Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 1 December 2016

திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம்: மத்திய அரசு விளக்கம்

திருமணமான பெண்கள் அதிகபட்சமாக 500 கிராம் வரையிலும், திருமணம் ஆகாத பெண்கள் 250 கிராம் வரையிலும் தங்கம் வைத்துக்கொள்ளலாம் என மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

திருமணமான பெண்கள் 500 கிராம் வரை தங்கம் வைத்துக்கொள்ளலாம்: மத்திய அரசு விளக்கம்
புதுடெல்லி:

பாராளுமன்ற மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ள வருமான வரி சட்டத்திருத்த மசோதாவில் நகைகளுக்கு புதிய வரிகள் விதிக்கப்பட்டிருப்பதாக செய்தி பரவியது. இதற்கு மத்திய அரசு இன்று விளக்கம் அளித்துள்ளது. தனி நபர்கள் அதிகபட்சமாக எவ்வளவு தங்கம் வைத்திருக்கலாம் என்பது குறித்து மத்திய நிதியமைச்சகம் தெளிவுபடுத்தி உள்ளது.

அதாவது வருமான வரி சட்டத்திருத்த மசோதாவில் தங்க நகைகளுக்கு எந்த புதிய கட்டுப்பாடுகளும் விதிக்கப்படவில்லை. பழைய நடைமுறையே தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் தொடர்பான பழைய கட்டுப்பாட்டின்படி, திருமணமான பெண்களிடம் அதிகபட்சமாக 62 சவரன் அதாவது 500 கிராம் தங்கமும், திருமணமாகாத பெண்கள் 250 கிராம் தங்கமும் வைத்திருக்கலாம். வருமான வரித்துறை சோதனையின்போது அவை பறிமுதல் செய்யப்படமாட்டாது. ஆண்களைப் பொறுத்தவரை 100 கிராம் வரை தங்கம் வைத்திருந்தால் பறிமுதல் செய்யப்பட மாட்டாது

அதே சமயம், அதிகப்படியாக தங்கம் வைத்திருப்பவர்கள் தங்கள் வருமான வரி கணக்கின் படி வைத்திருந்தால், அவர்களிடம் இருந்து தங்கம் பறிமுதல் செய்யப்படாது. அதே போல, பரம்பரை நகைகள், பழைய தங்கக் கட்டிகளுக்கும் வருமான வரி சட்ட திருத்த மசோதாவில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

மேலும், வருமான வரித்துறை சோதனையின் போது பிடிபடும் கூடுதல் தங்கத்துக்கு 60 சதவீத வரி விதிக்கப்படும். சரியான விளக்கம் அளிக்கப்பட்டு வரி கட்டப்பட்டிருந்தால் எந்த வரியும் விதிக்கப்படாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

jio இலவச சேவை மார்ச் 31 வரை நீட்டிப்பு

ஜியோ சிம் வாடிக்கையாளர்களுக்கு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி டிசம்பர் 4 முதல் மார்ச் 31ம் தேதி வரை டேட்டா, வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். 
இந்த வசதி ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் பொருந்தும் எனவும் அவர் தெரிவித்தார்.மும்பையில் நடந்த நிகழ்ச்சியில் முகேஷ் அம்பானி ஜியோவின் புதிய அறிவிப்புகளை வெளியிட்டார். 

முகேஷ் அம்பானி பேசியதாவது: 83 நாட்களில் 5 கோடி வாடிக்கையாளர் ஜியோவில் இணைந்துள்ளனர். ஒரு நாளைக்கு 6 லட்சம் வாடிக்கையாளர்கள் ஜியோவில் இணைகின்றனர். பேஸ்புக், ட்விட்டர், வாட்ஸ் அப்பை விட ஜியோ அதிக மக்களை கவர்ந்துள்ளது. மேலும் ஜியோவின் சலுகைகளால் சாமானிய மக்கள் அதிகம் பயன்பட்டுள்ளனர் என முகேஷ் அம்பானி தெரிவித்தார். ரூபாய் நோட்டு விவகாரத்தில் பிரதமரின் நடவடிக்கை பாராட்டுக்குரியது என்று முகேஷ் அம்பானி கூறியுள்ளார். 

