Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 15 December 2016

தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு

 தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்த்தி முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார். மேலும் ஜூலை மாதம் முதல் கணக்கிட்டு அகவிலைப்படி வழங்கப்படும் என்று தெரிவித்தா

கல்வி துறைக்கு ஐ.இ.எஸ்., சேவையை உருவாக்கும் யோசனை நிராகரிப்பு.

தொடக்க கல்வி வினாத்தாள்களும் 'அவுட்'?, பள்ளிகளிலேயே தயாரிக்க உத்தரவு.

கலெக்டர் அலுவலகத்தில் பள்ளிக்கூடம் அமைத்த கலெக்டர்!

படிக்க பள்ளிக்கூடம் இல்லாமல் தவித்த மாணவர்களுக்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்திருக்கிறார் கோழிக்கோடு கலெக்டர் என்.பிரசாந்த்.
கேரள மாநிலம், கோழிக்கோடு கலெக்டராக இருப்பவர் என்.பிரசாந்த். இவர் அங்கு பல்வேறு மக்கள் நல பணிகள் செய்து பொதுமக்களின் இதயத்தில் இடம் பிடித்துள்ளார். அதேபோல், தற்போதும் ஒரு செயல் புரிந்து பாராட்டு பெற்றிருக்கிறார்.

சமீபத்தில், உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோழிக்கோட்டில் உள்ள மலப்புரம் தொடக்கப் பள்ளி மூடப்பட்டது. இதனால், மாணவர்கள் படிப்பதற்கு இடமின்றி தவித்து வந்தனர்.இதையடுத்து, மாவட்ட கலெக்டர் என்.பிரசாந்த், அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு ஏற்பாடு செய்தார். இந்த கூட்டத்தில், மூடப்பட்ட பள்ளி மாணவர்கள் படிப்பதற்காக கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுப்பது என முடிவு செய்யப்பட்டது. இதற்கு பள்ளி பாதுகாப்பு குழுவும் உத்தரவாதம் அளித்தது.

அதன்படி, கலெக்டர் அலுவலகத்தின் பெரும் பகுதியை மாணவர்கள் படிப்பதற்காக ஒதுக்கி கொடுத்துள்ளார். மேலும், அந்த பள்ளி ஆசிரியர்களும், பணியாளர்களும் தங்களுடைய பணியினை செய்வதற்கான இடத்தையும் ஒதுக்கி கொடுத்திருக்கிறார்.

இங்கு படிக்கும் மாணவர்களுக்கு கலெக்டரின் செலவில் உணவு வழங்கப்பட்டு வருகிறது. அரசிடமிருந்து எந்தவொருமானியமும் பெறாமல், பொதுமக்கள் வழங்கும் நன்கொடையை ஏற்று இத்திட்டத்தை செயல்படுத்தி வருகிறார் கலெக்டர் என்.பிரசாந்த்.ஏற்கனவே, பல்வேறு சமூக பணிகளின் மூலம் மக்கள் மனதை கவர்ந்த கலெக்டர் என்.பிரசாந்த்துக்கு, தற்போது மாணவர்களுக்கு கலெக்டர் அலுவலகத்தில் இடம் ஒதுக்கி கொடுத்ததற்காகவும் பாராட்டு குவிகிறது.

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகளுக்கு தடை: உச்ச நீதிமன்றம் தீர்ப்பு

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதித்து உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

மேலும், தற்போது இந்த இடங்களில் உள்ள மதுக்கடைகளின் உரிமமானது அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குப் பிறகு நீட்டிக்கப்படக் கூடாது என்று உச்ச நீதிமன்றம் தெளிவுபடுத்தியுள்ளது.

இந்தியா முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளை அகற்றக் கோரி, உச்ச நீதிமன்றத்தில் பல்வேறு தரப்பினரால் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. இந்த வழக்குகள் மீதான விசாரணையின்போது, நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்கு விலக்கு அளிக்க வேண்டும் என பஞ்சாப் அரசு சார்பில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்குகளை விசாரித்து வந்த உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை அளித்த தீர்ப்பில், நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கும், பார்களுக்கும் தடை விதித்தும், அங்குள்ள மதுக்கடைகளின் உரிமத்தை அடுத்த ஆண்டு மார்ச் 31-க்குப் பிறகு நீட்டிக்கக் கூடாது என்றும் தீர்ப்பளித்தது.

