Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 26 November 2016

செல்போன் வழி பண பரிவர்த்தனைக்கு மாறுங்கள்” நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி வேண்டுகோள்

செல்போன் வழி பண பரிவர்த்தனைக்கு மாறுங்கள் என்று நாட்டு மக்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

‘மக்களுக்கு பயிற்சி தாருங்கள்’

பஞ்சாப் மாநிலம், பதிந்தாவில் ரூ.926 கோடி மதிப்பில் அமைய உள்ள 
எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டும் விழா நேற்று நடந்தது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்துகொண்டு, எய்ம்ஸ் ஆஸ்பத்திரிக்கு அடிக்கல் நாட்டி வைத்து பேசினார். அப்போது அவர் நாடு முழுவதும் பரபரப்பையும், இனம் புரியாத பதற்றத்தையும் ஏற்படுத்தி வருகிற ரூபாய் நோட்டு ஒழிப்பு விவகாரம் குறித்து கூறியதாவது:-

நமது நாட்டில் உள்ள குடும்பங்களின் எண்ணிக்கையைப் போன்று 4 மடங்கு எண்ணிக்கையிலான செல்போன்கள் பயன்பாட்டில் உள்ளன. பணம் செலுத்துவதற்கு செல்போனை பயன்படுத்துவதற்கு மக்கள் பழகிக்கொள்ள வேண்டும். வங்கிகள் வழங்குகிற செயலிகளை நீங்கள் உங்கள் செல்போனில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். பொதுமக்களுக்கு அரசியல் தலைவர்கள், ஆசிரியர்கள், இளைஞர்கள் செல்போனில் வங்கி பண பரிவர்த்தனை தொடர்பாக பயிற்சி தர வேண்டும்.

சுரண்டல்

உயர்மதிப்பு கொண்ட ரூபாய் நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டிருப்பது, ஏழை மக்களுக்கு அவர்களது உரிமைகளை வழங்குவதற்குத்தான்.

ஊழல், கருப்புபணம் போன்றவற்றின் காரணமாகத்தான் நடுத்தர வர்க்கத்தினர் சுரண்டப்படுகின்றனர். ஏழை எளியோர் தங்கள் உரிமைகளை இழந்துள்ளனர்.

கருப்பு பண வியாபாரம், இந்த நாட்டை கரையான் போல சாப்பிட்டுக்கொண்டிருக்கிறது.

செல்போன் வழி பண பரிவர்த்தனை

எனவேதான் ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. புதிய நோட்டுகள் படிப்படியாக உங்களை வந்து சேரும்.

இந்த நடவடிக்கைகளால், பிரச்சினைகளையும், அவதி களையும் சந்தித்து வருகிற மக்களுக்கு நன்றி சொல்ல வார்த்தை இல்லை. நீங்கள் நேர்மையுடன் இந்த நடவடிக்கையில் இணைந்து நிற்கிறீர்கள்.

நான் உங்கள் ஆதரவை தேடுகிறேன். உங்கள் செல்போன், வெறும் செல்போன் அல்ல. அந்த செல்போனை நீங்கள் உங்கள் வங்கியாக மாற்றிக்கொள்ள முடியும். பணப்பையாக மாற்றிக்கொள்ள இயலும். இன்று கூட உங்கள் கையில் ஒரு ரூபாய் கூட இல்லாமல், உங்கள் வங்கிக்கணக்கில் பணம் இருந்தால், நீங்கள் சந்தைக்கு சென்று பொருட் களை வாங்க முடியும். செல்போன் வழியாக அதற்கான பணத்தை செலுத்த முடியும். பணத்தை தொடாமல் உங்கள் தொழிலை நீங்கள் செய்ய முடியும்.

