Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 5 December 2016

CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை

G.O NO - 449,dt-29.11.2016-CCE-WORKSHEET -தொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணை

CLICK HERE-TO DOWNLOAD CCE- G.O

2017 - RL LIST (RESTRICTED HOLIDAYS)

கல்வி கட்டண கமிட்டி காலி; தொடருது கண்ணாமூச்சி!!

காமராஜர் பல்கலையில் இட ஒதுக்கிடு விவகாரம்; உயர்கல்வித்துறை செயலருக்கு நோட்டீஸ்; தேசியதாழ்த்தப்பட்டோர் ஆணையம் அனுப்பியது

''நீட்'' தேர்விலும் குஜராத்தி மொழிக்கு அனுமதி

பள்ளிகளுக்கு விடுமுறை இல்லை.

தமிழகத்தில் பள்ளி,கல்லூரிகளுக்கு விடுமுறை இல்லை - கல்வி அமைச்சர் பாண்டியராஜன் மறுப்பு!!

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை

முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு மாரடைப்பு மாரடைப்பு ஏற்பட்டதாக அப்பல்லோ மருத்துவமனை அறிக்கை வெளியிட்டுள்ளது.
இதய நோய் மருத்துவர்கள் சுவாசயியல் மருத்துவர்கள் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். தீவிர சிகிச்சை நிபுணர்களும் முதல்வருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். லண்டன் மருத்துவர் ரிச்சர்டு பியால் சென்னை வந்து ஜெயலலிதாவுக்கு சிறப்பு சிகிச்சை அளித்துவருகிறார்.

மேலும் டெல்லி எய்ம்ஸ் மருத்துவர்களும் உடன் சிகிச்சை அளித்துவருகிறார். முன்னதாக நீர்ச்சத்து குறைபாடு காரணமாக கடந்த செப்.22-ம் தேதி முதல்வர் ஜெயலலிதா அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  

தனியார் பள்ளிகளில் அரையாண்டு தேர்வு இன்று துவக்கம்

ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, இன்று அரையாண்டு தேர்வு துவங்குகிறது. பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை மறுநாள் துவங்க உள்ளது.

தமிழகத்தில், மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் மற்றும் அரசு உதவிபெறும் தனியார் பள்ளிகளில், சமச்சீர் கல்வி பாடத்திட்டம் பின்பற்றப்படுகிறது. இவற்றில், ஒன்பதாம் வகுப்பு வரை, மூன்று பருவங்கள் பிரிக்கப்பட்டு, தேர்வு நடத்தப்படுகிறது.

காலாண்டு தேர்வு, முதல் பருவத் தேர்வாகவும்; அரையாண்டு தேர்வு, இரண்டாம் பருவத் தேர்வாகவும்; ஆண்டு இறுதி தேர்வு, மூன்றாம் பருவத் தேர்வாகவும் நடத்தப்படுகிறது.

இதில், இரண்டாம் பருவத் தேர்வான, அரையாண்டு தேர்வு, பெரும்பாலான தனியார் பள்ளிகளில் இன்று துவங்குகிறது. ஒன்று முதல் ஒன்பதாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு, டிச., 23 வரை நடக்கிறது.

பிளஸ் 2 மாணவர்களுக்கு, நாளை மறுநாளும்; 10ம் வகுப்பு மாணவர்களுக்கு, டிச., 9ம் தேதியும் அரையாண்டு தேர்வு துவங்குகிறது. இந்த தேர்வு, பள்ளிக்கல்வித் துறை சார்பில், மாநிலம் முழுவதும் பொதுவான வினாத்தாள் அடிப்படையில் நடத்தப்படுகிறது.

டிச., 23ல் தேர்வு முடிந்ததும், 24 முதல் ஜன., 1 வரை, விடுமுறை விடப்படுகிறது.

பள்ளிகளுக்கு அருகில் தின்பண்ட கடைகளுக்கு தடை.

