Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 11 November 2016

CCE WORKSHEET MODEL QUESTION PAPER

*.CLICK HERE - CCE WORKSHEET MODEL QUESTION PAPER - TAMIL

*.CLICK HERE - CCE WORKSHEET MODEL QUESTION PAPER - ENGLISH

*.CLICK HERE - CCE WORKSHEET MODEL QUESTION PAPER - MATHS

*.CLICK HERE - CCE WORKSHEET MODEL QUESTION PAPER - SCIENCE

*.CLICK HERE - CCE WORKSHEET MODEL QUESTION PAPER - SOCIALSCIENCE

பிற பணிக்கு (On Duty) செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்

பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்ற பெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார் சென்றது.?
இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும். இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும். சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும்.

தவிர்க்க முடியாத காரணத்திற்காகமட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும்.சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லதுபணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம்.

இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

தொடக்கக்கல்வி - கணித கற்றல் திறன் - EDUCAT பயிற்சி 16/11/16 அன்று நடைபெறுதல் சார்பு - இயக்குநர் செயல்முறைகள்

பள்ளி கழிவறை விவகாரம்: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

மதுரை: அரசுப்பள்ளிகளில் முறையான கழிவறை வசதி செய்து தருவது பற்றி விரிவான அறிக்கை தர வேண்டும் என ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
25 லட்சம் குழந்தைகளுக்கு 42000 கழிப்பறைகள் மட்டுமே உள்ளன என்று நீதிபதிகள் தெரிவித்தனர். கழிவறை வசதியை மேம்படுத்த ஏன் குழு அமைக்க கூடாது என தமிழக அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பியுள்ளனர்

TNTET தேர்ச்சி பெறாமல் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET - லிருந்து விலக்கு அளிக்க வேண்டும் - மாண்புமிகு தமிழக பள்ளிக்கல்வி அமைச்சரிடம் மனு.

 23/08/2010  க்குப் பிறகு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும்சிறுபான்மையினர் பள்ளிகளில் முறையான கல்வித் தகுதிகளுடன் பணி நியமனம் பெற்ற ஆசிரியர்கள் கட்டாயக் கல்வி உரிமை சட்ட அடிப்படையில் TET நிபந்தனைகளை கூறிபணியை தொடர அனுமதிக்கப்பட்டனர்.

கடந்த ஐந்து ஆண்டுகளாக ஒரு சில பணப் பயன் மறுக்கப்பட்ட நிலையில்  பணியில் உள்ளஇந்த ஆசிரியர்கள் பணி நிபந்தனை காலம் வரும் நவம்பர் 15 ஆம்  தேதியுடன்முடிகின்றது.

 

  ஆசிரியர் தகுதித் தேர்வில் இவர்களுக்கு முழுவதும் விலக்கு கொடுக்கும்பட்சத்தில்  சுமார் மூவாயிரம் ஆசிரியக் குடும்பங்களின் வாழ்வாதாரம் தமிழகஅரசால் பாதுகாக்கப்படும்.இந்த பிரச்சினை தொடர்பாக நேற்று மதுரையில் மாண்புமிகு தமிழக கல்வித்துறை அமைச்சரை TET நிபந்தனைகளுடன் பணி புரியும் ஆசிரியர்களின் மாநிலம் தழுவியபிரதிநிதிகள் சந்தித்து மனு கொடுத்து  உள்ளனர்.

இந்த சந்திப்பின் போது தமிழக தொழிற்கல்வி ஆசிரியர்கள் சங்க ஆசிரியர்களும்அவர்களின் ஊதிய முரண்பாடு தொடர்பான மனுவைக் கொடுத்தனர்மிகவும் பொறுமையாக இவர்களில் பிரச்சினைகளைக் கேட்டு மனுவை பெற்றுக்கொண்டதாகவும் அவ்வாசிரியர்கள் கூறினர். மாண்புமிகு தமிழக முதல்வர் அம்மாவின் கவனத்தில் இந்த மனு கொண்டு செல்லப் பட்டுவிரைவில் பணியில் உள்ள ஆசிரியர்களுக்கு TET லிருந்து முழுவதும் விலக்கு என்ற நல்ல தீர்வு கிடைக்கும் என இந்த பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பிரதிநிதிகள்தெரிவித்தனர்.

