Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 16 December 2016

DA ARREAR CALCULATION SHEET..

DA calculation sheet 

CLICK HERE TO DOWNLOAD - D.A ARREAR CALCULATION SHEET..

'EMIS' நம்பர் தயாரிப்பு ; கல்வித்துறை சுணக்கம்

100 சதவீத தேர்ச்சிக்காக மாணவர்களை தோல்விக்குள்ளாக்கும் அரசு, மாநகராட்சி பள்ளிகள்: ஆய்வில் தகவல்.

தில்லி அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில், 10 மற்றும் 12-ஆம் வகுப்பில் 100 சதவீத தேர்ச்சியை உறுதி செய்யும் வகையில், 9 மற்றும் 11-ஆம் வகுப்பில் கல்வியில் பின்தங்கும் மாணவர்கள் பள்ளி நிர்வாகத்தால் வேண்டுமென்ற தோல்வியடையச் செய்யப்படுவதாக ஆய்வுத் தகவலில் தெரியவந்துள்ளது.

மேலும், இந்தப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை ஆண்டுதோறும் குறைந்து வருவதாகவும் ஆய்வுத் தகவல் தெரிவிக்கிறது.

இதுகுறித்து, பிரஜா என்ற அறக்கட்டளை "தில்லி அரசுப் பள்ளிகளில் கல்வியின் நிலை தொடர்பான முதல் ஆண்டு அறிக்கை' என்ற ஆய்வுத் தகவலை வியாழக்கிழமை வெளியிட்டுள்ளது.