மேலும் புதிதாக ஜியோவில் இணைபவர்களுக்கு டிசம்பர் 4 முதல் மார்ச் 31ம் தேதி வரை டேட்டா, வாய்ஸ் கால், வீடியோ கால் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இலவசமாக வழங்கப்படும் என முகேஷ் அம்பானி அறிவித்துள்ளார். இந்த வசதி ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கும் நீட்டிப்பு செய்யப்படும் என்றும் அவர் தெரிவித்தார். வாடிக்கையாளர்கள் விரும்பினால் ஜிவ் சிம் வீட்டிற்கே வந்து வழங்கப்படும் என்று அம்பானி தெரிவித்தார்

புயல் விடுமுறை தினங்களில் தலைமையாசிரியர் கண்டிப்பாக பள்ளிக்கு வர வேண்டும் !!

பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு.

பள்ளி மாணவர்களுக்கு யோகா கட்டாயம் மத்திய அரசு 3 மாதங்களில் முடிவெடுக்க வேண்டும் உச்ச நீதிமன்றம் உத்தரவு | நாடு முழுவதும் பள்ளிகளில் 8-ம் வகுப்பு வரையிலான மாணவர் களுக்கு யோகாவை கட்டாயப் பாடமாக்குவது குறித்து 3 மாதங் களுக்குள் முடிவெடுக்குமாறு, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 
தேசிய அளவிலான யோகா கொள்கையை வகுத்து,நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல், 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு யோகா மற்றும் சுகாதாரக் கல்விக்கான பாடப் புத்தகங்களை வழங்க மனித வள மேம்பாட்டுத் துறை, என்சிஇஆர்டி, சிபிஎஸ்இ, என்சிடிஇ ஆகியவற்றுக்கு உத்தரவிடக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அஷ்வினி குமார் உபாத்யாய என்ற வழக்கறிஞர் மற்றும் டெல்லி பாஜக செய்தித் தொடர்பாளர் ஜே.சி.சேத் ஆகியோர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், அனைத்து மக்களுக்கும், குறிப்பாக குழந்தைகளுக்கு அடிப்படை சுகாதார உரிமைகள் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டிய கடமை மத்திய அரசுக்கு உள்ளது என கூறப்பட்டிருந்தது. இம்மனுவை விசாரித்த நீதிபதி எம்.பி.லோகுர் தலைமையிலான பெஞ்ச், இம்மனுவையே கோரிக்கை யாகக் கருதி, இவ்விவகாரம் குறித்து 3 மாதத்துக்குள் மத்திய அரசு முடிவெடுக்க வேண்டும் என உத்தரவிட்டது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தில் முதுகலை கல்வியியல், தமிழ்வழி புவியியல் உட்பட 26 புதிய படிப்புகள் அடுத்த ஆண்டு அறிமுகம்

சென்னையில் நாளை (வெள்ளிக்கிழமை) நடைபெறும் அப் பல்கலைக்கழகத்தின் 9-வது பட்டமளிப்பு விழாவில் 14 ஆயிரம் பேர் பட்டம் பெறுகிறார்கள். தமிழ்நாடு திறந்தநிலைப் பல் கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் எம்.பாஸ்கரன் 'தி இந்து'வுக்கு சிறப்பு பேட்டியளித் தார். அப்போது அவர் கூறியதாவது: 
அரசு பல்கலைக்கழகமான தமிழ் நாடு திறந்தநிலை பல்கலைக்கழகம் இளங்கலை, முதுகலை, சான்றிதழ், டிப்ளமோ, முதுகலை டிப்ளமோ என பல்வேறு நிலைகளில் 132 வகை யான படிப்புகளை தொலைதூரக் கல்வியில் வழங்கி வருகிறது. இதுவரையில் 5 லட்சத்துக்கும் மேற்பட்ட பட்டதாரிகள், முதுகலை பட்டதாரிகள், பட்டயதாரிகளை உருவாக்கியுள்ளது. ஆண்டு தோறும் ஒரு லட்சம் பேர் பல்வேறு படிப்புகளில் சேருகிறார்கள். இங்கு படிப்பதற்கு எந்தவிதமான வயது வரம்பும் கிடையாது.திறந்தநிலை பல்கலைக் கழகத்தில் வழங்கப்படும் பட்டப் படிப்பு செல்லுமா என்ற சந்தேகம் பொதுவாக மாணவர்கள் மத்தியில் நிலவி வருகிறது. 10-ம் வகுப்புக்குப் பிறகு பிளஸ் 2 முடித்துவிட்டு அதன் பிறகு இளங்கலை பட்டப் படிப்பில் படித்தால் அது செல்லும். ஒருவேளை பிளஸ் 2 முடிக்க வில்லை எனில் நாங்கள் நடத்தும் 3 மாத கால இணைப்பு படிப்பு (பிரிட்ஜ்) முடித்து அதன்பிறகு பட்டப் படிப்பு படித்தால் அதுவும் ஏற்றுக்கொள்ளப்படும்.

