Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 3 November 2016

குழந்தை மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய அரசுப்பள்ளி ஆசிரியை தரும் எளிய டிப்ஸ்

*உங்கள் பிள்ளையை ஹோம் வொர்க் செய்ய வைப்பதற்குள் போதும் போதும் என்றாகி* *விடுகிறதா?* *உங்கள் குழந்தை* *மகிழ்ச்சியோடு ஹோம் வொர்க் செய்ய* *நாகப்பட்டினம், அரசுப்பள்ளி ஆசிரியை தேவகுமாரி தரும் எளிய டிப்ஸ்:*

1. குழந்தைகளின் மூளை 20 நிமிடங்களுக்கு ஒருமுறை கவனச்சிதறலுக்கு உட்படும். எனவே வீட்டுப்பாடம் செய்யும்போது 20 நிமிடங்களுக்கு ஒருமுறை அவர்களை ஐந்து நிமிடங்கள் ரிலாக்ஸ் செய்ய பெற்றோர்கள் அனுமதிக்க வேண்டும். ஆனால் டிவி பார்க்கவோ, வீடியோ கேம்ஸ் விளையாடவோ அந்த நேரத்தில் அனுமதிக்காதீர்கள்.

2. குழந்தைகள் வீட்டுப்பாடம் எழுதத் தொடங்கும்போது ஒரு பாடத்துக்கு இவ்வளவு நேரம் என்று அலாரம் வைக்கலாம். குறிப்பிட்ட நேரத்துக்குள், சரியாகவும் வீட்டுப் பாடத்தை முடித்துவிட்டால் சின்ன பரிசு ஒன்றைத் தந்து பாராட்டலாம். ஒரு வாரம் முழுக்க நேரத்துக்குள் முடித்துவிட்டால், பெரிய பரிசு அல்லது வெளியே எங்கேனும் அழைத்துச் செல்லலாம். இது அவர்களுக்கு உத்வேகத்தை அளிப்பதோடு நேர மேலாண்மை பழக்கத்தையும் ஏற்படுத்தும்.

3. குழந்தைகளுக்கு கொடுக்கப்பட்டு இருக்கும் வீட்டுப் பாடத்தை அட்டவணைப்படுத்துங்கள். ஒவ்வொரு பாடத்துக்கும் கார்ட்டூன் கேரக்டரில் ஒரு கார்டு தயாரித்து அதில் எழுதுங்கள். இப்போது டோராவின் வீட்டுப் பாடம் முடிந்துவிட்டது. இனி சோட்டா பீமின் வீட்டுப் பாடம் மட்டுமே மீதம் இருக்கிறது என்று சொல்லுங்கள். இந்தப் புதிய அணுகுமுறை நல்ல மாற்றத்தை தரும்.

4.குழந்தைகள் படிக்கும் வகுப்புக்கு ஏற்ப பாடங்கள், செய்முறையுடன் கூடிய வீடியோக்களாக இணையத்தில் கிடைக்கிறது. வீட்டுப் பாடத்துக்கு ஏற்ற வீடியோவைப் பார்க்க செய்து, வீட்டுப் பாட நோட்டில் கூடுதலாக சில தகவல்களை எழுத செய்யலாம். அதை அடுத்தநாள் ஆசிரியர் பார்த்து பாராட்டும்போது அடுத்தடுத்த நாட்களில் வீட்டுப் பாடத்தை உற்சாகமாக எழுதுவார்கள்.ஆர்வத்துடன் எழுதும்போது அவர்களின் கையெழுத்தும், மெருகேறும்

5.உங்கள் பிள்ளையை, டியூசனில் வீட்டுப்பாடம் செய்ய அனுமதிக்காதீர்கள். அவ்வாறு செய்யும்போது பாடங்கள் புரியாமல் இருந்தால் மற்றவர்களைப் பார்த்து காப்பி அடிக்க ஆரம்பித்து விடுவர். இதனால் அடுத்தடுத்த நாட்களில் அவர்களுக்கு தாங்களே சுயமாக வீட்டுப் பாடம் செய்யவேண்டும் என்ற எண்ணம் போய்விடும் என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