கள்ள நோட்டுகள்

கள்ள நோட்டுகள், நமது இளைஞர்களை அழித்திருக்கிறது. நமது இளைஞர்களை காப்பதற்கு, கருப்பு பணத்துக்கு முடிவு கட்ட வேண்டிய தருணம் வந்து விட்டது. இந்தியா ஒரு மாபெரும் நாடாக ஆவதற்கு, இந்த நடவடிக்கையில் உங்களது முழுமையான ஆதரவை நான் நாடுகிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்

அம்பேத்கர் பிறந்தநாள் வினாடி வினா: மாதிரி வினாத்தாள்

TNPSC அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் வேலை

இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,''இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 29 செயல் அலுவலர் பணியிடங்கள் (நிலை-III), 49 செயல் அலுவலர் (நிலை- IV) பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.செயல் அலுவலர் நிலை -III பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும், செயல் அலுவலர் நிலை - IV பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 24-ம் தேதி கடைசி நாளாகும். இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித் தனியாக விண்ணப்பித்து தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Letter No.34007 P & AR Dept Date:13/10/16- Fundamental Rules- Tamilnadu Leave Rules-1933- Unearned Leave on Private affairs Payment of Leave Salary -Instructions issued( Leave Salary equivalent to Half pay and the Allowances payable is in FULL to HALF PAY )


Letter No.34007 P & AR Dept Date:13/10/16- Fundamental Rules- Tamilnadu Leave Rules-1933- Unearned Leave on Private affairs Payment of Leave Salary -Instructions issued( Leave Salary equivalent to Half pay and the Allowances payable is in FULL to HALF PAY )


TNPSC அறிவிப்பு: இந்து சமய அறநிலையத் துறையில் வேலை

இந்துசமய அறநிலையத்துறையில் காலியாக உள்ள செயல் அலுவலர் பணியிடங்களுக்கான தேர்வு தேதியை டிஎன்பிஎஸ்சி அறிவித்துள்ளது.

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி) இன்று வெளியிட்ட செய்திக் குறிப்பில்,''இந்துசமய அறநிலையத் துறையில் காலியாக உள்ள 29 செயல் அலுவலர் பணியிடங்கள் (நிலை-III), 49 செயல் அலுவலர் (நிலை- IV) பணியிடங்களுக்கு தேர்வு நடைபெற உள்ளது.செயல் அலுவலர் நிலை -III பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 29-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும், செயல் அலுவலர் நிலை - IV பணியிடங்களுக்கு 2017 ஏப்ரல் 30-ம் தேதி முற்பகல் மற்றும் பிற்பகலிலும் தேர்வு நடக்கிறது.

இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க வரும் டிசம்பர் 24-ம் தேதி கடைசி நாளாகும். இரண்டு பணியிடங்களுக்கும் விண்ணப்பிக்க விரும்புவோர் தனித் தனியாக விண்ணப்பித்து தேர்வு கட்டணம் செலுத்த வேண்டும். கூடுதல் விவரங்களை www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் அறியலாம்'' என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

10ம் வகுப்பிலும் புது வினாத்தாள் மாதிரி தேர்வு!!

பள்ளிக்கல்வித் துறை அறிமுகம் செய்துள்ள, போட்டித் தேர்வு வகை வினாத்தாள்படி, 10ம் வகுப்புக்கும், மாதிரி தேர்வு வைக்க, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.அரசு பள்ளி மாணவர்கள், 'நீட், ஜே.இ.இ.,' போன்ற நுழைவுத் தேர்வுகளிலும், தங்கள் திறனை காட்டும்வகையில், அவர்களுக்கு புதிய வினாத்தாள் முறையை, கல்வித்துறை அறிமுகம் செய்துள்ளது. 
தமிழக அரசின் குழந்தைகள் தின விழாவில், இதற்கான அறிவிப்பை, பள்ளிக்கல்வி செயலர் சபிதா வெளியிட்டார்.இதன்படி, எட்டாம் வகுப்பு வரை, அனைத்து மாணவர்களுக்கும், புதிய, 'அப்ஜெக்டிவ்' வகை வினாத்தாள் மூலம், பாட வாரியாக மாதிரி தேர்வுகள் நடத்தப்படுகின்றன.வினாத்தாளில் உள்ள நான்கு விடைகளில், சரியானதை தேர்வு செய்வது, மாணவர்களின் தேர்வு பயத்தை போக்குவதோடு, குழப்பமான வினாவுக்கும், விடை கண்டுபிடிக்கும் பக்குவத்தையும் ஏற்படுத்துவது தெரிய வந்துள்ளது. எனவே, இந்த வினாத்தாள் முறைப்படி, 10ம் வகுப்பு பொதுத் தேர்வு மாணவர்களுக்கும், மாதிரி தேர்வு வைக்க, மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன அதிகாரிகள் உத்தரவிட்டுள்ளனர்.வரும் ஆண்டுகளில், பிளஸ் 2 வரையிலும், இந்த முறை தேர்வு அறிமுகம் செய்யப்பட உள்ளது.

