Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 25 December 2016

ஆதாருடன் இணைந்த 'ஆப்' அறிமுகம்:போன் இன்றி பரிவர்த்தனை செய்யலாம்

புதுடில்லி:'டிஜிட்டல்' பணப் பரிவர்த்தனையை வேகப்படுத்தும் விதமாக, ஆதார் எண்ணுடன் இணைந்த எளிமையான புதிய, 'ஆப்' இன்று அறிமுகம் செய்யப்படுகிறது. இதன் மூலம், 'ஸ்மார்ட் போன்' உட்பட, நவீன வசதிகள் ஏதும் இல்லாமல், வர்த்தகர்களின் கணக்கில் பணம் செலுத்த முடியும். செல்லாத ரூபாய் நோட்டு அறிவிப்பால், சில்லரை பணமில்லாமல் மக்கள் தவித்து வருகின்றனர். மக்கள், வங்கிகள், ஏ.டிஎம்.,களில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழ்நிலை உள்ளது; வர்த்தக நடவடிக்கையும் முடங்கி வருகிறது. எனவே மக்கள், ரொக்கமின்றி டிஜிட்டல் முறை யில் பணப் பரிவர்த்தனை செய்ய வேண்டும் என, மத்திய அரசு வலியுறுத்தி வருகிறது.

இதை ஊக்குவிக்கும் பொருட்டு, சலுகைகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன; கட்டணங்களும் குறைக்கப்பட்டு வருகின்றன. இருப்பினும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய, டெபிட் கார்டு, கிரெடிட் கார்டு, இ - வாலட் மூலம் பணப் பரிவர்த்தனை செய்ய, 'ஸ்மார்ட் போன்' தேவைப்படுகிறது.ஏராளமான மக்களிடம் இந்த வசதி இல்லாததால், டிஜிட்டல் பணப்பரிவர்த்தனை செய்வதில் சிக்கல்நீடிக்கிறது. இதற்கு தீர்வாக, இவை எதுவும் இல்லாமல் டிஜிட் டல் முறையில் பணப் பரிவர்த் தனை செய்ய புதிய வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. 'ஆதார் பேமென்ட் ஆப்' என்ற பெயரில், ஆதார் எண் ணுடன் இணைக்கப்பட்ட, 'ஆப்' உருவாக்கப் பட்டு உள்ளது; இது, இன்று அறிமுகம் செய்யப்படு கிறது.

இதை, யு.ஐ.டி.ஏ.ஐ., எனப்படும் இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் உருவாக்கி உள்ளது. இதுகுறித்து அதன் நிர்வாக இயக்குனர் அஜய் பூஷண் கூறியதாவது: நாட்டில் தற்போது, 40 கோடி வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டுவிட்டது. 2017 மார்ச் சில், மீதமுள்ள வங்கி கணக்குகளுடன் ஆதார் எண் முழுமையாக இணைக்கப்பட்டு விடும். எனவே, ஆதார் எண் மூலம் வங்கி கணக்கில் இருந்து வர்த் தகருக்கு பணம் செலுத்த இந்த வசதி பயன்படும்.இதன் மூலம் எந்த ஒரு வசதியுமின்றி, டிஜிட்டல் பணப் பரிவர்த்தனை செய்ய முடியும்.

வர்த்தகர் களும், 2,000 ரூபாய் செலவில், கைரேகை அடை யாள இயந்திரம் மட்டும் வாங்கினால் போதும், வாடிக்கையாளர் கணக்கில் இருந்து எளிதில் பணம்பெற முடியும். இவ்வாறு அவர் கூறினார். எப்படி செயல்படுகிறது? இந்த முறையில் பணப் பரிவர்த்தனை செய்ய, வர்த்தகர்களிடம் மட்டும் மொபைல் போன் இருந் தால் போதும்; பொதுமக்களுக்கு தேவை யில்லை.

