Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 3 January 2017

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பு: முதல்வர் அறிவிப்பு

பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, முதல்வர் ஓ. பன்னீர் செல்வம் தமிழக மக்களுக்கு சிறப்பு பரிசுத் தொகுப்பை அறிவித்துள்ளார். அவர் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: -

அரிசிக்கான குடும்ப அட்டைகள் மற்றும் காவலர் குடும்ப அட்டைகளுக்கும் முகாம்களில் தங்கியுள்ள தமிழர் குடும்பங்களுக்கும் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, முந்திரி, திராட்சை, ஏலக்காய், மற்றும் இரண்டு அடி நீளக் கரும்புத்துண்டு அடங்கிய சிறப்பு பொங்கல் பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இந்த பொங்கல் பரிசுத்தொகுப்பு பொங்கல் பண்டிகைக்கு முன்னதாக அந்தந்த நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் 1 கோடியே 80 லட்சம் குடும்பங்கள் பயன் பெறும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சாதி, மதத்தின் பெயரால் ஓட்டு கேட்பது சட்டவிரோதம் சுப்ரீம் கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு!!!

சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி தேர்தலில் ஓட்டு கேட்பது சட்டவிரோதமானது என்று சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு அளித்தது.

மேல்முறையீடு

சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பது தொடர்பாக சுப்ரீம் 
கோர்ட்டு 1995-ம் ஆண்டு அளித்த தீர்ப்பில் “இந்துத்துவா அல்லது இந்து மதம் என்பது இந்திய துணைக் கண்டத்தில் வசிக்கும் மக்களின் வாழ்வியல் முறை ஆகும். ஒரு வேட்பாளர் அதை சேர்ந்தவராக இருப்பதால் மட்டுமே தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்திவிடாது” என்று கூறி இருந்தது.

இதை மறு பரிசீலனை செய்யக்கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இதேபோல் இதனுடன் தொடர்புடைய மேலும் பல வழக்குகள் சுப்ரீம் கோர்ட்டில் தொடரப்பட்டது.

இந்த வழக்குகள் அனைத்தும் ஒன்றாக இணைக்கப்பட்டு 2014-ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட்டில் விசாரணைக்கு வந்தபோது, 7 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வு விசாரணைக்கு மாற்றி உத்தரவிடப்பட்டது.

ஊழல் போன்றதா?

இந்த வழக்குகளை தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர் தலைமையில் எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ், யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 7 நீதிபதிகள் கொண்ட அமர்வு விசாரித்தது வந்தது.

மதத்தின் பெயரில் ஓட்டு கேட்பது மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின் 123-வது பிரிவின்படி ஊழல் போன்றதா? என்ற கேள்வியின் அடிப்படையில் விசாரணை நடந்தது. இதன் இறுதி விசாரணை கடந்த அக்டோபர் மாதம் 27-ந் தேதி முடிந்து நீதிபதிகள் தீர்ப்பை ஒத்திவைத்தனர்.

பெரும்பான்மை நீதிபதிகள் அடிப்படையில் தீர்ப்பு

இந்த வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு நேற்று தீர்ப்பு அளித்தது. 7 நீதிபதிகள் அமர்வில், தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்குர், எம்.பி.லோகுர், எஸ்.ஏ.பாப்டே, எல்.என்.ராவ் ஆகிய 4 நீதிபதிகளும் தேர்தலின்போது, சாதி மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்கக்கூடாது. அதுவும் ஒரு ஊழல் நடவடிக்கைதான் என்றும் கருத்து தெரிவித்தனர்.

மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 123-(3)வது பிரிவில் மதம் என்று கூறப்பட்டு இருக்கும் வார்த்தை வேட்பாளரின் மதத்தை மட்டுமே குறிப்பதாகும் என்று நீதிபதிகள் யு.யு.லலித், ஏ.கே.கோயல், டி.ஒய்.சந்திரசூட் ஆகிய 3 நீதிபதிகளும் முந்தைய தீர்ப்புக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தனர்.

இதனால் பெரும்பான்மை நீதிபதிகள் அளித்த தீர்ப்பு இறுதி தீர்ப்பாக அமைந்தது.

