Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 4 November 2016

பொம்மலாட்ட ஆயத்தப்பாடல் வீடியோ

video

மாணவர்கள் அறிவியல் கற்பது இனி, எளிது!

அறிவியல் பாட வரையறைகளை, எளிதில் கிடைக்கும் பொருட்களைக் கொண்டு, மாதிரிகள் தயாரித்து வகுப்பு நடத்த,அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில், புதிய கற்பித்தல்செயல்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும், 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அரசு, அரசு உதவிபெறும் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள் உள்ளன. இப்பள்ளிகளுக்கு பராமரிப்பு நிதி, கற்றல், கற்பித்தல் கருவிகள் வழங்குதல், ஆசிரியர்களுக்கான பயிற்சி உள்ளிட்டபல்வேறு பணிகள், அனைவருக்கும் கல்வி இயக்கம் (எஸ்.எஸ்.ஏ.,) திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படுகிறது.கற்பித்தலில் புதிய தொழில்நுட்பத்தை புகுத்துதல் எனும்திட்டத்தின் கீழ், நடுநிலைப்பள்ளி மாணவர்கள், எளிமையாக அறிவியல் பாடத்தை கற்க, புதிய செயல்பாட்டு முறை அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

உள்ளூரில் கிடைக்கும் வளங்களை கொண்டு, மாணவர்களின் புரிதல் திறனுக்கு ஏற்ப, மாதிரிகள் தயாரித்து, கற்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.இதை, மாணவர்களுக்கு கற்பிக்க, மாவட்ட கருத்தாளர்களுக்கான பயிற்சி கோவை, ராஜவீதி, ஆசிரியர் பயிற்சி பள்ளி வளாகத்தில், நேற்று நடந்தது. இதில், 40 ஆசிரியர்கள் பங்கேற்றனர்.இவர்களின் உதவியுடன், அந்தந்த வட்டாரத்தில் உள்ள, பள்ளி ஆசிரியர்களுக்கு, செயலாக்க திட்டத்தை விளக்கி, மாணவர்களுக்கு வகுப்பு எடுக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து, எஸ்.எஸ்.ஏ., திட்ட முதன்மை கல்வி அலுவலர் அருள்முருகன் கூறுகையில்,”நடுநிலைப்பள்ளி மாணவர்களுக்கு, அறிவியல் பாட செயலாக்க திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதில், காற்றின் விசை, அழுத்தம் மற்றும் வேகத்தை, பலுான், ரப்பர் பாட்டில்கள் கொண்டு விளக்கி புரிய வைக்கலாம்.மேலும், விலங்குகளின் உடலமைப்பு, தாவரங்களின் அமைப்பு ஆகியவற்றை, செய்முறை வாயிலாக விளக்க பயிற்சி அளித்துள்ளோம். விரைவில், மாணவர்களுக்கு வகுப்பு நடத்தி,உள்வாங்கும் திறன் குறித்து, பரிசோதித்து அறியப்படும்,” என்றார்.

ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம் !!

ரேஷன் கார்டில் குடும்ப தலைவராக பெண்களை நியமிக்க... திட்டம்!: அரிசி வாங்குவோரை இரண்டாக பிரிக்கவும் தமிழக அரசு முடிவு..
ரேஷன் கார்டில், குடும்ப தலைவராக, ஆண் களுக்கு பதில் பெண்களை நியமிக்க திட்டமிடப் பட்டு உள்ளது. அத்துடன், அரிசி வாங்குவோரை இரண்டாகப் பிரிக்கவும்,தமிழக அரசின் உணவுத் துறை முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் மொத்தம், 2.05 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. கடந்த, 1ம் தேதியில் இருந்து, உணவு பாதுகாப்பு சட்டம் அமலுக்கு வந்துள்ளது. 
இதையடுத்து, ரேஷன் கார்டுகளை, 'முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லா தது' என்று பிரிக்க, உணவுத் துறை முடிவு செய்துள்ளது.