பிற பணிக்கு (On Duty) செல்லும் தலைமை ஆசிரியர்களுக்கு கட்டுப்பாடுகள்

பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும் என பள்ளிக் கல்வித்துறை வலியுறுத்தியுள்ளது.

அரசு பள்ளிகளின் தலைமை ஆசிரியர்களில் சிலர், பள்ளி வேலை நாட்களில், பிற பணி என்ற பெயரில், வெளியூர் செல்வதும், சொந்த பணிகளை கவனிப்பதாகவும், அரசின் கவனத்திற்கு புகார் சென்றது. இதனால், அலுவலக பணிகளுடன், மாணவர்களின் கல்வியும் பாதிக்கப்படுவதை தவிர்க்க, பள்ளிக் கல்வித்துறை புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.

 

அதன்படி... பள்ளி வேலை நாட்களில் தலைமை ஆசிரியர்கள், பிற பணிக்காக வெளியூர் செல்ல, சி.இ.ஓ.,வின் முன்அனுமதியை பெற வேண்டும்.

பிற பணி விவரங்களை, பள்ளியில் பராமரிக்கப்படும் நடமாடும் பதிவேட்டில் பதிய வேண்டும். இதே விவரங்களை, சி.இ.ஓ., அலுவலக நடமாடும் பதிவேட்டிலும் இடம் பெற செய்ய வேண்டும். 

சி.இ.ஓ.,க்கள் தங்களது மாவட்டத்தில் பணிபுரியும் தலைமை ஆசிரியர்களின், பிற பணிகளை அறிந்து, தேவைப்படும் பட்சத்தில், உயரதிகாரிகளுக்கு தெரிவிக்க வேண்டும். தவிர்க்க முடியாத காரணத்திற்காக மட்டுமே, தலைமை ஆசிரியர்களை, சி.இ.ஓ.,க்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் நேரில் வரவழைக்க வேண்டும்.

சி.இ.ஓ., - டி.இ.ஓ., அலுவலகங்களில் தபால் கொடுத்தல் போன்ற சாதாரண பணிகளுக்கு, பள்ளி அலுவலக ஊழியர் அல்லது பணி சுமையில்லாத பிற ஆசிரியர்களை பயன்படுத்தலாம். இந்த விதிமுறைகள் அடங்கிய உத்தரவு கடிதம், பள்ளிக்கல்வித் துறை மூலம், சி.இ.ஓ., அலுவலகங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளது.

திருவண்ணாமலை - கல்வியில் கணினி ICT Training -Registration

ICT TRAINING FOR All  SCHOOL TEACHERS FOR FREE OF COST.  IN SUNDAYS ONLY.  ஞாயிறு அன்று மட்டும் பயிற்சிகள் இருக்கும். ஒன்றிய அளவிலோ மாவட்ட அளவிலோ ஏற்பாடுகள் செய்யப்படும். அனைத்து பயிற்சியும் இலவசம். தங்களின் பெயரை பதிவு செய்ய இங்கே பதியவும். பள்ளி அளவில் ஆசிரியர், மாணவர், பள்ளி நிர்வாகம் அனைவருக்கும் பயன்படும் விதமாக பயிற்சிகள் இருக்கும்.  நாடு மற்றும் மாநில அளவில் திறன்மிக்க விருதுகளை பெற்ற ஆசிரியர்களால் பயிற்சிகள் ஏற்பாடு செய்யப்படும்.  தங்கள் கணினி சார் அறிவையும் பகிர்ந்து கொள்ளலாம்.

CLICK HERE TO REGISTER

தொடக்கக் கல்வி - பேரிடர் மேலாண்மை விழிப்புணர்வு - பேரிடர் மேலாண்மைக் குழு அமைப்பு மற்றும் பள்ளி மாணவர்களுக்கு அறிவுரை வழங்குதல் சார்ந்த இயக்குனர்- செயல்முறைகள்..