பள்ளிகளுக்கு அருகில் சுகாதாரமற்ற தின்பண்டங்களை விற்க, தடை விதிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக, பள்ளிக் கல்வி இயக்குனர், கண்ணப்பன், அனைத்து தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதம்:

பள்ளியில் வழங்கப்படும் சத்துணவு, முற்றிலும் துாய்மையாக சமைக்கப்பட வேண்டும்.

அரிசி, பருப்பு மற்றும் காய்கறிகள் உள்ளிட்ட உணவு பொருட்கள், துாய்மையான நீரில் சுத்தம் செய்யப்பட வேண்டும். சமையல் கூடம், உணவு அருந்தும் இடத்தை சுத்தமாக பராமரிக்க வேண்டும்.

மதிய உணவை, துாய்மையான முறையில் வினியோகம் செய்ய வேண்டும். மாணவர்கள் உணவு அருந்தும் தட்டு, டம்ளர் போன்றவற்றை, கழுவி சுத்தமாக பயன்படுத்த அறிவுறுத்த வேண்டும். உணவு சமைத்தல் மற்றும் பரிமாறும் முறைகளை, தலைமை ஆசிரியர், தினமும் கண்காணிப்பது அவசியம்.

விழா நாட்களில், தன்னார்வ நிறுவனங்கள் வெளியிலிருந்து கொண்டு வரும், உணவின் தரத்தை சோதித்த பின்பே, மாணவர்களுக்கு வழங்க வேண்டும்.

பள்ளி வளாகத்திற்கு அருகில் விற்கப்படும், சுகாதாரம் இல்லாத தின்பண்டங்களை உண்ணக் கூடாது என, மாணவர்களுக்கு, தினமும் அறிவுறுத்த வேண்டும்.

பள்ளிகளின் முன், சுகாதாரமற்ற உணவு விற்கும் கடைகளை அனுமதிக்க கூடாது; முற்றிலும் தடை செய்ய வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.

டிஜிட்டல் பண பரிவர்த்தனை: கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை.

டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் மாவட்ட கலெக்டர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவித்தால் ஒரு நபருக்கு ரூ.10 வீதம் ஊக்கத்தொகை வழங்கப்படும். 
டிஜிட்டல் பண பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் 10 சிறந்த கலெக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்படும் எனவும் நிதி அமைச்சகம் அறிவித்துள்ளது. மேலும் இத்தகைய நடவடிக்கையை ஊக்குவிக்கும் முதல் 50 பஞ்சாயத்துக்களுக்கும் விருது வழங்கப்படுகிறது. 

டெபிட்' கார்டில் மின் கட்டணம் ஜனவரியில் சேவை துவக்கம்

மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட்' கார்டு மூலம், பணப் பரிவர்த்தனையை துவக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 

தமிழ்நாடு மின் வாரியத்துக்கு, 2,800 பிரிவு அலுவலகங்கள் உள்ளன. இவை, மின் கட்டண மையங்களாகவும் செயல்படுகின்றன. அந்த மையங்களில், ரொக்க பணம், வங்கி காசோலை, வரைவோலை என, ஏதேனும் ஒன்றின் வாயிலாக, மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. 

அழைப்பு : 

மின் கட்டண மையம் தவிர்த்து, அரசு, 'இ - சேவை' மையம், தபால் நிலையம், சில வங்கிகள் மற்றும் மின் வாரிய இணையளத்திலும், மின் கட்டணத்தை செலுத்தலாம். மத்திய அரசு, செல்லாத நோட்டு அறிவிப்பை வெளியிட்டு, 'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனைக்கு மாற, மக்களுக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதையடுத்து, மின் கட்டண மையங்களில், 'டெபிட், கிரெடிட்' கார்டு வாயிலாக கட்டணம் வசூலிக்க, மின் வாரியம் முடிவு செய்துள்ளது. 