இரண்டு பிரிவு

அதன்படி, முன்னுரிமை பிரிவில், ஏழைகள், முதியோர் உதவித்தொகை பெறுவோர், குடிசை வீடுகளில் வசிப்போர் இடம் பெறுவர். அடுக்கு மாடி வீடுகளில் வசித்து, இரண்டு சிலிண்டர் வைத்திருப்பவர்கள், முன்னுரிமை அல்லாத பிரிவில் இடம் பெறுவர்.

தற்போது, ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக, ஆண்கள் மட்டும் உள்ளனர். இனி, பெண்களை குடும்ப தலைவராக குறிப்பிட, உணவுத் துறை முடிவு செய்துள்ளது. இது குறித்து, தமிழக உணவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:

உணவு பாதுகாப்புசட்டம்

தமிழகத்தில், 1.91 கோடி அரிசி கார்டுகள் உள்ளன. ரேஷனில் வழங்க, மாதத்துக்கு, 3.25 லட்சம் டன் அரிசி தேவை. இதில், மத்திய தொகுப்பில் இருந்து, 'அந்தியோதயா அன்ன யோஜனா' பிரிவில், கிலோ, மூன்று ரூபாய் விலையில், 65 ஆயிரம் டன் வாங்கப்படுகிறது.

வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில், கிலோ, 5.65 ரூபாய்க்கு, 1.05 லட்சம் டன்; வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில், கிலோ, 8.30 ரூபாய் க்கு, 1.26 லட்சம் டன் அரிசி வாங்கப்படுகிறது. மீதம், கிலோ, 19 ரூபாய்க்கு மேல் வாங்கப்படுகிறது.

தமிழகத்தில், உணவு பாதுகாப்பு சட்டம் அமல்படுத்தியதை தொடர்ந்து, மத்திய அரசு, வறுமை கோட்டுக்கு கீழ் பிரிவில், கிலோ, 5.65ரூபாய்க்கு தரும் அரிசியை, மூன்று ரூபாய்; வறுமை கோட்டுக்கு மேல் பிரிவில், 8.30 ரூபாய்க்கு தரும் அரிசியை, 22.50 ரூபாய்க்கு வழங்க முடிவு செய்து உள்ளது.

எடை குறையாது

எனவே, தமிழகத்தில் அரிசி கார்டுதாரர்கள், முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாத வர் என, பிரிக்கப்பட உள்ளனர். இந்த விபரம், மத்திய அரசிடம் தெரிவிக்கப்பட்டு, அரிசி வாங்க மட்டும் பயன்படுத்தப்படும்.

அனைத்து அரிசி கார்டுதாரருக்கும், ரேஷன் கடைகளில், தொடர்ந்து குடும்ப உறுப்பினர் எண்ணிக் கைக்கு ஏற்ப, இலவச அரிசி வழங்கப்படும்; யாருக்கும் எடை குறைத்து வழங்கப்பட மாட்டாது.

முன்னுரிமை பிரிவு ரேஷன் கார்டுகளில், குடும்ப தலைவராக பெண்கள் நியமிக்கப் படுவர். முன்னுரிமை அல்லாத பிரிவில், ஆண், பெண், அவர்களின் விருப்பத்திற்கு ஏற்ப, குடும்ப தலைவராக இருக்கலாம். இது குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை, தமிழக அரசு விரைவில் வெளியிடும். இவ்வாறு அவர் கூறினார்.

சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடம் நேரடி நியமனம் : நாளை முதல் விண்ணப்பம் விநியோகம் !

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு அமைப்பாளர் காலிப்பணியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்யப்படவுள்ளதாக, கலெக்டர் கதிரவன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சத்துணவு திட்டத்தில் பள்ளி சத்துணவு மையங்களில் காலியாக உள்ள சத்துணவு அமைப்பாளர் பணியிடங்களுக்கு நேரடி நியமனம் மூலம் நிரப்பப்படவுள்ளது.

இதற்கான விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்திலும், கிருஷ்ணகிரி நகராட்சி ஆணையர் அலுவலகத்திலும் வருகிற 5ம் தேதி (நாளை) முதல் 22ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.

