Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 17 December 2016

ரூ. 2 லட்சத்துக்கு மேல் டெபாசிட்: பான் எண் இல்லையெனில் வங்கிக் கணக்கு முடக்கம்..

வருமான வரி நிரந்தரக் கணக்கு எண்ணை (பான்) சமர்ப்பிக்காமல் ரூ.2 லட்சத்துக்கு மேல் டெபாசிட் செய்தால்,சம்பந்தப்பட்ட வங்கிக் கணக்கு முடக்கப்படும் என்று ரிசர்வ் வங்கி எச்சரித்துள்ளது.வெவ்வேறு உத்திகளில் கருப்புப் பணத்தை மாற்ற முயலுபவர்களுக்கு புதிய கடிவாளமிடும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
அதிக மதிப்புடைய ரூபாய் நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டதைத் தொடர்ந்து, வங்கிப் பரிவர்த்தனைகளில் பல்வேறு கட்டுப்பாடுகளை மத்திய அரசு விதித்தது.இருந்தபோதிலும், அதையும் மீறி பல்வேறு நூதன வழிகளில் கருப்புப் பணத்தை மாற்ற சிலர் முயன்று வருகின்றனர். ஏழை மக்களின் வங்கிக் கணக்குகளில் கருப்புப் பணத்தை டெபாசிட் செய்து மாற்றுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.இதையடுத்து, இந்த நடவடிக்கைகளைத் தடுக்கும் பொருட்டு, ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்வோர்களுக்கு புதிய நிபந்தனைகளை ரிசர்வ் வங்கி விதித்துள்ளது. அதாவது பான் எண்ணை சமர்ப்பிக்காமல் ரூ.2 லட்சத்துக்கும் அதிகமாக டெபாசிட் செய்யப்படும் வங்கிக் கணக்குகளில் மொத்தமாக ரூ.5 லட்சத்துக்கும் மேல் பண இருப்பு இருக்குமானால், அதனை திருப்பி எடுக்கமுடியாத வகையில் கணக்கை முடக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

வருமான வரி செலுத்துவதற்கான படிவம் 60-ஐ சமர்ப்பித்து உரிய வரி பிடித்தம் செய்யப்பட்ட பிறகே அந்த வங்கிக் கணக்கு மீண்டும் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.இதன் மூலம், பிறரது பணத்தை தங்களது வங்கிக் கணக்குகளில் செலுத்த அனுமதிப்பவர்கள், வருமான வரி செலுத்த வேண்டிய நிர்பந்தத்துக்குத் தள்ளப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கணக்கில் காட்டாத பணம்

அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதிக்குள் கணக்கில் வராத பணத்தை வங்கிகளில் டெபாசிட் செய்பவர்கள், வரி மற்றும் அபராதத் தொகையாக 50 சதவீதத்தை மட்டும் செலுத்துவதற்கான வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. கணக்கில் வராத பணம் குறித்த தகவலை தாமாக முன்வந்து தெரிவித்து இந்தத் திட்டத்தின் கீழ்பயன்பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் வசூலாகும் கூடுதல் வரி மற்றும் அபராதத் தொகையைஏழைகள் நலத் திட்டங்களுக்குப் பயன்படுத்தப் போவதாக மத்திய அரசு ஏற்கெனவே அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் தீர்வு

நாட்டில் நிலவும் பணத் தட்டுப்பாட்டுப் பிரச்னைக்கு அடுத்த மாதத்துக்குள் தீர்வு கிடைக்கும் என்று மத்திய கொள்கைக் குழு (நீதி ஆயோக்) தலைவர் அமிதாப் காந்த் தெரிவித்துள்ளார்.மின்னணுப் பரிவர்த்தனைகளை ஊக்குவிப்பதற்காக பல்வேறுநடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது என்றுதெரிவித்த அவர், 80 சதவீத பணப் பரிவர்த்தனைகளை மின்னணு சாதனங்கள் வாயிலாக மேற்கொள்வதை உறுதிப்படுத்துவற்கு தீவிர கவனம் செலுத்தப்பட்டு வருவதாகக் கூறினார்.மின்னஞ்சல் மூலம் தகவல் தரலாம்கருப்புப் பணம் பதுக்கியிருப்பவர்கள் பற்றி பொதுமக்கள் துப்புக் கொடுப்பதற்காக பிரத்யேக மின்னஞ்சல் முகவரியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