6. குழந்தைகளின் மனது அடிக்கடி மாற்றத்துக்கு உட்படக் கூடியது. அறிவியல் பாடம் எழுதிக்கொண்டிருக்கும்போதே, தமிழ் வீட்டுப் பாடம் செய்கிறேன் ப்ளீஸ் எனக் கேட்பார்கள். அப்படி கேட்கும்போது அவர்களுக்கு எதில் விருப்பம் ஏற்படுகிறதோ அதை செய்யட்டும் என்று விட்டுவிடுங்கள். இல்லையெனில் விருப்பம் இல்லாமல் தப்பும் தவறுமாக செய்து நேரத்தை தான் வீணடிப்பர். ஆனால் திரும்பவும் அறிவியல் பாடத்தையும் எழுத வைக்க மறக்காதீர்கள்.

7.குழந்தைகளுக்கு என்ன வீட்டுப்பாடம் கொடுத்தார்கள் என்பதை அவர்களிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளுங்கள். அதனைச் சார்ந்த சுவாரஸ்யமான தகவல்களை இன்டர்நெட்டில் தேடுங்கள். அப்போது கிடைக்கும் தகவல்களை அதற்குரிய படங்களோடு, சார்ட் பேப்பரில் ஒட்டுங்கள். அதில் நூலைக் கட்டி, ஜன்னலில் தொங்க விடுங்கள். ஆனால் அதன்பின்புறம் தெரிவதுபோல தொங்க விடுங்கள். உங்கள் குழந்தையிடம் நீ விரைவராக வீட்டுப்பாடம் எழுதிவிட்டால், அதோடு தொடர்புடைய இந்தச் செய்தியைக் காட்டுவேன் எனச் சொல்லுங்கள். அது என்ன செய்தி எனும் ஆவலில் விரைவாக மட்டுமல்ல மகிழ்ச்சியோடும் வீட்டுப் பாடத்தை செய்வாா்கள்.

SSA:35 ஆயிரம் ஆசிரியர்களுக்கு  ஆங்கிலத் திறனை மேம்படுத்த பயிற்சி.

ஆங்கில மொழித்திறனை மேம்படுத்த பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் மூலம் 35 ஆயிரம் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்கப்படும் என்று அனைவருக்கும் கல்வி திட்ட (எஸ்எஸ்ஏ) மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தெரிவித்தார். 
பிரிட்டிஷ் கவுன்சில் மற்றும் யுனிசெஃப் உதவியுடன் அரசு பள்ளி ஆங்கில ஆசிரியர்களின் ஆங்கில மொழித்திறனை மேம்படுத்தும் சிறப்புப் பயிற்சி திட்டத்தை எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநரகம் மேற்கொண்டு வருகிறது. முதல்கட்டமாக வட்டார வள மைய (பிஆர்டி) ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்களுக்குப் பயிற்சி அளித்து அவர்கள் மூலமாக இதர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் ஆங்கில ஆசிரியர்களுக்கும் பயிற்சி அளிப்பதுதான் இந்த திட்டம்.

 கடந்த 2014-ம் ஆண்டு முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் இந்த பயிற்சி திட்டத்தில் ஆர்வமும், திறமையும் மிக்க 300 ஆங்கில ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர் களைக் கொண்டு பயிற்சி அளிக் கப்படுகிறது. அதன்படி, முதல் கட்ட, 2-ம் கட்ட பயிற்சிகள் நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், 3-வது கட்ட பயிற்சி சென்னையில் நேற்று தொடங்கியது. இப்பயிற்சியை எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி தொடங்கிவைத்துப் பேசினார். அப்போது அவர் கூறியதாவது: இந்த பயிற்சி திட்டமானது வெறுமனே ஆங்கில பயிற்சி அளிக்கும் திட்டம் மட்டுமல்ல. ஆங்கில ஆசிரியர்களின் பாடம் நடத்தும் திறமையை மேம்படுத்தும் திட்டமும் கூட. 2014-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த திட்டத்தின் பலன்களை நன்றாக பார்க்க முடிகிறது. பயிற்சியின் பலன் பள்ளி மாண வர்களை நல்லமுறையில் சென் றடைந்திருக்கிறது. அவர்களின் ஆங்கில மொழித்திறனில் நல்ல முன்னேற்றத்தை காணமுடிகிறது. இந்த ஆங்கில பயிற்சியானது பயிற்சி பெறும் ஆசிரியர்களுக்கும் நல்ல கற்றல் அனுபவத்தை கொடுக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