இப்பணிக்கு இன சுழற்சி முறை பின்பற்றப்படும். விண்ணப்பதாரர்கள் குடியிருக்கும் இடத்திற்கும், காலியாக உள்ள சத்துணவு மையத்திற்கும் இடையே உள்ள தூரம் 3 கி.மீ.க்குள் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பத்துடன் கல்வித்தகுதி, இருப்பிடம், இனம், விதவை/ கணவரால் கைவிடப்பட்டவர் மற்றும் மாற்றுத்திறனாளி சான்றுகளின் நகல்கள் இணைக்கப்பட வேண்டும்.

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் பொதுப்பிரிவினர் மற்றும் தாழ்த்தப்பட்டோர் 10ம் வகுப்பு தேர்ச்சிபெற்றிருக்க வேண்டும். 21 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

பழங்குடியினர் 8ம் வகுப்பு தேர்ச்சி அல்லது தோல்வியடைந்தவராக இருக்க வேண்டும். 18 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவராக இருக்க வேண்டும். விதவைகள் மற்றும் கணவரால் கைவிடப்பட்டோர்களுக்கு 20 வயது பூர்த்தி அடைந்து 40 வயது மிகாதவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பங்கள் வருகிற 22ம் தேதி மாலை 5 மணி வரை பெறப்படும் மனுக்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும்.

நேர்முக தேர்வில் கலந்துகொள்வதற்கான அழைப்பு கடிதம் அனுப்பப்படும். விண்ணப்பங்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்கள், கிருஷ்ணகிரி நகராட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொள்ளலாம் மற்றும் கிருஷ்ணகிரி மாவட்ட இணையதள முகவரி www.krishnagiri.nic.in என்ற முகவரியிலும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பங்களை சம்மந்தப்பட்ட ஊராட்சி / நகராட்சி அலுவலகத்திற்கு மட்டுமே அனுப்பப்பட வேண்டும். இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

ஆசிரியர்களை வேறு பணிகளில் ஈடுபடுத்தக் கூடாது: சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு உத்தரவு.

ஆசிரியர் பணிக்கான வழிகாட்டி நெறிமுறைகள் தொடர்பாக சிபிஎஸ்இ செயலாளர் ஜோசப் இம்மானுவேல் அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளின் முதல்வர் களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது:
ஆசிரியர்கள் கல்வி பணி அல்லாத இதர பணிகளிலும் ஈடுபடுத்தப்படுவதாக கடந்த அக் டோபர் 25-ம் தேதி நடைபெற்ற மத்திய கல்வி ஆலோசனை வாரிய கூட்டத்தில் பல்வேறு மாநிலங்களின் பிரதிநிதிகள் புகார் எழுப்பினர். இதை கருத்தில் கொண்டு ஆசிரியர்கள் கற்பித்தல் பணி அல்லாத வேறு பணிகளில் ஈடுபடுத்தப்படவில்லை என்பது சிபிஎஸ்இ பள்ளிகள் உறுதிபடுத்த வேண்டும். அலுவலகப்பணி, போக்குவரத்து, கேன்டீன் நிர் வாகம் உள்ளிட்ட இதர பணிகளை செய்வதற்கு அதற்கென பயிற்சி பெற்ற பணியாளர்களை பள்ளிகள் ஈடுபடுத்திக்கொள்ள வேண்டும்.இவ்வாறு அந்த சுற்றறிக்கை யில் கூறப்பட்டுள்ளது.

அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. 

 கோவை மாவட்டம், சூலுார் தொடக்க கல்வி அலுவலகத்தில், அக்., 28ல், 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கேட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள உதவி தொடக்க கல்வி அதிகாரி, பள்ளிகளில் நேரடி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, இந்த போராட்டம் நடந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் கிடைத்ததும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி, சம்பவ இடத்துக்கு வந்து, ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது, 'பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, ஊக்க ஊதிய பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முன்னறிவிப்பின்றி ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தியது குறித்து, தொடக்க கல்வி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. சூலுார் ஒன்றியம், கலங்கல் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, வெங்கிட்டாபுரம் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஹென்றி பீட்டர் ஆகியோர், இந்த போராட்டத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் தேர்வு முடிவு வெளியீடு: தமிழக ஒதுக்கீட்டில் வெளிமாநிலத்தவர் அதிகமாக தேர்வானதாக சர்ச்சை - வழக்கமான நடைமுறைதான் என பயிற்சி மையங்கள் விளக்கம்.