இந்த உத்தரவைப் பிறப்பித்த உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, பஞ்சாப் மாநில அரசின் நிலைப்பாட்டை கடுமையாக சாடியது.

"நீங்கள் (பஞ்சாப் அரசு) வழங்கியுள்ள உரிமங்களின் எண்ணிக்கையைப் பாருங்கள். மது விற்பனையின் பின்னணியில் மிகப் பெரிய சக்திகள் உள்ளன. அவர்கள் எல்லாருமே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்.

வரித்துறையினர், வரித்துறை அமைச்சர் மற்றும் மாநில அரசும் பணத்தை ஈட்டுவதில் மகிழ்ச்சியாக இருப்பதைக் காண முடிகிறது. இதனால் ஒருவர் உயிரிழந்தால் ரூ.1.5 லட்சம் இழப்பீடு வழங்குகிறீர்கள், அவ்வளவுதான். சமூகத்துக்கு நன்மை விளைவிப்பதற்கான நடவடிக்கைக்கு ஒத்துழைப்புத் தாருங்கள்" என்று உச்ச நீதிமன்ற அமர்வு அறிவுறுத்தியது.

மேலும், நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் இருப்பதால் ஆண்டுக்கு 1.5 லட்சம் மக்கள் உயிரிழக்கும் நிலையில், பொதுமக்களின் நலனுக்கு உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என்று மாநில அரசுகளை உச்ச நீதிமன்றம் கேட்டுக்கொண்டுள்ளது.

பல மாநிலங்களில் சாலையோரங்களில் மதுக்கடைகள் அகற்றப்படாததால் குடித்துவிட்டு வாகனம் ஓட்டுவதால் ஏற்படும் விபத்துகள் அதிகரிப்பது குறித்தும் நீதிபதிகள் கவலை தெரிவித்தனர்

அத்துடன், நெடுஞ்சாலைகளில் மதுக்கடைகள் அமைத்து மது விற்பதற்கு ஏற்கத்தக்க காரணம் எதையுமே மாநில அரசுகளால் சொல்ல முடியாது என்றும் அவர்கள் காட்டமாகத் தெரிவித்தனர்.

நாடு முழுவதும் தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள மதுக்கடைகளுக்கு தடை விதிக்கும் உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு, மது ஒழிப்பு ஆர்வலர்களின் முயற்சிகளுக்கு கிடைத்த வெற்றியாகவும் கருதப்படுகிறது.

வர்தா புயல்: 10 ஆயிரம் பேரை காப்பாற்றிய இஸ்ரோ செயற்கைக்கோள்

மும்பை: வர்தா புயல் சென்னையை சின்னாபின்னாமாக்குவதற்கு முன்னர், இஸ்ரோ செயற்கைகோள் அளித்த தகவல் மூலம் 10 ஆயிரம் பேர் காப்பாற்றப்பட்டுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான வர்தா புயல் கடந்த திங்கட்கிழமை சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சின்னாபின்னமாக்கி விட்டு கரையை கடந்தது. இந்த மாவட்டங்களில் பெரும்பாலான மரங்கள் வேறோடு சாய்ந்து விட்டன. மின்சார கம்பங்கள் சேதமடைந்துள்ளன. சில பகுதிகளுக்கு இன்னும் மின்சாரம் கிடைக்கவில்லை. தொடர்ந்து நிவாரண பணிகள் நடந்து வருகிறது.

மீட்பு:

இந்நிலையில், மழை வெள்ளத்திற்கு முன்னர் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் பத்திரமாக மீட்கப்பட்டனர். மக்கள் மீட்கப்பட்டதற்கு, இஸ்ரோ ஏவிய இன்சாட் 3 டிஆர் ஸ்காட்சேட் -1 செயற்கை கோள்கள் அளித்த தகவலே காரணம் என தெரிய வந்துள்ளது. இந்த செயற்கைகோள்கள், புயல் நகர்ந்து சென்ற திசை குறித்து தகவல் அளித்தது. இதன் அடிப்படையில் அதிகாரிகள், புயல் தாக்கக்கூடிய பகுதிகளில் வசித்த மக்களை மீட்டு பத்திரமான இடங்களில் தங்க வைக்கப்பட்டனர். ஆந்திர கடற்கரை பகுதியிலும் மக்கள் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். 

