Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 10 November 2016

அகஇ - 2016-17 - மாநில அளவில் திறனாய்வு தேர்வு - எட்டாம் வகுப்பிற்கு டிசம்பர் 19 & 20, மூன்று மற்றும் ஐந்தாம் வகுப்பிற்கு டிசம்பர் 21 & 22 தேதிகளிலும் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது

இனி நகை வாங்க பான்கார்டு கட்டாயம்: மத்திய வருவாய்த்துறை அதிரடி உத்தரவு

நாடு முழுவதும் பழைய ரூ.500, ரூ.1,000 நோட்டுகள் செவ்வாய்க்கிழமை (நவ.8) நள்ளிரவு முதல் செல்லாது என பிரதமர் மோடி அறிவித்தார். மேலும் மாற்றம் காரணமாக நாடு முழுவதும் உள்ள வங்கிகளுக்கு புதன்கிழமை (நவ.9) விடுமுறை அறிவிக்கப்பட்டது.
இதனையடுத்து, பொதுமக்கள் அனைவரும் அத்தியாவாசிய செலவுகளுக்கு ரூ.100 நோட்டுகளை ஏடிஎம் மையங்களில் எடுக்க இரவு முழுவதும் கால் கடுக்க வரிசையில் நின்ற பொதுமக்கள், அன்று இரவே தங்கத்தின் மீது முதலீடு செய்ய தொடங்கினர். இதனால் நகைக்கடைகளில் செவ்வாய்க்கிழமை இரவிலிருந்து வாங்க குவிந்தனர். இதனால் தங்கத்தின் விலை என்றும் இல்லாத அளவுக்கு ஏறுமுகமாக காணப்பட்டது. மேலும், நகைக்கடைகளில் கூட்டம் அலைமோதியது.
இதையடுத்து நகைக்கடைகளுக்கு மத்திய வருவாய்த்துறை உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதில், நகைக்கடைகளில் நகை வாங்கும் அனைவருக்கும் பான் கார்டு விவரத்தை கட்டாயம் கொடுக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

பல்கலை தமிழ்த்துறை ஆய்வு; ரூ.55.5 லட்சம் நிதி ஒதுக்கீடு

கோவை: பாரதியார் பல்கலை தமிழ்த்துறை சார்பில், ’கொங்கு நாட்டுப்புறவியல் அளவாய்வு’ என்ற தலைப்பில் ஆய்வு பணிக்கு பல்கலை மானியக்குழு, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது.

பல்கலை மானியக்குழு சார்பில், ஒவ்வொரு ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை சிறப்பு நிதியுதவி திட்டத்தில், ஆய்வுக்கு நிதி ஒதுக்கி வருகிறது. அதன் படி, பாரதியார் பல்கலை தமிழ்த்துறைக்கு, கொங்குநாட்டு வரலாறுகளை ஆவணப்படுத்தும் வகையில், முதல்கட்டமாக, 2009-13 வரையிலான ஐந்தாண்டுகளுக்கு, 22.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கியது.

தற்போது, இரண்டாம் கட்டமாக, 55.5 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்நிதியை பயன்படுத்தி, கொங்கு பகுதிகளுக்கான தாலாட்டு, ஒப்பாரி, கதை பாட்டு, நெடுபாட்டு, கூத்துக்கள், நாட்டுப்புற மருத்துவ முறை, திருமண நடைமுறை, விளையாட்டுகள், நாட்டுப்புற கதைகள் போன்றவற்றை ஆய்வு செய்து, ஆவணப்படுத்தவேண்டும். இரண்டாம் கட்ட ஆய்வுக்கு, 2019ம் ஆண்டு வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

தமிழ்த் துறைத்தலைவர் ஜெயா கூறுகையில், ”மேற்கத்திய நாடுகளில், அனைத்தும் ஆவணமாக பதிவு செய்யப்படும் பழக்கம் உள்ளது. ஆனால், நம் நாட்டில் ஆவணப்படுத்தும் வழக்கம் அதிகம் இல்லை. இதனால், இலக்கிய வரலாறுகள் படைப்பதில் சிரமம் எழுகிறது. 

ஒவ்வொரு ஆவணமும் ஓர் பெரிய இலக்கிய வரலாற்றின் பகுதி. கொங்கு பகுதிகளுக்கு பல்வேறு சிறப்புகள் உள்ளன. நாட்டு மருத்துவம், விவசாயம் என, பழங்கால முறைகள் அனைத்தும் ஆவணப்படுத்தப்படும்,” என்றார்.

