை ஆசிரியர்கள் கொடுத்த விபரம் அடிப்படையில்தான் கழிப்பறை செயல்பாடு குறித்து முடிவு எடுக்கப்பட்டது; பலர் தவறான தகவல்களை அளித்துள்ளனர். இதனால், 'வழக்கறிஞர் கமிஷனர்கள்' சென்று பார்ப்பதற்குள் மீண்டும் கணக்கெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறிய பழுது,தண்ணீர் இல்லாததால் பயன்படாமல் உள்ள கழிப்பறைகளை, இரண்டு நாட்களுக்குள் சீரமைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது என்றார்.

மின் வாரிய ஊழியர்கள் நியமனம் : நேர்முக தேர்வு தேதி அறிவிப்பு.

இளநிலை தணிக்கையாளர் உள்ளிட்ட பதவிகளுக்கு, ஊழியர்களை நியமிக்க, மின் வாரியம், நேர்முகத் தேர்வு நடத்த உள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர், கணக்கீட்டாளர் உள்ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, ஜூலை, ஆக., மாதங்களில், எழுத்துத்தேர்வு நடத்தியது. 

அதில், கள மற்றும் தொழில்நுட்ப உதவியாளர், 1,425 பணியிடங்கள் தவிர்த்து, மற்ற பதவிகளுக்கான, எழுத்துத்தேர்வு மதிப்பெண் வெளியிடப்பட்டது.

இந்நிலையில், மூன்று பதவிகளுக்கு, நேர்முகத் தேர்வு தேதியை, மின் வாரியம் வெளியிட்டு உள்ளது. அதன்படி, 25 டைப்பிஸ்ட் - நவ., 2லும்; 50 - உதவி வரைவாளர், நவ., 4, 5லும்; 25 - உதவி தணிக்கையாளர் பதவிக்கு, நவ., 7லும், நேர்முகத் தேர்வு நடக்க உள்ளது.இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறுகையில், 'சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், நேர்காணல் நடக்க உள்ளது; இளநிலை உதவியாளர் உள்ளிட்ட மற்ற பதவிகளுக்கான நேர்காணல் தேதி, விரைவில் அறிவிக்கப்படும்' என்றார்.

அரசு ஊழியருக்கு ஓய்வூதியம் ரூ.770 : உண்மைதான்... நம்புங்க!

மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவரின் ஓய்வூதியம், தமிழக அரசு வழங்கும் முதியோர் ஓய்வூதியத்தை விட குறைவாக உள்ளது.மதுரையில், மத்திய அரசின் வருமான வரித்துறை அலுவலகத்தில், பெண் ஊழியர் ஒருவர் 1990ல் தினக்கூலியாக சேர்ந்தார்; 1993ல் பகுதிநேர பணியாளராக நியமிக்கப்பட்டார்.

பின், 2008 ல் பணி நிரந்தரம் செய்யப்பட்டு, 2015 மே மாதம் ஓய்வு பெற்றார்.அப்போது, அவரது பணப்பலனில் 60 சதவீதம் வழங்கப்பட்டது.மீத தொகையை (ரூ.ஒரு லட்சத்து 33 ஆயிரத்து 33) ஓய்வூதியத்திற்காக எல்.ஐ.சி., 'ஜீவன் அக் ஷயா -6' திட்டத்தில் டிபாசிட் செய்யப்பட்டது. இதையடுத்து, எல்.ஐ.சி., சார்பில் அந்த ஊழியருக்கு பத்திரம் கொடுத்துள்ளனர். அதில், 'டிபாசிட் செய்யப்பட்ட பணத்திற்கு மாத ஓய்வூதியமாக ரூ.770 வழங்கப்படும்' என குறிப்பிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதியோர் ஓய்வூதியம் பெறும் ஆதரவற்றவர்களுக்கு, மாதம் ரூ.1,000 வழங்கப்படுகிறது; ஆனால், மத்திய அரசின் வருமான வரித்துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற ஊழியருக்கு, மாத ஓய்வூதியம் ரூ.770 தான் கிடைக்கிறது.திண்டுக்கல்லை சேர்ந்த ஏங்கல்ஸ் கூறியதாவது: மத்திய அரசில் 25 ஆண்டுகளாக பணிபுரிந்து, ஒரு லட்சத்து 33 ஆயிரத்தை டிபாசிட் செய்தவருக்கு, மாதம் ரூ.770 தான் என்பது வேதனைக்கு உரியது. இந்தத் தொகையும், 20 ஆண்டுகள் ஆனாலும் உயரப்போவது இல்லை. புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்றார்.