நவீன செயற்கைக்கோள்:

நவீன பருவநிலையை கணிக்கும் செயற்கை கோளான இன்சாட் 3 டிஆர், கடந்த செப்டம்பர் 8ம் தேதி ஏவப்பட்டது. ஸ்காட்சாட் -1 செயற்கைக் கோள் கடந்த செப்டம்பர் 26ம் தேதி ஏவப்பட்டது. வர்தா புயல் காரணமாக ஸ்ரீஹரிகோட்டா ஏவுதளம் சேதம் அடையும் என கூறப்பட்டது. ஆனால், இஸ்ரோ அதிகாரிகள் எடுத்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை காரணமாக சேதம் ஏற்படவில்லை. 

அண்டார்ட்டிகா கண்டத்தில் தோன்றியுள்ள மர்ம பள்ளம்!!!

உலகில் உள்ள ஏழு கண்டங்களில் அதிக அளவிலான பனியால் மூடப்பட்டுள்ள கண்டம் அண்டார்ட்டிகா. இக்கண்டத்தில் பிரமாண்டமான மர்ம பள்ளம் தோன்றியிருப்பது விஞ்ஞானிகளை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.

பள்ளத்திற்கான காரணம்:

அண்டார்ட்டிகா கிழக்கு கண்டத்தின் ராய் பவுதோயின் என்றழைக்கப்படும் பகுதியில் ஒரு பெரிய ஏரி காணப்பட்டது. அதில் தேங்கியிருந்த நீர், பனிபடலததிற்கு அடியில் தோன்றிய கால்வாய் மூலமாக வெளியேறியது தான் அப்பள்ளத்திற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

3 கி.மீ., விட்டம்

சுமார் 3 கி.மீ., விட்டம் கொண்டுள்ள இந்தப் பள்ளம் தோன்றுவதற்கு அப்பகுதியில் விழுந்த எரி நட்சத்திரம் காரணமாக இருக்கலாம் என்ற சந்தேகம் ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் எழுந்தது. ஆனால் ஏரியில் காணப்பட்ட பனிகட்டிகளும் பனிப்படலங்களும் உருகி அதிலிருந்த நீர் வெளியேறியது தான் காரணம் என்று தற்போது தெளிவாகி உள்ளது.

வெப்ப காற்று:

அண்டார்ட்டிகா கண்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பனிபடலம் மேற்கு பகுதியில் உள்ளதை காட்டிலும் வேகமாக உருகுகிறது. இதற்கு காரணமாக இருப்பது கிழக்கு அண்டார்ட்டிகா கண்டத்தில் வீசும் வெப்ப காற்று. அதே நேரம் கிழக்கு பகுதியில் தான் அதிக அளவு பனிப் பொழிவும் ஏற்படுவதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர். வெப்ப காற்று குளிர்ந்த காற்றை அதிக அளவு ஈரப்பதத்தை உறிஞ்சுவது தான் அதற்கு காரணம் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.

பள்ளி குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை மத்திய அரசுக்கு, சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு!!!

புதுடெல்லிநோபல் பரிசு பெற்ற கைலாஷ் சத்யார்த்தி நடத்தி வரும் தொண்டு நிறுவனம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல வழக்கு தொடரப்பட்டது. அதில், பள்ளி குழந்தைகளிடையே அதிகரித்து வரும் போதை பழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதுடன், அவர்களுக்கு மறுவாழ்வு அளிக்க மையங்கள் அமைக்கவும் மத்திய அரசை வலியுறுத்த வேண்டும் என்று குறிப்பிடப்பட்டு இருந்தது.இந்த வழக்கை தலைமை நீதிபதி 
டி.எஸ்.தாக்குர், நீதிபதி சந்திரசூட் ஆகியோர் விசாரித்தனர். அவர்கள் நேற்று தங்கள் உத்தரவில் கூறியதாவது:–18 வயதுக்கு உட்பட்ட குழந்தைகள், குறிப்பாக பள்ளி குழந்தைகளிடையே போதை பழக்கம் அதிகரித்து வருவது கவலை அளிக்கிறது. இந்த பழக்கத்தால் நாளடைவில் அவர்கள் போதைக்கு அடிமையாக நேரிடும் அபாயம் உள்ளது. எனவே மத்திய அரசு உடனடியாக நாடு முழுவதும் போதை பழக்கத்துக்கு அடிமையான குழந்தைகள் குறித்து ஆய்வு நடத்த வேண்டும்.குழந்தைகளிடையே அதிகரிக்கும் போதை பழக்கத்தை தடுக்க 6 மாதங்களில் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் பள்ளி பாடப்புத்தகங்களில் போதை பழக்கத்தால் ஏற்படும் தீமைகள் குறித்து இடம்பெற செய்ய வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

முதுநிலை மருத்துவ மாணவர் சேர்க்கை: ஜூன் 10–ந் தேதி பொது நுழைவுத்தேர்வு!!