இதுகுறித்து மத்திய வருவாய்த் துறைச் செயலர் ஹஸ்முக்அதியா, தில்லியில் செய்தியாளர்களிடம் வெள்ளிக்கிழமை கூறியதாவது:கருப்புப் பணத்தைப் பதுக்கி வைத்திருப்பவர்கள் குறித்து மக்கள் தகவல் அளித்தால், அதன்பேரில் சோதனை நடத்தப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்படும்.blackmoneyinfo@incometax.gov.inஎன்ற மின்னஞ்சல் முகவரிக்கு கருப்புப் பணப் பதுக்கல் தொடர்பான தகவல்களை அனுப்பலாம் என்றார் அவர்.கருப்புப் பணம் குறித்து அதிகாரப்பூர்வ மதிப்பீடு இல்லைநாட்டில் உள்ள கருப்புப் பணம் குறித்து அரசிடம் அதிகாரப்பூர்வமான மதிப்பீடு இல்லை என்று மத்திய நிதியமைச்சர் அருண் ஜேட்லி தெரிவித்தார்.மக்களவையில் இதுதொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அருண் ஜேட்லி எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில் கூறப்பட்டுள்ளதாவது: உயர் மதிப்பிலான பழைய ரூபாய் நோட்டுகள் செல்லாது என்ற அறிவிப்புக்கு முன்னரும், அதற்குப் பின்னரும் நாட்டில் எவ்வளவு கருப்புப் பணம்இருக்கிறது என்பது குறித்த அதிகாரப்பூர்வமான மதிப்பீடு ஏதுமில்லை. கடந்த 2014-ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் 2016-ஆம் ஆண்டு நவம்பர் வரையிலான காலகட்டத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் மேற்கொண்ட சோதனைகளின்போது, கணக்கில் காட்டப்படாத வருமானமாக ரூ.31 ஆயிரத்து 277 கோடி இருப்பது சம்பந்தப்பட்டவர்களால் ஒப்புக்கொள்ளப்பட்டிருக்கிறது.

"என் சம்பள பணத்தையே என்னால் எடுக்க முடியவில்லை" - நீதிபதி வேதனை

பள்ளிகளில் மனித உரிமைக் கல்வி அவசியம்: ஆணைய உறுப்பினர் வலியுறுத்தல்

நாடு முழுவதும் பள்ளிகள் அளவிலேயே மனித உரிமைக் கல்வியை அறிமுகம் செய்ய வேண்டும் என்று தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர் நீதிபதி டி.முருகேசன் தெரிவித்தார்.


புதுச்சேரி மாநிலத்தில் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினர் மீதான மனித உரிமை மீறல்கள், பிரச்னைகள் தொடர்பான புகார்கள் குறித்து தேசிய மனித உரிமைகள் ஆணையம் சார்பில் நேரடி விசாரணை தலைமைச் செயலகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. தேசிய மனித உரிமைகள் ஆணையத் தலைவரும், ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியுமான எச்.எல்.தத்து தலைமை தாங்கினார். உறுப்பினர்கள் சிரியாக் ஜோசப், டி.முருகேசன், எஸ்.சி.சின்ஹா உள்ளிட்டோர் கொண்ட குழு ஆணையத்திடம் அளிக்கப்பட்ட புகார்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டது.

இதில் தலைமைச் செயலர் மனோஜ் பரிதா, டிஜிபி சுனில்குமார் கெளதம், அரசுச் செயலாளர்கள், காவல் துறை உயரதிகாரிகள், பல்வேறு துறை இயக்குநர்கள், தொண்டு நிறுவன பிரதிநிதிகள், மனித உரிமை மீறல் சம்பவங்களால் பாதிக்கப்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர், ஆணைய உறுப்பினர் நீதிபதி முருகேசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 17 மனித உரிமை மீறல் புகார்கள் பெறப்பட்டன. இவற்றில் கடந்த மாதம் மட்டுமே 15 புகார்கள் வந்துள்ளன. புகார்கள் தொடர்பாக பாதிக்கப்பட்டோர், எதிர்தரப்பினரிடம் விசாரணை செய்துள்ளோம். இதன் மீது பெறப்படும் அறிக்கையின் அடிப்படையில் இறுதி முடிவு எடுக்கப்படும்.