அரசு மருத்துவ கல்லூரியில் முதுநிலை ’சீட்’ அதிகரிப்பு

கோவை: கோவை அரசு மருத்துவ கல்லுாரியில், முதுகலை பயோ - கெமிஸ்ட்ரி பாடப்பிரிவுக்கு மூன்று இடங்களை ஒதுக்கி, இந்திய மருத்துவக் கவுன்சில் உத்தரவிட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவ கல்லூரியில் இ.என்.டி., பயோ - கெமிஸ்ட்ரி, பொது மருத்துவம் உள்ளிட்ட பல்வேறு பிரிவிகளில் முதுநிலை பட்டப்படிப்புகள் உள்ளன. இதில், தற்போது மொத்தம், 86 ’சீட்’டுகள் உள்ளன.

இந்நிலையில், மருத்துவமனையின் கோரிக்கையை ஏற்று ஆய்வுகளுக்கு பின், சமீபத்தில் கூடுதலாக, 14 சீட்டுகள் வழங்கப்பட்டுள்ளது.

கோவை அரசு மருத்துவமனை டீன் எட்வின் ஜோ கூறுகையில், ”மருந்தியியல், பயோ - கெமிஸ்ட்ரி, உளவியியல், தடய அறிவியல் உள்ளிட்ட பிரிவுகளுக்கு, 20 சீட்கள் வேண்டி, இந்திய மருத்துவ கவுன்சிலிடம் மருத்துவ கல்லூரி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது. 

வரும் கல்வியாண்டில், புதியதாக முதுநிலையில் எம்.டி., பயோ - கெமிஸ்ட்ரி படிப்புக்கு மூன்று சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. வரும், 2017 - 18 கல்வியாண்டில் எம்.டி., பயோ - கெமிஸ்ட்ரி படிப்பில் சேர்க்கை நடக்கும்,” என்றார்.

கற்றலில் பின்தங்கிய மாணவர்கள் சிரமம்

கோவை: பொதுத்தேர்வுக்கு முன்பு, முழு பாடத்திட்டத்தில் இருந்தும், அடுத்தடுத்து தேர்வுகள் நடத்துவதால், கற்றல் குறைபாடுள்ள மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த, நேரமில்லாத சூழல் ஏற்பட்டுள்ளதாக, ஆசிரியர்கள் புலம்புகின்றனர்.

நடப்பு கல்வியாண்டு முதல், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு, பருவத்தேர்வுகளுக்கு பதிலாக, ’முன் -- அரையாண்டு தேர்வு’ நடத்தப்படும் என,

கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.இத்தேர்வு, வரும் 14ம் தேதி துவங்கி, 25ல் நிறைவடைகிறது. இதற்கு, முழு பாடத்திட்டத்தில் இருந்தும், கேள்விகள் இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

பத்தாம் வகுப்புக்கான அரையாண்டு தேர்வு, டிச., 9ம் தேதி மற்றும், பிளஸ் 2 மாணவர்களுக்கு, டிசம்பர் 7ம் தேதி துவங்கி, 23ல் நிறைவடைகிறது.

இத்தேர்வுக்கும், முழு பாடத்திட்டத்தில் இருந்தும் கேள்விகள் இடம்பெறும். இதற்கு பின், அடுத்தடுத்த பத்து நாட்கள் இடைவெளியில், திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும்.

அரசுப்பள்ளி ஆசிரியர்கள் சிலர் கூறுகையில்,’முன் - அரையாண்டு தேர்வில், அனைத்து பகுதிகளிலும் கேள்விகள் இடம்பெறுவதற்கு பதிலாக, பருவத்தேர்வு போல் நடத்தலாம். காலாண்டு தேர்வுக்கு பின் நடத்திய பாடங்கள் முழுமையாக தயார்படுத்த, பருவத்தேர்வு உதவிபுரியும். 

முன் அரையாண்டு, அரையாண்டு, திருப்புதல் தேர்வுகள் என, ஐந்து முறை, முழு புத்தகத்தில் இருந்தும் கேள்விகள் இடம்பெற்றால், சிறப்பாக படிக்கும் மாணவர்களுக்கு, பயிற்சி பெற உதவியாக இருக்கும். ஆனால், பின்தங்கிய மாணவர்களுக்கு, சிறப்பு கவனம் செலுத்த முடியாது.

’பொதுத்தேர்வு முடிவுகளில், தோல்வி சதவீதம் வைத்து தான், ஆசிரியர்களின் கற்பித்தல் திறன் மதிப்பிடப்படுகிறது. 100 சதவீத தேர்ச்சி இலக்கு அடைய, அடுத்தடுத்து தேர்வுகள் நடத்துவதை விட, படிக்க நேரம் அளிப்பது அவசியம்’ என்றனர்.

4ஜி என்ட்ரி கொடுக்கிறது பி.எஸ்.என்.எல்

அலைக்கற்றை ஏலத்தில் 700 மெகாஹெர்ட்ஸ் அலைக்கற்றையின் அடிப்படை விலை மெகாஹெர்ட்ஸ், ஒன்றுக்கு ரூ.11,485 கோடி  நிர்ணயிக்கப்பட்டது.

