Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 18 November 2016

2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தை : ஆக்ஸ்போர்ட் அகராதி வெளியீடு

உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் அகராதி 2016-ம் ஆண்டின் சிறந்த வார்த்தையாக post-truth என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளது.

          கடந்த 11 வருடங்களாக அந்தந்த ஆண்டின் சிறந்த வார்த்தையை ஆக்ஸ்போர்ட் அகராதி வெளியிட்டு வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் சர்வதேச வார்த்தையாக post-truth என்னும் வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளதாக செய்தி வெளியிட்டுள்ளது.

“பொது கருத்து என்பது உண்மைகளை கடந்தும் தனிப்பட்ட உணர்வுகள் மற்றும் நம்பிக்கைகளை சார்ந்து உருவாக்குவதில் அங்கம் வகிப்பது" என இந்த வார்த்தைக்கு ஆக்ஸ்போர்ட் அகராதி விளக்கம் கொடுத்துள்ளது.

சர்வதேச சிறந்த வார்த்தையைப் பொறுத்தவரையில் இந்த அகராதியின் பிரிட்டன், அமெரிக்க பதிப்புகள் சில நேரங்களில் வேறு வார்த்தைகளை தேர்ந்தெடுக்கும். ஆனால் இந்த ஆண்டு, இரண்டு பதிப்புகளும் ஒரே வார்த்தையை தேர்ந்தெடுத்துள்ளன. அமெரிக்க அதிபர் தேர்தல் மற்றும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து பிரிட்டன் விலகியது போன்ற காரணங்களால் இந்த வார்த்தை பயன்பாடு உலக அளவில் பன்மடங்கு அதிகரித்துள்ளதாக ஆக்ஸ்போர்ட் அகராதி கூறியுள்ளது.

வங்கிகளில் 500, 1000 ரூபாய் பணப்பரிமாற்றம் நாளை ஒருநாள் கிடையாது: வங்கிகள் சம்மேளனம் அறிவிப்பு!!

பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் நாளை முதியவர்கள் மட்டுமே மாற்றிக் கொள்ள இயலும் என்ற அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என்ற பிரதமர் மோடியின் அறிவிப்பைத் தொடர்ந்து, பொதுமக்கள் தங்கள் கைவசமுள்ள பழைய ரூபாய் நோட்டுக்களை வங்கிகளில் மாற்றி வருகின்றனர். 

அது குறித்தது முக்கிய அறிவிப்பு ஓன்று தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி வங்கிகளில் நாளை முதியவர்கள்  மட்டுமே பணம் எடுக்கலாம் என்றும், வங்கிகளின் வேலைநேரத்தில் மட்டுமே பணம் வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

CCE WORKSHEET II WEEK ALL QUESTION PAPERS DOWNLOAD .........21.11.2016 TO 25.11.2016

CCE WORKSHEET II WEEK TAMIL QUESTION PAPERS I TO X DOWNLOAD

CCE WORKSHEET II WEEK ENGLISH QUESTION PAPERS I TO X DOWNLOAD

CCE WORKSHEET II WEEK MATHS QUESTION PAPERS I TO X DOWNLOAD

CCE WORKSHEET II WEEK SCIENCE QUESTION PAPERS I TO X DOWNLOAD

CCE WORKSHEET II WEEK SOCIAL SCIENCE QUESTION PAPERS III TO X DOWNLOAD

SSA:அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான 1 நாள் பயிற்சி - இயக்குநர் செயல்முறைகள்


8 th std public exam (Private study) heldon Jan 2017. Online Applied Nov 18 to 25.

மாணவர்கள் குறைகளை தெரிவிக்க பள்ளிகளில் புகார் பெட்டி - பள்ளிக்கல்வி இயக்குநர் உத்தரவு.

மாணவர்கள் தங்களது குறைகளையும் பிரச்சினை களையும் தெரிவிப்பதற்காக ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வி இயக்குநர் எஸ்.கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.
இதுதொடர்பாக அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளுக்கு அவர் அனுப்பியுள்ள சுற்றறிக்கை:

அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகள், தனியார் பள்ளிகள் ஆகிய அனைத்து வகை பள்ளி களிலும் மாணவ, மாணவிகள்தங்கள் குறைகள், நிறைகள் மற்றும் பிரச்சினைகளைத் தெரிவிக்க புகார் பெட்டி வைக்க நடவடிக்கை மேற்கொள்ளுமாறு அனைத்து முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் ஏற்கெனவே அறிவுறுத்தப்பட்டது. இதற்கான வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றப்படுகின்றனவா என்பதை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் களும் மாவட்ட கல்வி அலுவலர்களும் பள்ளி ஆய்வின்போது உறுதி செய்ய வேண்டும்.