 தமிழகம் முழுவதும் தொலை தூரக் கல்வியில் படிப்புகளை நடத் துவதற்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்துக்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இங்கு வழங்கப்படும் ஒவ்வொரு படிப்புகளுக்கும் தனித்தனியே அங்கீகாரம் பெற்றுள்ளோம். இந்தியாவில் 13 திறந்தநிலை பல்கலைக்கழகங்கள் உள்ளன. அவற்றில் யுஜிசி 12-பி அந்தஸ்து பெற்ற 3 திறந்தநிலை பல்கலைக் கழகங்களில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகமும் ஒன்று. 2017-18-ம் கல்வி ஆண்டில் எம்ஏ (கல்வியியல்), எம்ஏ (ஒப்பிலக்கியம்), எம்எஸ்சி புவியியல் (தமிழ்வழி) ஆகிய முதுகலை பட்டப் படிப்புகள், கவுன்சிலிங், சைபர் கிரைம், கல்வி தொழில்நுட்ப மேம்பாடு, தகவல் தொழில்நுட்பவியல் உள்ளிட்ட பாடங்களில் முதுகலை டிப்ளமோ படிப்புகள், கிளவுட் கம்ப்யூட்டிங், கானுயிர் சுற்றுலா, ஆங்கில மொழித்திறன், சூரிய ஒளி மின்தகடு நிறுவுதல் தொழில்நுட்பம் உள்ளிட்ட பாடங்களில் டிப்ளமோ படிப்புகள், பருவநிலை மாற்றம், தங்க வேலைப்பாடு, மணப்பெண் அலங்காரம், ஆடை வடிவமைப்பு ஆகியவற்றில் சான்றிதழ் படிப்புகள் என 26 விதமான புதிய படிப்புகள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. மேலும், மத்திய மனித ஆற்றல் மேம்பாட்டு அமைச்சகத்தின் அறிவுறுத்தலின்படி, ஆன்லைனில் சான்றிதழ், டிப்ளமோ படிப்புகளை வழங்குவது தொடர்பாக இந்திரா காந்தி தேசிய திறந்தநிலை பல்கலைக்கழகத்துடன் (இக்னோ) ஒப்பந்தம் செய்துள்ளோம்.

தமிழ் நாடு திறந்தநிலை பல்கலைக் கழகத்தால் நடத்தப்படும் சமுதாய கல்லூரிகளில் (கம்யூனிட்டி காலேஜ்) குறைந்தபட்சம் 8-ம் வகுப்பு படித்தவர்கள் தொழிற்கல்வி படிப்புகளில் சேரலாம். இதற்கு ஆண்டு கட்டணம் ரூ.1,000 மட்டுமே. இங்கு படித்து முடிப்பவர் களுக்கு தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழகத்தின் சான்றிதழ், மத்திய அரசின் தேசிய திறன் மேம் பாட்டுக்கழகத்தின் சான்றிதழ் என 2 வகையான கல்விச் சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன. தமிழ்நாடு வேளாண்மை பல் கலைக்கழகத்துடன் இணைந்து 14 விதமான விவசாயம் சார்ந்த சான்றிதழ், டிப்ளமோ படிப்பு களை வழங்குகிறோம் ரூ.4,050 மதிப்புள்ள இந்த படிப்புகளுக்கு மாணவர்களிடமிருந்து வெறும் 50 ரூபாய் மட்டுமே கட்டணம் வசூலிக் கிறோம். இந்த படிப்புகளில் காளான் வளர்ப்பு, இயற்கை விவசா யம், மாடி தோட்டம், மருத்துவம், வாசனை திரவிய தாவரங்கள் வளர்ப்பு உள்ளிட்டவை குறிப்பிடத் தகுந்தவை. இவ்வாறு துணைவேந்தர் கூறினார்.