தில்லியில் உள்ள 1,009 அரசுப் பள்ளிகள், 1,709 மாநகராட்சிப் பள்ளிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஆய்வின் முடிவுகள் வருமாறு:
2013-14 காலகட்டத்தில் 17 சதவீத மாணவர்கள் 9-ஆம் வகுப்பில் இருந்து 10-ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெறவில்லை. இவ்வாறு தேர்ச்சி பெறாத மாணவர்களின் எண்ணிக்கை 2014-15 காலகட்டத்தில் 45 சதவீதமாகவும், 2015-16 காலகட்டத்தில் 50 சதவீதமாகவும் அதிகரித்துள்ளது.
அதேபோல, 2013-14 காலகட்டத்தில் 11-ஆம் வகுப்பு மாணவர்கள் 23 சதவீதம் பேர் 12-ஆம் வகுப்புக்கு தேர்ச்சி பெறவில்லை. அத்தகைய மாணவர்களின் எண்ணிக்கை 2014-15 காலகட்டத்தில் 35 சதவீதமாகவும், 2015-16 காலகட்டத்தில் 20 சதவீதமாகவும் உள்ளது.
இந்நிலையில், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் சேரும் மாணவர்களின் எண்ணிக்கை சரிவைச் சந்தித்துள்ளது. அதேவேளையில், பள்ளிகளில் இருந்து பாதியில் நிற்கும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
கடந்த 2013-14 காலகட்டத்தில் மாநகராட்சிப் பள்ளிகளில் 8,69,540 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர். இதுவே 2015-16 காலகட்டத்தில் 5 சதவீதம் குறைந்து 8,18,707 மாணவர்கள் சேர்க்கை பெற்றுள்ளனர்.
அரசுப் பள்ளிகளில் 2013-14 காலகட்டத்தில் 15,92,813 மாணவர்கள் சேர்க்கை பெற்றனர். இந்த எண்ணிக்கை 2015-16 காலகட்டத்தில் 6 சதவீதம் குறைந்து 14,92,132-ஆக உள்ளது.
1-ஆம் வகுப்பில் சேர்க்கை பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை 5 ஆண்டுகளில் 27 சதவீதம் அளவுக்கு குறைந்துள்ளது. 2010-11 காலகட்டத்தில் 1,69,215-ஆக இருந்த அந்த வகுப்புக்கான மாணவர் சேர்க்கை, 2015-16 காலகட்டத்தில் 1,23,325-ஆக சரிவைச் சந்தித்துள்ளது.
அதேபோல், 10-ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் கடந்த 5 ஆண்டுகளில் சுமார் 10 சதவீதம் அளவிற்கு குறைந்துள்ளது. 2011 மார்ச் மாதம் 99.09-ஆக இருந்த 10-ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம், 2016 மார்ச் மாதம் 89.25 சதவீதமாக குறைந்துள்ளது.
எனினும், 12-ஆம் வகுப்பு மாணவர் தேர்ச்சி விகிதம் அந்த 5 ஆண்டுகளில் அதிகரித்துள்ளது. 2011 மார்ச் மாதம் 87.54-ஆக இருந்த தேர்ச்சி விகிதம், 2016 மார்ச் மாதம் 88.91-ஆக அதிகரித்துள்ளது.
2016-ஆம் ஆண்டு 12-ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சியில், தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் 2 சதவீதம் அதிகமாக தேர்ச்சி விகிதம் வைத்துள்ளன.
அரசுப் பள்ளிகள் மீதான அதிருப்தி குறித்து 4,572 வீடுகளில் நடத்தப்பட்ட கணக்கெடுப்பின்படி, அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் தங்கள் குழந்தைகள் படித்தால் எதிர்காலத்தில் வேலை வாய்ப்புகள் குறைவாக இருக்கும் என்று பெற்றோர்கள் கருதுகின்றனர். இதுதவிர, அங்குள்ள கல்வி மற்றும் ஆசிரியர்களின் தரமும் இதில் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்று அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து, பிரஜா அறக்கட்டளையின் தலைவர் நிதாய் மேத்தா கூறியதாவது:
கல்வியில் பின்தங்கிய மாணவர்களை 10 மற்றும் 12-ஆம் வகுப்புக்கு தேர்ச்சி அடையச் செய்தால், அத்தகைய மாணவர்களால் ஒட்டுமொத்த தேர்ச்சி விகிதம் சரிவைச் சந்திக்கும் என்று பள்ளிகள் கருதுவதாலேயே இவ்வாறு நடக்கிறது. இதுபோன்ற நடவடிக்கைகள், அரசு மற்றும் மாநகராட்சிப் பள்ளிகளில் வழங்கப்படும் கல்வியின் தரத்தில் தீவிரமான சந்தேகத்தை ஏற்படுத்துகின்றன.
மாணவர்களின் கற்கும் திறனை அதிகரிப்பதிலும், ஆசிரியர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதிலும் தில்லி அரசு அக்கறை செலுத்த வேண்டும் என்று நிதாய் மேத்தா கூறினார்.

10-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறாதவர்கள்

2013-14    17%
2014-15    45%
 2015-16    50%

12-ம் வகுப்புக்கு தேர்ச்சி பெறாதவர்கள்
2013-14    23%
2014-15    35%
 2015-16    20%

இனி வாட்ஸ் ஆப்பில் அனுப்பிய மெசேஜை எடிட் செய்யலாம்...!

வாட்ஸ் ஆப்பில் ஒரு மெசேஜை அனுப்பி விட்டால் அதனை டெலிட் செய்யவோ, எடிட் செய்யவோ முடியாது. பெரிய குறையாகஇருந்த இதனை சரிசெய்யும் விதமாக வாட்ஸ் ஆப்பிற்கு அனுப்பிய மெசேஜை திருத்தம் செய்யும் புதியவசதியை அந்நிறுவனம் அப்டேட் செய்துள்ளது.

வாட்ஸ் ஆப் மெசேஜிங் அப்ளிகேஷனில் அனுப்பிய மெசேஜை திருத்தம் செய்யும் வசதி மற்றும் டெலிட் செய்யும் வசதி குறித்த சோதனை முயற்சி ஐபோன்களில் நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த முயற்சி வெற்றி பாதையில் பயணிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.இதன்மூலம் அனுப்பிய மெசேஜை எடிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் மாற்றப்பட்டுவிடும்.