அதேபோல, மாவட்டங்களில் களப்பணி மேற்கொள்ளும் இணை இயக்குநர்கள், தங்களுக்கு ஒதுக்கப்பட்ட மாவட்டங்களில் ஒவ்வொரு பள்ளியிலும் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். பள்ளிகளில் புகார் பெட்டி வைக்கப்பட்டுள்ள விவரத்தை அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும், மாவட்டக் கல்வி அலுவலர்களும் ஆய்வுக் கூட்டத்தில் தெரிவிக்குமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.இவ்வாறு அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

விடுப்பு எடுக்காத மாணவர்கள், ஆசிரியர்களுக்கு சான்றிதழ்: தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் அறிமுகமாகிறது.

விடுப்பு எடுக்காத மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கும் திட்டம் தொடக்க, நடுநிலைப்பள்ளிகளில் இந்த ஆண்டு அறிமுகமாகிறது.
ஆண்டு முழுவதும் ஒருநாள்கூட விடுப்பு எடுக்காமல் தொடர்ந்து பள்ளிக்கு வரும் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்படும் என்று அரசு அறிவித்தது. இதற்காக ரூ.5 லட்சம் ஒதுக்கப்பட்டது.இந்த திட்டத்தை முதல்கட்டமாக தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளிகள், நடுநிலைப்பள்ளிகளில் செயல்படுத்த அரசு முடிவு செய்துள்ளது.

எனவே, அரசு மற்றும் ஊராட்சி ஒன்றிய பள்ளிகளில் 2016-17-ம் கல்வி ஆண்டில் விடுப்பே எடுக்காமல் பள்ளிக்கும் வரும் மாணவர்கள், ஆசிரியர்களின்விவரங்களை சேகரித்து அனுப்புமாறு அனைத்து மாவட்ட தொடக்கக் கல்வி அதிகாரிகளுக்கும் மாநில தொடக்கக் கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோவன் உத்தரவு பிறப்பித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களின் விவரம்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை விரைவில் சேகரித்து சரிசெய்யவேண்டும். மாணவர்கள் பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி, ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து வகைகளும் அந்த பட்டியலில் இடம்பெற வேண்டும்.இந்த விவரங்கள் அனைத்தும் வருகை பதிவேட்டில் உள்ளபடி சரியாக இருக்க வேண்டும். இதனை கல்வி தகவல் மேலாண்மை முறையில் ஏற்கனவே உள்ளடு செய்த மாணவர்களிடம், அவர்கள்கொடுத்த விவரங்கள் சரியாக உள்ளனவா? என வகுப்பு ஆசிரியர்கள் சரிபார்க்கவேண்டும்.
இதில் எந்தவித தவறும் இருக்கக்கூடாது.

கண்காணிக்க வேண்டும்

அனைத்தையும் வகுப்பு ஆசிரியர் சரிபார்த்த பின்னர் தலைமை ஆசிரியர் கையெழுத்திட வேண்டும். பிறகு அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் பெற்று கையெழுத்திட வேண்டும். இந்த பணியை மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் காணொலி காட்சி மூலம் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் நேற்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி தலைமையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், வி.சி.ராமேஸ்வர முருகன், கருப்பசாமி, பழனிச்சாமி மற்றும் இணை இயக்குனர்கள் தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து பேசினர்.

சேமிப்புக் கணக்கு தொடங்கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை அஞ்சலகங்களில் பணம் எடுக்கலாம்.