புதுச்சேரியில் ஆணையம் வேண்டும்: அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் தனியாக மனித உரிமை ஆணையங்கள் இருக்க வேண்டும் என்பது ஆணையச் சட்டத்திலேயே உள்ளது. புதுச்சேரியில் தற்போது மனித உரிமைக் குழு தான் உள்ளது. அதன் செயல்பாடும் சரிவர இல்லை எனத் தெரிகிறது. புதுச்சேரியிலும் முழு மனித உரிமை ஆணையத்தை அமைக்க வேண்டும் என பரிந்துரைத்துள்ளோம்.

கூடுதல் அதிகாரம் தேவை: தேசிய, மாநில மனித உரிமை ஆணையங்களின் உத்தரவுகள் பெரும்பாலும் சட்ட ரீதியில் கட்டுப்படுத்தப்படுபவையாக இல்லாத நிலை உள்ளது. எனவே, ஆணையத்துக்கு கூடுதல் அதிகாரங்களை மத்திய அரசு தர வேண்டும். மனித உரிமை மீறல் சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பள்ளிக் கல்வி அளவிலேயே மனித உரிமைகள் தொடர்பான பாடப்பிரிவை இடம் பெறச் செய்ய வேண்டும். ஒருவருக்கு தனக்கான உரிமைகள், பாதிக்கப்பட்டால் எவ்வாறு அணுகுவது என்பது தொடர்பாக விழிப்புணர்வு தேவைப்படுகிறது. மாணவ, மாணவியருக்கு தவறாமல் மனித உரிமைக் கல்வியை கற்பிக்க வேண்டும்.

மனித உரிமை ஆர்வலர்கள் தாக்கப்படும் சம்பவங்களை ஆணையம் தீவிரமாக கருதுகிறது. அவர்களுக்கான பாதுகாப்பை உறுதி செய்ய அரசிடம் வலியுறுத்தி வருகிறோம்.

புதுச்சேரியில் சாதி மோதல்களால் பாதிக்கப்பட்டோருக்கு ரூ.18 லட்சம் இழப்பீடு அரசு சார்பில் தரப்பட்டுள்ளது. இத்தொகை போதுமானதில்லை என கோரிக்கை வந்துள்ளது. அதை பரிசீலிக்குமாறு அரசிடம் தெரிவித்துள்ளோம். வழக்கம் போல காவல் துறை மீது தான் அதிக மனித உரிமை மீறல் புகார்கள் வந்துள்ளன. ஒரு நபரை 5 காவல் துறையினர் தாக்கியதாகப் புகார் வந்துள்ளது. அதுதொடர்பாகவும் தீவிரமாக விசாரித்துள்ளோம் என்றார் முருகேசன்.

ஆணையச் செயலர் சத்திய நாராயண மொகந்தி, செயலர் சிகே.சதுர்வேதி, இணைச் செயலர் எஸ்.கோச்சர், டிஐஜி சாயா சர்மா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

SELECTION GRADE - நிதிஉதவி பள்ளியில் பணியாற்றிய பணிக்காலத்தையும் அரசு பள்ளியில் பணியாற்றிய காலத்தையும் சேர்த்து "தேர்வுநிலை" பெறலாம் - இயக்குனர் செயல்முறைகள் (07/07/1979)

BSNL-லில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு.

ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்களைக் கவரும் வகையில் ரூ.99க்கு அளவில்லா இலவச அழைப்பு மற்றும் இலவச இணைய வசதிகளை பொதுத் துறை நிறுவனமான பிஎஸ்என்எல் நிறுவனம் அறிவித்துள்ளது.

ரிலையன்ஸ் ஜியோவுக்கு கடும் சவாலை ஏற்படுத்தும் வகையில் பிஎஸ்என்எல்- இந்த போட்டியில் குதித்துள்ளது.