பிரிட்டிஷ் கவுன்சில் இந்தியா இயக்குநர் ஆலன் கெம்மல் ஓப் பேசும்போது, "கல்வித்துறையில் இந்தியாவுக்கும் இங்கிலாந்துக்கும் இடையே 70 ஆண்டு காலமாக உறவு இருந்து வருகிறது. கல்வி யில் இருநாடுகளும் இணைந்து செயல்படும் வகையில் பல் வேறு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன. இன்றைய சூழலில் கல்வித்துறை யில் புதுமையை புகுத்த வேண்டியது அவசியம் ஆகும். அதற்கான முயற்சியில் பிரிட்டிஷ் கவுன்சில் இறங்கியுள்ளது. அந்த வகையில், ஆங்கிலப் பயிற்சி தொடர்பாக எஸ்எஸ்ஏ திட்டத்துடன் இணைந்து பணியாற்றுவதில் மகிழ்ச்சி அடைகிறோம். பிரிட்டிஷ் கவுன்சில் மூலம் இந்தியாவில் 9 லட்சம் பேருக்கு ஆங்கிலப் பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது" என்றார்.

பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குநர் மெய் க்வாய் பார்க்கர் ஆங்கில பயிற்சி திட்டம் குறித்துஅறிமுகவுரை ஆற்றினார். ஆங்கிலப் பயிற்சி யால் ஆசிரியர்கள் மற்றும் மாண வர்களிடம் ஏற்பட்டுள்ள முன்னேற் றங்களையும் மாற்றங்களையும் யுனிசெப் கல்வி நிபுணர் அருணா ரத்தினம் எடுத்துரைத்தார். ஆசிரி யர்களின் திறமையை மேம்படுத்த அதிகளவு செலவிடுவதற்கு எஸ்எஸ்ஏ இயக்ககத்துக்கு பாராட்டு தெரிவித்தார். எஸ்எஸ்ஏ முதுநிலை கல்வி ஆலோசகர் மாலதி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

பயிற்சி தொடக்கவிழா முடி வடைந்த பிறகு பூஜா குல்கர்னி நிருபர்களிடம் பேசும்போது, ''இந்த ஆங்கில பயிற்சிக்கு 300 ஆசிரியர் பயிற்றுநர்கள் தேர்வுசெய்யப்பட்டு அவர்களுக்கு பிரிட்டிஷ் கவுன்சில் பயிற்சியாளர்கள் பயிற்சி அளிக் கிறார்கள். ஆங்கிலப் பேச்சுப் பயிற்சி, எழுத்துப் பயிற்சி ஆகியவற் றுடன் ஆங்கிலத்தை எப்படி எளிதான முறையில் கற்றுக்கொடுப் பது என்பது குறித்தும், மற்ற ஆசிரியர்களுக்கு எப்படி பயிற்சி அளிக்க வேண்டும் என்பது பற்றியும் பயிற்சியில் சொல்லிக் கொடுக்கப்படுகிறது. பயிற்சி பெறும் இந்த 300 ஆசிரியர் பயிற்றுநர் களைக் கொண்டு இதர ஆசிரியர் பயிற்றுநர்களுக்கும் ஆசிரியர் களுக்கும் பயிற்சி அளிக்கப்படு கிறது.