பாரத ஸ்டேட் வங்கி எழுத்தர் பணிக் கான தேர்வில் தமிழக ஒதுக்கீட்டில் உள்ள காலியிடங்களுக்கு வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்வுசெய்யப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது.பொதுத்துறை வங்கிகளுக்கு தேவைப்படும் எழுத்தர்களும் (கிளார்க்) அதிகாரிகளும் ஐபிபிஎஸ் எனப்படும் வங்கிப் பணியாளர் தேர்வு நிறுவனம் மூலமாக தேர்வு செய்யப்படுகிறார்கள்.
ஆனால், நாட்டின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி மட்டும் பணியாளர்களை தானே தேர்வு நடத்தி தேர்வுசெய்துகொள்கிறது. அந்த வகையில், பாரத ஸ்டேட் வங்கியில் ஜுனியர் அசோசி யேட்(கிளார்க்) பணிக்கு 17 ஆயிரத்து 400 இடங்களை நிரப்ப கடந்த ஏப்ரல் மாதம் அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. மொத்த பணியிடங்களில் தமிழகம் உட்பட ஒவ்வொரு மாநிலத்துக்கும் குறிப் பிட்ட காலிப் பணியிடங்கள் ஒதுக் கப்பட்டிருந்தன. தமிழ்நாட்டுக்கு 1,420 காலியிடங்கள் அறிவிக்கப் பட்டிருந்தது.முதல்நிலைத் தேர்வு, மெயின் தேர்வு, நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தி முடிக்கப்பட்டு இறுதித் தேர்வு முடிவு புதன்கிழமை வெளியிடப்பட்டது. இந்நிலையில், தமிழக ஒதுக்கீட்டு காலியிடங்களில் கேரளா மற்றும் வடமாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ந் தெடுக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் தமிழகத் தைச் சேர்ந்த தேர்வர்கள் பாதிக்கப் பட்டிருப்பதாக புகார் கிளம்பி யுள்ளது.

இதுகுறித்து வங்கித் தேர்வு களுக்குப் பயிற்சி அளிக்கும் மையங்களின் நிர்வாகிகள் சிலரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:வங்கிப் பணிகளுக்கான போட்டித்தேர்வில் வினாக்கள் ஆங்கிலம், இந்தியில் மட்டுமே கொடுக்கப்பட்டிருக்கும். இதே நடைமுறையைத்தான் பாரத ஸ்டேட் வங்கியும் பின்பற்றுகிறது. வினாக்கள் தமிழ் உள்ளிட்ட பிராந்திய மொழிகளில் இருக்காது. காலியிடங்கள் ஒவ்வொரு மாநிலத் துக்கும் குறிப்பிட்ட எண்ணிக்கை யில் ஒதுக்கப்பட்டிருந்தாலும் ஒரு விண்ணப்பதாரர் ஒரு மாநிலத் துக்கான காலியிடங்களுக்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.அந்த வகையில், இந்தியாவில் உள்ள எந்த மாநிலத்தினரும் ஏதேனும் ஒரு மாநில ஒதுக்கீட் டுக்கான காலியிடங்களுக்கு மட் டுமே விண்ணப்பிக்க இயலும். வட இந்திய மாநிலங்களைச் சேர்ந் தவர்கள் தமிழக ஒதுக்கீட்டுக்கோ, கேரள ஒதுக்கீட்டுக்கோ விண் ணப்பிக்க முடியும். அதேபோல், தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் வட இந்திய மாநில ஒதுக்கீட்டுக்கு விண்ணப்பிக்கலாம். இது வழக்கமான நடைமுறைதான்.எழுத்தர் பணிக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளநிலையில், தமிழக ஒதுக்கீட்டுக்கு இதர மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் அதிக எண்ணிக்கையில் தேர்ச்சி பெற்றிருப்பது உண்மைதான்.