பெரும்பான்மை நீதிபதிகள் தங்களுடைய தீர்ப்பில் கூறி இருந்ததாவது:-

சட்டவிரோதம்

தேர்தல் சட்டவிதிமுறைகளை மிகவும் விரிவாகவும், நுணுக்கமாகவும் ஆய்வு செய்தபோது, மதம், இனம், சாதி, வகுப்பு அல்லது மொழியின் பெயரால் ஓட்டு கேட்பதும், மத, தேசிய சின்னங்களை அடையாளப்படுத்தி ஓட்டு கேட்பதும், வேண்டுகோள் விடுப்பதும் ஒரு ஊழல் நடவடிக்கைதான் என்பது உறுதியாகிறது.

தவிர இது எந்தவொரு வேட்பாளருக்கு எதிராக அமைந்தாலும் அது தேர்தல் நடவடிக்கைகளை பாதிக்கும் செயலாகத்தான் கருதப்படும். எனவே சாதி, மதம், மொழி ஆகியவற்றின் பெயரால் அரசியல் கட்சிகளோ, வேட்பாளர்களோ, அவருடைய முகவர்களோ ஓட்டு கேட்க கூடாது.

தேர்தல் என்பது மதசார்பற்ற நடவடிக்கை ஆகும். எனவே மக்கள் பிரதிநிதித்துவ சட்டத்தின்படி வாக்காளர்களிடம் மதம், சாதி, இனம், மொழி ஆகியவற்றை பயன்படுத்தி ஓட்டு கேட்பது சட்டவிரோதமானது ஆகும்.

அனுமதிக்க கூடாது

தேர்தலை நாம் சாதி, மதத்தின் அடிப்படையில் நடத்த அனுமதிக்க கூடாது. தேர்ந்தெடுக்கப்படும் மக்கள் பிரதிநிதியும் மதசார்பற்றவராகத்தான் செயல்படவேண்டும்.

சாதி, மதத்தின் பெயரை பயன்படுத்தி ஓட்டு கேட்பவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவேண்டும். தேர்தல் நடைபெறும்போது தேர்தல் கமிஷன், மத்திய மற்றும் மாநில அரசுகள் இதை உன்னிப்பாக கண்காணிக்க வேண்டும். இதேபோல் தேர்தல் பிரசாரங்களும் சாதி, மத அடிப்படையில் நடக்க அனுமதிக்க கூடாது.

மதத்தின் பழக்க வழக்கங்களையும், அவற்றை பிரசாரம் செய்வதற்கும் சுதந்திரம் உண்டு. அதே நேரம் மதத்தை தேர்தல் காரணங்களுக்காக எந்த விதத்திலும் பயன்படுத்தக் கூடாது.

இவ்வாறு அந்த தீர்ப்பில் கூறப்பட்டு இருந்தது.

கூடுதல் பணி நேரம் பார்த்ததற்கு சம்பளம் கேட்கிறது வங்கி ஊழியர்கள் சங்கம்!!!

பழைய 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று பிரதமர் நரேந்திர மோடி கடந்த நவம்பர் 8-ம் தேதி அதிரடியாக அறிவித்தார். அதற்கு பதிலாக புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகள் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.இந்த அறிவிப்பை தொடர்ந்து நாட்டில் பணப்புழக்கம் கடுமையாக பாதிக்கப்பட்டது.

வங்கிகளில் இருந்து பணம் எடுப்பதற்கு அதிக அளவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டது.அறிவிப்பு வெளியானது முதல் கடந்த 50 நாட்களுக்கு மேலாக நாடு முழுவதும் உள்ள வங்கிகள் மற்றும் ஏ.டி.எம்-களில் மக்கள் கூட்டம் அலைமோதியது.வங்கிகளில் கூட்டம் அலைமோதியதால் ஊழியர்கள் தங்களது பணி நேரத்திற்கும் மேலாக பல மணி நேரம் கணக்கில்லாமல் வேலை செய்தனர்.இந்நிலையில், ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கை அமலில் இருந்த 50 நாட்களில் கூடுதலாக பணியாற்றிய நேரத்திற்கு சம்பளம் வழங்க வேண்டும் என்று வங்கி ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இது குறித்து பாரதிய மஸ்தூர் சங்கத்தின் துணை அமைப்பான தேசிய வங்கி ஊழியர்கள் சம்மேளனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கடந்த 50 நாட்களில் வங்கி ஊழியர்கள் 12-18 மணி நேரம் பணி புரிந்தனர். ஆனால், சில வங்கிகள் மட்டும் தான் கூடுதலாக பணியாற்றிய நேரத்தில் ஓவர் டைமாக ஏற்றுக் கொண்டது. வேலை நேரத்தை தாண்டி கூடுதலாக பணியாற்றியதை ஓவர் டைமாக வங்கி நிர்வாகங்கள் ஒப்புக் கொள்ள வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.ரூபாய் நோட்டு ரத்து நடவடிக்கையின் போது வங்கி ஊழியர்கள் கடுமையாக பணியாற்றியதாக பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்த அடுத்த நாளிலே இத்தகைய கோரிக்கை எழுந்துள்ளது