புதுடெல்லி,நாடு முழுவதும் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., மற்றும் மருத்துவ பட்ட மேற்படிப்புகளுக்கு ‘என்.இ.இ.டி.’ என்னும் தேசிய தகுதி நுழைவுத்தேர்வு முறையை பின்பற்றுமாறு சுப்ரீம் கோர்ட்டு கடந்த ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது.அந்த வகையில் டி.எம்., மற்றும் எம்.சி.எச்.,

முதுநிலை மருத்துவ படிப்பு மாணவர் சேர்க்கைக்கு ஜூன் மாதம் 10–ந் தேதி தேசிய தகுதி நுழைவுத்தேர்வு நடத்தப்படும் என தேசிய தேர்வுகள் வாரியம் நேற்று அறிவித்தது.இது ஒற்றைச்சாளர முறையிலானது.இந்த தேர்வு கணினி அடிப்படையிலானது. இந்திய மருத்துவ கல்லூரிகளில் பின்பற்றப்பட்டு வருகிற எம்.டி., மற்றும் எம்.எஸ்., பாடத்திட்டங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது

நாடு முழுவதும் மாஞ்சா நூலுக்கு தடை தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு!!

புதுடெல்லி காற்றாடிகளை பறக்கவிடுவதற்கு நாடு முழுவதும் மாஞ்சா நூலை ஏராளமானோர் பயன்படுத்துகின்றனர். நைலான் அல்லது செயற்கை பருத்தியால் தயாரிக்கப்படும் இந்த நூலில் கண்ணாடியை இடித்து தூளாக்கி அதை பசையுடன் கலந்து காற்றாடிகளுக்கு பயன்படுத்துகின்றனர்.‘‘ஆபத்தான இந்த மாஞ்சா நூலில் தயாரித்த

காற்றாடிகளை பறக்கவிடும்போது அதன் நூல் கழுத்தில் சிக்கி பலியானோர் ஏராளம். இந்த நூலில் தயாரான காற்றாடிகள் பறவைகளின் உயிரையும் பறிக்கின்றன. எனவே மாஞ்சா நூலுக்கு தடை விதிக்கவேண்டும்’’ என்று கோரி விலங்குகள் நல அமைப்பான ‘‘பீட்டா’’ தேசிய பசுமை தீர்ப்பாயத்தில் கடந்த ஆகஸ்டு மாதம் மனுத்தாக்கல் செய்தது.இந்த மனு மீதான விசாரணை பசுமை தீர்ப்பாயத்தின் தலைவரும், நீதிபதியுமான சுவதந்தர் குமார் தலைமையிலான அமர்வு முன்பாக நேற்று நடந்தது.அப்போது மாஞ்சா நூல் கொள்முதல் செய்வது, இருப்பு வைப்பது, விற்பனை செய்வது, பயன்படுத்துவது ஆகியவற்றுக்கு இடைக்கால தடை விதித்து நீதிபதி உத்தரவிட்டார். இந்த வழக்கின் மீதான அடுத்த கட்ட விசாரணை வருகிற பிப்ரவரி மாதம் 1–ந் தேதி நடைபெறும் என்று குறிப்பிட்ட நீதிபதி அதுவரை நாடு முழுவதும் இந்த தடை நீடிக்கும் என்றார்.

வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதம் 21-ந்தேதி வரை பார்வையாளர்களுக்கு தடை!!!