அதில், இந்த, 'ஆப்'பை பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். அத்துடன் கை ரேகை பதிவு இயந்திரத்தை இணைக்க வேண்டும். வாடிக்கையாளர், தன் ஆதார் எண்ணை தந்து கைரேகையை பதிவு செய்தால், அவர் வங்கி கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக் கிற்கு பணம் சென்று விடும்; வங்கி கணக்கு, 'பாஸ்வேர்டாக' கைரேகை பயன்படுத்தப்படும். எனவே, வாடிக்கை யாளரிடம் மொபைல் போன் இல்லாமலேயே அவரது வங்கி கணக் கில் இருந்து வர்த்தகரின் வங்கி கணக்கிற்கு எளிமையாக பணம் செலுத்த முடியும்.'ஸ்வைப்பிங் மிஷின்' தீவிரம்'டிஜிட்டல்' முறை பணப் பரிமாற்றத்திற்கு உதவும் வகையில், 'பாயின்ட் ஆப் சேல் மிஷின்' எனப்படும் 'ஸ்வைப்பிங் மிஷின்கள்' தயாரிப்பை விரைவுபடுத்தும் படி, மத்திய அரசு கேட்டுக் கொண்டுள்ளது.

அதன்படி, 15 லட்சம் இயந்திரங்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன; இதில், பாரத ஸ்டேட் வங்கி, 3 லட்சம் இயந்தி ரங்களை உருவாக்கி வருகிறது.

பள்ளியில் குழந்தையை சேர்க்காவிட்டால் தேர்தலில் போட்டியிட முடியாது?

உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடும் வேட்பாளர்களின் குழந்தைகள் பள்ளிகளில் சேர்க்கப்படாமல் இருந்தால் அவர்கள் தேர்தலில் போட்டியிடுவதற்குத் தடை விதிக்குமாறு அனைத்து மாநில அரசுகளையும் தேசிய குழந்தைகளின் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் (என்சிபிசிஆர்) கேட்டுக் கொண்டுள்ளது.

இது தொடர்பாக அந்த ஆணையத்தின் உறுப்பினரான பிரியாங்க் கனூங்கோ, தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உள்ளாட்சித் தேர்தல்களில் போட்டியிடுவதற்கான விதிமுறைகளில் திருத்தங்களைக் கொண்டுவருமாறு அனைத்து மாநில அரசுகளையும் நாங்கள் கேட்டுக் கொண்டுள்ளோம். அதாவது, தேர்தலில் போட்டியிடும் எந்தவொரு நபரும் தங்கள் குழந்தை பள்ளியில் சேர்க்கப்பட்டுள்ளது என்பதை நிரூபிக்க பள்ளியில் இருந்து சான்றிதழைப் பெற்று சமர்ப்பிக்க வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கும்படி கோரியுள்ளோம்.

எந்தவொருவர் அவ்வாறு செய்யத் தவறுகிறாரோ அவர் தேர்தலில் போட்டியிட முடியாது என்ற நிலை ஏற்படுத்தப்பட வேண்டும். எங்களது இந்தப் பரிந்துரையானது அரசியல்சாசனத்தின் 86-ஆவது திருத்தத்தில் இருந்து பெறப்பட்டதாகும். அந்தத் திருத்தம்தான் கல்வியை அடிப்படை உரிமையாக மாற்றியது.

கல்வி தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதில் இந்த யோசனை ஒரு மைல்கல்லாகும்.

இந்த யோசனை உள்பட பல்வேறு அம்சங்கள் அடங்கிய பரிந்துரைகளை தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான ஆணையம் தயாரித்துள்ளது. அவை மத்திய மனித வள மேம்பாட்டுத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மத்திய கல்வி ஆலோசனைக் குழுவின் பரிசீலனைக்காக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.

கடந்த காலங்களில் ஜாதி அல்லது வறுமை போன்ற காரணங்களால் கல்வி மறுக்கப்பட்டவர்களைக் குறித்து நாம் பேசவில்லை. மாறாக, இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உரிமையாகக் கொண்டுள்ள இன்றைய குழந்தைகளைப் பற்றியே பேசுகிறோம். எங்களின் யோசனையை யாரும் எதிர்த்தால், அவர்கள் அரசியல்சாசனத்தை எதிர்ப்பதாகவே அர்த்தம் என்றார்  பிரியாங்க்.