ஆனால், தொலைத்தொடர்பு நிறுவனங்கள் அந்த அலைக்கற்றையை ஏலத்தில் எடுக்கவில்லை. இதையடுத்து பி.எஸ்.என்.எல். தலைவர் மற்றும் நிர்வாக இயக்குநர் அனுபம் ஶ்ரீவத்சவ், '700 மெகாஹெர்ட்ஸில், 5 மெகாஹெர்ட்ஸ் தொகுதிகளை தங்களுக்கு ஒதுக்கீடு செய்யும்படி' மத்திய தொலைத் தொடர்பு துறையிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதன்மூலம்  பி.எஸ்.என்.ல் 4ஜி சேவையில் களமிறங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது. 700 மெகாஹர்ட்ஸ் அலைக்கற்றை வீடுகளுக்குள் நன்கு ஊடுருவும் தன்மை கொண்டதாம். இதனால் உட்புற பகுதிகளில் சிறந்த சேவையை அளிக்க முடியும் என்கிறார்கள்

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும்: மாஃபா.பாண்டியராஜன் தகவல்

சென்னை: தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் தயார் என அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தகவல் தெரிவித்துள்ளார். புதிய பாடத்த்திட்டம் வரும் கல்வியாண்டில் அறிமுகப்படுத்தப்படாது என்று அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். மேலும் ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு ஒரு வாரத்தில் வெளியாகும் எனவும் தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் மாஃபா.பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். 

ஆதரவற்ற குழந்தைகளை தத்தெடுத்து கல்வி அளிக்கும் அரசுப் பள்ளி ஆசிரியர் தம்பதி: இதுவரை 350 பேர் பயனடைந்துள்ளனர்

ஆதரவற்ற குழந்தைகளுடன் ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமார். | படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து, அவர்களுக்கு உணவு, உடை, இருப்பிடம் தொடங்கி கல்வி, வேலைவாய்ப்பு வரை அனைத்தையும் தன் மனைவியின் உதவியுடன் செய்துவருகிறார் அரசு பள்ளி ஆசிரியர். இதுவரை 350 குழந்தைகள் அவரால் பயன்பெற்றிருக்கிறார்கள்.

“அரசுப் பள்ளி ஆசிரியர்களுக்கு தங்களிடம் படிக்கும் குழந்தைகள் மேல் அக்கறை இல்லை. தங்கள் ஊதியம், சலுகை போன்ற சொந்தப் பிரச்சினைகளுக்காக மட்டுமே போராடுவார்கள்” என்ற எண்ணம் மக்களிடம் இருக்கிறது. ஆனால் பெற்றோரைவிட குழந்தைகள் மேல் அதிக அக்கறை கொண்ட ஆசிரியர்களும் இருக்கிறார்கள் என்பதற்கு உதாரணம் மதுரை மாவட்டம் வாடிப்பட்டியைச் சேர்ந்த அரசுப் பள்ளி தலைமையாசிரியர் ஜெயக்குமார்(51).

வாடிப்பட்டி அருகில் உள்ள போடிநாயக்கன்பட்டி அரசு ஆதி திராவிடர் நல ஆரம்பப் பள்ளி தலைமையாசிரியராக உள்ள இவர், ஆதரவற்ற குழந்தைகளைத் தத்தெடுத்து தன் பராமரிப்பிலேயே வளர்த்து வருகிறார். மாணவ, மாணவிகள் தங்குவதற்காக தனக்குச் சொந்தமான 1 ஏக்கர் நிலத்தில் விடுதி அமைத்துள்ளார். தற்போது 10 பெண் குழந்தைகள் உட்பட 45 பேர் இவரது பராமரிப் பில் உள்ளனர். விடுதி மாணவர் களைப் போலின்றி, தன் சொந்தக் குழந்தைகளைப்போல அவர் களைப் பாவித்து வருகிறார் ஆசிரியர்.

இந்த எண்ணம் வந்தது குறித்து ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமாரிடம் கேட்டபோது அவர் கூறியதாவது: 1990-ம் ஆண்டு முதல் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறேன். கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் ஆதரவற்ற 4 குழந்தைகளின் கல்விக்காக சிலர் என்னிடம் உதவி கேட்டு வந்தனர். அந்தக் குழந்தைகளுக்கு கல்வி மட்டுமல்ல, அன்பும், அரவணைப்பும் தேவைப்படுமே என்ற கேள்வி எழுந்தது. அப் போதுதான் நாமே குழந்தைகளை வளர்க்கலாம் என்ற எண்ணம் ஏற்பட்டது. அன்றிலிருந்து ஆதர வற்ற குழந்தைகளை வளர்க்க ஆரம்பித்தேன். இதில் பெற்ற தாயால் குப்பைத் தொட்டியில் வீசப்பட்ட குழந்தைகளும் அடக்கம்.