TNTET :ஆசிரியர் தகுதி தேர்வில் 'வெயிட்டேஜ்' முறை மாறுமா?

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வுக்கு சிக்கல் தீர்ந்து விட்ட நிலையில், 'வெயிட்டேஜ்' முறையை மாற்ற வேண்டும் என்ற, கோரிக்கை எழுந்துள்ளது. கடந்த, 2012ல்அறிமுகமான, 'டெட்' தேர்வில், 90 மதிப்பெண் எடுத்தால், ஆசிரியர் பணிக்கு தகுதி என, அறிவிக்கப்பட்டது. 
அதாவது,'டெட்' தேர்வு மதிப்பெண், 60 சதவீதமாகவும், 10ம் வகுப்பு, பிளஸ் 2, பட்ட படிப்புகளின் மதிப்பெண்கள், 40சதவீத வெயிட்டேஜ் மதிப்பெண்ணாகவும் மாற்றப்பட்டு, தேர்ச்சி நிர்ணயிக்கப்படும் என, அறிவிக்கப்பட்டது. இதன்படி, பல ஆயிரம் பேர் பணியில் நியமிக்கப்பட்டனர்.

இதன்பின், 2013ல் நடத்தப்பட்ட இரண்டாவது தேர்வில், இந்த விதியில் மாற்றம் வந்தது. முன்னேறிய வகுப்பினர் தவிர மற்றவர்கள், மொத்தம், 150 மதிப்பெண்ணில், 85 மதிப்பெண் எடுத்தால் போதும் என்றும், இட ஒதுக்கீடு விதிப்படி, ஐந்து மதிப்பெண் தளர்வும் அளிக்கப்பட்டது. அதனால், 'டெட்' தேர்வில், அதிக மதிப்பெண் எடுத்தும், இட ஒதுக்கீடு மற்றும் வெயிட்டேஜ் மதிப்பெண்ணால், பல ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டனர். அப்படி பாதிக்கப்பட்டவர்களில் சிலர், மதிப்பெண் தளர்வுக்கு தடை கோரி, உயர் நீதிமன்றத்திலும், உச்ச நீதிமன்றத்திலும் வழக்கு தொடர்ந்தனர். இந்த மனுவை, இரு தினங்களுக்கு முன் உச்சநீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இந்நிலையில், 'மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்டிருந்த, ஆசிரியர் தகுதி தேர்வு விரைவில் நடத்தப்படும்' என, பள்ளிக்கல்விஅமைச்சர் பாண்டியராஜன் அறிவித்துள்ளார்.தமிழக அரசின், வெயிட்டேஜ் முறை தொடர்ந்தால், 10 ஆண்டுகளுக்கு முன், பள்ளிப்படிப்பு, பட்டப்படிப்பு முடித்தோருக்கு வேலை வாய்ப்பு சிக்கலாகும். 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு, 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வுகளில், தாராளமான மதிப்பெண் முறை கிடையாது.

தற்போதுள்ளது போல், 'ப்ளூ பிரிண்ட்' முறையோ, புத்தகத்தில் பாடத்தின் பின்பக்க கேள்விகள் மட்டுமே இடம் பெறும் என்ற முறையோ கிடையாது. அதனால், 10ம் வகுப்பில், 400 மதிப்பெண்களும், பிளஸ் 2வில், 1,000 மதிப்பெண்கள் எடுப்பதும் குதிரைக்கொம்பாக இருந்தது. சமீப காலமாக, பொதுத்தேர்வுகளில் தாராளமாக மதிப்பெண் வழங்கப்படுகிறது. எனவே, வெயிட்டேஜ் மதிப்பெண் கணக்கிடும் போது, 10 ஆண்டுகளுக்கு முன் படித்தோருக்கு மிக குறைந்த மதிப்பெண்ணே கிடைக்கும் என்பதால், அவர்களின் நிலை பரிதாபமாக உள்ளது.