2019க்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதி: ஐகோர்ட் உத்தரவு

வரும் 2019ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் அனைத்து அரசுபள்ளிகளிலும் கழிப்பறை வசதி ஏற்படுத்த வேண்டும் என தமிழக அரசுக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது.

அதிருப்தி:
மதுரையை சேர்ந்த ஆனந்தராஜ் என்பவர், உயர்நீதிமன்ற மதுரை கிளையில், தினமலர் நாளிதழில் வெளியான செய்தியை சுட்டிக்காட்டி , அரசு பள்ளிகளில் கழிப்பறை வசதியை முழுமையாக ஏற்படுத்த வேண்டும் என மனு தாக்கல் செய்தார். இது குறித்து, விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.இந்த மனு விசாரணைக்கு வந்த போது, பள்ளிக்கல்வித்துறை செயலாளர் மற்றும் இயக்குநர் தாக்கல் செய்த அறிக்கை மீது அதிருப்தி அடைந்தனர். இதனையடுத்து, அரசு பள்ளிகளில் எத்தனை நாட்களில் கழிப்பறை கட்டப்படும் என விரிவான அறிக்கையை நவ.,22க்குள் தாக்கல் செய்ய வேண்டும் எனக்கூறி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்தனர்.

எச்சரிக்கை:இந்த மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடந்தது. அப்போது நீதிபதிகள் நாகமுத்து, கிருஷ்ணகுமார் மனுவை விசாரித்தனர். தொடர்ந்து, நடப்பு கல்வியாண்டு முதல், 2019ம் ஆண்டு கல்வியாண்டிற்குள் அரசு பள்ளிகளில் கழிப்பறை கட்ட வேண்டும். அரசு பள்ளிகளில் இரவுக்காவலர் நியமிக்கப்படுவதுடன், சுகாதார பணியாளர்களையும் நியமிக்க வேண்டும். அரசு பள்ளிகளில் சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். தற்போது அரசு பள்ளி கழிப்பறைகளின் நிலை 2019க்குள் மாற வேண்டும். கழிப்பறைகள் சுத்தமில்லாமல் உள்ளதாக புகார் வந்தால், கலெக்டர் மற்றும் கல்வித்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்படும் என எச்சரிக்கை விடுத்தனர்.

NTSE:தேசிய திறனாய்வு தேர்வு:நவ., 28ல் விடைக்குறிப்பு

தேசிய திறனாய்வு தேர்வுக்கான விடைக்குறிப்பு, வரும், 28ல் வெளியாகும்' என, அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.நாடு முழுவதும், 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, மாநில மற்றும் தேசிய அளவில், இரு கட்ட திறனாய்வு தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 
இந்த ஆண்டு, மாநில அளவிலான தேர்வு, நவ., 5ல் நடந்தது.'தேர்வு வினாத்தாளுக்கு, தற்காலிக விடைக்குறிப்புகள், வரும், 28ல், வெளியாகும். அவற்றை,www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம்.சந்தேகங்கள் இருந்தால், இயக்குனரின்,directordge.tn@nic.inஎன்ற முகவரிக்கு, வரும், 30க்குள் தகவல் அனுப்பலாம்' என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

JEE., நுழைவுத்தேர்வு எழுத டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்