தமிழக வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி தகவல்அஞ்சலக சேமிப்புக் கணக்கு தொடங் கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் எடுக்கலாம் என்று தமி ழக அஞ்சல் வட்ட தலைமை அதிகாரி சார்லஸ் லோபோ கூறினார்.
பழைய 500 மற்றும் 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அவற்றை மாற்றுவதற்காக நாடு முழுவதும் உள்ள வங்கிகள், அஞ்சலகங்களில் பொதுமக்கள் கூட்டம் அதிகரித்துள்ளது. இன்று முதல் வங்கிகளில் ஒரு நாளைக்கு ஒரு நபர் ரூ.2 ஆயிரம் வரை மட்டுமே எடுக்க முடியும் என்ற புதிய அறிவிப்பு நேற்று வெளியானது.இந்நிலையில், அஞ்சலகங்களில் சேமிப்புக் கணக்கு தொடங்கினால் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை ஒரு நபர் பணம் எடுக்கலாம் என்று கூறப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழக வட்ட தலைமை அஞ்சல் அதிகாரி சார்லஸ் லோபோ ‘தி இந்து’விடம் கூறியதாவது:அஞ்சலகங்களில் பணம் மாற்ற வருவோரிடம் சேமிப்புக் கணக்கு தொடங்க கட்டாயப்படுத்தப்படுவ தாக புகார் எழுந்துள்ளது. அது உண்மை இல்லை. ஆனால், சேமிப்புக் கணக்கு தொடங்கினால், பொதுமக்கள் அதனால் பயனடைய முடியும். ஒருவர் சேமிப்புக் கணக்கு தொடங்கும் போது ரூ.50 ஆயிரம் வரை பணம் செலுத்த முடியும். ரூ.50 ஆயிரத்துக்கு மேல் பணம் செலுத்த பான் கார்டு, ஆதார் கார்டு ஆகிய ஆவணங்களை கொடுக்க வேண்டும். அதே போல், ஒரு நபர் ஒரு நாளைக்கு ரூ.10 ஆயிரம் வரை பணம் எடுக்க முடியும். சேமிப்புக் கணக்கு தொடங்கும் போது பழைய 500, மற்றும் 1,000 நோட்டுகளை கொடுக்கலாம்.இவ்வாறு அவர் கூறினார்.

கணினி தேர்வுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி நீட்டிப்பு.

தமிழக அரசு பணியில் தட்டச்சர், சுருக்கெழுத்தர் பணிகளுக்கு அரசு கணினி சான்றிதழ் தேர்வில் (Certificate in computer on office automation) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டியது கட்டாயம் ஆகும். (இந்த பணிகளுக்காக நடத்தப்படும் டிஎன்பிஎஸ்சி குரூப்-4 தேர்வுக்கு, அரசு கணினி சான்றிதழ் தேர்வில் தேர்ச்சி பெறாதவர்களும் விண்ணப்பிக்கலாம் என்றாலும்கூட பணிக்குத் தேர்வு செய்யப்பட்டால் தகுதிகாண் பருவம் முடிவடைவதற்குள் கண்டிப்பாக அத்தேர்வில் தேர்ச்சி பெற்றாக வேண்டும்.
வரும் டிசம்பர் மாதம் நடத்தப்பட வேண்டிய தேர்வு 2017 ஜனவரி மாதம் 7, 8-ம் தேதிகளில் நடத்தப் படுகிறது. இதற்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி தேதி நவம்பர் 11-ம் தேதி என்று முன்பு அறிவிக் கப்பட்டிருந்தது. தற்போது, ஆன்லைனில் (www.tndote.org) விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி நவம்பர் 18-ம் தேதி வரையும், பிரின்ட் அவுட் எடுக்கப்பட்ட ஆன்லைன் விண்ணப்பத்தை தேவையான சான்றிதழ் நகல்கள் (எஸ்எஸ்எல்சி மதிப்பெண் சான்றிதழ், தட்டச்சு சான்றிதழ் நகல்) மற்றும் ரூ.530-க்கான டிமாண்ட் டிராப்டுடன் சமர்ப்பிக்க கடைசி தேதி நவம்பர் 25-ம் தேதிவரையும் நீட்டிக்கப்படுவதாக தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் ராஜேந்திர ரத்னு அறிவித்துள்ளார்.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோர் விவரத்தை சரிபார்க்க வேண்டும் பள்ளிக்கல்வி இயக்குனர் உத்தரவு.

எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதுவோரின் விவரங்களை சரிபார்க்க வேண்டும் என்று முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை விடுத்துள்ளது.
இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகள் ஆகியோருக்கு பள்ளிக்கல்வி இயக்குனரகம் அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் கூறியிருப்பதாவது:-

மாணவர்களின் விவரம்

அடுத்த ஆண்டு மார்ச் மாதம் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை விரைவில் சேகரித்து சரிசெய்யவேண்டும். மாணவர்கள் பிறந்த தேதி, பெற்றோர் பெயர், சாதி, ஆதார் எண், புகைப்படம் உள்ளிட்ட அனைத்து வகைகளும் அந்த பட்டியலில் இடம்பெற வேண்டும்.இந்த விவரங்கள் அனைத்தும் வருகை பதிவேட்டில் உள்ளபடி சரியாக இருக்க வேண்டும். இதனை கல்வி தகவல் மேலாண்மை முறையில் ஏற்கனவே உள்ளடு செய்த மாணவர்களிடம், அவர்கள்கொடுத்த விவரங்கள் சரியாக உள்ளனவா? என வகுப்பு ஆசிரியர்கள் சரிபார்க்கவேண்டும்.
இதில் எந்தவித தவறும் இருக்கக்கூடாது.

கண்காணிக்க வேண்டும்

அனைத்தையும் வகுப்பு ஆசிரியர் சரிபார்த்த பின்னர் தலைமை ஆசிரியர் கையெழுத்திட வேண்டும். பிறகு அதை மாவட்ட கல்வி அதிகாரிகள் பெற்று கையெழுத்திட வேண்டும். இந்த பணியை மாவட்ட கல்வி அதிகாரிகளும், முதன்மை கல்வி அதிகாரிகளும் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த தகவலை சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் காணொலி காட்சி மூலம் முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட கல்வி அதிகாரிகளிடம் பள்ளிக்கல்வி இயக்குனர் ச.கண்ணப்பன் நேற்று தெரிவித்தார். இந்நிகழ்ச்சி அனைவருக்கும் கல்வி திட்ட மாநில இயக்குனர் பூஜா குல்கர்னி தலைமையில் நடைபெற்றது. அப்போது இயக்குனர்கள் க.அறிவொளி, ரெ.இளங்கோவன், வி.சி.ராமேஸ்வர முருகன், கருப்பசாமி, பழனிச்சாமி மற்றும் இணை இயக்குனர்கள் தங்கள் துறையின் கீழ் செயல்படுத்தப்படும் திட்டங்கள்குறித்து பேசினர்.

நவ., 26ல் அரசியலமைப்பு சட்ட நாள்: பள்ளிகளில் கொண்டாடும்படி உத்தரவு

பள்ளி, கல்லுாரிகளில், வரும், 26ல், அரசியலமைப்பு சட்ட நாள் கொண்டாடும்படி, மத்திய அரசு உத்தரவிட்டு உள்ளது.

 
சுதந்திரம் பெற்ற பின், 1949 நவ., 26ல், இந்திய அரசியலமைப்பு சட்டம் தேசிய அளவில் ஏற்றுக் கொள்ளப்பட்டது. இந்த நாள், சட்ட நாளாக ஏற்கனவே கொண்டாடப்பட்டு வந்தது.

கடந்த ஆண்டு, அம்பேத்கரின் பிறந்த நாள் விழாவில் பங்கேற்ற, பிரதமர் நரேந்திர மோடி, நவ., 26ம் தேதி, இந்திய அரசியலமைப்பு சட்ட நாளாக கொண்டாடப்படும் என, அறிவித்தார். அதன்படி, 26ல் அரசியலமைப்பு சட்ட நாளை, பள்ளி, கல்லுாரிகளில் கொண்டாட, மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது. 'சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட பள்ளிகளில், அரசியலமைப்பு சட்ட நாளை கட்டாயமாக கொண்டாட வேண்டும்; அதன் அறிக்கையை, நவ., 30ல் சமர்ப்பிக்க வேண்டும்' என, சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

1.60 லட்சம் சதுர அடி பரப்பில் மாணவ, மாணவியர் ஓவியம்

பெரம்பலுார் மாவட்டத்தில், 145 அரசு பள்ளிகளில், ஒரே நேரத்தில், 1.60 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஓவியம் வரைந்து, மாணவர்கள் சாதனை படைத்தனர்.