அண்மைக் காலத்தில், உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கு குறைந்தபட்ச கல்வித்தகுதியை கட்டாயமாக்கும் சட்டங்களை ஹரியாணா மற்றும் ராஜஸ்தான் மாநில அரசுகள் நிறைவேற்றியுள்ளன.

எனினும், அனைவருக்கும் வாக்குரிமை என்ற கொள்கைக்கு இது எதிரானது என்று சமூக ஆர்வலர்கள் விமர்சித்தனர்

விரைவில் ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர்... மாற்றம்!: ஊழல் நபர்களை நீக்கி நேர்மையானவர்களை நியமிக்க திட்டம்:விடுமுறை நாளிலும் முதல்வர், தலைமை செயலர் ஆலோசனை

தமிழக அரசு நிர்வாகத்தை,முழுமையாக மாற்றி அமைக்கும் வகையில், விரைவில், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகள் பலர் மாற் றப்பட உள்ளனர். ஊழல் நபர்களை நீக்கி, நேர்மையானவர்களை முக்கிய பொறுப்புகளில் நியமிக்க, திட்டமிடப்பட்டு உள்ளது.

இது தொடர்பாக, விடுமுறை நாளான நேற்று, முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன் ஆகியோர், கோட்டை யில் அவசர ஆலோசனை நடத்தினர். விடு முறை நாளான, நேற்று காலை, 10:00 மணிக்கு, புதிய தலைமை செயலர் கிரிஜா வைத்திய நாதன், தலைமை செயலகம் வந்தார்உள்துறை செயலர், சட்டத்துறை செயலர் மற்றும் பல்வேறு துறை அதிகாரிகளை அழைத்து பேசினார்.

பிற்பகலில்,முதல்வர் பன்னீர்செல்வம், தலைமை செயலகம் வந்தார். தலைமை செயல ருடன், அவசர ஆலோசனை நடத்தினார். முதல் வர் மற்றும் தலைமை செயலர் வந்த தால், மற்ற துறை அதிகாரிகளும் பணிக்கு வந்தனர். இதனால், விடுமுறை நாளிலும், கோட்டை வட்டாரம் பரபரப்பாக இயங்கியது.

முதல்வர் - தலைமை செயலர் நடத்திய ஆலோசனையில், அரசு நிர்வாகத்தை மாற்றி அமைத்து, நலத் திட்டப் பணிகளை விரைவுப் படுத்த, முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதில், முதல் கட்டமாக, ஐ.ஏ.எஸ்., மற்றும் ஐ.பி.எஸ்., அதிகாரிகளை, அதிரடியாகஇடமாற்றம் செய்ய திட்டமிட்டுள்ளனர்.

இது குறித்து,அதிகாரிகள் கூறியதாவது:

முக்கிய பதவிகளில் உள்ள, ஊழல் அதிகாரி களை அகற்றிவிட்டு, திறமையான, நேர்மை யான அதிகாரிகளை நியமிக்க, முதல்வர் மற்றும் தலைமை செயலர் முடிவு செய்துள் ளனர். இதற்காக, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளின் இடமாறுதல் பட்டியல் தயாராகி வருகிறது.

அதேபோல, ஐ.பி.எஸ்., அதிகாரிகளின் பதவி உயர்வுக்கான கோப்பு, நீண்ட நாட்களாக கிடப் பில் உள்ளது. அதை துாசு தட்டி, தகுதியுள்ள அதிகாரிகளுக்கு, உடனடியாக பதவி உயர்வு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும், போலீஸ் துறையிலும் அதிரடி மாற்றங்கள் செய்ய, முடிவு செய்யப்பட்டு உள்ளது; அதற் கான பட்டியலும் தயாராகி வருகிறது.இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

4 ஆண்டுகளாக முடங்கிய கோப்புகளுக்கு புத்துயிர் கல்லூரி கல்வி புதிய இயக்குனருக்கு அனுமதி

கல்லுாரி கல்வித்துறையில், நான்கு ஆண்டுகளாக குவிந்து கிடக்கும் கோப்புகளின் மீது உடனடி முடிவு எடுக்க, புதிய இயக்குனருக்கு, உயர் கல்வித்துறை அனுமதி அளித்துள்ளது.