இந்த திட்டத்தின் கீழ் அரசு பள்ளிகளில் பணியாற்றும் 35 ஆயிரம் ஆங்கில ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்படும்'' என்றார். எஸ்எஸ்ஏ, பிரிட்டிஷ் கவுன்சில், யுனிசெப் சார்பில் சென்னையில் நேற்று தொடங்கிய ஆசிரியர் பயிற்றுநர்களுக்கான ஆங்கில பயிற்சி தொடக்க விழாவில் (இடமிருந்து) யுனிசெப் கல்வி நிபுணர் அருணா ரத்தினம், பிரிட்டிஷ் கவுன்சில் தென்னிந்திய இயக்குநர் மெய் க்வாய் பார்க்கர், இயக்குநர் ஆலன் கெம்மல் ஓப், எஸ்எஸ்ஏ மாநில திட்ட இயக்குநர் பூஜா குல்கர்னி, முதுநிலை கல்வி ஆலோசகர் மாலதி.

SBI:வீட்டுக்கடன் வட்டியை குறைத்தது .

வீட்டுக்கடனுக்கான வட்டியை பாரத ஸ்டேட் வங்கி குறைத்துள்ளது. குறுகிய கால கடன்களுக்கான ரெப்போ வட்டி விகிதத்தை ரிசர்வ் வங்கி கடந்த முறை 6.25 சதவீதமாக குறைத்தது. 
இவ்வாறு பல முறை ரெப்போ வட்டி குறைக்கப்பட்டபோதும், வங்கிகள் இதன் பலனை வாடிக்கையாளர்களுக்கு வழங்கவில்லை. சராசரியாக 0.6 சதவீதம் மட்டுமே பலன் வழங்கப்பட்டுள்ளது என ரிசர்வ் வங்கி தெரிவித்திருந்தது.இதைத்தொடர்ந்து சில வங்கிகள் வட்டி குறைப்பை அறிவித்தன.இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கி வீட்டுக்கடன் வட்டியை மேலும் 0.15 சதவீதம் குறைத்திருக்கிறது.

அதாவது 75 லட்சம் வரையிலான வீட்டுக்கடன்களுக்கு வட்டி விகிதம் 9.15 சதவீதமாக இருக்கும். பெண்களுக்கு கூடுதல் சலுகையாக 9.1 சதவீதத்தில் கடன் வழங்கப்படும். புதிதாக வீட்டுக்கடன் வாங்குவோர் மட்டுமின்றி வேறு வங்கியில் இருந்து வீட்டுக்கடனை பாரத ஸ்டேட் வங்கிக்கு மாற்றுபவர்களும் தங்களது இஎம்ஐ தவணை கட்டணத்தை குறைக்கலாம் என இந்த வங்கி தெரிவித்துள்ளது.

CPS:காலாவதியானது வல்லுனர் குழு : பென்ஷன் திட்டம் என்னாச்சு?

புதிய பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட வல்லுனர் குழு காலாவதியானதால் அரசு ஊழியர்கள் கலக்கமடைந்துள்ளனர். தமிழகத்தில் 2003 ஏப்.,1 முதல் புதிய பென்ஷன் திட்டம் அமுலில் உள்ளது. இதுவரை 4.23லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்தனர். 
அவர்களிடம் வசூலித்த பென்ஷன் சந்தா, அரசு பங்கு தொகை என, 8,543 கோடி ரூபாயை ஓய்வூதிய நிதி ஒழுங்கற்று மேம்பாட்டு ஆணையத்திடம் தமிழக அரசு செலுத்தவில்லை. இதனால் பணியில் இறந்தோரின் குடும்பத்தினர், ஓய்வு பெற்ற ஊழியர்கள் பணம் பலன் பெற முடியாமல் தவிக்கின்றனர்.புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி பிப்ரவரியில் அரசு ஊழியர், ஆசிரியர்கள் தொடர் போராட்டம் செய்தனர்.பென்ஷன் திட்டத்தை ஆய்வு செய்ய ஓய்வு ஐ.ஏ.எஸ்., அதிகாரி சாந்தா ஷீலாநாயர் தலைமையில் 5 பேர் கொண்ட வல்லுனர் குழுவை பிப்., 26ல் அரசு அமைத்தது.

