Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 11 January 2017

ஜாக்டோ -ஜியோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்....

ஜாக்டோ -ஜியோ கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்....
1).CPS ஐ நீக்கி GPFஐ  கொண்டுவரஅடுத்த கட்ட போராட்டம்பற்றிவிவாதிக்கப்பட்டது...இதற்காக நம்ஜாக்டோஜியோபொறுப்பாளர்கள் மாண்புமிகு தமிழகமுதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஐயாஅவர்களை விரைவில்சந்திக்கவுள்ளனர்.

2).தமிழகத்தில்  நிலவும்விவசாய வறட்சி நிவாரண நிதியாகஒருநாள் ஊதியம் அனைத்துஅரசு ஆசிரியர்கள் மற்றும் அனைத்துவிதமானஅரசு ஊழியர்களும் பிடித்தம் செய்து அரசாங்கத்திடம்ஒப்படைக்கப்படுகிறது.

3)ஏழாவது ஊதிய குழுஉடனடியாக அமல்படுத்தி இடைகாலநிவாரண

நிதியாக20% வழங்கவேண்டும். 

4)பொங்கல் போனஸ் அரசாணை இன்று வெளியாகும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது...

வறட்சி நிவாரணத்துக்கு ஒரு நாள் ஊதியம்: ஜாக்டோ - ஜியோ அறிவிப்பு.

தமிழக வறட்சி நிவாரணத்துக்கு தங்கள் ஒரு நாள் ஊதியத்தை வழங்குவது என அரசு ஊழியர்கள் - ஆசிரியர்கள் சங்கங்களைக் கொண்ட ஜாக்டோ - ஜியோ அமைப்பு முடிவெடுத்துள்ளது.
தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கம் மற்றும் பல்வேறு அரசு ஊழி யர் சங்கங்கள், ஆசிரியர் அமைப்பு கள் இணைந்து ஜாக்டோ - ஜியோ அமைப்பாக உருவாகியுள்ளது. இதன் பிரதிநிதிகள் கூட்டம், சென்னை பல்கலைக்கழக கூட்ட அரங்கில் நேற்று நடந்தது.இதில், ஜாக்டோ - ஜியோவின் ஒருங்கிணைப்பாளராக தமிழ்நாடு தலைமைச் செயலக சங்கத்தின் தலைவர் ஜெ.கணேசன் தேர்வு செய்யப்பட்டார்.

கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து ஜெ.கணேசன் கூறியதாவது:

தமிழகத்தில் அனைத்து மாவட் டங்களும் வறட்சியால் பாதிக்கப் பட்டுள்ளன. வறட்சி நிவாரணத்துக் காக ஜாக்டோ -ஜியோ சங்கங் களில் உள்ள ஊழியர்கள் தங்களது ஒருநாள் ஊதியத்தை வழங்க முடிவெடுத்துள்ளோம். இது உத்தேசமாக ரூ.40 கோடி அளவுக்கு வரும்.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

புதிதாக TET தேர்வு கிடையாது - ஏற்கனவே TET தேர்ச்சி பெற்றவர்கள் கொண்டு 8000 பணியிடங்கள் நிரப்பப்படும் - பள்ளி கல்வித்துறை அமைச்சர்மாஃபா பாண்டியராஜன் அறிவிப்பு

தமிழகத்தில் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார்.

சென்னை:தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் சென்னையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் காலியாக உள்ள 8 ஆயிரத்துக்கும் அதிகமான ஆசிரியர் பணியிடங்கள் உடனே நிரப்ப ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் ஆசிரியர் பணியிடங்களில் அமர்த்தப்பட உள்ளனர். எனவே புதிதாக ஆசிரியர் தகுதி தேர்வு நடத்த தேவையில்லை.மேலும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் அல்லாத பணியிடங்களும் நிரப்பப்படும்.

மாணவர்கள் மத அடையாளங்களுடன் பள்ளிக்கு வருவதில் தவறில்லை. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க கூடாது என்று ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

தமிழக அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவிப்பு...

அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு தமிழக அரசு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவித்துள்ளது. இது குறித்து அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் ஏ மற்றும் பி பிரிவு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ரூ.3000 உச்ச வரம்பில் பொங்கல் போனஸ் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியதாரர்கள் மற்றும்  குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு  ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றும் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.

முன்னாள் கிராம நிர்வாக அலுவலர்களுக்கும் ரூ.500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது, அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதார்களுக்கு பொங்கல் போனஸ் வழங்குவதால் அரசுக்கு ரூ.325 கோடியே 20 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும் எனவும் தமிழக அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Top 5 illegal Apps Which Land You In Jail Use Carefully | இந்த அப்ப்ளிகே...

DSE - Online Promotion Counselling for SPL / SG Asst to BT Asst

DSE - தமிழ்நாடு பள்ளிக்கல்வி சார்நிலைப்பணி - அரசு / நகராட்சி உயர் மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் இடைநிலை/ சிறப்பாசிரியர் பணியிலிருந்து பட்டதாரி ஆசிரியர் (அனைத்துப் பாடம் ) பதவி உயர்வு கலந்தாய்வு 01.01.2016 அன்றைய நிலவரப்படி (Promotion panel ) கலந்தாய்வுக்கு (online councelling ) அழைக்கப்பட வேண்டியவர்கள் எண்ணிக்கை குறித்து இணை இயக்குனர் அறிவுரைகள்!! 