வங்கித் தேர்வு என்பது ஒரு போட்டித்தேர்வாகும். தேர்வில் யார் வேண்டுமானாலும் கலந்து கொண்டு போட்டியிடலாம். தேர்வில் பெறும் மதிப்பெண், நேர்காணல் அடிப்படையில் இறுதி தெரிவு நடைபெறுகிறது.பொதுவாகவே வட இந்திய மாநில மாணவர்கள் கல்லூரியில் படிக்கும்போதே வங்கித் தேர்வு களுக்கு படிக்க ஆரம்பித்துவிடு கிறார்கள். வங்கித் தேர்வுகள் பற்றிய விழிப்புணர்வும் அவர்களுக்கு அதிகம். ஆனால், வட இந்திய மாணவர்களுடன் ஒப்பிடும்போது தமிழக மாணவர்களுக்கு விழிப் புணர்வு குறைவுதான். பெரும் பாலானவர்கள் பட்டப் படிப்பு முடித்த பின்னரே வங்கித் தேர்வுகள் குறித்து அறிந்து கொள்கிறார்கள்.

அதன்பின்னரே தேர்வுக்கு படிக்க ஆரம்பிக்கிறார்கள்.வங்கித் தேர்வில் ஆங்கிலம், ரீசனிங், கணிதம், பொது அறிவு என 4 பிரிவுகள் இருக்கும். ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் எடுத்தாக வேண்டும். தமிழக மாணவர்களில் கணிசமானோர் ஆங்கிலம், கணித பிரிவுகளில் சற்று பலவீனமாக இருக்கிறார்கள். ஒட்டுமொத்தமாக அதிக மதிப்பெண் எடுக்க முடிந்தாலும் ஒவ்வொரு பிரிவிலும் குறைந்தபட்ச மதிப்பெண் எடுக்க முடியாத நிலையிலும் வெற்றிவாய்ப்பை இழக்க நேரிடுகிறது.இவ்வாறு அவர்கள் கூறினர்.

குரூப்-2 ஏ தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தோருக்கு பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வு நவ. 21-ம் தேதி தொடங்குகிறது.

டிஎன்பிஎஸ்சி குரூப்-2 ஏ தேர்வில் சான்றிதழ் சரிபார்ப்பு முடித்தவர் களுக்கான பணிஒதுக்கீட்டு கலந்தாய்வு நவம்பர் 21-ம் தேதி தொடங்குகிறது.தமிழக அரசின் பல்வேறு துறைகளில் உதவியாளர் மற்றும் நேர்முக எழுத்தர் பணியில் 1,947 காலியிடங்களை (நேர்காணல் இல்லாத பணிகள்) நிரப்புவதற்காக குரூப்-2 ஏ தேர்வு கடந்த ஜனவரி மாதம் 24-ம் தேதி நடத்தப்பட்டது. 
டிஎன்பிஎஸ்சி நடத்திய இந்த தேர்வினை 6 லட்சத்து 54 ஆயிரம் பட்டதாரிகள் எழுதினர். தேர்வெழுதியவர் களின் மதிப்பெண் மற்றும் தரவரிசைப் பட்டியல் ஜுன் மாதம் வெளியிடப்பட்டது.

இதைத்தொடர்ந்து தரவரிசைப்படி சான்றிதழ் சரிபார்ப்பு ஜூலை 4 முதல் 19-ம் தேதி வரை நடைபெற்றது.இந்த நிலையில், பணி ஒதுக்கீட்டு கலந்தாய்வுக்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியல் டிஎன்பிஎஸ்சி இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந் தாய்வு நவம்பர் 21-ம் தேதி தொடங்கி டிசம்பர் 2-ல் முடிவடைகிறது.கலந்தாய்வு குறித்து சம்பந்தப்பட்ட விண்ணப்பதாரர் களுக்கு தனித்தனியே தகவல் தெரிவிக்கப்படும் என்று டிஎன்பிஎஸ்சி செயலாளர் மா.விஜயகுமார் அறிவித்து ள்ளார்.