டெலிட் செய்தால், ரிசீவரின் மொபைலிலும் அந்த மெசேஜ் டெலிட் ஆகிவிடும். விரைவில் வாட்ஸ்ஆப்பில் உள்ள ஆப்ஷன்ஸ்களில் டெலிட், ரிவோக் அல்லது எடிட் ஆப்ஷன்ஸ்களும் இணைந்து விடும்.

10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு-2016-17 கால அட்டவணை

 மார்ச் 2ல்  12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 2016 - 17ம் ஆண்டிற்கான 12ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் மார்ச் 2ம் தேதி தொடங்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதேபோல் மார்ச் 8 ல் 10ம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தொடங்கும் எனவும் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. 12ம் வகுப்பு தேர்வு காலை 10 மணிக்கு ஆரம்பித்து மதியம் 1.15 மணிக்கு முடிகிறது. இதேபோல் 10ம் வகுப்பு தேர்வு காலை 9.15 மணிக்கு ஆரம்பித்து பகல் 12 மணிக்கு முடிகிறது.

12ம் வகுப்பு தேர்வு தேதி

மார்ச் 2 முதல் தாள்

மார்ச் 3 இரண்டாம் தாள்

மார்ச் 6 ஆங்கிலம் முதல்தாள்

மார்ச் 7 ஆங்கிலம் இரண்டாம்தாள்

மார்ச் 10 வணிகம் / குடும்ப அறிவியல்/ புவியியல்

மார்ச் 13 வேதியியல் / கணக்கு பதிவியல்

மார்ச் 17 இந்திய கலாச்சாரம்/ கணினி அறிவியல் / உயிரி வேதியியல்/ சிறப்பு தமிழ் / சிறப்பு ஆங்கிலம்

மார்ச் 21 இயற்பியல் / பொருளியல்

மார்ச் 24 அரசியல் அறிவியல்/ நர்சிங்/ புள்ளியியல்

மார்ச் 27 கணிதம்/ விலங்கியல் / நுண் உயிரியல் ஊட்டசத்து / உணவியல்

மார்ச் 31 உயிரியல் / வணிக கணிதம் / வரலாறு / தாவரவியல் 

10ம் வகுப்பு தேர்வு தேதி

மார்ச் 8 தமிழ் முதல்தாள்

மார்ச் 9 தமிழ் இரண்டாம்தாள்

மார்ச் 14 ஆங்கிலம் முதல்தாள்

மார்ச் 16 ஆங்கிலம் இரண்டாம்தாள்

மார்ச் 20 கணிதம்

மார்ச் 23 அறிவியல்

மார்ச் 28 சமூகஅறிவியல்

கணினி ஆசிரியர்களுக்காண பொதுக் கூட்டம்

கணினி ஆசிரியர் கவனத்திற்க்கு 18.12.2016 காலை 10மணி அளவில் பெரம்பலூர் J.K மஹாலில் கணினி ஆசிரியர்களுக்காண பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது அனைவரும் தவறாமல் கலந்து கொள்ளவேணடும்.

கணினி ஆசிரியர்களை அன்புடன் அழைக்கிறோம்:

கணினி இன்றியமையாத தேவை ஆகிவிட்ட நிலையில் கணினி அறிவியல் பாடம் அனைத்து அரசு பள்ளிகளிலும் தொடங்கப்பட வேண்டு்ம்.கணினி அறிவியல் பாடத்தில் ஆசிரியர் பட்டம் பெற்று வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் ஆயிரக்கணக்கான ஆசிரியர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கப்பட வேண்டு்ம்.

வேலையின்றி காத்திருக்கும் கணினி ஆசிரியர்களே தங்களின் நிலை அறிந்து

நாள்:18.12.2016
காலை :9.36மணி
இடம்:J.K மஹால்
புதிய போருந்து நிலையம் அருகில்
பெரம்பலூர் .