உயர் கல்வி நிர்வாகத்தில் முக்கியமான கல்லுாரி கல்வித்துறை இயக்குனர் பதவி, மூன்றரை ஆண்டுகளாக காலியாக இருந்தது. இப்பதவியில் இருந்த செந்தமிழ்செல்வி ஓய்வு பெற்றதும், செய்யார் கலை கல்லுாரி முதல்வர் தேவதாஸ், கூடுதல் பொறுப்பு வகித்தார்.

கூடுதலாக கவனித்தார்பின், கல்லுாரி கல்வி இணை இயக்குனர் சேகர், தொழில்நுட்ப கல்வி இயக்குனர்கள் மதுமதி மற்றும் ராஜேந்திர ரத்னு ஆகியோர், இந்த பொறுப்புகளை கூடுதலாக கவனித்தனர்.

கூடுதல் பொறுப்புகளால், நான்கு ஆண்டுகளாக பேராசிரியர் நியமனம், முதல்வர்கள் நியமனம், கல்லுாரிகளின் உட்கட்டமைப்பு மேம்பாடு உள்ளிட்ட பல பணிகள் கிடப்பில் போடப்பட்டன. இறுதியாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராஜேந்திர

ரத்னு துணிச்சலாக செயல்பட்டு, 31 கல்லுாரிகளின் முதல்வர் பணியிடங்களை, முறைகேடுகளுக்கு இடமின்றி நிரப்பினார்.இந்நிலையில், புதிய கல்லுாரி கல்வி இயக்குனராக, திருச்சி பெரியார் கல்லுாரி முதல்வர் ஜே.மஞ்சுளா, கடந்த வாரம் பதவியேற்றுள்ளார். பல ஆண்டுகளுக்கு பின், முழுநேர இயக்குனர்

நியமிக்கப்பட்டு உள்ளதால் கல்லுாரி கல்வித்துறையில் கிடப்பில் உள்ள கோப்புகள், மீண்டும் ஆய்வுக்கு எடுக்கப்பட உள்ளன; இதற்கு, உயர் கல்வித் துறை அமைச்சரும் அனுமதி அளித்துள்ளார்.

கல்லுாரி நிர்வாகத்தில் குவிந்துஇருக்கும் பணிகள் குறித்து, கல்லுாரி ஆசிரியர் மன்ற பொதுச்செயலர் சிவராமன் கூறியதாவது:முழுநேர இயக்குனர் நியமனத்தை வரவேற்கிறோம். அவர் கல்லுாரி நிர்வாக பணிகளை முறைகேடுகளுக்கு இடமின்றி, திறம்பட நடத்துவார் என நம்புகிறோம். ஆறு பி.எட்., கல்லுாரிகள் உட்பட,

15 கல்லுாரிகளின் முதல்வர் பணியிடங்கள் காலியாக உள்ளன; எட்டு கல்லுாரிகளுக்கு, புதிய கட்டடம் கட்டி முடிக்கப்பட்டது; இன்னும் திறக்கப்படவில்லை. பணிமூப்பு பட்டியல்

கல்லுாரிகளில், 2,500 பேராசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன; 2013 - 14ல் துவங்கப்பட்ட, 14 கல்லுாரிகளில், மூன்றாம் ஆண்டு மாணவர்களுக்கு பாடம் நடத்த ஆசிரியர்கள் நியமிக்கப்படவில்லை; பகுதிநேர ஆசிரியர்கள் மூலம் பாடம் நடக்கிறது.