அந்த குழு ஒருமுறையே கூடியது. அரசு ஊழியர், ஆசிரியர் சங்கங்களைச் சந்திக்காமலேயே, அந்த குழுவிற்கான இயங்கும் காலம் ஜூன் 25 ல் முடிந்தது.இப்பிரச்னை சட்டசபையில் எழுப்பப்பட்டதால், குழுவின் இயங்கும் காலம் 3 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டது.உறுப்பினர்களாக இருந்த பார்த்தசாரதி, லலிதா சுப்ரமணியம் நீக்கப்பட்டு, சென்னை 'மெட்ராஸ் ஸ்கூல் ஆப் எக்னாமிக்ஸ்' நிறுவன பேராசிரியர் பிரிஜேஸ் சி. புரோகித் உறுப்பினராக நியமிக்கப்பட்டார். இந்த குழு செப்., 15, 16 மற்றும் செப்., 22 ல் அரசு ஊழியர், ஆசிரியர் அமைப்புகளை சந்தித்தது. அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யாத நிலையில் அக்., 27 வுடன் அக்குழுவின் இயங்கும் காலம் முடிந்தது.

இதனால் புதிய பென்ஷன் திட்டத்தில் சேர்ந்து 4.23 லட்சம் ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.அரசு ஊழியர் சங்க மாநில பொதுச்செயலாளர் பாலசுப்ரமணியன் கூறியதாவது: வல்லுனர் குழு அமைத்தது கண்துடைப்பு போல் உள்ளது. அக்., 27 ல் குழு இயங்கும் காலம் முடிந்தது. அக்குழு அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ததா (அ) குழு மீண்டும் நீடிக்கப்பட்டதா என்பது குறித்த அறிவிப்பு இல்லை. குழு மீது நம்பக தன்மை இல்லாததால் அரசு ஊழியர்கள் அச்சத்தில் உள்ளனர், என்றனர்.

நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.

நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகை பெற, ஆண்டுக்கு இருமுறை, 'நெட்' தேர்வு நடத்தப்படுகிறது.
2016 டிச., மாதத்திற்கான தேர்வு, 2017 ஜன., 22ல் நடக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் உட்பட, 80க்கும் அதிகமான பாடங்களின் கீழ், இத்தேர்வு நடத்தப்படும். இம்முறை நடக்கும் தேர்வில் முதன்முறையாக யோகா பாடம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம், இம்மாதம், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை, 17ம் தேதி வரை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு.

நெட்' தேர்வுக்கு 16 வரை விண்ணப்பிக்க வாய்ப்பு. சி.பி.எஸ்.இ., சார்பில் நடத்தப்படும், 'நெட்' தகுதித்தேர்வுக்கு வரும், 16ம் தேதி வரை விண்ணப்பிக்க காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நாடு முழுவதுமுள்ள, கல்லுாரிகளில் உதவி பேராசிரியர் பணியில் சேர மற்றும் ஆராய்ச்சி உதவித்தொகை பெற, ஆண்டுக்கு இருமுறை, 'நெட்' தேர்வு நடத்தப்படுகிறது.
2016 டிச., மாதத்திற்கான தேர்வு, 2017 ஜன., 22ல் நடக்கவுள்ளதாக அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. பொருளாதாரம், சமூகவியல், வரலாறு, ஆங்கிலம், கணினி அறிவியல் உட்பட, 80க்கும் அதிகமான பாடங்களின் கீழ், இத்தேர்வு நடத்தப்படும். இம்முறை நடக்கும் தேர்வில் முதன்முறையாக யோகா பாடம் சேர்க்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இத்தேர்வில் பங்கேற்க ஆர்வமுள்ளவர்கள், www.cbsenet.nic.in என்ற இணையதளம் மூலம், இம்மாதம், 16ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். தேர்வுக்கான கட்டணத்தை, 17ம் தேதி வரை செலுத்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் முதல்முறை என்சிஇஆர்டி நடத்தும் திறனறி தேர்வை 10 ஆயிரம் பேர் எழுதுகின்றனர்.

