Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 29 December 2016

January 2017 Diary !!

2-Schools reopen
7-Grievance day
9-RL-Karvin mukaithin kathar
11-RL-Arudhra dharsan

13-RL-Bogi
14-16-GH-Pongal holidays
26-GH-Republic day

கம்ப்யூட்டர் மூலம் பாடம் சொல்லித் தரும் திட்டம் (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி)

பெரிய, பெரிய தனியார் பள்ளிகளில் மட்டுமே கம்ப்யூட்டர் லேப் மற்றும் கம்ப்யூட்டர் மூலம் மாணவர்களுக்கு பாடங்கள் சொல்லித்தரக்கூடிய
வசதிகள் இருக்கின்றன. எனவே தனியார் பள்ளி மாணவர்கள் கம்ப்யூட்டர் அறிவில் திறமையானவர்களாக இருக்கின்றனர். இதனால் தனியார் பள்ளிகளுக்கு இணையாக, அரசுப் பள்ளி மாணவர்களும் கம்ப்யூட்டர் 
அறிவை வளர்த்துக்கொள்ள வேண்டும் என்று அரசுப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு, கம்ப்யூட்டர் மூலம் கல்வி கற்கும் திட்டத்தை (இன்பர்மேஷன் அன்ட் கம்ப்யூட்டர் டெக்னாலஜி) முதல்வர் ஜெயலலிதா, கடந்த 2011-ம் ஆண்டு சட்டசபை கூட்டத்தொடரில், பள்ளிக்கல்வி மானிய கோரிக்கையின் போது அறிவித்தார்.

அதன்படி மத்திய அரசின் (ஆர்.எம்.எஸ்.ஏ., எனப்படும்) அனைவருக்கும் இடைநிலைக்கல்வி வழங்கும் திட்டத்தின் கீழ், இந்த திட்டத்துக்கான நிதியைப் பயன்படுத்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்தது. கடந்த 2011-12 ம் கல்வியாண்டில், முதல் கட்டமாக இந்த திட்டத்தை 4345 அரசு உயர்நிலைப்பள்ளிகளில் செயல்படுத்த, மத்திய அரசு முதல் கட்டமாக 43 கோடியே 60 லட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்தது.

தமிழக சிறார்கள் 17 பேருக்கு தேசிய பாலஸ்ரீ விருது !!

தமிழகத்தைச் சேர்ந்த, 17 சிறார்கள், மத்திய அரசின், 'பாலஸ்ரீ' விருது பெற்றுள்ளனர்.

மேடைக்கலை, படைப்புக் கலை, அறிவியல் கலை, எழுத்துக் கலை ஆகியவற்றில், 16 வகையான உட்பிரிவுகளில் புதுமைகள் படைத்திடும், 10 முதல், 16 வயதிற்கு உட்பட்ட 
சிறுவர்களுக்கு, தேசிய அளவில், 'பாலஸ்ரீ' விருது வழங்கப்படுகிறது.

இது, மத்திய அரசின் மனிதவள மேம்பாட்டுத் துறையின் கீழ் செயல்படும், தேசிய சிறுவர் மன்றத்தால் வழங்கப்பட்டு வருகிறது. தமிழக அரசின் கலை பண்பாட்டுத் துறையின், ஒரு பகுதியாக விளங்கும், தமிழ்நாடு ஜவகர் சிறுவர் மன்றத்தின் மூலம், சிறந்த சிறார்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்விருதுக்கான தேர்வை, மாவட்ட, மாநில அளவில் நடத்தி, தேசிய அளவிலான போட்டிக்கு அனுப்பி வைப்பர். இந்திய அளவில், 520 சிறார்கள் பங்கேற்ற தேசிய போட்டியில், 82 பேர், விருதுக்காக தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதில், 17 பேர், தமிழகத்தைச் சேர்ந்தவர்கள்.

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் -அரசு ஊழியர் சங்கத்தினர் முதல்வருடன் சந்தித்து கோரிக்கை.