பொதுக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,
பி.எட் சான்றிதழ் நகல்,
வேலைவாய்ப்பு அட்டை நகல்,

இவற்றுடன் தங்களின்
சுயவிபரம்  இணைத்து கொண்டுவரவும்.

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான: வேண்டுகோள்:
தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.

வெ.குமரேசன்
9626545446
மாநிலப் பொதுச் செயலாளர்.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்.

PRESS RELEASE COPY :தமிழக அரசு ஊழியர்களுக்கு 7% அகவிலைப்படி உயர்வு ஜூலை மாதம் முதல் முன்தேதியிட்டு வழங்கப்படும் 125% to 132% முதலமைச்சர் அறிவிப்பு

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனையை ஊக்குவிக்க ரூ.1 கோடி பரிசுத் திட்டம் - மத்திய அரசு அறிவிப்பு

டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்யும் நுகர்வோர், வணிகர்களுக்கு நிதி ஆயோக் பரிசுத் திட்டங்களை அறிவித்துள்ளது.

டெல்லி: டிஜிட்டல் பண பரிவர்த்தனை செய்யும் வணிகர்கள், நுகர்வோர்களை ஊக்குவிக்கும் விதமாக ஏப்ரல் 14ம் தேதி ரூ.1 கோடி பரிசு அறிவிக்கப்படும் என நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார்.

புழக்கத்தில் இருந்த பழைய 500, 1,000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த மாதம் 8-ஆம் தேதி அறிவித்தது. அதையடுத்து, ரொக்கமில்லா பணப்பரிவர்த்தனைகளைக் குறைத்து, கிரெடிட், டெபிட் கார்டு (டிஜிட்டல்) பணப்பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்கு மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது.

அதன்படி மின்னணு பணப்பரிமாற்றத்தை ஊக்கிவிக்க நுகர்வோர்களுக்கு "லக்கி கிரஹக் யோஜனா திட்டம்" மற்றும் வணிகர்களுக்கு "டிஜி தன் வியாபார் யோஜனா" திட்டம் ஆகிய ஆகிய பரிசளிப்புத் திட்டங்களை நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் அறிவித்துள்ளார். இந்தத் திட்டத்தின் கீழ் சுமார் ரூ.340 கோடிக்கு பரிசுத் திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து நிதி ஆயோக் தலைமைச் செயலதிகாரி அமிதாப் காந்த் கூறுகையில், லக்கி கிரஹக் யோஜனா திட்டத்தின் கீழ், வரும் கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14ம் தேதி வரை தினமும் 15 ஆயிரம் பேருக்கு தலா ரூ.1000 பரிசு வழங்கப்பட உள்ளது. மேலும், வாரந்தோறும் 7 ஆயிரம் பேருக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.1 லட்சம் வரை பரிசு வழங்கப்படும். பின்னர் 2017 ஏப்ரல் 14ம் தேதி மெகா பரிசு அறிவிக்கப்படும். முதல் பரிசாக ரூ.1 கோடியும், இரண்டாம் பரிசாக ரூ.50 லட்சமும், 3வது பரிசாக ரூ.25 லட்சமும் அறிவிக்கப்படும்.

டிஜி தன் வியாபார் யோஜனா திட்டத்தின் கீழ், கிறிஸ்துமஸ் முதல் 2017 ஏப்ரல் 14 வரை வாரந்தோறும் 7 ஆயிரம் வணிகர்களுக்கு பரிசு வழங்கப்பட உள்ளது. அதிகபட்சமாக ரூ.50 ஆயிரம் பரிசு வழங்கப்படும். ஏப்ரல் 14ம் தேதிக்கு நுகர்வோர் மற்றும் வணிகர்களுக்கு மெகா பரிசு வழங்கப்படும் என தெரிவித்தார்.