தேசிய கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) நடத் தும் பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வு, திறனறி தேர்வு எழுத தமிழகத்தில் இருந்து10 ஆயிரம் பேர் உட்பட நாடு முழுவதும் 98 ஆயிரம் பேர் விண்ணப்பித்துள்ளனர்.
6 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிக்க தேசிய கல்வியியல், ஆராய்ச்சி நிறுவனம் (என்சிஇஆர்டி) சார்பில் தேசிய அளவில் அறிவியல்விழிப்புணர்வு, திறனறித் தேர்வு கள் ஆண்டுதோறும் நடத்தப்படு கின்றன.இதில் முதல்கட்டமாக ஒரு வகுப்புக்கு 20 பேர் வீதம் ஒவ்வொரு மாநிலத்திலும் 120 பேர் தேர்வு செய்யப்படுவர்.தொடர்ந்து, வரும் ஜனவரியில் இவர்களுக்கு மாநில அளவில் 2 நாள் அறிவியல் செய்முறை பயிற்சிப் பட்டறை நடத்தப்படும். அப்போது 120 பேரில் 18 பேர் மாநில அளவில் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு ரொக்கப் பரிசு,சான்றிதழ் வழங்கப்படும்.

பிறகு, அதில் இருந்து 12 பேர் தேர்வு செய்யப்பட்டு தேசிய அளவிலான திறனறி பயிற்சி முகாமுக்கு அழைக்கப்படுவர். முகாம் முடிவில் தேசிய அளவில் வகுப்புக்கு 3 பேர் வீதம் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு 'இமாலயன்' விருது, ரொக்கப் பரிசு ஆகியவை குடியரசுத் தலைவரால் வழங்கப்படும். இத்தேர்வு பற்றி போதிய விழிப்புணர்வு இல்லாததால், தேசிய அளவில் இதுவரை அதிக பட்சமாக 25 ஆயிரம் பேர், தமிழக அளவில் அதிகபட்சமாக 1,200 பேர் மட்டுமே இத்தேர்வுகளை எழுதியுள்ளனர். ஆனால்,தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் பல மடங்காக உயர்ந் துள்ளது. தமிழகத்தில் 250 பள்ளி களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வுகளை எழுதுகின் றனர். அதிகபட்சமாக பல்லடத்தில் உள்ள ஆதர்ஷ் மெட்ரிக் பள்ளி யைச் சேர்ந்த 416 மாணவர் கள் இத்தேர்வுக்கு விண்ணப் பித்துள்ளனர். பள்ளிகள் இல்லா மல் தனிப்பட்ட முறையில் சுமார் 800 மாணவர்கள் எழுதுகின்றனர். இதில் பாதி பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள். வழக்கமாக இத்தேர்வுகள் ஆங்கிலத்தில் மட்டுமே நடத்தப் படும். இந்த முறை தமிழ் உள்ளிட்ட சில மாநில மொழிகளிலும் தேர்வு எழுத நடவடிக்கை எடுக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து அறிவியல் திறனறிதல் தேர்வுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கண்ணபிரான், கூறியதாவது: விண்ணப்பங்கள் இம்முறை அதிக அளவில் வந்ததற்கு, சில பிராந்திய மொழிகளில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டதும் ஒரு காரணம்.