அதாவது, பிஎஸ்என்எல் ப்ரீபெய்ட் வாடிக்கையாளர்கள், வெறும் 99 ரூபாய் ரீசார்ஜில் அளவில்லா இலவச அழைப்புகளையும், 300 எம்பி டேடாவும் பெறலாம்.  இதன் கால அளவு 28 நாட்கள் ஆகும்.

இந்த சலுகை கொல்கத்தா, மேற்கு வங்கம், பிகார் உள்ளிட்ட வட மாநிலங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும், பிற மாநிலங்களில் உள்ளவர்களுக்கு இதே சலுகை ரூ.119 முதல் 149 வரையிலான ரீசார்ஜ்களுக்கு வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே ரூ.1099க்கு 3ஜி அளவிலா இணைய சேவையை பிஎஸ்என்எல் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ஆசிரியர்களுக்கு உதவும் ஆன்ட்ராய்டு செயலி

டிச.26-ல் அண்ணாமலைப் பல்கலை. தொலைதூரக் கல்வி இயக்க தேர்வு தொடக்கம்

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக தொலைதூரக் கல்வி இயக்ககத் தேர்வுகள், டிசம்பர் 26-ஆம் தேதி முதல் தொடங்குகின்றன என பதிவாளர் கே.ஆறுமுகம் அறிவித்துள்ளார்.

 இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

 தேர்வுக்கு பதிவு செய்துள்ள தேர்வர்கள், அவர்களுக்குரிய தேர்வு மையங்கள் குறித்த விவரங்களை, அண்ணாமலைப் பல்கலைக்கழக இணையதளம் மூலம் (www.annamalaiuniversity.ac.in)அறிந்துகொள்ளலாம். மேலும், இதுகுறித்த விவரங்களை அருகிலுள்ள பல்கலைக்கழக படிப்பு, தகவல் மையங்களிலும் தெரிந்துகொள்ளலாம். செய்முறை, வாய்வழி தேர்வுகளுக்கான கால அட்டவணை பின்னர் அறிவிக்கப்படும்.

 தேர்வுகள் நாட்டின் பல்வேறு மையங்களில் நடைபெறும். தேர்வர்கள் தேர்வுக்கூட அனுமதிச் சீட்டை (Hall Ticket) பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து சனிக்கிழமை (டிச.17) முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

 மாணவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தேர்வு மையங்களில் மட்டுமே தேர்வு எழுத அனுமதிக்கப்படுவர். மின்னணுப் பொருள்களை தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்ல அனுமதி இல்லை என்றார் பதிவாளர் கே.ஆறுமுகம்.

மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் வளாக தேர்வு 19–ந் தேதி நடக்கிறது

நெல்லை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறையின் வேலைவாய்ப்பு மையத்தின் சார்பில் 2016–ம் ஆண்டு, அதற்கு முந்தைய ஆண்டு இளநிலை மற்றும் முதுநிலை பட்டப்படிப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கக்கூடிய வளாக தேர்வு நடத்தப்படுகிறது. இதில் தனியார் வங்கி, தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு வளாக தேர்வு நடத்தி பணியாளர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள். இந்த வளாக தேர்வு வருகிற 19–ந் தேதி (திங்கட்கிழமை) காலை 10 மணிக்கு பல்கலைக்கழக வளாகத்தில் நடக்கிறது. இதில் கலந்து கொள்ளக்கூடியவர்கள் அன்று காலை 10 மணிக்குள் அடையாள அட்டை, சுயதகவல் பதிவேடு, பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகியவற்றுடன் பதிவு செய்யவேண்டும். பதிவு கட்டணம் கிடையாது.

வளாக தேர்வு முதலில் எழுத்து தேர்வும், அடுத்து நேர்முக தேர்வும் நடத்தப்படும். தேர்ந்து எடுக்கப்படக்கூடியவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கி பயிற்சி அளிக்கப்படும்.

இந்த தகவலை பல்கலைக்கழகத்தின் இளைஞர் நலத்துறை இயக்குனர் (பொறுப்பு) வெளியப்பன் தெரிவித்து உள்ளார்.

RTI Letter - தகுதிகாண் பருவ ஆணை பெறாவிட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு பெறலாம்- உயர்கல்விக்கான ஊக்க ஊதியம் பெறுவதற்கும்,தகுதிகாண் ஆணை பெறுவதற்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை!!