அரசு ஊழியர் சங்க நிர்வாகிகள், முதல்வர் பன்னீர்செல்வத்தை சந்தித்து பேசினர்.

ஜெ., முதல்வராக இருந்த போது, அவரை, அரசு ஊழியர் சங்க நிர்வாகிகளால், எளிதில் சந்திக்க முடியாத நிலை இருந்தது. 
ஆனால், தற்போதைய முதல்வர் பன்னீர்செல்வத்தை, அனைத்து தரப்பினராலும், எளிதாக சந்திக்க முடிகிறது. சென்னை, தலைமை செயலகத்தில், தமிழ்நாடு தலைமை செயலக சங்கத் தலைவர் கணேசன் மற்றும் நிர்வாகிகள், முதல்வரை சந்தித்தனர். அவர்களை தொடர்ந்து, தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியத்தின் மாநில தலைவர் சண்முகராஜன் மற்றும் நிர்வாகிகளும், முதல்வரை சந்தித்து பேசினர். அவர்கள், பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை கைவிட்டு, பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உட்பட, பல கோரிக்கைகளை வலியுறுத்தினர். உரிய நடவடிக்கை எடுப்பதாக, முதல்வர் உறுதி அளித்தார்.

இந்த சந்திப்பின் போது, தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன் உடனிருந்தார்.

பேராசிரியர் நியமன பேச்சு நடத்த குழு: ஆசிரியர்கள் எதிர்ப்பு

அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், பேராசிரியர் நியமனம் தொடர்பாக, நேரடி பேச்சு நடத்த குழு அமைக்கப்பட்டதற்கு, ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். முதல்வராக இருந்த ஜெயலலிதா, 2012ல், சட்டசபையில், 110 விதியின் கீழ், '162 அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், 3,120 காலியிடங்கள் நிரப்பப்படும்' என, அறிவித்தார்.

1,000 இடங்கள் காலி : இதற்காக தனியாக அரசாணை வெளியிடப்பட்டது. அவற்றில், 2,100 இடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டன; இன்னும், 1,000 இடங்கள் காலியாகவே உள்ளன. இவற்றுடன், 2012க்கு பின், காலியான, 1,000 பேராசிரியர் இடங்களையும் சேர்த்து நிரப்ப வேண்டும் என, ஆசிரியர்களும், மாணவர்களும் கோரிக்கை விடுத்தனர். ஆனால், சில கல்லுாரிகளுக்கு மட்டும், பேராசிரியர் காலியிடங்களை நிரப்ப, மறைமுக அனுமதி தரப்பட்டது. பிற கல்லுாரிகளுக்கு, நேரடியாகவும், மறைமுகமாகவும், கல்லுாரி நிர்வாகத்தினருக்கு பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

பொருளாதார அளவில் நலிவுற்ற பல கல்லுாரி நிர்வாகங்கள், அதிகாரிகளின் வேண்டுகோளை நிறைவேற்ற முடியாமல், ஆட்களை நிரப்ப முடியவில்லை. இந்நிலையில், காலியிடங்களை நிரப்புவது தொடர்பாக, கல்லுாரிகளில் நேரில் சென்று பேச்சு நடத்த, தனியாக குழுவை அமைத்து, கல்லுாரி கல்வி இயக்குனரகம் உத்தரவிட்டுள்ளது.

சிக்கல் : 'இது, பேராசிரியர்கள் நியமனத்தில், நேரடியாக பேரம் பேச வழி வகுக்கும்' என, ஆசிரியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இப்பிரச்னை, கல்லுாரி கல்வியின் புதிய இயக்குனர், மஞ்சுளாவுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.இது குறித்து, அனைத்து பல்கலை ஆசிரியர் சங்கம் மற்றும் கல்லுாரி ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு பொதுச்செயலர், பசுபதி கூறியதாவது:

பேராசிரியர்கள் இல்லாமல், அரசு உதவி பெறும் கல்லுாரிகளில், மாணவர்களுக்கு பாடம் நடத்த முடியவில்லை. கல்லுாரி கல்வித்துறை இதை கண்டு கொள்ளாமல், புதிதாக குழு அமைத்து, நிர்வாகத்தினரை சந்திக்க உத்தரவிட்டுள்ளது. இது, உயர் கல்வியில், ஊழலுக்கும், முறைகேடுகளுக்கு வழி வகுக்கும். எனவே, இந்த முடிவை கைவிட வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

10 வகுப்பு தமிழ் பாட தேர்வுக்கு விலக்கு : அரசு பரிசீலிக்க ஐகோர்ட் உத்தரவு

பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் வழி கல்வி பயிலாத மாணவர்களுக்கு, தமிழ் மொழி பாடம் எழுத, மூன்று ஆண்டுகளுக்கு விலக்கு அளிக்க பரிசீலிக்கும்படி, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஒன்று முதல், 10ம் வகுப்பு வரை, படிப்படியாக தமிழ் மொழி பாடத்தை கட்டாயமாக்கி, 2006ல், தமிழக அரசு உத்தரவிட்டது. அதன்படி, 2016ல், பத்தாம் வகுப்பு பொது தேர்வின் போது, தமிழ் மொழி பாடமும் கண்டிப்பாக எழுத வேண்டிய நிலை ஏற்பட்டது. இதையடுத்து, மொழி சிறுபான்மை பள்ளிகளில் படித்த மாணவர்கள், பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளிக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில், மனுக்கள் தாக்கல் செய்தனர்.மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், விலக்கு அளிக்கும்படி இடைக்கால உத்தரவிட்டது. இவ்வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.கே.கவுல், நீதிபதி சுந்தர் அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தது.

மொழி சிறுபான்மை பள்ளிகள் சார்பில் ஆஜரான, மூத்த வழக்கறிஞர், எம்.ரவீந்திரன், 'பள்ளிகளில், தமிழ் ஆசிரியர்கள், இன்னும் முழுமையாக நியமிக்கப்படவில்லை; அப்புறம் எப்படி மாணவர்களால், தமிழ் மொழி பாடத்தில் தேர்வு எழுத முடியும்' என்றார்.வழக்கை விசாரித்த, முதல் பெஞ்ச், பிறப்பித்த உத்தரவு: தமிழ் மொழி பாடத்தை படிக்க வாய்ப்பில்லாத மாணவர்களுக்கு, மூன்று ஆண்டுகள் வரையாவது, பத்தாம் வகுப்பு பொது தேர்வில், தமிழ் மொழி பாடம் எழுத விலக்கு அளிக்க, பரிசீலிக்க வேண்டும்; அது தொடர்பாக, அரசுக்கு ஆலோசனை கூறுவதாக, அட்வகேட் ஜெனரல் உறுதி அளித்துள்ளார். விசாரணை, ஜன., 3க்கு தள்ளி வைக்கப்படுகிறது.இவ்வாறு முதல் பெஞ்ச் உத்தரவிட்டுள்ளது.

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.

IGNOU தேசிய திறந்தநிலைப் பல்கலை., சேர்க்கைக்கு விண்ணப்பிக்க டிச. 30 கடைசி நாள்.

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்(இக்னோ) சேருவதற்கு விண்ணப்பிக்க டிச. 30-ம் தேதி கடைசி நாள் என அப்பல்கலைக்கழக மதுரை மண்டல உதவி இயக்குநர் பீமாராவ் தெரிவித்தார்.

புதுக்கோட்டை ஜெஜெ. கல்லூரியில் உள்ள இக்னோ மையத்தை சனிக்கிழமை ஆய்வு செய்ய வந்த அவர் மேலும் கூறியது:

இந்திராகாந்தி தேசிய திறந்தநிலைப் பல்கலைக்கழகத்தில்2017 ஜனவரி பருவத்தில் இளநிலை, முதுநிலை, பட்டயம், சான்றிதழ் படிப்புகளுக்கான சேர்க்கை தேதி டிச. 30-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.இச்சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் இப்பல்கலைக்கழகப் படிப்பு மையமான பான் செக்கர்ஸ் மகளிர் கல்லூரியில் கிடைக்கும். விண்ணப்பத்தின் விலை ரூ. 200. பணமில்லா பரிவர்த்தனையை w‌w‌w.‌i‌g‌n‌o‌u.ac.‌i‌n  என்ற இணையதளத்தில் செய்து கொள்ளலாம்.