தமிழகத்தில் இம்முறை விண்ணப்பித்துள்ளவர்களில் 40 சதவீதம் பேர் தமிழ் மீடியம் மாணவர்கள். விண்ணப்பித்த அனைவருக் கும் அப்துல் கலாமின் 'எனக்கான குறிப்புகள்', 'அறிவியல் வளர்ச் சிக்கு இந்திய விஞ்ஞானிகளின் பங்கு' என்ற 2 ஆங்கில நூல்கள் அனுப்பப்பட்டுள்ளன. எதிர்பாராத எண்ணிக்கையில் விண்ணப்பங்கள் குவிந்ததால் வினாத்தாள் தயாரிப்பு, புத்தகங் கள் அனுப்புதல் உள்ளிட்ட பணி கள் தாமதமாகிறது. அதனால், நவம்பர் 13-ம் தேதி நடக்க இருந்த தேர்வு 20-ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.

மாணவர் களுக்கான மாதிரி வினாத்தாள்கள் vvm.org.in என்ற இணைய தளத்தில் தமிழ், ஆங்கிலத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. ஆங்கில நூல்களை தமிழ்ப் படுத்தி வெளியிட அவகாசம் இல்லாததால் தமி ழாக்கத்தை இணையத்தில் மட்டும் வெளி யிட்டுள்ளோம். அடுத்தமுறை தமிழிலேயே புத்தகங்கள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார். தேர்வு எழுதுவோர் எண்ணிக்கை இந்த ஆண்டில் பல மடங்காக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் 250 பள்ளி களைச் சேர்ந்த சுமார் 10 ஆயிரம் பேர் இத்தேர்வுகளை எழுதுகின்றனர்.

நெட்வொர்க் பிரச்னையை சரிசெய்ய 45 ஆயிரம் டவர்கள்: ஜியோ அதிரடி.

சந்தையில் அதிரடி என்ட்ரி கொடுத்த போதும், நெட்வொர்க் பிரச்னை ஜியோவுக்கு பெரிய தலைவலியாக உள்ளது. குறிப்பாக 4ஜி நெட்வொர்க்கில் ஜியோதான் மிகவும் மந்தமானது என ட்ராயே கூறியது. 
இந்நிலையில் இந்த பிரச்னையை சரி செய்ய நாடு முழுவதும் 45,000 மொபைல் டவர்களை அமைக்க ஜியோ முடிவு செய்துள்ளது. இதுகுறித்து ஜியோ அதிகாரிகள் கூறுகையில், "ஜியோ ரூ.1.6 கோடி முதலீட்டில் 18,000 நகரங்கள் மற்றும் 2 லட்சம் கிராமங்களுக்கு சேவை அளிக்கும் வகையில்தான் தொடங்கப்பட்டது.

ஆனால், மற்ற மொபைல் நிறுவனங்கள் இணைப்பில் ஒத்துழைப்பு தராததால்தான் ஜியோவுக்கு நெட்வொர்க் பிரச்னை ஏற்பட்டது. இதை சரி செய்ய அடுத்த 6 மாதங்களில் 45,000 மொபைல்  டவர்கள் அமைக்கப்படுகின்றன". என்றார்.

பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேருக்கு சொத்தைப் பல் பிரச்னை

தனியார் பள்ளி மாணவர்களை ஒப்பிடும்போது, அரசு பள்ளிகளில் பயிலும் மாணவர்களில் 60 சதவீதம் பேருக்குசொத்தைப் பல் பிரச்னை உள்ளதென தாகூர் பல் மருத்துவக் கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன் கூறினார்.
வண்டலூரை அடுத்த ரத்னமங்கலம் தாகூர் பல் மருத்துவக் கல்லூரியில் அரசு, தனியார் பள்ளி மாணவர்களுக்கு இலவச பல் மருத்துவப் பரிசோதனை முகாம், விழிப்புணர்வு கண்காட்சி மூன்று நாட்கள் நடைபெற்றது.இதில் பங்கேற்க தாம்பரம், வண்டலூர் சுற்றுப்புறங்களில் உள்ள 11 அரசு, தனியார் பள்ளிகளில் பயிலும் 1,722 மாணவர்கள், தாகூர் பல் மருத்துவக் கல்லூரிக்கு பேருந்துகளில் அழைத்து வரப்பட்டனர். அவர்கள் அனைவருக்கும் இலவசமாக பல் மருத்துவப் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. சொத்தைப் பல் போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாணவர்கள் தங்கள் பெற்றோருடன் மருத்துவமனைக்கு வந்து சிகிச்சை பெறுவதற்கான இலவச அடையாள அட்டைகள் வழங்கப்பட்டன