பள்ளிச் சான்றிதழ், மாற்றுச் சான்றிதழில் சாதியில்லை, சமயமில்லை எனக் குறிப்பிடலாம்- இயக்குநர் செயல்முறைகள்

சம்பளத்தில் வருமான வரி பிடித்தமா? : புதிய வசதி அறிமுகம்

வருமான வரி பிடித்தம் செய்யும், டி.டி.எஸ்., திட்டத்தில், புதிய சேவையை, வருமான வரித் துறை அறிமுகம் செய்துள்ளது. சென்னை, தலைமை அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில், தமிழகம், புதுச்சேரி பிராந்திய வருமான வரி முதன்மை தலைமை ஆணையர், ஏ.கே.ஸ்ரீவஸ்தவா, நேற்று, இந்த சேவையை துவக்கி வைத்தார்.
அவர் பேசியதாவது: ஊழியர்களிடம், அவர்கள் பணிபுரியும் அலுவலகங்களிலேயே, டி.டி.எஸ்., என்ற முறையில், வருமானத்திற்கு தக்கபடி, மாத சம்பளத்தில் வரிப் பிடித்தம் செய்யப்படுகிறது.
படிவம் - 13 : அது தேவையில்லை என, ஊழியர்கள் விரும்பினால், வருமான வரித் துறைக்கும், அலுவலகத்திற்கும் தகவல் தெரிவித்து, படிவம் - 13ஐ நிரப்பி தரலாம். அந்த வசதியை, இனி தமிழகத்தில், 'ஆன்லைனில்' பெறலாம்.
அதற்காக, www.tnincometax.gov.in என்ற இணையதளத்தில், சிறப்பு வசதி செய்யப்பட்டுள்ளது. அந்த இணையதளத்தில், 'tds (for197)' என்ற பகுதியினுள் நுழைந்து, சம்பளதாரர்கள், தங்களது முந்தைய, இரு ஆண்டு கணக்குகளைபதிவு செய்தால் போதும். அலுவலகத்தில் வரிப் பிடித்தம் செய்வது நிறுத்தப்படும் அல்லது தேவைக்கேற்ப குறைக்கப்படும். இவ்வசதி அறிமுகம் செய்யப்படும், மூன்றாவது மாநிலம், தமிழகம். இந்தியாவை, 'டிஜிட்டல்' மயமாக்க வேண்டும் என, மத்திய அரசு முனைப்பாக செயல்படுகிறது. அந்த வேகத்திற்கு, வருமான வரித் துறையும் ஈடுகொடுத்து வருகிறது. அதற்கு,இப்புதிய சேவையே உதாரணம். கணினிமயமாக்கல் காரணமாக, வரி செலுத்தாத நிறுவனங்களை எளிதில் கண்டுபிடிக்க முடிகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மூன்றில் ஒரு பங்கு : வருமான வரித் துறை இயக்குனர் ஜெனரல், முரளிகுமார் பேசுகையில், ''வருமான வரித் துறைக்கு கிடைக்கும் வருவாயில், மூன்றில் ஒரு பங்கு, டி.டி.எஸ்., மூலமாகவே கிடைக்கிறது,'' என்றார்.

DSR:அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு.