எஸ்எஸ்எல்சி தனித் தேர்வர்களுக்கு மதிப்பெண் சான்றிதழ்

எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என்று அரசு தேர்வுத்துறை அறிவித்துள் ளது.இதுதொடர்பாக அரசுத் தேர்வு கள் இயக்குநர் தண்.வசுந்தரா தேவி நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் நடந்து முடிந்த 10-ம் வகுப்பு துணைத்தேர்வு எழுதிய தனித் தேர்வர்கள் (சிறப்பு அனுமதி திட்டத்தில் தேர்வு எழுதியவர்கள் உட்பட) தேர்வு முடிவுகளை தற்காலிக மதிப்பெண் சான்றிதழ்களாக தேர்வுத்துறையின் இணையதளத்தில் (www.dge.tn.nic.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். பதிவிறக்கம் செய்யும்போது, பதிவெண் மற்றும் பிறந்த தேதியைக் குறிப்பிட வேண்டும்.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

தொலைதூரக்கல்வி படிப்பு விவரத்தை சான்றிதழில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும்: பல்கலைக்கழகங்களுக்கு யுஜிசி உத்தரவு.

தொலைதூரக் கல்வி படிப்பு விவ ரங்களை கண்டிப்பாக கல்விச்சான்றிதழ்களில் குறிப்பிட வேண் டும் என்று பல்கலைக்கழக மானியக் குழு தொலைதூரக்கல்வி நிறுவனங் களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்லூரி மற்றும் பல்கலைக் கழகத்துக்கு நேரில் சென்று படிக்க இயலாதவர்கள் மேற்படிப்பை தொடர உதவும் வகையில் தொலை தூரக்கல்வி திட்டம் செயல்படுத் தப்பட்டு வருகிறது.கிட்டதட்ட அனைத்து பல்கலைக்கழகங் களுமே தொலைதூரக் கல்வி திட்டத்தில் பட்டப் படிப்புகள், பட்டமேற்படிப்புகள், டிப்ளமோ மற்றும் சான்றிதழ் படிப்புகளை வழங்கி வருகின்றன.தொலைதூரக் கல்வியில் படித்து பட்டம் பெறுவோருக்கு வழங்கப் படும் சான்றிதழ்களில் ஒருசில பல்கலைக்கழகங்கள்தொலை தூரக்கல்வி படிப்பு விவரத்தை குறிப்பிடுவதில்லை என பல்கலைக் கழக மானியக்குழுவுக்கு (யுஜிசி) புகார்கள் வரப்பெற்றன. இந்த நிலையில், யுஜிசி செயலாளர் ஜஸ்பால் எஸ்.சாந்து அனைத்து பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்களுக்கும் ஒரு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

அதில் கூறி யிருப்பதாவது:-தொலைதூரக் கல்வி வழியில் படிப்புகளை நடத்தும் ஒருசில பல்கலைக்கழகங்களும், கல்வி நிறுவனங்களும் பட்டச்சான்றிதழ் மற்றும் மதிப்பெண் சான்றிதழில் தொலைதூரக்கல்வி படிப்பு விவ ரத்தை குறிப்பிடாமல் பட்டங்களை வழங்குவது கண்டறியப்பட்டுள் ளது. இதனால், ரெகுலர் முறையில் வழங்கப்பட்ட பட்டமா அல்லது தொலைதூரக் கல்வியில் வழங்கப் பட்ட பட்டமா என்ற குழப்பம் ஏற் படுகிறது. இந்த குழப்பத்தை தவிர்க் கும் வகையில் தொலைதூரக் கல்வி படிப்பு விவரத்தை கல்விச் சான்றிதழ்களில் கண்டிப்பாக குறிப்பிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மூன்று தொகுதிகளில் 19ம் தேதி விடுமுறை.

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு, 19ல், தேர்தல் நடைபெற உள்ளது. அதையொட்டி, இந்த தொகுதி களில் மட்டும், 19ம் தேதி, பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 
அன்று, மூன்று தொகுதிகளில் உள்ள, அரசு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், அரசு சார்ந்த நிறுவனங்களுக்கு விடுமுறை விடப்படும். இந்த தொகுதிகளில் உள்ள வாக்காளர்கள், அருகில் உள்ள மாவட்டங்களில் பணிபுரிந்தாலும், அவர்களுக்கும், சம்பளத்துடன் கூடிய விடுப்பு அளிக்க வேண்டும் என, அரசு உத்தரவிட்டுள்ளது.