படிக்க வைத்துவிட்டு, அப்படியே விட்டு விடுவதில் எனக்கு உடன்பாடில்லை. எனவே, மாணவர்கள் பத்தாம் வகுப்பு முடித்ததும், ஐடிஐயில் சேர்த்து அவர்களுக்கான வேலை வாய்ப்பை ஏற்படுத்தித் தருகிறேன். உயர்கல்வியில் ஆர்வமுள்ள சில மாணவர்களை மட்டும் கல்லூரியில் சேர்த்துவிடுவேன். அந்த மாணவர்கள் படிக்க வந்த சூழலை விளக்கியதும், சம்பந்தப்பட்ட கல்லூரி முதல்வர்களே அவர் களுக்கான செலவுகளை ஏற்றுக்கொள்கின்றனர். பெண் குழந்தைகளை 5-ம் வகுப்பு வரை மட்டுமே நான் வளர்க்கிறேன். அதற்கு மேல் அரசு ஆதரவற்றோர் விடுதிகளில் சேர்த்துவிடுவேன்.

தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகள் 300 பேரின் கல்விக்கு உதவியிருக்கிறேன். படித்து வெளியேறியவர்கள் போக, தற்போது 45 குழந்தைகள் விடுதியில் தங்கியிருக்கிறார்கள். மாதம் 30 ஆயிரம் ரூபாயை மாணவர் களுக்காக நான் ஒதுக்கிவிடுகிறேன். எனினும், மனித நேயமுள்ள நண்பர்களின் உதவி இல்லாமல் இந்தப் பணியை என்னால் தொடர்ந்திருக்க முடியாது.

அதைவிட முக்கியமான விஷயம் என் குடும்பத்தினரின் ஒத்துழைப்பு. என் மனைவி கேத்ரின் லீமா உசிலம்பட்டியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். என் தாயார் சரஸ்வதி, ஓய்வு பெற்ற தலைமையாசிரியர். மாணவர்களைப் பராமரிப்பதிலும், படிப்பில் ஏற்படும் சந்தேகங்களை நிவர்த்தி செய்வதிலும் அவர்கள் உதவுகின்றனர். எழுத்து, ஓவியம், ஆங்கில வாசிப்பு என இங்கு உள்ள மாணவர்களைக் கல்வியில் சிறந்தவர்களாக்க தொடர்ந்து முயற்சி செய்து வருகிறோம் என்றார்.

ஆசிரியர் கிறிஸ்டோபர் ஜெயக்குமாரின் சேவையைப் பாராட்டி, மத்திய உள்துறை அமைச்சக விருதும், 2010-ம் ஆண்டுக்கான மாநில நல்லாசிரியர் விருதும் வழங்கப்பட்டுள்ளது. விருதுடன் வழங்கப்பட்ட சன்மானத் தொகையையும் இந்த மாணவர் களுக்காகவே செலவழித்திருக் கிறார். விடுதி வளாகத்தில் குழந்தைகளைக்கொண்டே ஒரு பூங்கா அமைத்திருக்கின்றனர். அங்கு தென்னை, வாழை மரங்களுடன் மூலிகை மற்றும் பூச்செடிகளும் வளர்க்கப்பட்டு வருகின்றன.

பிளஸ் 1, பிளஸ் டூ வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் ரெடி.. முதல்வர் அனுமதித்ததும் அமல்: அமைச்சர் தகவல்

தமிழகத்தில் 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதிய பாடத்திட்டம் தயாராக உள்ளது என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

சென்னை: தமிழகத்தில் 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான புதியப் பாடத் திட்டம் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலைப் பெற்றப் பின் அமலுக்கு வரும் என்று பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா. பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.

5 ஆண்டுகளுக்கு ஒரு முறை 11 மற்றும் 12ம் வகுப்பு பாடத்திட்டத்தை மாற்றுவது என்பது வழக்கம். ஆனால் தமிழகத்தில் கடந்த 2005ம் ஆண்டு 11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு புதிய பாடத்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. அதன் பின்னர் 10 ஆண்டுகள் கடந்து இன்னும் புதியப் பாடத்திட்டத்தை தமிழக அரசு அமல் படுத்தாமல் இருக்கிறது.

தமிழகத்தைப் பொருத்தவரை மாணவ, மாணவியர்களின் தேர்ச்சி விகிதம் நன்றாக இருந்தாலும், ஐஐடி போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் படிப்பதற்கான நுழைவுத் தேர்வில் கூட தேர்ச்சி பெற முடியாத நிலையே நீடிக்கிறது. அந்த அளவிற்கு நமது பள்ளிக் கல்வியின் பாடத் திட்டங்கள் தரம் குறைவானதாக உள்ளன என்று ஏற்கனவே கல்வியாளர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர்.