அரசு ஊழியர்களின் டிஜிட்டல் பணி பதிவேடு -பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவு. அரசு ஊழியர்களின் பணி பதிவேடு டிஜிட்டல் மயமாகிறது. கருவூலங்களில் இது கணினியில் பதிவு செய்யப்படும்.
அனைத்து சார்நிலை கருவூலங்களிலும், மாவட்ட கருவூலங்களிலும் அரசு ஊழியர்களின் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் பணி நடைபெற உள்ளது. இந்த முறையில் பணி பதிவேட்டின் பக்கங்கள் ஸ்கேன் செய்யப்பட்டு கணினியில் பதிவு செய்யப்படும். இவ்வாறு ஸ்கேன் செய்யப்பட்ட பின்னர் ஒரு பிரிண்ட் அவுட் வழங்கப்படும். அதனை அரசு ஊழியர்கள் கவனமாக சரிபார்த்து திருத்தங்கள் இருப்பின் உடன் சரி செய்யவேண்டும். இப்பணிமுடிந்த பின்னர் பணி பதிவேடு 'டிஜிட்டல் சர்வீஸ் ரெஜிஸ்டர்' என்று அழைக்கப்படும்.இந்த டிஜிட்டல் மயத்திற்காக பணி பதிவேட்டில் உள்ள முதல் பக்க சுய விபரம் மற்றும் புகைப்படம், பணி நியமன ஆணை பதிவு செய்யப்பட்ட விபரம், பணி வரன்முறை தகுதிகாண் பருவ பதிவுகள், அனைத்து கல்வி தகுதிகள் சார்ந்த பதிவுகள், கல்வி தகுதிகளின் உண்மை தன்மை சார்ந்த பதிவுகள், ஜிபிஎப், சிபிஎஸ் திட்டங்களில் சேர்ந்தமை சார்ந்த பதிவுகள், பணிக்காலம் சரிபார்ப்பு, உயர் கல்வி பயில முன்பு அனுமதி பெறப்பட்ட பதிவுகள், பணியிட மாறுதல், பதவிஉயர்வு சார்ந்த பதிவுகள், ஊதிய நிர்ணயம், தேர்வு நிலை, சிறப்பு நிலை, ஊக்க ஊதியம் சார்ந்த பதிவுகள், பல்வேறு வகையான விடுப்பு பதிவுகள், குடும்ப உறுப்பினர்கள், வாரிசு நியமன படிவங்கள் போன்றவை இவற்றில் சரிபார்க்கப்படும். 
இது தொடர்பாக பள்ளி கல்வி இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி வைத்துள்ள உத்தரவில்,'பள்ளி கல்வித்துறையில் பணி பதிவேட்டை டிஜிட்டல் மயமாக்கும் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளை முறையாக கடைபிடிக்க வேண்டும். பதிவுகளை ஒருமுறை தனி கவனம் செலுத்தி ஆய்வு செய்த பின்னர் பணி பதிவேடுகளை பாதுகாப்பான முறையில் அந்தந்த கருவூலங்களில் சென்று டிஜிட்டல் மயமாக்கும் பணியை நிறைவு செய்ய தலைமை ஆசிரியர்களுக்கு உரிய அறிவுரைகள் வழங்கிட முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர். முதன்மை கல்வி அலுவலகத்தில் இதற்கென ஒரு பதிவேடு தொடங்கி ஒவ்வொரு நாளும் இப்பணியை நிறைவு செய்த பள்ளிகள் சார்ந்த விபரங்களை பதிவு செய்து கண்காணித்திட வேண்டும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது

செல்லாத ரூபாய் நோட்டுகள் விவகாரம்: மத்திய அரசு புதிய அறிவிப்பு!.

பெட்ரோல் பங்குகளில் பழைய 500 ரூபாய் நோட்டுகளை  நாளை வரை மட்டுமே பயன்படுத்த முடியும் என்று மத்திய அரசு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

செல்லாத ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 15-ஆம் தேதி வரை பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம் என்று மத்திய அரசு முதலில் அறிவிப்பு செய்திருந்தது. ஆனால் தற்போது பழைய 500 ரூபாய் நோட்டுகளை நாளை வரை மட்டுமே பெட்ரோல் பங்குகளில் பயன்படுத்தலாம்  என்று மத்தியஅரசு 'திடீர்' அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இதனிடையே வீட்டு உபயோகத்திற்கு பயன்படுத்தப்படும் எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.2.07 காசுகள் உயந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

6,7,8 th standard english  SLAS  study material ,model question paper and answer

karur district school education manual





















III STD TAMIL SLAS QUESTION PAPER



III STD Maths SLAS QUESTION PAPER



புயலுக்கு பெயரை யார் தேர்வு செய்வது? பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?