பள்ளி கல்வி முன்னேற்றம் குறித்து தமிழகம் - கொரியா ஆலோசனை.

தமிழகத்தில், பள்ளி கல்வியை முன்னேற்றுவது குறித்து, கொரியா மற்றும் தமிழக கல்வி அதிகாரிகள் கருத்துக்களை பரிமாறினர்.தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் சார்பில், சென்னையில் கருத்து பரிமாற்ற கருத்தரங்கம் நேற்று நடந்தது.
இதில், கொரியன் குடியரசு துாதர் கியுங்சோ கிம் பேசுகையில், ''தமிழக மாணவர்கள், உயர் கல்விக்கும், ஆராய்ச்சி படிப்புக்கும், கொரியாவுக்கு வரலாம். அதற்கு தேவையான வசதிகள் செய்து கொடுக்க தயார்,'' என்றார்.பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன், செயலர் சபிதா, எஸ்.சி.இ.ஆர்.டி., இயக்குனர் ராமேஸ்வர முருகன் ஆகியோர் பங்கேற்று, தமிழக பள்ளிக்கல்வி வளர்ச்சி திட்டங்கள் குறித்து பேசினர்

பிளஸ் 2 : அடுத்த ஆண்டும் பழைய 'சிலபஸ்'


நீட் தேர்வு கட்டாயம் என்ற நிலையில், பிளஸ் 2வுக்கு, அடுத்த ஆண்டும் புதிய பாடத்திட்டம் இல்லை' என, அமைச்சர் அறிவித்துள்ளதால், மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.பிளஸ் 2 முடித்தவர்கள், எம்.பி.பி.எஸ்., மற்றும் பி.டி.எஸ்., படிப்பில் சேர, 'நீட்' என்ற தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டும். 
இத்தேர்வு, இந்த ஆண்டு முதல் அரசு மருத்துவக் கல்லுாரி இடங்களுக்கும் வரலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதனால், மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், 'நீட்' தேர்வில், தமிழக மாணவர்கள் பங்கேற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், தமிழகத்தில் அமலில் உள்ள, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 பாடத்திட்டம், நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையிலும், உயர்கல்வி நிறுவனங்களில், இன்ஜினியரிங் சேர்வதற்கான, ஜே.இ.இ., தேர்வை சந்திக்கும் வகையிலும் இல்லை என, கல்வியாளர்கள் கவலை அடைந்து உள்ளனர்.

தமிழகத்தில், 2006ல், அறிமுகமான, பிளஸ் 1, பிளஸ் 2 பாடத்திட்டம், 10 ஆண்டுகளாக மாற்றப்படாமல் உள்ளதால், பெற்றோரும், மாணவர்களும் கவலையில் உள்ளனர். வரும் கல்வியாண்டிலாவது, புதிய பாடத்திட்டம் அமலாகும் என, எதிர்பார்த்திருந்தனர். இந்நிலையில், 'அடுத்த கல்வி ஆண்டிலும், பழைய பாடத்திட்டமே செயல்பாட்டில் இருக்கும்' என, பள்ளிக்கல்வி அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார். தமிழக அரசின் ஒப்புதலுக்காக, புதியபாடத்திட்டம் காத்திருப்பதாக அவர் கூறியுள்ளதால், மாணவர்கள், பெற்றோர் மீண்டும் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

மதிப்பெண் பட்டியலில் ஆதார் எண் இடம் பெறுமா?

பிளஸ் 2, 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்ணை இந்த ஆண்டும் சேகரிப்பதால், மதிப்பெண் பட்டியலில், அந்த எண்இடம்பெறுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.கடந்த ஆண்டு முதல், பள்ளி மாணவர்களின் ஆதார் எண்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. 
இதன்படி, 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொது தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை, தேர்வுத்துறை சேகரித்தது. மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இடம் பெறும் என, எதிர்பார்க்கப்பட்டது.ஆனால், அனைத்து மாணவர்களுக்கும் தனியாக, 14 இலக்க நிரந்தர பதிவெண் வழங்கப்பட்டது.