 அரசு நடுநிலை, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில், ஆறு முதல், ஒன்பது வரை படிக்கும் அனைத்து மாணவ, மாணவியரும், ஒரே நேரத்தில் பள்ளி சுற்றுச்சுவர்களில் ஓவியம் வரைய, நேற்று ஏற்பாடு செய்யப்பட்டது. மாணவ, மாணவியரின் ஓவியத் திறமையை கண்டறியும் வகையில், பள்ளிக் கல்வித்துறை சார்பில், இந்நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்காக, 3 அடிக்கு, 3 அடி என்ற சதுர அடி கணக்கீட்டில், 9 சதுர அடி பரப்பளவில் ஒவ்வொரு மாணவ, மாணவியருக்கும் இடம் தரப்பட்டது. மாவட்டம் முழுவதும், 17 ஆயிரத்து, 794 மாணவ, மாணவியர் ஒரே நேரத்தில், 1.60 லட்சம் சதுர அடி பரப்பளவில் ஓவியங்களை வரைந்தனர்.குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மழைநீர் சேகரிப்பு, இயற்கை பேரிடர், மின் சேமிப்பு, தேசத் தலைவர்கள், இலக்கிய நீதிக் கதைகள், நுகர்வோர் விழிப்புணர்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ், வண்ண வண்ண ஓவியங்களை வரைந்தனர். ஒவ்வொரு பள்ளியிலும், சிறந்த, மூன்று ஓவியங்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

TNPSC Group 2 Exam - 15, 30 மதிப்பெண் வினாக்களை சேர்க்க டிஎன்பிஎஸ்சி முடிவு.

*நகராட்சி ஆணையர் (கிரேடு-2)* துணை வணிகவரி அலுவலர், சார்-பதிவாளர் (கிரேடு-2) தலைமைச் செயலக உதவி பிரிவு அலுவலர், சிறைத்துறை நன்னடத்தை அலுவலர், உதவி தொழிலாளர் ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அலுவலர், உள்ளாட்சி தணிக்கை உதவி ஆய்வாளர், கூட்டுறவு சங்கங்களின் முதுநிலை ஆய்வாளர், கைத்தறி ஆய்வாளர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளை நேரடி யாக நிரப்புவதற்காக டிஎன்பிஎஸ்சி குரூப்-2 தேர்வு நடத்தப்படுகிறது. இத்தேர்வு எழுதுவதற்கான குறைந்த பட்ச கல்வித் தகுதி *ஏதேனும் ஒரு பட்டப் படிப்ப*ு முடித்திருக்க வேண்டும்.

கடந்த 2013-ம் ஆண்டு வரை குரூப்-2 பணிகளுக்கு ஒரே தேர்வு தான் நடத்தப்பட்டு வந்தது. அதுவும் அப்ஜெக்டிவ் முறையில் அமைந்தி ருக்கும். அதன்பிறகு புதிதாக மெயின் தேர்வு முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதில் 250 மதிப்பெண்ணுக்கு அப் ஜெக்டிவ் முறையிலான கேள்விகளும், 50 மதிப்பெண்ணுக்கு விரிவாக பதிலளிக்கும் கேள்விகளும் கேட்கப் பட்டன.

 இதைத் தொடர்ந்து, இந்த ஆண்டு மெயின் தேர்வில் அப்ஜெக் டிவ் முறையிலான கேள்விகள் நீக் கப்பட்டன. அனைத்து கேள்விகளுக் கும் விரிவாக பதிலளிக்கும் புதிய முறை கொண்டுவரப்பட்டது. அதில் *3, 5, 8 மதிப்பெண் கேள்விகள*் கேட்கப்பட்டன.

இந்நிலையில், குருப்-2 மெயின் தேர்வு வினாத்தாள் முறையில் டிஎன்பிஎஸ்சி மீண்டும் மாற்றம் செய்திருக்கிறது. அதன்படி, ஏற் கெனவே இடம்பெற்றிருந்த *5 மதிப் பெண் கேள்விகள் முற்றிலுமாக நீக்கப்பட்டுள்ளன.*

அதற்குப் பதில் *புதிதாக 15 மதிப் பெண் கேள்விகளும், 30 மதிப்பெண் கேள்விகளும்* சேர்க்கப்பட்டுள்ளன. வழக்கம்போல் ஒவ்வொரு பகுதி யிலும் கூடுதல் வினாக்கள் கொடுக் கப்பட்டு அவற்றில் தேர்வர்கள் தங்களுக்குப் பிடித்தமான கேள்வி களை தேர்வுசெய்து (Choice) விடையளிக்கலாம்.