'பாயின்ட் ஆப் சேல்' : இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:பல வணிக நிறுவனங்கள், 'பாயின்ட் ஆப் சேல்' கருவியை வைத்து, அதில், டெபிட், கிரெடிட் கார்டுகளில் பணப் பரிவர்த்தனை செய்கின்றன. அந்த முறையை, மின் கட்டண மையங்களில் செயல்படுத்த உள்ளோம். ஆனால், மற்ற நிறுவனங்கள் போல, மின் வாரியத்தால் உடனடியாக செயல்படுத்த முடியாது. இதற்காக, வங்கிகளிடம் பேசி, தொழில்நுட்ப வசதிகள் குறித்து ஆராயப்பட்டு வருகிறது. ஜன., முதல், நடைமுறைக்கு வரும். இவ்வாறு அவர் கூறினார். 

CPS:18 ஆயிரம் கோடி ரூபாய் என்னாச்சு : அரசு ஊழியர் சங்கம் கேள்வி

அரசு ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்டசம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய் எந்த கணக்கில் உள்ளது, என தமிழ்நாடு அரசு 

ஊழியர் சங்கம்  கேள்வி எழுப்பியுள்ளது.

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க பொதுச்செயலர்கிருஷ்ணன், மாநில   துணைத்தலைவர் மெய்யப்பன்ஆகியோர் ராமநாதபுரத்தில் கூறியதாவது:  தலைமைசெயலகம், சட்டசபை உள்பட 143 அரசு துறைகள்தமிழகத்தில் உள்ளன. இவற்றில் 6,49,201 நிரந்தரம், 4,12, 214 தற்காலிகஊழியர்கள் பணியாற்றுகின்றனர். சட்டசபை தேர்தலில் அளித்த வாக்குறுதிபடிபுதியபங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும். அரசுத்துறைகளைதனியார்மயமாக்கும் போக்கை மத்திய, மாநில அரசுகள் கைவிட வேண்டும்.

கடந்த 2003 ஏப்., 1  முதல்ஊழியர்களிடமிருந்து பிடித்தம் செய்யப்பட்ட சம்பள பணம் 18 ஆயிரம் கோடி ரூபாய்எந்த கணக்கில் உள்ளது என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். எட்டாவது  ஊதியக்குழு அமைத்து மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான சம்பளம், இதர சலுகைகள் வழங்க வேண்டும். 15 ஆண்டுகளுக்கு மேலாக  அரசு துறைகளில் காலியாக உள்ள 3  லட்சம்  பணியிடங்களை நிரப்ப வேண்டும். சத்துணவு, அங்கன்வாடி, ஊராட்சி செயலர்கள், வருவாய்  கிராம உதவியாளர்கள், ஊரக  நுாலகர்களுக்கு  வறையறுக்கப்பட்ட ஊதியம் வழங்க வேண்டும். கம்ப்யூட்டர் ஆப்பரேட்டர்,  தட்டச்சர்,இளநிலைஉதவியாளர் உள்பட இதர தொகுப்பூதிய பணியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கவேண்டும்.

இவ்வாறு கூறினர்.

CPS NEWS:PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான UTI தகவல் அறியும் உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு

மத்திய அரசில் Cpsல் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியவிபரங்கள்

வழங்க மறுக்கும் நிதி 

மேலாளர்கள். PFRDAவால் நியமிக்கப்பட்ட ஓய்வூதிய நிதி மேலாளரான  UTI தகவல்   அறியும்  உரிமை சட்டத்தின் வரம்பிற்குள் வராது என்று RTI கடிதத்திற்கு பதில் வழங்க மறுப்பு.
பதில் வழங்க மறுக்கும் காரணம் அறிவீரோ?

திண்டுக்கல் எங்கெல்ஸ்.

DSE-CLEANLINESS NOON MEALS CENTRE INSTRUCTIONS...பள்ளிகளில் சத்துணவு மையங்கள் தூய்மையாக செயல்படுவது குறித்து -வழிகாட்டும் நெறிமுறைகள்.