புயலுக்கு பெயரை யார் தேர்வு செய்வது?

பெயர் வைப்பதற்கான காரணம் என்ன?

புயல் சின்னம் உருவாகும் போதெல்லாம், அதற்கு ஒரு பெயர் சூட்டப்படுவது பற்றி அனைவரும் அறிந்திருப்பார்கள். அவற்றிற்கு எவ்வாறு பெயர் சூட்டப்படுகிறது என்பதை இங்கே காணலாம்.

ஒரே நேரத்தில் இரண்டு அல்லது மூன்று புயல்கள் உருவானால் குழப்பம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் தான் மனிதர்களைப் போலவே புயலுக்கு பெயர் வைக்கும் முறை உருவானது.

20-ஆம் நூற்றாண்டின் முற்பகுதியில் ஆஸ்திரேலியா தான் இந்தப் பழக்கத்தை முதலில் தொடங்கி வைத்தது. ஆஸ்திரேலிய வானிலை ஆய்வு மையத்தினர் மக்களிடம் செல்வாக்கு குறைந்த அரசியல் வாதிகளின் பெயர்களை புயல்களுக்கு சூட்டியுள்ளனர். பின்னர் 1954-ஆம் ஆண்டு இந்தப் பழக்கத்தை அமெரிக்கா தொடங்கியது.

இந்தியாவைப் பொறுத்தவரை வங்கக் கடல் மற்றும் அரபிக் கடலில் உருவாகும் புயல்களுக்கு பெயர் வைக்கும் நடைமுறை 2004-ஆம் ஆண்டில் உருவானது. இந்தியா, வங்கதேசம், மாலத்தீவு,‌ மியான்மர், ஓமன், பாகிஸ்தான், தாய்லாந்த், இலங்கை ஆகிய 8 நாடுகள் இணைந்து பெயர் பட்டியலைத் தயாரித்து வருகின்றன.

உச்சநீதிமன்ற உத்தரவை உடனடியாக செயல்படுத்திய சென்னை திரையரங்குகள்!

திரையரங்குகளில் திரைப்படத்தை ஒளிப்பபரப்புவதற்கு முன்பு தேசியக்கீதம் இசைக்கப்பட வேண்டும் என உச்சநீதிமன்றம் ஆணையிட்டடதையடுத்து பெரும்பாலான திரையரங்குகளில் மாலை காட்சி தொடங்குவதற்கு முன்பு தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது தேசியகொடியும் திரையில் காண்பிக்கப்பட்டது.

போபாலைச் சேர்ந்த ஷியாம் நாராயணன் என்பவர் திரைப்படங்கள் தொலைக்காட்சிகளில் தேசியக்கீதம் இழிவுப்படுத்தப்படுவதாக உச்சநீதிமன்றத்தில் பொது நல வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் தீபக் மிஸ்ரா மற்றும் அமிதவா ராய் ஆகியோர் அடங்கி பெஞ்ச் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள் நாடு முழுவம் உள்ள திரையரங்குகளில் திரைப்படக் காட்சிகளை ஒளிப்பரப்புவதற்கு முன்பு தேசியக் கீதம் கட்டாயம் இசைக்கப்பட வேண்டும் என ஆணையிட்டனர்.மேலும் தேசியக்கீதம் இசைக்கப்படும் போது திரையில் தேசியக்கொடி காட்டப்பட வேண்டும் என்றும் திரையரங்குகளில் இருக்கும் மக்கள் எழுந்து நின்று மரியாதை செலுத்த வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
10 நாட்களில் நடைமுறை படுத்த வேண்டும்
இந்த உத்தரவை 10 நாட்களில் நடைமுறை படுத்த வேண்டும் என்றும் தொலைக்காட்சிகள் வணிகரீதியிலான நிகழ்ச்சிகளில் தேசியக்கீதத்தை பயன்படுத்தக்கூடாது என தெரிவித்தனர். மேலும் விரும்பத்தகாத பொருட்களில் தேசியக்கீதத்தை அச்சிடக்கூடாது என்றும் நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

தேசியக்கீதம் கூட தெரியவில்லை
தற்போதுள்ள மக்களுக்கு தேசிய கீதத்தை எப்படி பாடுவது என்று தெரியவில்லை என்றும் நீதிபதிகள் சாடினர். தேசியக்கீதம் மக்களுக்கு கட்டாயமாக கற்றுத்தரப்பட வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.