ஜே.இ.இ., நுழைவு தேர்வு விண்ணப்பிக்க அவகாசம் !!

ஜே.இ.இ., நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிக்க, கூடுதலாக இரு வாரம் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., - ஐ.ஐ.ஐ.டி., போன்ற உயர்கல்வி நிறுவனங்களில், பி.இ., - பி.டெக்., போன்ற இன்ஜி., படிப்பில் சேர, மத்திய இடைநிலை கல்வி வாரியமான, சி.பி.எஸ்.இ., நடத்தும், ஜே.இ.இ., பிரதான நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். வரும் கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கைக்காக, ஏப்ரலில்,

ஜே.இ.இ., தேர்வு நடத்தப்பட உள்ளது. இதற்கு, டிச., 3ல், ஆன்லைன் விண்ணப்ப பதிவு துவங்கியது; நேற்றுடன் பதிவு முடிவதாக இருந்தது. ஆனால், பெரும்பாலான மாநிலங்களில், மாணவர்கள் உரிய நேரத்தில் விண்ணப்பிக்க முடியாத நிலை ஏற்பட்டதால், விண்ணப்பிக்கும் அவகாசத்தை நீட்டிக்க, கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, ஜே.இ.இ., தேர்வு, ஆன்லைன் விண்ணப்ப பதிவுக்கான அவகாசம், ஜன., 16 வரை, இரு வாரங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணத்தை, ஜன., 17 வரை செலுத்தலாம்.

தொடக்க/உயர்தொடக்க நிலை மாணவர்களுக்கான வாக்கியத்தில் அமைத்து எழுதுதல் - பயிற்சி ஏடு

THANKS : MR.RAGHUPATHY

CLICK HERE - SIMPLE SENTENCE FORMATION FOR PRIMARY/UPP.PRIMARY STUDENTS

CPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு...


1.  CPS MISSING CREDIT CLEAR செய்த ஆசிரியர்கள் கவனத்திற்கு


படம் -1ல் 3வது வரியில் "Finalized by DDO's என்று உள்ளது. அவ்வாறு செய்தால் MISSING CREDIT காண்பிக்ககாது.
கருவூலத்தில் பட்டியல் வாங்கிக் கொள்வார்கள். ஆனால் MISSING CREDIT உங்கள் கணக்கில்ஏறாது. DDO level லேயே உள்ளது.

2. Missing credit > processing credits -ல் பார்த்தால் இருக்கும். அதை Forward to treasury கொடுத்தால் படம்-2ல் 3வது வரியில் உள்ளது போல் Entries forwarded to Treasury Accountants என வரும்.

3. Missing credit >Subscriber MC Status ல் பார்த்தால் "Entries Authorized by GDC" என்று வந்தால் உங்கள்  CPS MISSING CREDIT CLEAR ஆகிவிட்டது என்பதை அறியலாம்.

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ல் தாக்கல்

2017-18ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் பிப்ரவரி 1-ம் தேதி தாக்கல் செய்யப்படுகிறது. பட்ஜெட் கூட்டத்டொடர் ஜனவரி 31-ம் தேதி துவங்கி பிப்ரவரி 9-ம் தேதி வரை நடைபெறுகிறது. ஜனவரி 31-ம் தேதி பொருளாதார ஆய்வறிக்கை தாக்கல் செய்யப்படுகிறது.
பிப்ரவரி 1-ம் தேதி மத்திய பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. பிப்ரவரி 2-ம் தேதி பட்ஜெட் மீதான விவாதம் தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை 3 கட்டங்களாக நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் முதற்கட்டமாக ஜனவரி 31-ம் தேதி முதல் பிப்ரவரி 9-ம் வரை நடத்தப்படுகிறது.