இந்நிலையில், இன்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன், 11 மற்றும் 12ம் வகுப்பிற்கான புதிய பாடத்திட்டம் தயாராக இருப்பதாக கூறியுள்ளார். மேலும் முதல்வர் ஜெயலலிதாவின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

புதிய பாடத்திட்டத்தை பொருத்தவரை, ஏற்கனவே உள்ள பாடத்திட்டத்தில் இருந்து பெரிய அளவில் மாற்றம் இருக்காது என்றும், இருப்பதில் இருந்து இன்னும் கொஞ்சம் மேன்மைபடுத்தி கொடுத்துள்ளோம் என்றும் அமைச்சர் தெரிவித்தார். மேலும் மற்ற மாநிலங்களோடு ஒப்பிடும் போது சிறப்பாக இருக்கும் என்றும் பாண்டியராஜன் கூறினார்

வரிசெலுத்துவோர் அதிகம் உள்ள நாடாக இந்தியா உருவெடுக்கும்...!

மத்திய அரசால் செல்லாதென அறிவிக்கப்பட்ட, 500 மற்றும் 1,000 ரூபாய் கரன்சி நோட்டுகளை, வங்கியில் 'டிபாசிட்' செய்கையில், அவை வரி விதிப்பில் இருந்து தப்பாது; அந்த பணத்தின் வருவாய் ஆதாரம்
தொடர்பாக, சட்டம் தன் கடமையை செய்யும்,'' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி கூறியுள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாதென, நேற்று முன்தினம் அறிவித்தார்; அவற்றை, வங்கியில் டிசம்பர், 30க்குள் 'டிபாசிட்' செய்யலாம் என அறிவிக்கப் பட்டது. இந்த பணத்துக்கு வரிவிதிக்கப்படுமா என்பது குறித்து, பொதுமக்கள் மத்தியில் சந்தேகம் எழுந்தது.
இதுகுறித்து, மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி துார்தர்ஷன், செய்தி சேனலில் கூறியதாவது: செல்லாதென அறிவிக்கப்பட்ட
கரன்சி நோட்டுகள், வரிவிதிப்பில் இருந்து தப்பாது. அவற்றின் வருவாய் ஆதாரம் தொடர்பாக, சட்டம் தன் கடமையை செய்யும். வங்கிகளில், 'டிபாசிட் 'செய்யப்படும் பணம், இதற்கு முன் வங்கியில் இருந்து எடுக்கப்பட்டிருந்தாலோ, சட்டரீதியில் பெறப்பட்டிருந்தாலோ, அது பற்றி கவலைப்படத் தேவையில்லை.

அதேசமயம், சட்டவிரோதமாக சம்பாத்தியம் செய்தி ருந்தால், அந்த பணம் வந்ததற்கான ஆதாரத்தை காட்ட வேண்டும். அந்த பணம், சட்டவிரோதமாக வோ, லஞ்சம் வாங்கியோ பெறப்பட்டிருந்தால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

வீட்டு செலவினங்களுக்காக வைத்திருக்கும், 25 ஆயிரம் அல்லது 50 ஆயிரம் ரூபாய் போன்ற சிறிய தொகை பற்றி, பொதுமக்கள் கவலைப்படத் தேவை யில்லை. அவற்றை, கவலைப்படாமல் வங்கிகளில், 'டிபாசிட்' செய்யலாம். முதல் இரு வாரங்களில், குறைந்தளவே, புதிய கரன்சி சப்ளை செய்யப் படும்; எனவே, செல்லாத கரன்சிகளுக்கு பதில், புதிய கரன்சிகளை மாற்றிக் கொள்வதில் சிரமம் இருக்கும். மூன்று வாரங்களுக்கு பின், அதிகளவில் கரன்சி சப்ளை செய்யப்படுவதால், பிரச்னை இருக்காது.

மத்திய அரசின் நடவடிக்கையால், மின்னணு வியல் முறையில் பணப்புழக்கம் அதிகரிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. வரிசெலுத்துவோர் அதிகம் உள்ள நாடாக இந்தியா உருவெடுக்கும். இதன் பின், ஊழல் செய்வோர், லஞ்சம் வாங்கு வோர், குற்ற செயல்களால் பணம் குவிப்போர் சிரமப்படுவர். இதனால், நேர்மை அதிகரிக்கும்.

அரசின் நடவடிக்கையால் முதல் இரு நாட்களுக்கு, பொதுமக்கள் சிரமப்படுவர் என்பது உண்மையே.

அதற்காக, கறுப்புப் பணப் புழக்கத்தை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை எடுக்கா மல் இருக்க முடியாது. இதனால், அரசுக்கு, நேரடி மற்றும் மறைமுக வரி வருவாய் அதிகரிக்கும். இவ்வாறு அருண் ஜெட்லி கூறினார்.