மேலும் இந்த இரண்டு திட்டங்களும் ரூ.50 முதல் ரூ.3,000 வரையிலான டிஜிட்டல் பரிவர்த்தனைகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது, "பாயிண்ட் ஆஃப் சேல்' எனப்படும் ஸ்வைப்பிங் இயந்திரங்கள் மூலம் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளும் வியாபாரிகளும் போட்டிக்குத் தகுதியானவர்கள் ஆவர். ரூபே, யுஎஸ்எஸ்டி, ஏஇபிஎஸ், யுபிஐ போன்ற அனைத்து வகையான மின்னணு பரிவர்த்தனைகளும் இந்தப் போட்டிக்குத் தகுதியானவை என அவர் கூறியுள்ளார்.

அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு: செய்தி

அரசு ஊழியர்களுக்கு 7 சதவீதம் அகவிலைப்படி உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூலை 1 ஆம் தேதி முதல் முன்தேதியிட்டு இந்த அகவிலைப்படி உயர்வு நடைமுறைப்படுத்தப்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார். 
இதுகுறித்து, முதல்வர் வியாழக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

அரசு அலுவலர்கள், ஆசிரியர்களின் நலனைக் கருத்தில் கொண்டு அவர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படியை ஜூலை 1 ஆம் தேதி முதல் உயர்த்தி அளிக்க உத்தரவிட்டுள்ளேன். திருத்திய ஊதியம் பெற்றுள்ள மத்திய அரசு அலுவலர்களுக்கு ஜூலை 1 ஆம் தேதி முதல் 2 சதவீதம் எனவும், திருத்திய ஊதியம் பெறாத மத்திய அரசு அலுவலர்களுக்கு 7 சதவீதம் எனவும் அகவிலைப்படியை மத்திய அரசு உயர்த்தியுள்ளது.

யார் யாருக்கு பொருந்தும்? மத்திய அரசைத் தொடர்ந்து, தமிழக அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படும் அகவிலைப்படி ஜூலை 1 ஆம் தேதி முதல் 7 சதவீதம் உயர்த்தி அளிக்கப்படும். இதன்படி அகவிலைப்படி 125 சதவீதத்தில் இருந்து 132 சதவீதமாக உயரும்.

அகவிலைப்படி உயர்வு உள்ளாட்சி நிறுவனங்கள், அரசு மானியம் பெறும் கல்வி நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்கள், ஆசிரியர்கள், வருவாய்த் துறையில் பணிபுரியும் கிராம உதவியாளர்கள், அங்கன்வாடி-சத்துணவு ஊழியர்கள், ஊராட்சி செயலாளர்கள், வழக்கமாக அகவிலைப்படி அளிக்கப்படும் அனைத்து அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கும் இந்த அறிவிப்பு பொருந்தும்.

எவ்வளவு கிடைக்கும்? அகவிலைப்படி உயர்வால் அரசு ஊழியர்களுக்கு ரூ.427 முதல் ரூ.5,390 வரையில் ஊதிய உயர்வும், ஓய்வூதியதாரர்கள்-குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு ரூ.214 முதல் ரூ.2,695 வரையில் ஓய்வூதிய உயர்வும் கிடைக்கும். ஜூலை 1 முதல் நவம்பர் 30 வரையிலான காலத்துக்கான அகவிலைப்படி உயர்வு அவரவர் வங்கிக் கணக்கில் மொத்தமாகச் செலுத்தப்படும். இந்த மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு மாத ஊதியத்துடன் சேர்த்து அளிக்கப்படும்.