பான் கார்டு இல்லாதவர்கள் கவனத்துக்கு !

பிப்ரவரி 28-ம் தேதிக்குள் வங்கி கணக்கு வைத்திருப்போர் அனைவரும் பான் எண்ணை பதிவு செய்திருக்க வேண்டும் என வருமான வரித்துறை அறிவித்திருந்தது. 

 
ஏற்கெனவே பதிவு செய்திருப்போருக்கு பிரச்னை இல்லை. கறுப்புப் பணம் மற்றும் வரி ஏய்ப்பை தவிர்க்கவே இந்த நடவடிக்கை என்று வருமான வரித்துறை தெரிவித்துள்ளது.

வங்கி கணக்கு வைத்திருந்தாலும் இதுவரை பான்கார்டு இல்லாதவர்களுக்கு, Form 60-ஐ வழங்க வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. ஆன்லைனிலும் Form-60 படிவத்தை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். Form 60 படிவத்தில் முகவரி, பிறந்த தேதி உள்ளிட்ட தகவல்களுடன் முகவரி தொடர்புடைய சான்றுகள் மற்றும் புகைப்படத்தையும் இணைத்து வங்கியில் சமர்பிக்க வேண்டும்.

ஆன்லைன் Form 60 படிவத்தை பெற, வங்கியின் பெயருடன் Form 60 என டைப் செய்தால் படிவம் PDF ஆக வரும்

பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு செய்முறை தேர்வு : தேர்வுத்துறை புது உத்தரவு

பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 படிக்கும் மாணவர்களுக்கான பொதுத் தேர்வுகள் மார்ச் மாதம் தொடங்க உள்ளது. இவர்களுக்கு பிப்ரவரியில் செய்முறைத் தேர்வுகள் தொடங்கும். இதற்கிடையே, இந்த  ஆண்டு குறிப்பிட்ட தேதியில் தேர்வு முடிவுகளை வெளியிட வேண்டும் என்பதில் தேர்வுத்துறை முனைப்புக்காட்டி வருகிறது. அதனால் மார்ச் மாதமே பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வுகளை நடத்தும் அறிவிப்பை ஏற்கனவே வெளியிட்டுள்ளது.

மேலும், செய்முறைத் தேர்விலும் பத்தாம் வகுப்பு பிளஸ் 2 மாணவர்கள் காலை, மாலை என பங்கேற்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு வரை செய்முறைத் தேர்வில் 24 பேர் கொண்ட குழுக்களாக மாணவர்கள் பிரிக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு ஒரு குழு என்ற வகையில் தேர்வு நடத்துவார்கள். ஆனால் இந்த ஆண்டு விரைவாக செய்முறைத் தேர்வை நடத்த முடிவு செய்துள்ளதால், ஒரு குழுவில் 30 பேர் இடம் பெறும் வகையில் மாற்றங்களை கொண்டு வர தேர்வுத்துறை முடிவு செய்துள்ளது. அதற்காக தேர்வு மையங்களையும் அதிகரிக்க உள்ளனர்.

Apple Iphone 6 விலை ரூ.7,990 மட்டுமே - Flipkart அதிரடி தள்ளுபடி !


இந்தியாவின் பிரபல ஆன்லைன் விற்பனை தளமான பிளிப்கார்ட் மற்றும் ஆப்பிள் நிறுவனம் இணைந்து ஆப்பிள் ஃபெஸ்ட் (Apple Fest) எனும் விற்பனை திருவிழா ஒன்றை நடத்தி வருகின்றன.

இந்த விற்பனையில் பல்வேறு ஐபோன்கள் தள்ளுபடி செய்யப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிறது. குறிப்பாக ஐபோன் 7 விலையில் 5000 ரூபாய் தள்ளுபடி மற்றும் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது கூடுதலாக தள்ளுபடி வழங்கப்படுகின்றது.

ஆப்பிள் ஐபோன் 7, ஐபோன் 6:

ஐபோன் 7 32GB, 128GB மற்றும் 256GB விலை முறையே ரூ.55,000, ரூ.65,000 மற்றும் ரூ.75,000 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இத்துடன் பழைய போன்களை எக்சேஞ்ச் செய்யும் போது அதிகபட்சம் 23,000 ரூபாய் வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதில் உச்சகட்ட தள்ளுபடியினை பெற ஐபோன் 6s  பிளஸ் ஸ்மார்ட்போனிற்கு கிடைக்கிறது. இந்த சலுகை நீங்கள் எக்சேஞ்ச் செய்யும் ஸ்மார்ட்போன் சார்ந்து மாறுபடுகிறது. மேலும் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுடன் கூடுதலாக 5 சதவிகித தள்ளுபடி வழங்கப்படுகிறது.