"ஆதார் அட்டை பதிவுக்கு காலக்கெடு ஏதுமில்லை'

குடும்ப அட்டையை ஆதார் எண்ணுடன் இணைக்கும் பணிக்கு காலக்கெடு ஏதும் நிர்ணயிக்கப்படவில்லை என்று உணவுத் துறை அமைச்சர் ஆர்.காமராஜ் அறிவித்துள்ளார். மேலும், ஆதார் எண்ணை இணைக்காத குடும்ப அட்டைகளுக்கு பொருள்கள் நிறுத்தப்படும் என்று வெளியான தகவலையும் அவர் மறுத்துள்ளார்.

சென்னையில் உள்ள அமுதம், கூட்டுறவு நியாய விலைக் கடைகளில் அமைச்சர் ஆர்.காமராஜ் புதன்கிழமை ஆய்வு நடத்தினார். இதைத் தொடர்ந்து, அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

தீபாவளி பண்டிகைக்கு முன்பாக, அனைத்து நியாயவிலைக் கடைகளுக்கும் அத்தியாவசியப் பொருள்கள் நகர்வு செய்துமுடிக்கப்பட வேண்டும். மாத ஒதுக்கீட்டின்படி பொருள்கள் நகர்வு செய்து முடிக்க வேண்டும். மேலும், அத்தியாவசியப் பொருள்கள் சீரான முறையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு விநியோகம் செய்வது உறுதி செய்யப்பட வேண்டும்.

ஆதார் எண் பதிவு: ஆதார் எண் பதிவுகள் மேற்கொள்ளாத அட்டைதாரர்களுக்கு பொருள்கள் விநியோகம் நிறுத்தப்பட மாட்டாது. இந்தப் பணிகளுக்கு காலநிர்ணயம் செய்யப்படவில்லை. ஆதார் எண்ணை இணைக்காதோரும் பொருள்கள் வழங்குவதற்கு வழக்கமான நடைமுறையே பின்பற்றப்பட்டு வருகிறது.

பொருள் தேவைப்படாத அட்டைதாரர்களும்...:

எந்தப் பொருளும் தேவைப்படாத குடும்ப அட்டை ("என் கார்டு') வைத்துள்ளோர், குடும்ப அட்டை காலக்கெடு (31.12.16 வரை) நீட்டிப்பு பிரதி, ஆதார் அட்டை ஆகியவற்றுடன் தங்கள் பகுதிக்குரிய நியாய விலைக் கடைக்குச் சென்று செல்லிடப்பேசி உள்ளிட்ட சுயவிவரக் குறிப்புகளைக் கூறி ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்றார்.ஆய்வின்போது உணவு பொருள் வழங்கல்- நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் மதுமதி உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி: மாநிலங்களின் முடிவுக்கு விட்டது மத்திய அரசு

பள்ளி மாணவர்களுக்கு 8-ஆம் வகுப்பு வரை கட்டாயமாக தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை சம்பந்தப்பட்ட மாநிலங்களிடமே விட்டுவிடுவதாக மத்திய அரசு கூறியுள்ளது.

மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் பிரகாஷ் ஜாவடேகர் தலைமையில் தில்லியில் மத்திய கல்வி ஆலோசனை வாரியத்தின் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இதில், "8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி முறை கடைப்பிடிக்கப்படுவதால் கல்வித் தரம் குறைகிறது. எனவே, 5-ஆம் வகுப்பு முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களை அடுத்த வகுப்புக்கு தேர்ச்சி பெறவைப்பது தொடர்பாக இறுதித் தேர்வு நடத்தப்பட வேண்டும்' என்று பல்வேறு மாநிலங்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.

கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களிடம் ஜாவடேகர் கூறியதாவது: மாநில அரசுகளின் கோரிக்கையை மத்திய அரசு ஏற்றுக் கொண்டது. இது தொடர்பாக உரிய சட்டத் திருத்தத்தை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும். அது வரை 8-ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கும் கொள்கை தொடர்பான இறுதி முடிவை மாநில அரசுகளே எடுத்துக் கொள்ளலாம்.
மாநிலக் கல்வி வாரியத்தில் ஏற்கெனவே 10-ஆம் வகுப்பு பொதுத் தேர்வு உள்ளது. அதேபோல மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்திலும் (சிபிஎஸ்இ) 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வை நடத்துவது தொடர்பான திட்டம் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளது. இது தொடர்பாக விரைவில் முடிவு எடுக்கப்படும். மத்திய கல்வி ஆலோசனை வாரியக் கூட்டத்தை அடிக்கடி நடத்த வேண்டும் என்ற முடிவும் எடுக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
மத்திய, மாநில அரசுகளுக்கு கல்வித் திட்டங்கள் தொடர்பாக ஆலோசனைகள் அளிப்பதில் முதன்மையானது மத்திய கல்வி ஆலோசனை வாரியமாகும். இக்கூட்டத்தில் மத்திய அமைச்சர்கள் ராஜீவ் பிரதாப் ரூடி, விஜய் கோயல், மகேந்திர நாத் பாண்டே, உபேந்திர குஷ்வாஹா, 21 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த கல்வி அமைச்சர்கள், மாநிலப் பிரதிநிதிகள் பங்கேற்றனர்.

28ம் தேதி விடுமுறை வழங்க வேண்டும் - ஆசிரியர் சங்கம் கோரிக்கை.

TNPSC:குரூப்- 4 தேர்வு நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்யலாம்.

குரூப்-4 தேர்வுக்கு நுழைவுச் சீட்டை இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) அறிவித்துள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வரும் 6-ம் தேதிதொகுதி-IV ல் (குரூப்-4) அடங்கிய 5,451 காலிப் பணியிடங் களுக்கான எழுத்துத் தேர்வை நடத்தவுள்ளது. இத்தேர்வுக்காக 15 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பெறப்பட்டுள் ளன. சரியான முறையில் விவரங்களை பதிவு செய்து, உரிய தேர் வுக் கட்டணம் செலுத்திய விண் ணப்பதாரர்களுக்கு தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpscexams.net மற்றும் www.tnpsc.gov.in ல் வெளியிடப்பட்டுள்ளது.

விண்ணப்பதாரர்கள் தங்களது விண்ணப்ப பதிவு எண் (Registration ID/Login ID) மற்றும் பிறந்த தேதியை உள்ளீடு செய்து, நுழைவுச்சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். அல்லது தங்களது விண்ணப்பம் நிராகரிக் கப்பட்டுள்ளதற்கான காரணத்தை தெரிந்துகொள்ளலாம்.சரியான முறையில் விண்ணப் பங்களைப் பதிவு செய்து, உரிய விண்ணப்பக் கட்டணம் செலுத்தி யும் நுழைவுச்சீட்டு கிடைக்கப் பெறாத, தகுதியான விண்ணப்ப தாரர்கள், தாங்கள் பணம் செலுத் தியதற்கான செலுத்துச்சீட்டின் நகலுடன் விவரங்களை contact tnpsc@gmail.com என்ற தேர் வாணையத்தின் மின்னஞ்சல் முக வரிக்கு 31-ம் தேதிக்குள் அனுப்பு மாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார் கள். அதன்பிறகு பெறப்படும் கோரிக்கைகளின் மீது எந்த நடவடிக்கையும் மேற்கொள்ளப் படமாட்டாது.