.இந்த முகாம் குறித்து கல்லூரி முதல்வர் சித்ரா ஆர்.சந்திரன் கூறியது:அரசு பள்ளி மாணவர்களில் 60 சதவீதம் பேர் உரிய பராமரிப்பின்மையால் பல் சொத்தையாகி பல்லை அகற்றும் நிலையில் பாதிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளி மாணவர்கள் மத்தியில் பல் சுகாதாரம் குறித்து விழிப்புணர்வு உருவாக்கப்பட வேண்டும். பல் துலக்குவதன் அவசியம் குறித்து உரிய விழிப்புணர்வை உருவாக்குவதில் பெற்றோர்களுக்கு முக்கிய பங்கு உள்ளது என்றார் அவர்.

சித்தா படிப்பு: 5ல் கலந்தாய்வு : 4 மாத இழுத்தடிப்புக்கு தீர்வு.

நான்கு மாதங்களாக இழுத்தடிக்கப்பட்ட சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு, வரும், 5ல் துவங்குகிறது. தமிழகத்தில், சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட இந்திய மருத்துவப் படிப்புகளுக்கு, சென்னை, மதுரை உட்பட ஆறு அரசு மருத்துவக் கல்லுாரிகளில், 460 இடங்கள்; 21 சுயநிதி கல்லுாரிகளில், 1,000 இடங்கள் உள்ளன; இதற்கு, 5,702 பேர் விண்ணப்பித்து உள்ளனர்.விண்ணப்பித்து நான்கு மாதங்களாகியும், கலந்தாய்வை நடத்தாததால், மாணவர்கள் அதிருப்தி அடைந்தனர்.

தனியார்கல்லுாரி இடங்கள் நிரம்ப, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம், மறைமுக ஆதரவு தருகிறதோ என்ற சந்தேகத்தையும் எழுப்பினர். ஆனால், மாணவர் சேர்க்கைக்கு, 'ஆயுஷ்' கவுன்சில் அனுமதி தருவதில் ஏற்படும் தாமதத்தால், கலந்தாய்வு தள்ளிப் போவதாக, அதிகாரிகள் சமாளித்தனர். இந்நிலையில், சில நாட்களுக்கு முன், தரவரிசை பட்டியல் வெளியானது. தற்போது, 'முதற்கட்ட கலந்தாய்வு, நவ., 5ல் துவங்கி, 7 வரை நடக்கும்' என, இந்திய மருத்துவம் மற்றும் ஓமியோபதி இயக்ககம் அறிவித்துள்ளது. இதனால், நான்கு மாதங்கள் இழுத்தடிப்புக்கு தீர்வு கிடைத்து உள்ளது.கலந்தாய்வு விபரம்கலந்தாய்வு, நவ., 5ல், துவங்குகிறது. 199 முதல், 187.50 வரை, 'கட் - ஆப்' மதிப்பெண் பெற்ற, 740 பேர், அன்றைக்கு அழைக்கப்பட்டு உள்ளனர்

நவ., 6ல், 187.25 முதல், 178.00 வரை, 'கட் - ஆப்' பெற்ற, 1,016 பேர்; நவ., 7ல், 177.25 முதல், 165.50 வரை, 'கட் - ஆப்' பெற்ற, 1,074 பேர் என, முதற்கட்ட கலந்தாய்விற்கு, 2,830 பேர்அழைக்கப்பட்டு உள்ளனர்

இதில், இடங்கள் நிரம்பாவிட்டால், அடுத்தகட்ட கலந்தாய்வு நடத்தப்படும். இட ஒதுக்கீடு பெறுவோர், நவ., 11க்குள், கல்லுாரியில் சேர வேண்டும். மேலும் விபரங்களை, www.tnhealth.org என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.