18 லட்சம் பேர் பயன்: அகவிலைப்படி உயர்வால் சுமார் 18 லட்சம் அரசு அலுவலர்கள், ஓய்வூதியதாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள் பயன் பெறுவர். அகவிலைப்படி உயர்வால் அரசுக்கு ஆண்டுக்கு சுமார் ரூ.1,833.33 கோடி கூடுதல் செலவு ஏற்படும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

TNPSC - VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

TNPSC COUNSELLING FOR THE POST OF VAO - 2014-2015 | TNPSC  VAO பணிக்கான கலந்தாய்வு அறிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து  டிஎன்பிஎஸ்சி செயலாளர் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: 
கிராம நிர்வாக அலுவலர் 2014-2015 பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்யும் பொருட்டு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அறிவிக்கை எண்.19/2015, நாள் 12.11.2015 வாயிலாக விண்ணப்பங்களைக் கோரியிருந்தது. இப்பதவிகளுக்கான எழுத்துத் தேர்வு கடந்த 28.02.2016 முற்பகல் அன்று நடைபெற்றது. அதற்கான தெரிவு முடிவுகள் 01.07.2016 அன்று வெளியிடப்பட்டது. இத்தெரிவிற்கான சான்றிதழ் சரிபார்ப்பு 01.08.2016 முதல் 08.08.2016 வரை நடைபெற்றது. இத்தெரிவிற்கான கலந்தாய்வு சென்னை–600003, பிரேசர் பாலச்சாலையில் (பிராட்வே பேருந்து நிலையம் மற்றும் கோட்டை ரயில் நிலையம் அருகில்) உள்ள தேர்வாணைய அலுவலகத்தில் 19.12.2016 முதல் 23.12.2016 நடைபெறுகிறது. கலந்தாய்விற்கு அழைக்கப்படும் விண்ணப்பதாரர்களின் பதிவெண் பட்டியல் மற்றும் தரவரிசையின்படி கால அட்டவணைப் பட்டியல் தேர்வாணைய இணையத் தளத்தில் (www.tnpsc.gov.in) வெளியிடப்பட்டுள்ளது. கலந்தாய்விற்கு அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்களுக்கு தேதி, நேரம் குறிப்பிடப்பட்டு அழைப்பாணை விரைவஞ்சல் மூலம் தனியாக அனுப்பப்பட்டுள்ளது. இந்த அழைப்பாணையினை தேர்வாணைய இணையத் தளத்திலிருந்தும் (www.tnpsc.gov.in) பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும் இவ்விவரங்கள் குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வாயிலாகவும் விண்ணப்பதாரர்களுக்குத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனவே, நடைபெற உள்ள கலந்தாய்வில் கலந்து கொள்வதற்காக அழைக்கப்பட்ட விண்ணப்பதாரர்கள் அவர்கள் பெற்றுள்ள மதிப்பெண்கள், தரவரிசை, விண்ணப்பத்தில் அளித்துள்ள தகவல்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் நிலவும் காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப அனுமதிக்கப்படுவர். எனவே, அழைக்கப்படும் அனைவருக்கும் பணி நியமனம் வழங்கப்படும் என்பதற்கான உறுதி கூற இயலாது. விண்ணப்பதாரர்கள் கலந்தாய்விற்கு வரத் தவறினால் அவர்களுக்கு மறுவாய்ப்புஅளிக்கப்படமாட்டாது எனவும் தெரிவிக்கப்படுகிறது.

'NEET' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.

2017-ம் ஆண்டு ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெற உள்ள மருத்துவப் படிப்புகளுக்கான 'நீட்' நுழைவுத் தேர்வுக்கான பாடத்திட்டத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு:
1956 ஆம் ஆண்டு இந்திய மருத்துவ சபை சட்டம் மற்றும் 2016ம் ஆண்ட திருத்தி அமைக்கப்பட்ட சட்டம் 10வது பிரிவின்படி டி.எம் / எம்.சிஹெச் சேர்க்கைக்கான தேசியதகுதி மற்றும் நுழைவு தேர்வினை தேசிய தேர்வுகள் வாரியம் நடத்த உள்ளது. பாடத்திட்டம் பல்வேறு நகரங்களில் இந்த தேர்வு 2017 ஜூன் மாதம் 10-ம் தேதி நடைபெறும்.