இந்த புதிய வினாத்தாள் முறை குறித்து சென்னை வெங்கடேஸ்வரா போட்டித்தேர்வுகள் பயிற்சி நிறுவனத் தின் இயக்குநர் பி.அங்கமுத்து கூறும்போது, “3 மதிப்பெண், 5 மதிப்பெண் கேள்விகள் எனில் நன்றாக விடையளித்திருந்தால் அதற்கு முழு மதிப்பெண் பெறும் வாய்ப்பு உண்டு. ஆனால், 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகளுக்கு நன்றாக விடையளித்திருந்தாலும் மதிப்பீட் டாளர் எதிர்பார்க்கும் விவரங்கள் முழுமையாக இல்லாவிட்டாலோ, அல்லது பதிலில் அவர் திருப்தி அடையாவிட்டாலோ மதிப்பெண் பெருமளவு குறைக்கப்படலாம். இருப்பினும், நல்ல எழுத்தாற்றலும், விடைகளை நல்ல முறையில் வழங்கும் ஆற்றலும் மிக்க தேர்வர்களுக்கு 15 மதிப்பெண், 30 மதிப்பெண் கேள்விகள் வரப்பிரசாதமாகவே இருக்கும்” என்றார்.

*குரூப்-2 தேர்வுக்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்பட உள்ளது.* நகராட்சி ஆணையர், சார்-பதிவாளர், உதவி பிரிவு அலுவலர், வருவாய் உதவியாளர், பேரூராட்சி நிர்வாக அலுவலர் (கிரேடு-2) உள்ளிட்ட பதவிகளில் *ஏறத்தாழ 1,700 இடங்கள் நிரப்பப்படும்*என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த குரூப்-2 மெயின் தேர்வில் புதிய வினாத்தாள் முறையை பின்பற்ற டிஎன்பிஎஸ்சி முடிவுசெய்துள்ளது.

10 அரசு இன்ஜி., கல்லூரிகளில் 7 முதல்வர் பணியிடங்கள் காலி

தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள், இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக காலியாக கிடக்கின்றன. 

 தமிழகத்தில், 10 அரசு பொறியியல் கல்லுாரிகள் உள்ளன. இவற்றில், முதல்வர், பேராசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால், மாணவர்களின் கல்வித்தரம் பாதிக்கப்படுகிறது.

தற்போதைய நிலவரப்படி, 10 அரசு பொறியியல் கல்லுாரிகளில், ஏழு முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன. மூத்த பேராசிரியர்கள், கூடுதல் பொறுப்பாக, முதல்வர் பணியை கவனித்து வருகின்றனர். கல்லுாரிகளின் அனைத்து செயல்பாடுகளுக்கும் பொறுப்பேற்க வேண்டிய முதல்வர் பணியிடங்களை நிரப்புவதில், இரண்டு ஆண்டுகளாக, உயர்கல்வி துறை அதிகாரிகள் அலட்சியம் காட்டி வருகின்றனர்.

பொறியியல் கல்லுாரி பேராசிரியர் சங்க நிர்வாகி ஒருவர் கூறியதாவது: பல பேராசிரியர்கள், 30 ஆண்டுகள் பணிபுரிந்தும் கூட, பதவி உயர்வின்றி உள்ளனர். எனினும், காலியிடங்கள் நிரப்பப்படவில்லை. பேராசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் காலியாக உள்ள நிலையில், 192 இடங்களுக்கு மட்டுமே, போட்டி தேர்வு நடத்தி முடித்துள்ளனர். திருச்சி, தஞ்சாவூர், போடி, தர்மபுரி பகுதிகளில், புதிதாக துவங்கப்பட்ட கல்லுாரிகளில், இயற்பியல், வேதியியல், கணித பாடப் பிரிவுகளுக்கு பேராசிரியர் பணியிடங்கள், இதுவரை உருவாக்கப்படவில்லை. பிரச்னைகளுக்கு தீர்வு காண, உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்

இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000!

இன்று முதல் ரூ.4,500க்கு பதிலாக ரூ.2,000!: பணம் மாற்றுவதில் ஆர்.பி.ஐ., உத்தரவு :விவசாயிகள், வியாபாரிகளுக்கு சலுகை:மணமக்கள் பெறலாம் ரூ.2.5 லட்சம்

       வங்கிகளில் பழைய 500 - 1,000 ரூபாய் நோட்டு களை மாற்றிக் கொள்ள அனுமதிக்கப்பட்டி ருந்த உச்சவரம்பு 4,500 ரூபாயிலிருந்து 2,000 ரூபாயாக இன்று முதல் குறைக்கப்படுகிறது. 