கடந்த, 1998க்கு பின், 7,000 ஆசிரியர்களுக்கு, பணிமூப்பு பட்டியல் தயாரிக்கப்படவில்லை. இந்த பணிகளை, கல்லுாரி இயக்குனர் விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே கட்டாய தேர்ச்சி முறை

அனைத்து பள்ளிகளிலும் 5-ம் வகுப்பு வரை மட்டுமே இனி கட்டாய தேர்ச்சி முறையாக இருக்கும் என்று மனிதவள மேம்பாட்டுத்துறை அறிவித்துள்ளது .
5-ம் வகுப்பு முதல் 8-ம் வகுப்பு வரை கட்டாய தேர்ச்சி முறையை மாற்ற மனிதவள மேம்பாட்டுத்துறைக்கு சட்டத்துறை அமைச்சகம் ஒப்புதல் அளித்துள்ளது. கட்டாய தேர்ச்சி முறையால் கல்வி தரம் குறைவதாக மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Teachers Transfer சர்ச்சையில் 4 ஆயிரம் ஆசிரியர் - கலக்கத்தில் அதிகாரிகள்!

தமிழக கல்வித்துறையில் பெரும் அளவில் 2014-15ல் நடந்த 4 ஆயிரம் ஆசிரியர்கள் இடமாற்றம் பின்னணியில் சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்ட சேகர் ரெட்டிக்கு தொடர்பு இருப்பதாக சர்ச்சை எழுந்துள்ளது. இதனால் கல்வி அதிகாரிகள் கலக்கத்தில் உள்ளனர்.
தமிழகத்தில் முன்னாள் தலைமை செயலர் ராமமோகன ராவ் ஆசியுடன் பொதுப்பணித்துறையில் மணல் குவாரிகள் உட்பட பல்வேறு துறைகளிலும் மொத்த 'கான்ட்ராக்ட்' பெற்று கோலோச்சிய சேகர் ரெட்டி சி.பி.ஐ.,யால் கைது செய்யப்பட்டார்.

இவரது வாக்குமூலம் அடிப்படையில், தலைமை செயலர் ராமமோகனராவ் வீட்டிலும் வருமான வரித்துறை சோதனை நடத்தி பல கோடி ரூபாய் மதிப்பிலான ஆவணங்களை பறிமுதல் செய்தனர்.

தமிழகத்தில் இவர்கள் இருவர் கூட்டணியில் பல்வேறு துறைகளிலும் முறைகேடு நடந்துள்ளதாக அடுத்தடுத்து தகவல்கள் வெளியாகின்றன. இதன் தொடர்ச்சியாக, கல்வித்துறையில் 2014-15ம் ஆண்டில் நடந்த பெரும் எண்ணிக்கையிலான ஆசிரியர்கள் பணியிட மாற்றத்தில் பல கோடி ரூபாய் முறைகேடு நடந்துள்ளதாகவும், அப்போது ஒரு பணியிட இடமாற்றத்திற்கு அதிகபட்சம் 5 லட்சம் ரூபாய் வரை பேரம் நடந்தது குறித்தும் விசாரிக்க வேண்டும் என தற்போது சர்ச்சை
ஏற்பட்டுள்ளது.
அப்போது, ஆந்திராவை சேர்ந்த ஒருவர் கண் அசைவில் தான் அனைத்து இடமாற்றங்களும் நடந்தன. அவருக்கும், தற்போது கைதான சேகர் ரெட்டிக்கும் தொடர்பு உள்ளதா என்பது குறித்து வருமான வரித்துறை விசாரிக்க வேண்டும் என ஆசிரியர் சங்கங்கள் வலியுறுத்தி உள்ளன.
சங்க நிர்வாகிகள் சிலர் கூறியதாவது: தமிழகத்தில் டி.இ.டி., தேர்வில் தேர்ச்சி பெற்ற 25 ஆயிரம் பட்டதாரி ஆசிரியர்களுக்கு பணி நியமனம் நேர்மையாக நடந்தது. பின் இரண்டாம் கட்டமாக 5 ஆயிரம் பேருக்கும் பணிகள் வழங்கப்பட்டன.