வண்டலூர், வார்தா புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது. அங்கு ஏராளமான மரங்கள் சாய்ந்தன. இதனால் பார்வையாளர்களுக்கு 21-ந்தேதி வரை அனுமதி இல்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது.வண்டலூர் உயிரியல் பூங்காஇந்தியாவில் முதல் உயிரியல் பூங்கா 1855-ம் ஆண்டு சென்னை மூர்மார்க்கெட்டில்

தொடங்கப்பட்டது.சிறிய அளவிலான இந்த உயிரியல் பூங்கா வண்டலூர் காப்புக் காட்டிற்கு இடம் மாற்றம் செய்யப்பட்டு 1979-ம் ஆண்டு நவீன உயிரியல் பூங்காவாக உருவெடுத்தது.இந்த உயிரியல் பூங்காவை 1985-ம் ஆண்டு மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆர். திறந்து வைத்தார். இந்த பூங்கா 1,486 ஏக்கர் பரப்பளவு கொண்டது. இயற்கை வனத்தால் சூழப்பட்ட இந்த உயிரியல் பூங்காவில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட மரங்கள் இருந்தன. இங்கு பாலூட்டிகள், பறவைகள், ஊர்வன என மொத்தம் 2,500 விலங்குகள் உள்ளன.சிங்கம் சுதந்திரமாக நடமாடும் பகுதி, பாம்பு பண்ணை, வண்ணத்துப்பூச்சி பூங்கா போன்ற சிறப்பு அம்சங்களும் இந்த உயிரியல் பூங்காவில் உள்ளன. இங்கு ஒரு நாளில் சுமார் 10 ஆயிரம் பார்வையாளர்கள் வந்து செல்கின்றனர். விடுமுறை நாட்களில் அதை விட கூடுதலாக கூட்டம் இருக்கும்.வார்தா புயலால் பெரும் சேதம்கடந்த 12-ந்தேதி தாக்கிய ‘வார்தா’ வண்டலூர் உயிரியல் பூங்காவில் பெரும் சேதத்தை ஏற்படுத்திவிட்டது. உயிரியல் பூங்காவில் பார்வையாளர்கள் செல்ல கூடிய சுற்றுப்பாதையில் சாலையின் இருபுறங்களிலும் நின்றிருந்த மரங்கள், விலங்குகளின் கூண்டுகளை சுற்றியும், கூண்டுகளுக்கு உள்ளேயும் நின்றிருந்த மரங்கள் என பூங்காவின் அனைத்து பகுதிகளிலும் இருந்த ஏராளமான மரங்கள் வேரோடு சாய்ந்தன. தைலம் மரம், தூங்கு மூஞ்சு மரம் உள்ளிட்ட அரியவகை மரங்களும் புயல் காற்றில் அழிந்தன.பூங்காவுக்குள் நுழைய முடியாத வகையில் பூங்கா மொத்தமும் குப்பை மேடாகி போனது. நேற்று முன்தினம் (செவ்வாய்க்கிழமை) பூங்காவுக்கு வழக்கமான விடுமுறை நாள், இருப்பினும் பூங்கா ஊழியர்கள் நிலைமையை அறிய உள்ளே செல்ல முற்பட்டனர். ஆனால் அவர்களால் செல்ல முடியவில்லை.இதையடுத்து நேற்று பூங்கா அதிகாரிகள், ஊழியர்கள் உள்பட 375 பேர் பூங்காவை சீர்செய்யும் பணியில் இறங்கினர். மேலும் வெளிமாநிலத்தில் இருந்து மரம் வெட்டுவதில் திறமை வாய்ந்த 150 பேர் வரவழைக்கப்பட்டனர்.முதல் கட்டமாக பார்வையாளர்கள் செல்லக்கூடிய சுற்றுப்பாதை சாலையில் சரிந்து கிடக்கும் மரங்களை அப்புறப்படுத்தும் பணிகள் தொடங்கி உள்ளன.வரலாறு காணாத...இதுகுறித்து உயிரியல் பூங்காவின் அதிகாரிகள் கூறியதாவது:-வார்தா புயல் வண்டலூர் உயிரியல் பூங்காவில் வரலாறு காணாத சேதத்தை ஏற்படுத்தி விட்டது. இதற்கு முன் 1994-ம் ஆண்டு தாக்கிய புயல் உயிரியல் பூங்காவில் லேசான சேதத்தையே ஏற்படுத்தியது. ஆனால் தற்போதைய புயல் இங்கு மிக மோசமான விளைவுகளை ஏற்படுத்திவிட்டது. புயலில் சரிந்த மரங்கள் அனைத்தும் 40 ஆண்டுகள் பழமையானவை. இந்த உயிரியல் பூங்கா மீண்டும் இயற்கை சூழப்பட்ட வனப்பகுதியாக உருவெடுக்க ஓராண்டுக்கும் மேலாக ஆகலாம்.