அதிக மக்கள், பணத்தை பெற வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அறிவித் துள்ள மத்திய அரசு, பணம் எடுப்பதில் விவசா யிகள், வியாபாரிகளுக்கு சலுகை அளித்துள் ளது. திருமணச் செலவுக்காக மணமக்கள் வீட் டார் வங்கி கணக்குகளில் இருந்து 2.5 லட்சம் ரூபாய் பெறவும் அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்.,களில் பணம் எடுக்க நீண்ட வரிசைகளில் நிற்க வேண்டி இருப்ப தால், பொதுமக்கள் பெரிதும் சிரமப்படுகின்ற னர். மீண்டும் பணப் புழக்கத்தை ஏற்படுத்தும் நடவடிக்கைகளையும், மக்களின் சிரமங்களை யும் மத்திய அரசு உன்னிப்பாக கவனித்து வருகிறது.

பொருளாதார விவகாரங்கள் செயலர் சக்தி காந்த தாஸ் டில்லியில் நேற்று கூறியதாவது:

வங்கிகளில், பழைய ரூபாய் நோட்டுகளை மாற்ற அனுமதிக்கப்பட்டிருந்த உச்சவரம்பு, 4,500 ரூபாயிலிருந்து, 2,000 ரூபாயாக, 18ம் தேதி முதல் குறைக்கப்படுகிறது. அதிக மக்கள், பணத்தை பெற வசதியாக இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அரசிடம் போதிய பணம் இருப்பு உள்ளது என்பதை, மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறோம்.

விவசாயிகள், தங்கள் வங்கிகணக்கில் இருந்து, வாரத்துக்கு,25 ஆயிரம் ரூபாய்,பெற்று கொள்ள அனுமதிக்கப்படுவர். ரபி பருவ பயிர்களை பயிரிட, சிரமம் இருக்கக் கூடாதென, இந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. அனைத்து வர்த்தகர்களும், இதே அளவு தொகையை பெற, ஏற்கனவே அனுமதிக்கப் பட்டு வருகின்றனர்.

பொதுமக்கள், 24 ஆயிரத்து, 500 ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் இருந்து பெறலாம். விவசா யிகளுக்கு, பயிர்க் காப்பீடுகளுக்கான பிரீமியம் தொகையை செலுத்த, 15 நாள் அவகாசம் நீட்டிக்கப்படுகிறது.திருமண செலவு களுக்கு, வங்கி கணக்குகளில் இருந்து, 2.5 லட்சம் ரூபாய் பெற அனுமதிக்கப்படும். திருமணம்நடக்கும் குடும்பத்தில், யாராவது ஒரு உறுப்பினர், இந்த தொகையை பெறலாம்.

இதற்கு, குடும்பத்தில் ஒருவர் மட்டுமே அந்த தொகையை பெற்றுள்ளதாக, சுய அறிவிப்பு கடிதத்தையும், 'பான்' எனப்படும், நிரந்தரக் கணக்கு எண்ணையும் வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும்.

பல்வேறு பொருட்களை மண்டிகளில் வைத்து வர்த்தகம் செய்வோர், வாரத்துக்கு, 50 ஆயிரம் ரூபாய் வரை, வங்கிக் கணக்கில் இருந்து பெற அனுமதிக்கப் படுவர். மத்திய அரசில், 'குரூப் சி' பிரிவை சேர்ந்த ஊழியர்கள், சம்பளத்தில் முன் பணமாக, 10 ஆயிரம் ரூபாய் வரை பெறலாம்; நவம்பர் மாத சம்பளத்தில், இந்த தொகை நேர் செய்யப்படும்.

ஏ.டி.எம்.,களில், புதிய ரூபாய் நோட்டுகளை வைக்கும் வகையில், தக்க மாற்றங்களை செய் யும் பணிகளை விரைவுபடுத்த, சிறப்பு நிபுணர் குழுக்கள் உருவாக்கப்பட்டு உள்ளன.இவ்வாறு அவர் கூறினார். 

இதற்கிடையே, ரூபாய் நோட்டு விவகாரம், பார்லிமென்டின் இரு சபைகளிலும், நேற்று, எதிரொலித்தது. எதிர்க்கட்சிகளின் அமளியால், இரு சபைகளும், நாள் முழுவதும் நேற்று ஒத்தி வைக்கப்பட்டன.