ஜி.எஸ்.டி. மசோதா தாக்கல் செய்வதற்காக பட்ஜெட் முன்கூட்டியே தாக்கல் செய்யப்பட உள்ளது. மேலும் 92 ஆண்டுககளாக ரயில்வேதுறைக்கென தனி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வந்தது. இந்த ஆண்டு முதல் பொது பட்ஜெட்டிலேயே ரயில்வே பட்ஜெட்டையும் சேர்த்து தாக்கல் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பட்ஜெட் கூட்டத்தொடர் குறித்து ராஜ்நாத் தலைமையில் நடந்த கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டது.

கணினி ஆசிரியர்களுக்கு ஓர் முக்கிய அறிவிப்பு...!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கணினி ஆசிரியர் பணிக்காப் பொதுக் கூட்டம் 8.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.அனைவரும் வாரீர்.
இடம்:விஜயா மால்,162 vettavalam road,By pass road corner ,திருவண்ணாமலை .

நேரம்:9.00 காலை மணி.
மதிய உணவு  வழங்கப்படும்.முக்கிய 

குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டுகணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும்எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,பி.எட் சான்றிதழ் நகல்,வேலைவாய்ப்பு அட்டை நகல்,இவற்றுடன் தங்களின்சுயவிபரம்  இணைத்து கொண்டுவரவும்.

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:

தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.

தொடர்புக்கு:
9150734191,9176093062,9751894315.

வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச் செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு  பி.எட்  கணினி அறிவியல் வேலையில்லாபட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
பதிவு எண்:655/2014.

DA from January 2017 will be 4% or 5% – Dearness Allowance Estimation

DA from January 2017 will be 4% or 5% based on Consumer Price Index (Industrial Workers) from January 2016 to December 2016 – Net increase in DA with effect from January 2017 is estimated to be 2% or 3%

All India Consumer Price Index (Industrial Workers) for the month of November 2016 has been relased by Ministry of Labour few days back.
Click here to read the official press release of Labour Ministry for AICPI (IW) for the month of November 2016.

What do we need for estimating DA from January 2017 ?

After implementation of 7th Pay Commission report, same inflation index i.e Consumer Price Index (Industrial Workers) with base year 2001=100, which was used for 6th Pay Commission Pay, is adopted for determining Dearness Allowance of Central Government Employees and Pensioners.
The only difference in DA calculation as far as DA from January 2016 will be, will be taking the Average of CPI-IW recorded in 2015 in the place of Average of CPI-IW recorded in 2005 which was used in 6th CPC DA calculation

Dearness Allowance payable after implementation of 7th Pay Commission= (Avg of CPI-IW for the past 12 months – Average of CPI-IW recorded in 2015)*100/(Average of CPI-IW recorded in 2015)In order to determine DA with effect from January 2017, based on the above formula we need Consumer Price Index for the months from January 2016 to December 2016
Now that Consumer Price Index for the months from January 2016 to November 2016 is available, we have made an attempt to estimate Dearness Allowance applicable to Central Government Employees and Pensioners with effect from 1st January 2016, by assuming the possible CPI (IW) for the month of December 2016.
MonthActual AICPI-IWJan-2016269Feb-2016267Mar-2016268Apr-2016271May-2016275Jun-2016277Jul-2016280Aug-2016278Sep-2016277Oct-2016278Nov-2016277Dec-2016Yet to be released

Estimation of DA from 1st January 2017:

Scenario 1 : No increase in AICPI (IW) in December 2016

AICPI (IW) for November 2016 is 277. If AICPI (IW) for December 2016 remains the same as November 2016, there will be additional 1% increase in DA from January 2017 which would make overall DA as 5%.
DA with effect from 1st January 2017= [ (269+267+268+271+275+277+280+278+277+278+277+277)/12]-(261.4)X100/261.4
= 5 %