தாழ்த்தப்பட்ட, பழங்குடியின மாணவர்களுக்கு பி.ஏ., பி.காம்., பி.எஸ்ஸி., பி.சி.ஏ., பி.டி.எஸ்., பி.எஸ்.டபிள்யூ. ஆகியவற்றில் சேருவதற்குக் கட்டண விலக்கு அளிக்கப்படுகிறது.சி.ஏ., காஸ்ட் அக்கவுண்ட்ஸ்,ஐ.சி.எஸ்.ஐ. நிறுவனத்தின் கூட்டு ஒப்பந்தத்தின் மூலம் மாணவர்களுக்கான சிறப்பு பி.காம். பாடத்திட்டம் உள்ளது. இதற்கான விண்ணப்பத்தின் விலை ரூ. 750. மேலும்,விவரங்களுக்கு 96881 70709, 04322- 260103, 261 801, 260 802 ஆகிய எண்களிலும், மதுரை மண்டல அலுவலகத்தை 0452 -2380733, 2380775 என்ற எண்களிலும் தொடர்பு கொள்ளலாம் என்றார்.

ஆசிரியர்-அரசுஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க நேற்று (27-12-2016) தமிழகத்தில் சரித்திர சாதனைகள் படைத்த " ஜேக்டோ-ஜியோ " மீண்டும் உதயமானது.

ஆசிரியர்-அரசுஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்க நேற்று (27-12-2016) தமிழகத்தில் சரித்திர சாதனைகள் படைத்த " ஜேக்டோ-ஜியோ " மீண்டும் உதயமானது.💥தமிழக முதலமைச்சரை சந்தித்து கோரிக்கை மனு

அளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது...
💥அடுத்த கூட்டம் 10:01:2017 -ல் கூட்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது... 
💥10:01:2017 கூட்டத்தில் வரலாற்று சிறப்பு மிக்க போராட்டகளம் உருவாக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது




மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை: அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

மார்ச் 31-க்கு பிறகு பழைய ரூபாய் நோட்டு வைத்திருந்தால் சிறை: அவசரச் சட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்

செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை மார்ச் 31-ம் தேதிக்கு பிறகு வைத்திருப்பவர்களுக்கு சிறைத் தண்டனை உட்பட அபராதம் விதிக்க வகை செய்யும் அவசரச் சட்டப் பிரகடனத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுகள் வாபஸ் பெறப்பட்டது. செல்லாது என அறிவிக்கப்பட்ட 500, 1000 ரூபாய் நோட்டுகளை டிசம்பர் 30-ம் தேதி வரை வங்கிகளில் செலுத்தலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்த நோட்டுகளை வரும் டிசம்பர் 31ம் தேதி வரை வங்கியில் டிபாசிட் செய்யலாம் என அறிவிக்கப்பட்டது. மேலும் ஜனவரி 1 முதல் மார்ச் 31 வரை குறிப்பிட்ட ரிசர்வ் வங்கி கிளைகளில் மட்டும் செலுத்த முடியும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், பிரதமர் மோடி தலைமையில் புதனன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் பழைய நோட்டுகளை டெபாசிட் செய்யும் காலக்கெடு தொடர்பான அவசரச்சட்டம் இயற்றும் பிரகடனத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. 

இந்நிலையில், மார்ச் 31-க்குப் பிறகு பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை ஒவ்வொன்றிலும் 10 தாள்களுக்கு மேல் வைத்திருப்பது குற்றமாக கருதப்படும். இதன் படி அபராதம் சில சந்தர்ப்பங்களில் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை வரை அளிக்கப்படலாம்.