ஐ.ஐ.டி., என்ற உயர்கல்வி தொழில்நுட்ப கல்லுாரிகளில் இன்ஜினியரிங் படிப்பதற்கான, ஜே.இ.இ., மெயின் நுழைவுத் தேர்வுக்கு, டிச., 1 முதல் விண்ணப்பிக்கலாம்.ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.டி.எம்., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., - பி.ஆர்க்., மற்றும் பி.பிளான் போன்ற படிப்புகளில் சேர, ஜே.இ.இ., மெயின், அட்வான்ஸ் என்ற, இரண்டு கட்ட நுழைவுத் தேர்வு எழுத வேண்டும்.
வரும் கல்வி ஆண்டுக்கான நுழைவுத் தேர்வு, சி.பி.எஸ்.இ., மூலம் அறிவிக்கப்பட்டு உள்ளது.இதன்படி, ஏப்., 3ல் எழுத்துத் தேர்வும், ஏப்., 9, 10ல், ஆன்லைன் வழி தேர்வும் நடத்தப்படுகிறது.இதற்கு, டிச., 1முதல், 31 வரை விண்ணப்பிக்கலாம். தேர்வில் பங்கேற்க, தமிழக அரசு பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ., உட்பட, 54 பாடத்திட்ட மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.தமிழகத்தில் சென்னை, மதுரை, கோவை உட்பட நாடு முழுவதும்,132 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன. வெளிநாட்டில் இருப்போர், ஜே.இ.இ., மெயின் தேர்வை எழுத, துபாய், பக்ரைன், மஸ்கட், ரியாத் மற்றும் ஷார்ஜா ஆகிய நகரங்களில், தேர்வு மையங்கள் அமைக்கப்படுகின்றன.

குஜராத்தியில் எழுதலாம் : ஜே.இ.இ., மெயின் தேர்வை, ஆங்கிலம் அல்லது இந்தி என, ஏதாவது ஒரு மொழியில் எழுத அனுமதி உள்ளது. தமிழிலும், இத்தேர்வை எழுத அனுமதிக்க வேண்டும் என, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகிறது. ஆனாலும், அதற்கு அனுமதி கிடைக்கவில்லை. இந்நிலையில், இந்த ஆண்டு முதல் குஜராத்தியிலும், ஜே.இ.இ., தேர்வை எழுதலாம் என, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., அறிவித்துள்ளது. தமிழகத்தில் சென்னை, கோவை, திருநெல்வேலி, ஈரோடு, திருப்பூர் உட்பட, பல மாவட்டங்களில் குஜராத்தி மொழி பேசுவோர் பரவலாக உள்ளனர்.

CCE Worksheet 2 - Social science Answer Key (Tamil Medium) !!

SHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு திட்டதகவல்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு -ஓர் வீடியோ விளக்கம் (TAMIL VIDEO)

SHAALA SIDDHI - பள்ளித்தரங்கள் மற்றும் மதிப்பீட்டு திட்டதகவல்கள் வலைதளத்தில் பதிவேற்றம் செய்வது எவ்வாறு -ஓர் வீடியோ விளக்கம்
(TAMIL VIDEO)
https://youtu.be/a1XQxXmrwTE

CCE WORKSHEET TEST - IMPORTANT FORMS

Click Here - CCE Worksheet -Weekly Abstract Form (Word Format)Click Here - CCE Worksheet - Visit Report Download (pdf)

தி இந்து : அரசு ஊழியர்களுக்கு முன்பணம்: வரவேற்புக்குரிய யோசனை!

உயர் மதிப்புப் பணநீக்க நடவடிக்கையின் தொடர்ச்சியாக, அரசு ஊழியர்களுக்கு அவர்களுடைய சம்பளத்திலிருந்து ரூ.10,000 ரொக்கமாக முன் பணம் வழங்கும் யோசனை வரவேற்புக்குரியது.

பிரதமர் மோடியின் நவம்பர் 8 அறிவிப்பைத் தொடர்ந்து, நாட்டில் தற்காலிகமான ஒரு பொருளாதார தேக்கநிலை உருவாகியிருக்கிறது. குறிப்பாக, அமைப்புசாராத் துறையில். இந்நிலையில், மத்திய அரசு ஊழியர்களின் ஒரு பிரிவினருக்கு சம்பளத்தில் ரூ.10,000 முன் ரொக்கமாக வழங்க அரசு முடிவெடுத்திருக்கிறது. ஜம்மு-காஷ்மீர் மாநிலத்திலும் இதே போன்ற முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது. ஏனைய மாநில அரசுகளும்கூட இம்முடிவை எடுக்கலாம். அப்படி எடுத்தால், அதில் தவறு ஏதும் இல்லை என்றே தோன்றுகிறது. “நாட்டின் எல்லா மக்களும் வங்கிகள் முன் காத்திருக்கையில், அரசு ஊழியர்களுக்கு மட்டும் ஏன் இந்தச் சலுகை?” என்று சமூக வலைதளங்களில் எழுப்பப்படும் வரும் கேள்வி நியாயமற்றது.
 