Scenario 2: Decrease in AICPI (IW) in December 2016

Even if All India Consumer Price Index (Industrial Workers) decreases by 31 point and pegged at 246 in the month of December 2016, DA from January 2017 will be 4% . At the same time even for 1 point decrease in the index for December 2016 will result in lesser DA increase from January 2017 compared to Sceanrio 1 in which index is unaltered in Dec 2016.
DA with effect from 1st January 2017= [ (269+267+268+271+275+277+280+278+277+278+277+246)/12]-(261.4)X100/261.4
= 4 %
DA with effect from 1st January 2017= [ (269+267+268+271+275+277+280+278+277+278+277+276)/12]-(261.4)X100/261.4
= 4 %

Scenario 3 : Increase in AICPI (IW) in December 2016

It is very interesting to note here that, even for increase in consumer price index in the month of December up to 31 points, i.e Increase in AICPI (IW) for December 2016 to 308 points from 277 points in November 2016, DA from January 2017 will be 5% only.
DA with effect from 1st January 2017= [ (269+267+268+271+275+277+280+278+277+278+277+308)/12]-(261.4)X100/261.4
= 5 %
The other scenario that increase of more than 31 points in AICPI (IW) in the month of December 2016 for making DA with effect from January 2017 more than 5% is most unlikely.
Hence, it is more logical to conclude that DA from January 2017 will be either 4% or 5%

பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் திறனறித் தேர்வு தமிழில் எழுதிய மாணவர்கள் 20 சதவீதம் தேர்ச்சி.

தேசிய கல்வியியல் மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தால்(என்.சி.இ.ஆர்.டி) நடத்தப்பட்ட, பள்ளி மாணவர்களுக்கான அறிவியல் விழிப்புணர்வுமற்றும் திறனறித் தேர்வில் தமிழ் வழியில் படித்து தமிழிலேயே தேர்வு எழுதிய 20 சதவீதம் பேர் தேர்வாகி உள்ளனர். 
6 முதல் 11-ம் வகுப்பு வரை பயிலும் பள்ளி மாணவர்கள் மத்தியில் அறிவியல் ஆராய்ச்சி மனப்பான்மையை ஊக்குவிப்பதற்காக தேசிய அளவில் அறிவியல் விழிப்புணர்வு மற்றும் திறனறித் தேர்வுகள் ஆண்டுதோறும் நடத்தப்படுகின்றன. இதில் முதல் கட்டமாக ஒரு வகுப்புக்கு 20 பேர் வீதம் ஒவ்வொரு மாநிலத்திலும் 120 பேர் தேர்வு செய்யப்படுவர். இதன்படிகடந்த நவம்பர் 20-ம் தேதி நடத்தப்பட்ட முதல் கட்ட தேர்வை இந்திய அளவில் சுமார் 98 ஆயிரம் பேரும் தமிழக அளவில் சுமார் 9,500 பேரும் எழுதினர். தற்போது இந்தத் தேர்வு முடிவுகள் வெளியாகி உள்ளன. இதில் தேர்வாகி இருக்கும் 120 பேரில் 60 பேர் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள்.

இந்தத் தேர்வை பள்ளிகள் மூலம் அல்லாது தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து எழுதியவர்கள் 800 பேர். இவர்களில் நாற்பது பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ் வழியில் கற்று தமிழிலேயே தேர்வை எழுதியவர்களில் 25 பேர் தேர்வாகியுள்ளனர். இது மொத்தத் தேர்ச்சியில் சுமார் 20 சதவீதமாகும் இதில் தேர்வாகி இருக்கும் 120 பேரில் 60 பேர் சென்னை மண்டலத்தைச் சேர்ந்தவர்கள். இந்தத் தேர்வை பள்ளிகள் மூலம் அல்லாது தனிப்பட்ட முறையில் விண்ணப்பித்து எழுதியவர்கள் 800 பேர். இவர்களில் நாற்பது பேர் தேர்வாகி உள்ளனர். தமிழ் வழியில் கற்று தமிழிலேயே தேர்வை எழுதியவர்களில் 25 பேர் தேர்வாகியுள்ளனர். இது மொத்தத் தேர்ச்சியில் சுமார் 20 சதவீதமாகும் எழுத்துத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான அடுத்தகட்ட செய்முறை தேர்வுகள் ஜனவரி7, 8 தேதிகளில் ஈரோட்டில் நடக்கின்றன.