மின்வாரிய எழுத்து தேர்வு 'கட் ஆப்' வெளியீடு

இளநிலை தணிக்கையாளர் உட்பட, மூன்று பதவிகளுக்கான, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது.

 தமிழ்நாடு மின் வாரியம், இளநிலை உதவியாளர் உள்ளிட்ட, 2,175 காலி பணியிடங்களை நிரப்ப, எழுத்து தேர்வு நடத்தியுள்ளது. அதில், கள உதவியாளர், தொழில்நுட்ப உதவியாளர் தவிர்த்த மற்ற, 750 பணியிடங்களுக்கான மதிப்பெண் விபரத்தை, கடந்த மாதம் வெளியிட்டது.முதல் கட்டமாக, 25 'ஸ்டெனோ டைப்பிஸ்ட்' மற்றும், 25 இளநிலை தணிக்கையாளர், 50 உதவி வரைவாளர் பணியிடங்களுக்கு, நேர்முக தேர்வு நடத்த உள்ளது. ஒரு பதவிக்கு, ஐந்து பேர் என, நேர்முக தேர்வுக்கு அழைக்கப்பட உள்ளனர். மூன்று பதவிகளுக்கான நேர்முக தேர்வில் பங்கேற்க, 'கட் ஆப்' மதிப்பெண்ணை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இதுகுறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: தேர்வு எழுதிய நபர், இணையதளத்தில், தான் பெற்ற மதிப்பெண்ணை மட்டும் பார்க்க முடியும்; எவ்வளவு மதிப்பெண் பெற்றால், நேர்முக தேர்வில் பங்கேற்க முடியும் என்ற, 'கட் ஆப்' மதிப்பெண் விபரம், மூன்று பதவிகளுக்கு மட்டும் வெளியிடப்பட்டு உள்ளது. அதற்கு மேல் மதிப்பெண் எடுத்த தேர்வர்கள், அழைப்பு கடிதத்தை, இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். நேர்முக தேர்வு தேதி, பின்னர் தெரிவிக்கப்படும். மற்ற பதவிக்கு, விரைவில் வெளியிடப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தெரியவில்லை! : மின் வாரியம், தேர்வு தொடர்பான அனைத்து விபரங்களையும், 'டான்ஜெட்கோ' என்ற, தன் இணையளத்தில் வெளியிடுகிறது; ஆனால், 'கட் ஆப்' விபரத்தை, அதில் வெளியிடவில்லை. தேர்வுக்காக துவங்கிய தனி இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. இதனால், தேர்வர்களால், அந்த விபரத்தை தெரிந்து கொள்ள முடியவில்லை.

மின் கட்டணம் செலுத்த அவகாசம்

சென்னை: மின் கட்டண மையங்களில், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் வாங்கப்படாததால், அபராதம் இன்றி கட்டணத்தை செலுத்த, மின் வாரியம், கூடுதல் அவகாசம் வழங்கியுள்ளது.

இதுகுறித்து, தமிழ்நாடு மின் வாரியம் விடுத்த செய்தி குறிப்பு: மத்திய அரசின் அறிவிப்பில், மின் வாரியம் வராததால், 500, 1,000 ரூபாய் நோட்டுகள், வாங்கப்பட மாட்டாது. தாழ்வழுத்த நுகர்வோர்களின் மின் கட்டணம் செலுத்தும் கடைசி நாள், நவ., 9 முதல், 30 வரை என இருப்பின், அந்த இறுதி நாள், ஒரு வாரத்துக்கு சிறப்பு சலுகையாக நீட்டிக்கப்படுகிறது. 

அதாவது, அபராதம் இன்றி, மின் கட்டணம் செலுத்த கடைசி நாள், நவ., 9 என இருந்தால், அது, 16ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. நவ., 30 கடைசி நாள் இருந்தால், டிச., 7 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாத மின் பட்டியலுக்கு, பணம் செலுத்த தவறும் தாழ்வழுத்த நுகர்வோர், அதாவது, நவ., 8 அன்று கடைசி நாளாக இருப்பவர்கள், 16ம் தேதி வரை கட்டணம் செலுத்த அனுமதிக்கப்படுவர். அவர்களுக்கு, 8ம் தேதி வரை, தாமத கட்டணம், மறு இணைப்பு கட்டணம் வசூலிக்கப்படும்.

நவ., 9 முதல், செலுத்தவிருக்கும் ஒப்பந்த புள்ளிகளுக்கான வைப்பு தொகை அல்லது இதர வகையில் பெறவிருக்கும் தொகை, 500, 1,000 ரூபாய் நோட்டுகளாக வசூலிக்கப்பட மாட்டாது. இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

ரூ.100 நோட்டுகள் தாராளமாக கிடைக்கும்: எஸ்.பி.ஐ., அறிவிப்பு

மும்பை: புழக்கத்தில் இருந்த, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்பைத் தொடர்ந்து, அதிக அளவில், 100 ரூபாய் நோட்டுகள் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக, நாட்டின் மிகப்பெரிய பொதுத் துறை வங்கியான, எஸ்.பி.ஐ., எனப்படும், ரத ஸ்டேட் வங்கி அறிவித்துள்ளது. 