 இந்த பதிவெண், கல்லுாரிகளில் மாணவர்கள் சேரும் போதும் பதிவு செய்யப்பட்டுஉள்ளது. இந்த ஆண்டும், பிளஸ் 2 மற்றும், 10ம் வகுப்பு மாணவர்களின் ஆதார் எண்கள் பெறப்படுகின்றன. வரும், 30ம் தேதிக்குள், பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களின் ஆதார் எண்களை தேர்வுத்துறைக்கு அனுப்ப, ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. எனவே, இந்த ஆண்டாவது, மதிப்பெண் பட்டியலில், ஆதார் எண் இணைக்கப்படுமா என, ஆசிரியர்களும், மாணவர்களும் எதிர்பார்த்துள்ளனர்.

இனி கார்டு வேண்டாம்... அலைபேசி போதும் : ரேஷன்பொருட்கள் வாங்க புதிய வசதி அறிமுகம்.

தேனி: ரேஷன் கடைக்கு கார்டு இல்லாமலேயே, அலைபேசியுடன் சென்று பொருட்கள் வாங்கும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. தற்போது பயன்பாட்டில் உள்ள ரேஷன் கார்டுகளுக்கு பதிலாக அடுத்தாண்டு 'ஸ்மார்ட் கார்டு' வழங்க ஏற்பாடு நடக்கிறது. 
இதற்காக ரேஷன் கடைகளில் கார்டு தாரர் அலைபேசி, ஆதார் எண்கள் பதிவு செய்யப்படுகிறது. இப்பணி 90 சதவீதம் முடிந்துள்ளது.தற்போது ரேஷன் கடைகளிலும் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவி மூலம் அத்தியாவசியப் பொருட்கள் விற்பனை செய்யப்படுகிறது.பொருள் வாங்கியவுடன் கார்டுதாரர் அலைபேசிக்கு எஸ்.எம்.எஸ்., செல்கிறது. ரேஷன் கடைகளில் பொருட்கள் இருப்பு, விற்பனை விபரம் உடனுக்குடன் 'ஆன்லைனில்' உணவு வழங்கல் துறைக்கு செல்கிறது. இந்த நடவடிக்கையால் ரேஷன் கடைகளில் முறைகேடு மற்றும் போலி கார்டுகள் ஒழிக்கப்பட்டு வருகிறது.

புதிய வசதி: ரேஷன் கார்டு இல்லாமலே ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்கும் புதிய வசதியினை உணவு வழங்கல் துறை அறிமுகம் செய்துள்ளது.அதாவது கார்டு தாரர் அல்லது குடும்ப உறுப்பினர்கள், ரேஷன் கார்டு இன்றி சம்பந்தப்பட்ட ரேஷன் கடைக்கு சென்று ஏற்கனவே பதிவு செய்துள்ள அலைபேசி எண் தெரிவித்தால் போதும். அலைபேசி எண் விபரம் 'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் பதிவு செய்தவுடன் ஓ.டி.பி., (ஒன் டைம் பாஸ்வேர்ட்) மூலம் குறிப்பிட்ட அலைபேசிக்கு அது குறித்த எஸ்.எம்.எஸ்., வரும். இத்தகவல் மூலம் சம்பந்தப்பட்டவர்தானா என உறுதி செய்து கார்டுதாரர்களுக்கு பொருட்கள் வழங்கலாம் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இதுதவிர 'ஆதார்' எண்ணை ரேஷன் கார்டில் இணைத்திருந்தால்அந்த எண்'பாயின்ட் ஆப் சேல்ஸ்' கருவியில் பதிவு செய்யப்படும். அப்போது கார்டுதாரர்களின் முழுவிபரம் தெரிந்து விடும். இதன் அடிப்படையிலும் தேவையான ரேஷன் பொருட்கள் பெறலாம். மாநிலம் முழுவதும் இவ் வசதி நேற்று முன்தினம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.கார்டுதாரர்கள் பழைய அலைபேசி எண்ணிற்கு பதிலாக புதிய அலைபேசி எண் பதிவு செய்யவும் வாய்ப்பு வழங்கப்பட்டுஉள்ளது, என, வழங்கல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