அனுமதியின்றி போராட்டம் : ஆசிரியர்கள் 'சஸ்பெண்ட்'

முன்னறிவிப்பின்றி போராட்டம் நடத்தியதாக, இரண்டு ஆசிரியர்களை, தொடக்க கல்வித் துறை, 'சஸ்பெண்ட்' செய்துள்ளது. 

 கோவை மாவட்டம், சூலுார் தொடக்க கல்வி அலுவலகத்தில், அக்., 28ல், 40க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள், உயர் கல்விக்கான ஊக்க ஊதியம் கேட்டு, திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அங்குள்ள உதவி தொடக்க கல்வி அதிகாரி, பள்ளிகளில் நேரடி ஆய்வில் ஈடுபட்டிருந்த போது, இந்த போராட்டம் நடந்ததால், ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

தகவல் கிடைத்ததும், மாவட்ட தொடக்க கல்வி அதிகாரி காந்திமதி, சம்பவ இடத்துக்கு வந்து, ஆசிரியர்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது, 'பல ஆண்டுகளாக நிலுவையில் உள்ள, ஊக்க ஊதிய பிரச்னைக்கு முடிவு காண வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, முன்னறிவிப்பின்றி ஆசிரியர்கள் திடீரென போராட்டம் நடத்தியது குறித்து, தொடக்க கல்வி இயக்குனரகம் விசாரணை நடத்தியது. சூலுார் ஒன்றியம், கலங்கல் பஞ்சாயத்து ஒன்றிய தொடக்க பள்ளி தலைமை ஆசிரியை விஜயலட்சுமி, வெங்கிட்டாபுரம் பஞ்சாயத்து நடுநிலைப் பள்ளி ஆசிரியர் ஹென்றி பீட்டர் ஆகியோர், இந்த போராட்டத்துக்கு காரணம் என்பது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் இருவரும், அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்ததாக, சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர்.

பெட்ரோல் பங்க் நேரம் நாளை முதல் குறைப்பு

நாளை முதல், பெட்ரோல் பங்க் வேலை நேரத்தை குறைக்க, உரிமையாளர்கள் முடிவு செய்துள்ளனர். 

 தமிழகம் மற்றும் புதுச்சேரியில், 4,750 பெட்ரோல் பங்க்குகள் உள்ளன. ஒரு பங்க்கில் மாதம்தோறும் சராசரியாக, 1.70 லட்சம் லிட்டர் பெட்ரோல், டீசல் விற்பனையாகிறது. டீலர் கமிஷனை உயர்த்தி தருமாறு, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், எண்ணெய் நிறுவனங்களுக்கு கோரிக்கை விடுத்தனர். அதை, மத்திய அரசு அமைத்த கமிட்டி பரிந்துரை அளித்தும், எண்ணெய் நிறுவனங்கள் அமல்படுத்தவில்லை. 

இதனால், எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, பெட்ரோல் பங்க் உரிமையாளர்கள், பல கட்ட போராட்டத்தை அறிவித்தனர். அதன்படி, கடந்த மாதம், 19, 26ல் இரவு, 7:00 முதல், 7:15 வரை, பெட்ரோல் பங்க்குகள் மூடப்பட்டன. நேற்று, பெட்ரோல், டீசல் கொள்முதலை நிறுத்தினர்.  
இதுகுறித்து, தமிழ்நாடு பெட்ரோலியம் டீலர்ஸ் கூட்டமைப்பு தலைவர், முரளி கூறியதாவது:டீலர் கமிஷன் தொடர்பாக, மஹாராஷ்டிரா மாநிலம், மும்பையில், எண்ணெய் நிறுவனங்களிடம், நாளை பேச்சுவார்த்தை நடக்கிறது. அதில், கமிஷனை உயர்த்தி தர ஒப்புக் கொள்ளாவிட்டால், 5ம் தேதியில் இருந்து, காலை, 9:00 முதல், மாலை, 6:00 வரை மட்டும் பங்க் திறக்கப்படும். பின், வங்கிகள் போல், பெட்ரோல் பங்க்குகளுக்கும், வார விடுமுறை விடப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.