புயல் எச்சரிக்கையை தொடர்ந்து விலங்குகள் அனைத்தும் கூண்டுகளுக்குள் அடைக்கப்பட்டன. இதனால் விலங்குகளுக்கு உயிர் சேதம் ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. இருப்பினும் அதனை உறுதியாக கூறிவிட முடியாது. ஏனெனில் விலங்குகள் அடைக்கப்பட்டு உள்ள கூண்டுகளின் மீதும் மரங்கள் சாய்ந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்திய பிறகே பாதிப்பு குறித்து தெரியவரும். ஒரு முதலைக்கு மட்டும் தலையில் காயம் ஏற்பட்டிருப்பது தற்போது தெரியவந்திருக்கிறது. புயல் எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததால் அன்றைய தினம் பார்வையாளர்கள் யாரும் வரவில்லை. எனவே அசம்பாவிதங்கள் தவிர்க்கப்பட்டு இருக்கிறது.நவீன எந்திரங்களை கொண்டு மரங்கள் அப்புறப்படுத்தப்பட்டு வருகின்றன. 21-ந்தேதி வரை பூங்காவில் பார்வையாளர்களுக்கு அனுமதி கிடையாது. இது மேலும் நீட்டிக்கப்படலாம். பார்வையாளர்கள் சகஜமாக வந்து பார்வையிடும் வகையில் பூங்கா தயாராக 90-க்கும் நாட்களுக்கும் மேல் ஆகும்.ரூ.10 கோடி இழப்புமரங்கள் சாய்ந்து பாதை தடைப்பட்டதால் நேற்று முன்தினம் முழுவதும் விலங்குகளுக்கு உணவு வழங்கமுடியாமல் போய்விட்டது. இன்று(நேற்று) முதல் கட்டமாக பாதையில் இருந்த மரங்கள் அகற்றப்பட்டு விலங்குகளுக்கு உணவு வழங்கப்பட்டது.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மரங்கள் சாய்ந்திருக்கலாம் என தெரிகிறது. மரங்கள் சாய்ந்ததில் விலங்குகளின் கூண்டுகளை சுற்றி அமைக்கப்பட்டிருந்த கம்பி வேலிகள், விலங்குகளுக்கான உணவு தொட்டிகள், தண்ணீர் தொட்டிகள், விலங்குகள் இளைப்பாறும் நிழற்குடைகள், மற்றும் பார்வையாளர்களுக்கான நிழற்குடைகள், இருக்கைகள், குடிநீர் தொட்டிகள் உள்ளிட்டவை சேதமடைந்து உள்ளன.வன அதிகாரியின் அலுவலகம், தமிழ்நாடு அரசு உணவுவிடுதியின் கட்டிடம் உள்ளிட்டவற்றின் மீதும் மரங்கள் சாய்ந்து சேதமடைந்தன. இதன் அடிப்படையில் சுமார் ரூ.10 கோடிக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என தெரிகிறது.இவ்வாறு அதிகாரிகள் கூறினர்.முதல்-அமைச்சர் ஆய்வுஇந்த நிலையில், நேற்று மதியம் தமிழக முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு நேரில் சென்று பார்வையிட்டார். அவருடன் வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் உள்ளிட்ட அமைச்சர்கள் மற்றும் வனத்துறை அதிகாரிகளும் வந்திருந்தனர்.பூங்காவிற்குள் வாகனத்தில் சென்று பாதிப்புகளை ஆய்வு செய்த ஓ.பன்னீர்செல்வம் சேத விவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் மீட்புப் பணிகளை வேகமாக செய்து முடிக்கும்படி அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.வண்டலூர் உயிரியல் பூங்காவுக்கு எதிரே சர்க்கசில் இருந்து மீட்டுவரப்பட்ட விலங்குகள் அடைந்து வைக்கப்பட்டிருக்கும் மீட்பு மையம் உள்ளது. வார்தா புயலின் போது இங்கும் ஏராளமான மரங்கள் சாய்ந்து விழுந்தன. அவற்றை அப்புறப்படுத்தும் நடவடிக்கை துரிதமாக நடந்து வருகிறது.