ராணுவ எழுத்துத்தேர்வு முடிவுகள் வெளியீடு

ராணுவத்திற்கான எழுத்துத்தேர்வில், தேர்ச்சி பெற்றவர்கள் விபரம், இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது. தமிழகத்தில், சென்னை, திருச்சி; ஆந்திராவில், குண்டூர், விசாகப்பட்டினத்தில், அக்., 23ல், ராணுவத்திற்கு ஆட்களை தேர்வு செய்வதற்கான, எழுத்துத்தேர்வு நடந்தது.
இதில், தேர்ச்சி பெற்றவர்களின் விபரம், தமிழ்நாடு அரசு இணையதளத்தில்,www.tn.gov.inவெளியிடப்பட்டு உள்ளது.

விரைவில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வுக்கான அறிவிப்பு வெளியாக உள்ளது.

மத்திய அரசு ஊழியர்களில் பழையஊதிய விகிதத்தில் பெறுபவர்களுக்கு 7% அகவிலைப் படி  உயர்வு அறிவிக்கப்பட்டு உள்ளது.

அதனால் தமிழக அரசுஊழியர்களுக்கு 7% அகவிலைப்படிஉயர்வு விரைவில் அறிவிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PG TRB:காலிப் பணியிடங்களை நிரப்ப தேர்வு எப்போது? - முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் எதிர்பார்ப்பு.

தமிழகம் முழுவதும் உள்ள முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணி யிடங்களை நிரப்புவது தொடர்பாக அவ்வப்போது ‘விரைவில் தேர்வு நடத்தப்படும்’ என்ற அறிவிப்பு மட்டும் வருகிறது. தேர்வை நடத்துவதற்கான நடவடிக்கைகள எதுவும்
இல்லை’ என, முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியை எதிர்நோக்கியிருக்கும் பட்டதாரிகள்
‘தி இந்து உங்கள் குரல்’ தொலை பேசி எண் வாயிலாக தெரிவித் துள்ளனர். அரசு மேல்நிலைப் பள்ளிகளில் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களில் 50 சதவீதம் நேரடி போட்டித் தேர்வு மூலமாகவும், எஞ்சிய 50 சதவீதம் பதவி உயர்வு மூலமாகவும் நிரப்பப்படுகின்றன. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக நேரடி நியமனங்கள் செய்யப்படுகின்றன.

 கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு 1,807 முதுநிலை பட்டதாரி ஆசிரி யர்கள் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக தேர்வு செய்யப்பட்டு அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பணியமர்த்தப்பட்டனர்.  இந்நிலையில், கடந்த கல்வி யாண்டில் (2015-16) 1,062 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களையும், உடற்கல்வி இயக்குநர்களையும் நியமிக்க பள்ளிக் கல்வித் துறைக்கு அரசு அனுமதி அளித்துள்ளது. தற்போதைய நடைமுறைகளின்படி, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் போட்டித் தேர்வு மூலமாக இந்த காலியிடங்கள் நிரப்பப்படும். எனவே, இதற்கான அறிவிப்பை ஆசிரியர் தேர்வு வாரியம் விரைவில் அறிவிக்கும் என தமிழக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் சில மாதங்களுக்கு முன்பு நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார். ஆனால், இது தொடர்பான அறிவிப்புகள் இதுவரை வெளியாகவில்லை. இதனால், தேர்வு எப்போது நடைபெறும் என்ற எதிர்பார்ப்பு முதுநிலை பட்டதாரிகள் மத்தியில் எழுந்துள்ளது.

அரசு அனுமதி அளித்துள்ள நிலையிலும் ஏன் தேர்வு நடத்தப்படவில்லை என்ற குழப்பம் நீடிக்கிறது. பள்ளிக்கல்வித் துறை இதற்கு தீர்வுகாண முன்வர வேண்டும்” என்றார்.