மத்திய அரசு ஒப்புதல்
உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவை நடைமுறைபடுத்துவதாக மத்தியரசு ஒப்புதல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக மாநில அரசுகளின தலைமை செயலாளர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்படும் என்றும் இதுதொடர்பான விளம்பரம் ஊடகங்களில் வெளியிடப்படும் என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

உரிமையாளர்கள் வரவேற்பு
உச்சநீதிமன்றத்தின் இந்த அதிரடி தீர்ப்புக்கு திரையரங்கு உரிமையாளர்கள் மற்றும் திரைப்பட நடிகர் நடிகைகள் வரவேற்பு தெரிவித்தனர்.
உடனடியாக இசைத்த திரையரங்குகள்
உச்சநீதிமன்றத் தீர்ப்பு வந்து 24 மணிநேரம் ஆவதற்குள்ளேயே சென்னையில் பெரும்பாலான திரையரங்குகள் மாலை காட்சியை திரையிடுவதற்கு முன்பு தேசியக்கீதத்தை இசைத்தனர்.
எழுந்து நில்லுங்கள்
தேசியக்கீதத்தை இசைப்பதற்கு முன்பு எழுந்து நிற்கக்கோரிய ஆங்கில வாசகத்தை திரையரங்குகள் ஒளிப்பரப்பின.
திரையில் இடம்பெற்ற தேசியக்கொடி
தேசியக்கீதம் இசைத்தபோது திரையில் தேசியக்கொடியையும் திரையரங்குகள் இடம்பெறச்செய்தன.

மழை விடுமுறை விழித்துக்கொண்ட கல்வித்துறை...!!

புயல் காரணமாக மழை பெய்யப்போகிறது என்ற முன்னெச்சரிக்கையே விவசாயிகள், பொதுமக்கள் என்று பல்வேறு தரப்பினரையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தி உள்ளது. இன்னொரு புறம் பள்ளிகளுக்கு டிசம்பர் 1 மற்றும் 2-ம் தேதி விடுமுறை அறிவிக்கப்பட்டது மாணவர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

வழக்கமாக கனமழை பெய்யும் போதுதான், மாணவர்கள் பள்ளிகளுக்குச் செல்லமுடியாது என்பதைக் கருத்தில் கொண்டு பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படும். கடந்த ஆண்டு சென்னை மழையின்போது கூட கனமழை பெய்த போதும் விடுமுறை அறிவிப்பதற்கு தாமதம் ஏற்பட்டது என்று சர்ச்சை கிளம்பியது. யார் விடுமுறை அறிவிப்பது என்பதிலும் குழப்பம் நிலவியது.

மாவட்ட ஆட்சியரா அல்லது தலைமைச் செயலகத்தில் கல்வித்துறையா என்பதில் சர்ச்சை இருந்தது.
 ஆனால், இப்போது நாடா புயல் 2-ம் தேதி காலை கரையைக் கடக்கும் என்று அறிவிப்பு வெளியாகி சில மணி நேரங்களில் கல்வித்துறை சார்பில் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், நாகை மாவட்டங்கள் மாவட்டத்தில் சில பகுதிகளுக்கு என முன்கூட்டியே பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருக்கிறது.
 இந்த முன்னெச்சரிக்கை அறிவிப்பு பெற்றோர்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இன்னொருபுறம் "இவனுகளை வீட்டில் வைத்துக்கொண்டு எப்படி சமாளிப்பது" என்று பெற்றோர் புலம்புவதையும் கேட்கமுடிகிறது.
 2015-ம் ஆண்டு மழை, வெள்ளத்தின் போது நவம்பர் மாத த்தில் தீபாவளி விடுமுறைக்குப் பின்னர் மழை காரணமாக பள்ளிகள் செயல்படவில்லை. டிசம்பர் மாதத்திலும் பல நாட்கள் விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது. அரையாண்டு தேர்வுகளும் நடைபெறவில்லை.