அரசு ஊழியர்கள் என்று குறிப்பிடுகையில், நம் எல்லையில் நிற்கும் ராணுவ வீரர்களில் தொடங்கி கிராமப் பஞ்சாயத்து உதவியாளர் வரை அதில் அடக்கம் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். இந்தியாவின் அரசு ஊழியர்கள் எண்ணிக்கை வெறுமனே சில ஆயிரங்கள், லட்சங்களுக்குள் அடங்குவது அல்ல; தெருவுக்கு ஒருவர் அல்லது இருபது குடும்பங்களுக்கு ஒரு குடும்பம் என்கிற அளவுக்குப் பரந்து விரிந்தது அது.

அரசு ஊழியர்களின் பணம் எப்போதுமே நம்முடைய சந்தை இயக்கத்தின் மிக முக்கியமான சுழற்சிச் சக்கரங்களில் ஒன்றாக இருக்கிறது. எப்படியும் இந்த மாதச் சம்பளத்தை அவர்களுக்கு அரசு அளித்துதான் ஆக வேண்டும். அதில் கொஞ்சத்தை வங்கிக் கணக்கில் வரவு வைப்பதற்குப் பதிலாக, பணமாக முன்கூட்டி அளிக்கும்போது பணம் நேரடியாகச் சந்தையில் சுழற்சிக்குக் கீழ் நோக்கிப் போகும் என்று அரசு நம்பினால், அது நியாயமானது.

அரசின் சமீபத்திய நடவடிக்கையின் தொடர்ச்சியாக வங்கி ஊழியர்கள் கடுமையான பாதிப்புக்குள்ளாகியிருப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. இதுவரை பலர் பணிச் சுமையால் உயிரிழந்திருக்கின்றனர். வங்கித் துறையினர் மட்டும் அல்லாது சுங்கத் துறையினர், கலால் துறையினர், வருமான வரித் துறையினர், உள்ளூர் காவல் துறையினர் தொடங்கி அன்றாடம் கருவூலத்துக்குப் பணம் கட்டும் தேவையுள்ள ஒவ்வொரு துறையைச் சேர்ந்தவர்களும் தத்தமது அளவில் சிறு அளவிலேனும் பாதிப்புக்குள்ளாகி இருக்கின்றனர். கள்ளப் பொருளாதாரத்துக்கு எதிராக மேலதிகமாக அரசு எடுக்கும் எந்த நடவடிக்கையும் அரசு ஊழியர்களைக் கொண்டே நடந்தாக வேண்டும் என்பது யாரும் அறியாதது அல்ல. ஏற்கெனவே பணிச் சுமை அதிகரித்திருக்கும் நிலையில், அவர்களுடைய தனிப்பட்ட பாதிப்பைக் கொஞ்சம் குறைக்கலாம் என்று அரசு முடிவெடுத்தால், அது தவறும் அல்ல. நம் சமூகத்தில் அமைப்புரீதியில் பாதிப்படையும்போதெல்லாம், அரசு ஊழியர்கள் மீது வன்மக் கண்ணைத் திருப்புவது நம் பொதுப் புத்தியில் வலுவாகவே படிந்திருக்கிறது. இது ஒரு சமூக மனநோயே அன்றி வேறு அல்ல!

பள்ளிக் கல்வி - அனைத்து வகை மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்கவும் ஒவ்வொரு பள்ளியிலும் ஆலோசனைப் பெட்டி வைக்கவும் உத்தரவு - செயல்முறைகள்

Directorate of Government Examinations ESLC - Jan 2017 - Private Candidates Time Table