பள்ளிக்கல்வி - கணிணி பாடப்பிரிவில் - ஆசிரியர்கள் பணியிட விபரம் - மாணவர்களின் எண்ணிக்கை விபரம் அனுப்ப இயக்குனர் உத்தரவு

விரைவில் கணினி ஆசிரியர்கள் நியமனம்!

புதிதாக தரம் உயர்த்தப்பட்ட அரசுமேல்நிலைப்பள்ளிகளில் கணினி ஆசிரியர் நியமனம் பற்றிகணக்கெடுக்கும் பணி தற்பொழுது
நடைப்பெற்றுவருகின்றது.
நமது பி.எட் கணினி அறிவியல் பட்டதாரிகள் அனைவரும்மிக ஆவலுடன் எதிர்பார்த்து கொண்டிருகின்றார்கள்.

அகஇ - CRC - தொடக்க மற்றும் உயர் தொடக்க நிலை ஆசிரியர்களுக்கான குறுவளமைய பயிற்சி (கற்றல் அடைவு குறித்த கலந்துரையாடல் & பள்ளி சுகாதாரம் )என்ற தலைப்பில் 26.11.2016 மற்றும் 03.12.2016 அன்று நடைபெறவுள்ளது - பயிற்சியின்போது C.L & M.L எவருக்கும் அனுமதியில்லை!!

9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இனி மைன்ட் மேப் கிடையாது- CBSE - க்கு இணையாக பாடத்திட்டம் மாற்றம்!!அரசு பள்ளி மாணவர்கள் திறன் வளர்க்க புதிய புத்தகம்

DEO EXAM RESULT PUBLISHED | மாவட்டக் கல்வி அலுவலர் தேர்விற்கான தேர்வு முடிவு வெளியிடப்பட்டது

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் கீழ்க்கண்ட பதவிகளுக்கான தேர்வு நடத்தப்பட்டது.

 தேர்வில் கலந்துகொண்ட விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீட்டு விதி மற்றும் அப்பதவிகளுக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில், நேர்காணல் தேர்விற்கு முன் நடைபெறும் சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தற்காலிகமாகத் தெரிவு செய்யப்பட்ட விண்ணப்பதாரர்களின் பதிவெண்கள் கொண்ட பட்டியல் தேர்வாணைய வலைத்தளம் www.tnpsc.gov.in வெளியிடப்பட்டுள்ளது.

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!

TNTET:ஆசிரியர் தகுதித்தேர்வு 5 சதவீதம் மதிப்பெண் தளர்ச்சி. தமிழக அரசின் உத்தரவை உறுதி செய்தது உச்சநீதிமன்றம்!
மேற்காணும் தலைப்பில் தான் விகடன் செய்தியை வெளியிட்டுள்ளது எனவே அதில் ஒரு இடத்தில் " ஏற்கனவே இறுதியாக நடந்த ஆசிரியர் தகுதித்தேர்வு முடிவுகளில் இருந்து 60 சதவீதம் மதிப்பெண் பெற்றவர்கள் ஆசிரியர் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுவார்கள்."  என்று செய்தி வெளியாகிவுள்ளது இது தமிழக அரசின் முடிவா??? அல்லது அவர்கள் எதுவும் பேட்டியில் மாற்றி
தெரிவித்துள்ளாரா என்பது மட்டும் தெரியவில்லை மேலும் உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் 5% மதிப்பெண் தளர்வை உறுதி படுத்தியுள்ளது எந்த இடத்திலும் தவறு என்று குறிப்பிடவில்லை நன்றாக தீர்ப்பு படித்ததில் தெரிந்துள்ளது. மேலும் 60% என்பது குறித்து எந்த அரசு ஆணையும் அரசு வெளியிடவில்லை தற்போது வரை GO MS. 25 தான் அமலில் உள்ளது எனவே 5% மதிப்பெண் அடிப்படையில் பணி வழங்கவே அதிகம் வாய்ப்பு உள்ளது. இருப்பினும் இதனை அரசு தெளிவுபடுத்த வேண்டும் என்று அரசுக்கு ஆசிரியர்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.