SR DIGITIZATION 01.07.2017 முதல் நடைமுறைப்படுத்தப்படும் !

சத்துணவு ஒதுக்கீடு ஒழுங்காக இல்லை "சனி வந்தாலே சத்துணவு கட்..முட்டையும் இல்லை"

பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ. 2.21, டீசல் விலை லிட்டருக்கு ரூ.1.79 உயர்வு

பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி இருக்கின்றன. பெட்ரோல் விலை லிட்டருக்கு 2.21 ரூபாயும், டீசல் விலை லிட்டருக்கு 1.79 ரூபாய் உயர்த்தப்பட்டிருக்கின்றன. 

சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.68.41க்கும், டீசல் விலை 58.28 ரூபாய்க்கும் விற்கபபடும். புதிய விலை இன்று (டிச.16) நள்ளிரவு முதல் அமலுக்கு வருகிறது. 

கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருவதைத் தொடர்ந்து விலை உயரும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் பெட்ரோல், டீசல் விலை உயர்வை தள்ளி வைத்ததாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்தன. 

கடந்த டிசம்பர் 1-ம் தேதி பெட்ரோல் விலை லிட்டருக்கு 13 காசுகள் உயர்த்தப்பட டீசல் விலை லிட்டருக்கு 12 காசுகள் குறைக்கப்பட்டது. 

ஒவ்வொரு மாதமும் 1-ம் தேதி மற்றும் 15-ம் தேதி பெட்ரோல் மற்றும் டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை நிலவரத்துக்கு ஏற்ப மாற்றி அமைத்து வருகின்றன. ஆனால் குறிப்பிட்ட தேதியில் விலையை மாற்றியாக வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. சர்வதேச சந்தையில் ஏற்ற இறக்கமான சூழல் இருக்கிறது. சூழலை ஆராய்ந்து வருகிறோம். பெட்ரோல் டீசல் விலை உயர்த்தப்படும் முடிவை சரியான நேரத்தில் எடுப்போம் என்று இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் தலைவர் பி.அசோக் கூறியிருந்தார்.

“ஏற்கெனவே பணமதிப்பு நீக்க நடவடிக்கை விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கி வரும் நிலையில் பெட்ரோல், டீசல் விலை உயர்வும் சேர்ந்து கொண்டால் பிரச்சினை அதிகரிக்கும் என்பதால் குளிர்கால கூட்டத் தொடர் முடிவடைந்தவுடன் பெட்ரோல் மற்றும் டீசல் விலை உயர்த்தப்பட்டுள்ளது.-

மேலும், சர்வதேச பெட்ரோல் விலை பீப்பாய் ஒன்றிற்கு 57.73 அமெரிக்க டாலர்களிலிருந்து 62.82 டாலர்களாகவும் டீசல் விலை பீப்பாய்க்கு 56.79 டாலர்களிலிருந்து 60.97 டாலர்களாக அதிகரித்ததால் பெட்ரோல், டீசல் விலை உயர்த்தப்பட வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளதாக பொதுத்துறை நிறுவனங்கள் தெரிவித்தன. 

DA 7% G.O Released - G.O.NO : 309 Dated : 16.12.2016

Click here - Enhanced Rate of Dearness Allowance from 1st July 2016 – Orders ...

B.Ed Result For BHARATHIDHASAN UNIVERSITY

BHARATHIDHASAN UNIVERSITY-B.Ed., (CDE) - November 2016 Results

மாற்றுத்திறனாளிகள் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேற்றம்

மாற்றுத்திறனாளிகள் சட்டத்திருத்தம் மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. மாற்றுத்திறனாளிகளுக்கு மத்திய மாநில அரசுகளின் திட்டங்கள் சென்றடையும் படி சட்டத்திருத்தம் செய்யப்பட்டுள்ளது. 
மாற்றுத்திறனாளிகளிடம் பாரபட்சமாக நடந்து கொள்வோருக்கு 2 ஆண்டு சிறைத்தண்டனை மற்றும்ம் ரூ.5 லட்சம் அபராதம் விதிக்க இந்த சட்டம் வகை செய்யும்.