 கறுப்புப் பணத்தை ஒடுக்கும் வகையில், 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என, நேற்று முன்தினம் இரவு, பிரதமர் நரேந்திர மோடி அறிவித்தார். இந்த நோட்டுகளை மாற்றிக் கொள்வதற்கு அவகாசமும் அளிக்கப்பட்டுள்ளது.இந்த நிலையில், பதற்றமடைந்த மக்கள், இந்த நோட்டுக்களை மாற்றவும், செலவுக்காக, 100 ரூபாய் நோட்டுக்களை எடுக்கவும் நேற்று முன்தினம், ஏ.டி.எம்.,களில் முண்டியடித்தனர்.நேற்றும், இன்றும், ஏ.டி.எம்.,கள் செயல்படாது என, அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாற்று ஏற்பாடுகள் குறித்து, எஸ்.பி.ஐ., நிர்வாக மேலாளர் ரஜ்னீஷ் குமார் கூறியதாவது: பொதுமக்கள் பீதியடையத் தேவையில்லை. தேவையான அளவுக்கு, 100 ரூபாய் நோட்டுகள் உள்ளிட்டவை கையில் இருப்பு உள்ளன. நாடு முழுவதும் உள்ள, எஸ்.பி.ஐ., குழுமத்தின், 17 ஆயிரம் கிளைகள், 55 ஆயிரம் ஏ.டி.எம்.,க்கள், 7,000 பணத்தை டெபாசிட் செய்யும் இயந்திரங்கள் செயல்படுகின்றன. இவற்றுக்கு, 100 ரூபாய் நோட்டுக்களை அதிக அளவில் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது

ரூ.2.5 லட்சத்துக்கு மேல் மாற்ற போகிறீர்களா?

பழைய, 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுக் களை, வங்கியில் கொடுத்து மாற்றும் திட்டத் தில், இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல் செலுத்து வோரை, வருமான வரித் துறை கண்காணிக்க உள்ளது. தவறு செய்திருந்தால், 200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிகிறது.

இதுகுறித்து, வருமான வரித்துறை அதிகாரிகள் கூறியதாவது: கறுப்புப் பணத்தை வெளியில் கொண்டு வரவும், கள்ள நோட்டுகளை ஒழிப்பதற்காகவுமே, பழைய ரூபாய் நோட்டுகள் தடை செய்யப்பட்டுள்ளன.

மேலும், இந்தியர்களை, நியாயமாக வரி கட்டுபவர் களாக மாற்றுவதே, இதன் மற்றொரு நோக்கம். அதனால், வருமானத்திற்கு அதிகமாக சொத்து வைத்திருப்போருக்கு, இந்த திட்டத்தை பயன்படுத்தி, அபராதம் விதிக்கப்படும். 

நாட்டில், புழக்கத்தில் உள்ள, 17 லட்சம் கோடி ரூபாய் கரன்சியில், 500 ரூபாய் மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகளின் பங்கு, 88 சதவீதம் ஆகும். எனவே, கணிசமான தொகை பதுக்கி வைக்கப்பட்டிருக்க வாய்ப்பு உண்டு.

வங்கிகளுடன்தொடர்பு கொண்டு, இரண்டு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு மேல், பழைய நோட்டுகளை கொடுத்து, புதிய நோட்டு பெறுவோர்; இரண்டு லட்சலட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கு அதிகமாக, 'டெபாசிட்' செய்வோரின்விபரங்களை கேட்டுப் பெற,மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அவர்களின் விபரங்கள், வருமான வரிக் கணக் குடன் ஒப்பிட்டு பார்க்கப்படும். வரி செலுத்தா மல் போயிருந்தால்,தவறுக்கேற்ப,200 சதவீதம் வரை அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். 

பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகளை இன்று முதல்... மாற்றலாம்!

வங்கி, தபால் அலுவலகங்களில் புதிய நோட்டு பெறலாம் :ஏராளமானோர் குவிவர் என்பதால் சிறப்பு ஏற்பாடுகள் :சனி, ஞாயிறும் வங்கிகள் செயல்படும் என அறிவிப்பு

மத்திய அரசு செல்லாது என அறிவித்த, பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை, இன்று முதல், வங்கிகள், தபால் அலுவலகங்களில் புதிய நோட்டுகளாக மாற்றலாம். 