இந்தத் தேர்வு கணினி அடிப்படையிலான தேர்வாக நடத்தப்படும். இந்தத் தேர்வில் இந்திய மருத்துவக் கல்லூரிகளில் பின்பற்றப்படும் இந்திய மருத்துவ சபையால் நிர்ணயிக்கப்பட்ட, மத்திய அரசின் சுகாதார குடும்ப நலத்துறை அமைச்சகத்தின் முன் அனுமதியைப் பெற்ற எம்.டி / எம்.எஸ் பாடத்திட்டத்திலிருந்து 200 பல்விடைத் தேர்வு வினாக்கள் இடம்பெறும்.இந்தத் தேர்வு டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகளுக்கான ஒற்றைச் சாளர நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் ஆண்டு மாணவர் சேர்க்கை பருவத்திலிருந்து இந்தத் தேர்வு மட்டுமே இந்த வகுப்புகளுக்கு நடத்தப்படும்.1956 இந்திய மருத்துவ சபை சட்டத்தின்படி மாநில அளவிலும் அல்லது நிறுவனங்கள் அளவிலோ எந்த ஒரு பல்கலைக்கழகம் / மருத்துவக் கல்லூரி / நிறுவனம் நடத்தும் நுழைவுத் தேர்வு செல்லுபடி ஆகாது.

'நீட்' தேர்வின் முக்கியத்துவம்:

NEET-SS 2017 என்பது உயர்நிலை சிறப்பு பாடங்களுக்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு ஆகும். 2017-ம் கல்வி ஆண்டுக்கான இந்தத் தேர்வில் நாடெங்கும் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள், நிறுவனங்கள் மற்றும் பல்கலைக்கழகங்கள், நிகர்நிலைப் பல்கலைக்கழகங்கள் ஆகியவற்றில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள், ஆயுதப்படைகள் மருத்துவ சேவைகள் நிறுவனங்களில் உள்ள டி.எம் / எம்.சிஹெச் / பி.டி.சி.சி வகுப்புகள் ஆகியவை அடங்கி இருக்கும்.

'நீட்' தேர்வின் கீழ் வராத நிறுவனங்கள்:

அகில இந்திய மருத்துவ விஞ்ஞான நிறுவனம் புதுடெல்லி, சண்டிகர் பட்ட மேற்படிப்பு மருத்து கல்வி ஆராய்ச்சி நிறுவனம், திருவனந்தபுரம் ஸ்ரீசித்ரா, பெங்களுரு நிம்ஹான்ஸ், புதுச்சேரி ஜிப்மர் ஆகிய நிறுவனங்கள் NEET-SS –ன் கீழ் வராது.தேசிய தேர்வுகள் வாரியம் மத்திய அரசால் 1982-ம் ஆண்டு உருவாக்கப்பட்ட சுய ஆட்சி அமைப்பு ஆகும். அகில இந்திய அடிப்படையில் பட்ட மேற்படிப்பு தேர்வுகளை நடத்துவது அதன் முக்கிய நோக்கமாகும்.தேசிய தேர்வுகள் வாரியம் 2013, 2017 ஆண்டுகளில் எம்.டி/எம்.எஸ்/ பட்ட மேற்படிப்பு பட்டயம் ஆகியவற்றுக்கு NEET-PG தேர்வுகளையும் 2017-ம் ஆண்டு NEET-MDS தேர்வுகளையும், 2014 முதல் 2016 வரையான காலத்தில் அகில இந்திய பட்ட மேற்படிப்பு மருத்துவ நுழைவுத் தேர்வுகளையும் நடத்தி உள்ளது.

இவ்வாறு செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DA:7% அகவிலைப்படி உயர்வு செய்திகுறிப்பு.