இதுகுறித்து  பேசிய இந்தத் தேர்வுகளுக்கான தமிழக ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் கண்ணபிரான், "செய்முறை தேர்வுகள் 120 மாணவருக்கும் தனித்தனியாக நடத்தப்பட்டு அவர்களில் இருந்து 18 பேர் தேர்வு செய்யப்படுவார்கள். அவர்களுக்கு ரொக்கப் பரிசும் சான்றிதழ்களும் வழங்கப்படும். அந்த 18 பேரில் ஒவ்வொரு வகுப்புக்கும் முதல் இரண்டு இடங்களை பிடித்தவர்கள் தேர்வு செய்யப்பட்டு அந்த 12 பேரும் அடுத்தகட்டமாக தேசிய அளவில் டெல்லியில் நடத்தப்படும் திறனறி பயிற்சி முகாமுக்கு அனுப்பி வைக்கப்படுவர்'' என்று சொன்னார்.

7-வது ஊதியக் குழு பரிந்துரை அமல்படுத்தக் கோரிதலைமைச் செயலகத்தை முற்றுகையிட மாநகராட்சி ஊழியர்கள் முடிவு.

சென்னை மாநகராட்சி அனைத்து துறை ஊழியர்கள் சங்க பொதுச் செயலர் எஸ்.புருஷோத்தமன் கூறியதாவது:

மத்திய அரசு அறிவித்த 7-வது ஊதியக் குழு பரிந்துரை மத்திய அரசுத்துறைகளில் அமல் படுத்தப்பட்டுள்ளது.
தமிழகத் தில் இதுவரை அமல்படுத்தப் படவில்லை. வழக்கமாக மத்திய அரசு அறிவிக்கும் பரிந்துரையை தமிழக அரசு ஏற்று அறிவிக்கும். அதன்பிறகு அதில் உள்ள குறைபாடுகளை போக்க குழு அமைத்து ஆய்வு செய்யும். ஆனால் இந்த முறை ஊதியக் குழு பரிந்துரையை அமல்படுத் தாமல், தமிழக அரசு குழு அமைத் துள்ளது. அந்த குழு செயல் படுகிறதா என்றே தெரியவில்லை.அதனால், 7-வது ஊதியக் குழு பரிந்துரையை தமிழகத்தில் உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

பழைய ஓய்வூதிய திட்டத்தைமீண்டும் அமல்படுத்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, வரும் ஜனவரி 10-ம் தேதி காலை 11 மணிக்கு தலைமைச் செயலகத்தை முற்றையிட திட்ட மிட்டிருக்கிறோம். அதனைத் தொடர்ந்து முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்தை சந்தித்து கோரிக்கை மனுவும் அளிக்க இருக்கிறோம் என்றார்.

எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 ஒருங்கிணைந்த மதிப்பெண் சான்றிதழ்

அரசுத்தேர்வுகள் இயக்குநர் தண்.வசுந்தராதேவி நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:

கடந்த ஆண்டு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் நடைபெற்ற பிளஸ் 2, எஸ்எஸ்எல்சி துணைத் தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் நவம்பர் 3 முதல் தற்காலிக மதிப்பெண் சான்றிதழை ஆன்லை னில் பதிவிறக்கம் செய்துகொள்ள ஏற்பாடு செய்யப்பட்டது.
அதைத் தொடர்ந்து, செப்டம்பர், அக்டோபர் மாதங்களில் பிளஸ்2, எஸ்எஸ்எல்சி துணைத்தேர்வுகளை எழுதி அனைத்துப் பாடங்களிலும் தேர்ச்சி பெற்றவர்கள் ஒருங்கிணைக் கப்பட்ட அசல் மதிப்பெண் சான் றிதழை நாளை காலை 10 மணி முதல், தாங்கள் தேர்வெழுதிய தேர்வு மையத்திலேயே பெற்றுக் கொள்ளலாம். இதர தேர்வர்களுக்கு செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதத்தில் தேர்வெழுதிய பாடங் களுக்கான மதிப்பெண் சான்றிதழ் மட்டுமே வழங்கப்படும்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

குழந்தைகள் தனியாக தவித்தால் , ஆதார் மையத்திற்கு அழைத்து சென்று பெற்றோரை கண்டுபிடிக்கலாம் !!