விண்ணப்பதாரர்கள் தங்களது நுழைவுச் சீட்டை பதிவிறக்கம் செய்துகொள்வதில் ஏதேனும் சந்தேகம் இருப்பின் 1800 425 1002 என்ற கட்டணமில்லாத் தொலைபேசியிலோ அல்லது contacttnpsc@gmail.com என்ற மின் னஞ்சல் முகவரியிலோ தொடர்பு கொண்டு தெளிவு பெறலாம்.இத்தகவல்களை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர் வாணையத்தின் தேர்வுக்கட்டுப் பாடு அலுவலர் வெ.ஷோபனா தெரிவித்துள்ளார்.

பிளஸ் 1 படிக்கும் மாணவிகள் மவுலானா ஆசாத் கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கலாம்.

தமிழகத்தில் வசிக்கும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், சீக்கியர்கள், புத்த மதத்தினர், பார்சி மற்றும் ஜெயின் மதங்களைச் சேர்ந்த பிளஸ் 1 படிக்கும் மாணவிகளுக்கு, மத்திய அரசின் மவுலானா ஆசாத் கல்வி அமைப்பு மூலம் ரூ.12 ஆயிரம் உதவித் தொகையாக வழங்கப்படுகிறது.
இது 2 தவணைகளில் பிளஸ் 1-ல் ரூ.6 ஆயிரம், பிளஸ் 2-ல் ரூ.6ஆயிரம் வீதம் வழங்கப்படுகிறது. இந்த உதவித் தொகை பெற, 2016-17-ம் கல்வியாண்டில் மத்திய, மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் பயில்பவராகவும், குடும்ப ஆண்டு வருமானம் ஒரு லட்சம் ரூபாய்க்கு குறைவாகவும் இருத்தல் வேண்டும்.சென்னை மாவட்டத்தைச் சேர்ந்த சிறு பான்மை மாணவியர் இக்கல்வி உதவித் தொகையை பெறுவதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பத்தை www.maef.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்ய வேண்டும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை தாங்கள் பயிலும் கல்வி நிலையங்களில் சமர்ப்பித்து பயன்பெறலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

அகவிலைப்படி உயர்வை தீபாவளிக்கு முன்பாகவழங்கக்கோரி அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்.

புதுக்கோட்டையில்வருகின்றதீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைஅறிவித்துவழங்கவேண்டும்என்பனஉள்ளிட்டகோரிக்கைகளைவலியுறுத்திஅரசுஊழியர்கள்புதுக்கோட்டைமாவட்டத்தில்60-க்கும்மேற்பட்டஇடங்களில்புதன்கிழமையன்றுஆர்ப்பாட்டங்களைநடத்தினர்.
புதுக்கோட்டைமாவட்டஆட்சியர்அலுவலகவளாகத்தில்நடைபெற்றஆர்ப்பாட்டத்திற்குதமிழ்நாடுஅரசுஊழியர்சங்கமாவட்டத்தலைவர்கே.ஜெயபாலன்தலைமைவகித்தார்.கோரிக்கைகளைவிளக்கிமாவட்டச்செயலாளர்சி.கோவிந்தசாமி,பொருளாளர்கே.நாகராஜன்மற்றும்நிர்வாகிகள்கு.சத்தி,மலர்விழி,ரெங்கசாமி,மு.முத்தையா,ஆர்.சுப்பிரமணியன்உள்ளிட்டபலர்கலந்துகொண்டனர்.தீபாவளிக்குமுன்பாகஅகவிலைப்படிஉயர்வைவழங்கவேண்டும்.ஊதியக்குழுவைஉடனடியாகஅமைக்கவேண்டும்.சிபிஎஸ்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்.முதல்வர்அறிவித்தபடிமகப்பேறுவிடுப்பை9மாதமாகஅமுல்படுத்தவேண்டும்.புதியபென்சன்திட்டத்தைரத்துசெய்யவேண்டும்என்பனஉள்ளிட்டபல்வேறுகோரிக்கைகள்எழுப்பப்பட்டன.