சில்லரை கிடைக்காமல் தவிக்கும் நிலையில், நோட்டுகளை மாற்ற ஏராளமான மக்கள் குவிவர் என்பதால், மத்திய அரசு சிறப்பு ஏற்பாடுகளை செய்துள்ளது. மக்கள் நலன் கருதி, சனி, ஞாயிறு, வங்கிகள் செயல்படும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில், கறுப்பு பணத்தை ஒடுக்கும் வகை யிலும், கள்ள நோட்டுகள் புழக்கத்தை ஒழிக்கும் வகையிலும், 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என, பிரதமர் மோடி நேற்று முன்தினம், அதிரடியாக அறிவித்தார். இதனால், நாடு முழுவதிலும் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு, ஏ.டி.எம்., மையங்களை நோக்கி பொதுமக்கள்விரைந்தனர். ஆனால், பெரும்பாலானோரால் பணம் எடுக்க முடியவில்லை.அலைச்சல்

இந்நிலையில் நேற்று, ஏ.டி.எம்., மையங்களும், வங்கிகளும் மூடப்பட்டிருந்ததால், கையில் பணம் இல்லாமல் பொதுமக்கள், அன்றாட தேவைக்கான பொருட்களைக் கூட வாங்க முடியாமல், கடுமையாக அவதிப்பட்டனர். நுாறு ரூபாய் நோட்டுகளைத் தேடி, கடை கடையாக மக்கள் அலைந்தும், ஏமாற்றமே மிஞ்சியது. 

பெரும்பாலான கடைக்காரர்கள்,500,1,000 ரூபாய் நோட்டுகளை வாங்க மறுத்தனர். சில இடங்க ளில்,அவற்றை வாங்கினாலும், முழுத் தொகை க்கு பொருட்களை வாங்க கட்டாயப் படுத்தினர். இந்த புதிய அறிவிப்புபற்றி அறியாத ஏழை மக்கள், அடுத்து என்ன செய்வது எனக் கேட்டு அலைந்ததை பார்க்க, பரிதாபமாக இருந்தது. 

இந்நிலையில், இந்த சிக்கலுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், வங்கிகள், தபால் நிலையங்களிலும், இன்று முதல், பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்றிக் கொள்ள ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது; புதிய, 500, 2,000 ரூபாய் நோட்டுகள் கிடைக்கும். இதற்காக, போதுமான அளவிற்கு, புதிய கரன்சி நோட்டுகளை, ரிசர்வ் வங்கி அச்சிட்டு, வினியோகித்துள்ளது.பழைய நோட்டுகளை மாற்றுவதற்கும், பணம் எடுப்பதற்கும், பொதுமக்கள் அதிக அளவில் குவிவர் என்பதால், வங்கிகளில் கூடுதல் கவுன்டர்கள் திறக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள் ளன; போலீஸ் பாதுகாப்பும் கோரப்பட்டுள்ளது. 

ஆறுதல்

'இப்பிரச்னை தற்காலிகமானது தான். டிச., 30 வரை, நோட்டுகளை மாற்றலாம். டெபிட் கார்டு

பரிவர்த்தனைகளுக்கு கட்டுப்பாடு இல்லை; பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம்' என, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. 

'இப்பிரச்னை தீர சிலநாட்கள் ஆகும் என்பதால், வழக்கமாக விடுமுறை தினங்களான, 

இரண்டாவது சனி, ஞாயிறு அன்றும், தனியார் வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள் உள்ளிட்ட அனைத்து வங்கிகளும் செயல்பட வேண்டும்' என, ரிசர்வ் வங்கி கேட்டுக் கொண்டுள்ளது. சனி, ஞாயிறு ஆகிய இரு தினங்களும், அரசு மற்றும் பொதுத்துறை வங்கிகள் செயல்படும். 

வங்கி ஏ.டி.எம்., மையங்களில், 50, 100 ரூபாய் நோட்டுகள் மட்டுமே தரும் வகையில் மாற்றங்களை செய்ய வேண்டியுள்ளதால், வெள்ளிக்கிழமை காலை வரை செயல்படாது. அனைத்து, ஏ.டி.எம்., மைய பரிவர்த்தனைகளு க்கும், டிச., 30 வரை, கட்டணம் வசூலிக்கப் படாது என்பதும், பொதுமக்களுக்கு ஆறுதலான அறிவிப்பு.

ரிசர்வ் வங்கியில்உதவி மையம்

பழைய, 500, 1,000 ரூபாய் நோட்டுகளை மாற்று வது மற்றும் வங்கிகளில் பணம் எடுப்பது தொடர்பான சந்தேகங்களுக்கு, சென்னை, ரிசர்வ் வங்கி கிளையில்,உதவி மையம் செயல் பட துவங்கியுள்ளது. பொதுமக்கள், 044 - 2538 1390 மற்றும் 044 - 2538 1392 ஆகிய தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு,சந்தேகங்களுக்கு தெளிவு பெறலாம்.