இதில் தென் மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தர்மபுரி, திருவண்ணாமலை, நாகபட்டினம், வேலுார், கிருஷ்ணகிரி ஆகிய வடமாவட்டங்களில் பணிநியமனம் செய்யப்பட்டனர். பின், 'ஆசிரியர்கள் பொது மாறுதல் கவுன்சிலிங்' என்ற பெயரில் பெரும்பாலான ஆசிரியர்கள் தென் மாவட்டங்களுக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர்.
தென் மாவட்டங்களில் போதிய ஆசிரியர்கள் இருந்தபோதும் 'கூடுதல் பணியிடங்கள்' (உபரி) என்ற பெயரில் 'தாராள' இடமாற்ற உத்தரவுகள் வழங்கப்பட்டன. இதில் ஒரே பள்ளி; ஒரே பாடத்திற்கு இரண்டுக்கு மேற்பட்ட ஆசிரியர்களுக்கு கூட இடமாற்றம் உத்தரவு வழங்கப்பட்ட சம்பவங்கள் நடந்தன. அந்த சமயத்தில் மட்டும் 4 ஆயிரம் இடமாற்றங்கள் நடந்தன.
இதன் பின்னணியில், 'ஆந்திராவை சேர்ந்த ரெட்டி ஒருவர் இருந்தார். அவரது உத்தரவில் தான் இடமாற்றங்கள் நடக்கின்றன' என ஆசிரியர் சங்கங்கள் அப்போதே விமர்சித்தன.
தற்போது சேகர் ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார். எனவே அப்போது 'ரெட்டி' என அழைக்கப்பட்டவர் 'சேகர் ரெட்டியா', அப்போதைய இடமாற்றங்களில் 'ஆதாயம்' பெற்ற கல்வி அதிகாரிகள் யார் யார் என்பது குறித்தும் வருமான வரித்துறை விசாரித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்,
என்றனர்.

ஜெ., கைதிலும் தொடர்ந்த 'டிரான்ஸ்பர்'

ஆசிரியர்கள் பணியிட மாற்றம் செய்யப்பட்ட நேரத்தில் 27.9.2014ல் சொத்து குவிப்பு வழக்கு விவகாரத்தில் முதல்வர் ஜெயலலிதா கைதான சம்பவம் நடந்தது. அச்சமயத்தில், அதாவது செப்., மாதத்திலும் கல்வித்துறையில் நுாற்றுக்கணக்கான ஆசிரியர் பணியிட இடமாற்ற உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன எனவும் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை தேவையா?

'தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்ய தேவையில்லை' என, பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது.
அரசு பள்ளிகளில், கடந்த காலங்களில், சீனியாரிட்டி மூலம் ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டனர். 
நியமனம் செய்யப்பட்ட ஓராண்டில், அவர்களுக்கு பணி வரன்முறை செய்யப்பட வேண்டும். தொடர்ந்து, இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் முடிக்க வேண்டும்.
ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட, ஆசிரியர்களுக்கு பணி வரன்முறை செய்வதில் குழப்பம் இருந்தது. இதனால், 2010 -- 11ல், ஆசிரியர் தேர்வு வாரியத்தால் நியமிக்கப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கும் பணி வரன்முறை செய்யவில்லை. மேலும், அவர்களது பதவி உயர்விலும்
சிக்கல் ஏற்பட்டது.

இந்த குழப்பத்திற்கு, பள்ளிக் கல்வி இயக்குனரகம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது.'ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு தனியாக பணி வரன்முறை செய்ய தேவையில்லை; இரண்டு ஆண்டுகளில் தகுதிகாண் பருவம் மட்டும் முடித்தால் போதும்' என, தெரிவித்துள்ளது.

கல்விச்சிறகுகளின் கிருஸ்துமஸ் வாழ்த்துகள் !!

இனி ஆதார் எண்ணை காட்டி பணம் செலுத்தலாம்" - கிரெடிட் டெபிட் கார்டுகள் தேவையில்லை !!

கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள் இல்லாமல் கடைகளில் வாங்கிய பொருட்கள், சேவைகளுக்கு பணம் செலுத்தும் வகையில், ஆதார் எண் அடிப்படையிலான ஆப்ஸை(செயலி) மத்தியஅரசு இன்று அறிமுகம் செய்கிறது.
இந்த ஆதார் பேமென்ட் ஆப்ஸ் மூலம் நேரடியாக வங்கிக்கணக்கில் இருந்து கடைக்காரருக்கு பணம் செலுத்த 
முடியும். தனியார் நிறுவனங்களாக மாஸ்டர் கார்டு, விசா, பே-டிஎம் உள்ளிட்டவற்றுக்கு அளிக்கப்படும் சேவைக்கட்டணங்களை தவிர்க்கவே அரசு இந்தஆப்ஸை இன்று அறிமுகம் செய்கிறது.
டிஜிட்டல் பரிமாற்றம்
பிரதமர் மோடி, கடந்த மாதம் ரூ.500, ரூ.1000 நோட்டுகளை செல்லாது என்று அறிவித்தார். அதன்பின், மக்களிடையே டிஜிட்டல் பேமென்ட், பரிமாற்றத்தை ஊக்குவிக்க மக்களுக்கு அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது.

ஆதார் ஆப்ஸ்
இதில் டிஜிட்டல் பரிமாற்றத்தின் போது, தனியார் நிறுவனங்களுக்கு செல்லும் கமிஷனை தவிர்க்க ஆதார் எண் அடிப்படையிலான செயலியை உருவாக்க அரசு முடிவு செய்தது. இதற்காக உருவாக்கப்பட்ட பிரத்யேக ஆதார் பேமென்ட் ஆப்ஸ் இன்று மக்களுக்கு அறிமுகமாகிறது.
இந்த ஆதார் ஆப்ஸை ஐ.டி.எப்.சி. வங்கி, ஆதார் எண் வழங்கும் யு.ஐ.டி.ஏ.ஐ. நிறுவனம், தேசிய பேமெண்ட் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா ஆகியவை இணைந்து தயாரித்துள்ளன.
செல்போன் தேவையில்லை
இது குறித்து இந்திய பிரத்யேக அடையாள எண் ஆணையம்(யு.ஐ.டி.ஏ.ஐ.) தலைமை நிர்வாக அதிகாரி அஜெய் பூஷன் பாண்டே கூறுகையில், " மத்திய அரசு அறிமுகம் செய்ய உள்ள ஆதார் பேமெண்ட் ஆப்ஸ் மூலம், வாடிக்கையாளர்கள் செல்போன் இல்லாமல் கடைக்காரருக்கு பணம் செலுத்தலாம். 40 கோடி மக்கள் ஆதார் எண்ணை, வங்கிக்கணக்குடன் இணைத்துள்ளனர். 2017 மார்ச் மாதத்துக்குள் அனைத்து மக்களின் ஆதார் எண்ணும் வங்கிக்கணக்குடன் இணைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு இணைக்கப்பட்டால் பணம் செலுத்துவது எளிதாகும்'' எனத் தெரிவித்தார்.
இரு அம்சம்
ஆதார் பேமெண்ட் ஆப்ஸில் இரு முக்கிய அம்சங்கள் உள்ளன. . முதலாவதாக நுகர்வோர்களுக்கான ஆதார் பேமெண்ட் ஆப்ஸ், இரண்டாவது, வர்த்தகர்கள், வியாபாரிகள் பயன்படுத்தும் ஆப்ஸ் ஆகும்.
நுகர்வோர்களுக்கான ஆப்ஸ் என்பது இ-வாலட் போன்றது. 2-வதாக வர்த்தகர்களுக்கான ஆப்ஸ். இந்த ஆப்ஸை இயக்க வர்த்தகர் ஒருவருக்கு ஸ்மார்ட்போன், கைரேகை பதிவு செய்யும் எந்திரம் அவசியமாகும். இந்த எந்திரம் மூலமே விரல்ரேகை செய்து பணப்பரிமாற்றத்தை செய்ய முடியும். இந்த எந்திரத்தை வர்த்தகர்கள் ரூ.2 ஆயிரம் செலுத்தி பெற்று கொள்ளலாம். இந்த செயலியையும் இலவசமாக பதிவிறக்கம் செய்யலாம்.
எப்படி ஆப்ஸ் செயல்படுகிறது...
வர்த்தகர்களுக்கான ஆதார் பேமெண்ட் ஆப்ஸ் செயல்பட இரு பொருட்கள் அவசியம். ஒன்று, ஸ்மார்ட்போன், 2-வது ரேகை பதிவு செய்யும்மெஷின். ஸ்மார்ட்போனில் வாடிக்கையாளர்கள், தங்கள் ஆதார் எண்ணையும், கணக்கு வைத்து இருக்கும் வங்கியின் பெயரை பதிவு செய்ய வேண்டும். அதன்பின் அந்த எந்திரத்தின் மூலம் வாடிக்கையாளர் தனது விரல் ரேகையை வைத்தவுடன் அனைத்து விவரங்களும் வரும். அதை ஓ.கே. செய்தால், பணம் பரிமாற்றத்துக்கான பாஸ்வேர்டு வரும். அதை அந்த எந்திரத்தில் பதிவு செய்தால் வாடிக்கையாளர்களின் வங்கிக்கணக்கில் இருந்து வர்த்தகரின் வங்கிக்கணக்குக்கு பணப் பரிமாற்றம் ஆகும்.