நீங்கள் எங்காவது  சென்று வரும்போது பெற்றோர்களை பிரிந்து அழுது கொண்டிருக்கும்  சிறுகுழந்தைகள்  அவர்களது பெற்றோர் பற்றிய விபரம் சொல்லத்தெரியாத அல்லது சொல்ல முடியாத நிலையில் காண நேர்ந்தால் அவர்களை அருகில் உள்ள ஆதார்

மையத்திற்கு அழைத்து சென்று அவர்களது விரல் ரேகை மற்றும் கருவிழி ஸ்கேன் செய்தால் அந்த குழந்தையின் பெற்றோரை எளிதில் அடையாளம் கண்டுபிடித்து அவர்களிடம் குழந்தையை சேர்த்துவிடலாம்.

நல்ல விசயம் நம்மலும் பகிர்ந்து கொள்வோமே..,

EMIS Updation..

*EMIS பதிவேற்றம் - 2017*

முன்னரே பதிவேற்றப்பட்ட அனைத்து வகுப்பு மாணவர்களின் தரவுகளை,
🔹புதுப்பித்துக்கொள்ள (UPDATE)
🔹வெளியேற்ற (TRANSFER)
🔹சேர்த்துக்கொள்ள (ADMIT)EMIS தளத்தில் தற்போது அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

ஆனால், 10, 11 & 12-ம் வகுப்புகளுக்கு மட்டுமே மாணவர்களைப் புதிதாக நேரடிப் பதிவேற்றம் செய்ய இயலும்

பள்ளிகளில் வகுப்பறை கட்ட மத்திய அரசு ரூ.89 கோடி ஒதுக்கீடு

பத்தாம் வகுப்பு வரை, கட்டாய கல்வி வழங்க, அனைவருக்கும் கல்வி இயக்கம் மற்றும் அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்கம் என, இரு திட்டங்கள் அமலில் உள்ளன.
இதில், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டமான, ஆர்.எம்.எஸ்.ஏ., திட்டத்தில், தரம் உயர்த்தப்படும் நடுநிலைப் பள்ளிகளில், கூடுதல் வகுப்பறைகள், கழிப்பறைகள், ஆய்வகங்கள் கட்ட, மத்திய அரசு சார்பில், 60 சதவீத நிதி வழங்கப்படுகிறது.அதன்படி, 540 கோடி ரூபாய் கோரி, மத்திய அரசுக்கு, தமிழக அரசு கடிதம் அனுப்பியது. அதை பரிசீலித்த மத்திய அரசு, முதற்கட்டமாக, 89 கோடி ரூபாய் நிதி ஒதுக்கியுள்ளது. அதில், 550 பள்ளிகளில், புதிய வகுப்பறைகள், ஆய்வகங்கள் அமைக்கப்பட உள்ளன

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் ஜன.5-இல் வெளியீடு

தமிழகம் முழுவதும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்வியாழக்கிழமை (ஜன.5) வெளியிடப்படுகிறது. அனைத்து வட்டாட்சியர் அலுவலகங்கள், மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் இந்த வாக்காளர் பட்டியல் மக்களின் பார்வைக்கு வைக்கப்படும் என தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்
.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கலுக்கான கால அவகாசம் கடந்த செப்டம்பர் 30 -ஆம் தேதியுடன் முடிவடைந்தது. இதைத்தொடர்ந்து, பெயர் சேர்ப்பு -நீக்கலுக்காக அளிக்கப்பட்ட 18 லட்சத்துக்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டன.

புதிதாக 15 லட்சம் பேர்:

 வாக்காளர் பட்டியலில் திருத்தங்கள் செய்யப்பட்டுள்ள நிலையில், புதிய வாக்காளர் பட்டியல் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு வெளியிடப்படுகிறது. இந்தப் பட்டியலில் மொத்தம் 5.92 கோடி வாக்காளர்கள் இருப்பதாகவும், புதிதாக 15 லட்சம் வாக்காளர்கள் சேர்க்கப்பட்டிருப்பதாகவும் தேர்தல் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.சென்னை மாநகராட்சியில் மண்டல அலுவலகங்களிலும், பிற மாவட்டங்களில் வட்டாட்சியர் அலுவலகங்களிலும் இந்தப் புதிய வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டு, அவை பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.