3G போனிலும் விரைவில் ரிலையன்ஸ் ஜியோ !!

ரிலையன்ஸ் ஜியோ சிம் கார்டுகளை 3ஜி போனிலும் உபயோகிக்கும் வகையில் அதிவிரையில் ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷன் தயாரிக்கவிருப்பதாக ரிலையன்ஸ் ஜியோ நிறுவனத் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் ஜியோ நெட்வொர்க் கடந்த செப்டம்பர் மாதம் 5ஆம் தேதி தொலைத் தொடர்புச் சந்தையில் அறிமுகமானது. அறிமுகமான நான்கு மாதங்களில் சுமார் 5.5 கோடி வாடிக்கையாளர்களை ஜியோ நெட்வொர்க் ஈர்த்துள்ளது. மேலும், இந்த நிதியாண்டின் முடிவுக்குள் (மார்ச் 31) ஜியோ வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை 10 கோடியாக உயர்த்த ஜியோ இலக்கு நிர்ணயித்துள்ளது. அதற்காக சமீபத்தில் அதன் இலவச காலத்தை டிசம்பர் 31ஆம் தேதியிலிருந்து மார்ச் 31ஆம் தேதியாக நீட்டித்தது ஜியோ நிறுவனம்.

வாய்ஸ் கால், எஸ்.எம்.எஸ். உள்ளிட்ட அனைத்து சேவைகளும் இலவசம் என்பதோடு ஜியோ 4ஜி நெட்வொர்க்கில் செயல்படுகிறது. எனவே 4ஜி ஏற்புடைய ஸ்மார்ட்போன்களில் மட்டுமே ஜியோ சிம் கார்டுகள் இயங்கும். இதற்காக புதிய 4ஜி ஸ்மார்ட்போன்களும் வாங்கப்படுகின்றன. எனினும், ஏற்கனவே 3ஜி ஸ்மார்ட்போன்கள் பயன்படுத்திக் கொண்டிருப்பவர்களால் ஜியோவைப் பயன்படுத்த முடியவில்லை. இது அவர்களுக்கு ஒரு குறையாக இருப்பதோடு அவர்களால் 4ஜி ஸ்மார்ட்போன்களை வாங்க முடியாத சூழலும் இருக்கிறது. அதாவது மார்ச் மாதம் வரை இலவச இண்டர்நெட் வழங்கும் ஜியோவை 3ஜி ஸ்மார்ட்போன் வைத்திருப்பவர்களால் பயன்படுத்தமுடியவில்லை.

எனவே இக்குறையை நிவர்த்தி செய்யும் வகையிலும், இதன்மூலம் தனது வாடிக்கையாளர்களின் எண்ணிக்கையை உயர்த்த முடியும் என்பதாலும் 3ஜி ஸ்மார்ட்போன்களுக்கான ஒரு ஆண்ட்ராய்டு அப்ளிகேஷனை ஜியோ நிறுவனம் வடிவமைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த அப்ளிகேஷன் மூலமாக 3ஜி ஸ்மார்ட்போன்கள் வைத்திருப்பவர்களும் ஜியோ சிம் கார்டைப் போட்டு உபயோகிக்க இயலும்.