ஆப்பிள் ஐபோன் 7 பிளஸ் மற்றும் ஐபோன் 6s எக்சேஞ்ச் சலுகை:

      ஐபோன் 7 பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எவ்வித தள்ளுபடியும் வழங்கப்படவில்லை, எனினும் ஐபோன் 6s ஸ்மார்ட்போனினை எக்சேஞ்ச் செய்யும் போது ரூ.23,000 வரை தள்ளுபடி பெற முடியும். விருப்பமுள்ள வாடிக்கையாளர்கள் தங்களின் ஐபோன் 6s பிளஸ் ஸ்மார்ட்போனுடன் எக்சேஞ்ச் செய்யலாம். இத்துடன் தேர்வு செய்யப்பட்ட வங்கி அட்டைகளுக்கு கூடுதல் தள்ளுபடி வழங்கப்படுகிறது. 

ஐபோன் 6 ரூ.7,990 மட்டுமே:

            ஐபோன் 6 16GB ஸ்பேஸ் கிரே நிறம் கொண்ட மாடல் வாங்கும் போது ரூ.5,000 தள்ளுபடியும் பிளிப்கார்ட் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.24,000 வரை தள்ளுபடியும் பெற முடியும். எக்சேஞ்ச் சலுகையில் அதிக தள்ளுபடி பெற ஐபோன் 6s பிளஸ் தகுதியுடையதாக உள்ளது. முழுமையான எக்சேஞ்ச் சலுகையில் தள்ளுபடி பெறும் போது ஐபோன் 6 போனினை ரூ.7,990 என்ற விலையில் வாங்க முடியும்.

ஐபோன் 5s ரூ.4,999 மட்டுமே:
 ஆப்பிள் ஐபோன் 5s 16GB ரூ.19,999 என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இத்துடன் எக்சேஞ்ச் சலுகையில் ரூ.15,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது. இதனால் ஐபோன் 5s ஸ்மார்ட்போனினை ரூ.4,999 விலையில் வாங்க முடியும். ஐபோன்களை தொடர்ந்து ஆப்பிள் வாட்ச் சீரிஸ் 1 விலையும் குறைக்கப்பட்டுள்ளது. கூடுதலாக வங்கிகள் வழங்கும் தள்ளுபடியும் சீரிஸ் 2 ஸ்மார்ட்வாட்ச்களுக்கு கிடைக்கிறது.   

அக்சஸரீகளுக்கு தள்ளுபடி:

         ஆப்பிள் நிறுவனத்தின் அக்சஸரீகளுக்கு 50 சதவிகிதம் வரை தள்ளுபடியும், ஆப்பிள் கீபோர்டு மற்றும் மைஸ் உள்ளிட்ட சாதனங்களுக்கு 25 சதவிகித தள்ளுபடியும் வழங்கப்படுகிறது. ஆப்பிள் மற்றும் பிளிப்கார்ட் வழங்கும் சிறப்பு விற்பனை ஜனவரி 13 ஆம் தேதி வரை நடைபெறுகிறது.

Income tax section 80CCD(1B) -ன் விளக்கம்:

தற்போது தகவல் அறியும் உரிமைச்சட்டத்தில் CPS தொகையினை ரூ.50,000/- வரை கூடுதலாக கழித்துக் கொள்ளலாம். அதாவது, sec 80C- ல் ரூ.1, 50,000 மும் + sec 80 CCD(1B)-ல் ரூ.50, 000 மும் இரண்டையும் சேர்த்து ரூ.2,00,000 வரை கழிக்கலாம் என்ற செய்தி ஊடகங்களில் வலம்வருகிறது அல்லவா ?
அதற்கான விளக்கம்தான் இது.


நமது மாதச்சம்பளத்தில் CPSக்காக பிடித்தம் செய்யப்படும் 10% தொகையினை income tax section 80C யில் (LIC, Tuition fee, mutual fund, PLI, salary யில் பிடிக்கப்படும் CPS,...உள்ளிட்டவைகளை ) ரூ.1,50,000 வரை கழித்துக்கொள்ளலாம்.ஆனால் கூடுதலாக செலுத்தப்படும் ரூ.50,000/- த்தை உங்கள் கையிருப்பில் உள்ள தொகையினை புதிதாக NPS (National pension scheme or system தேசிய ஓய்வூதிய திட்டம்) திட்டத்தில் செலுத்தி income tax ல் வரிவிலக்கு பெறலாம்.

ஆக, section 80CCD(1B)ல் மாதச்சம்பளத்தில் பிடித்தம் செய்யும் CPS தொகையினை Income tax வரிவிலக்கில் கழிக்க முடியாது.

தேசிய தேர்வுகளில் பங்கேற்கும் வகையில் பிளஸ் 2 வரை கேள்வித்தாள் அமைப்பில் மாற்றம் : கல்வித் துறை உத்தரவு.

தேர்வுகளின் கேள்வித்தாளை மாற்றி அமைக்க வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை பொறுத்தவரையில் ஒன்று முதல் 9ம் வகுப்பு வரை படிப்போருக்கு முப்பருவமுறை நடைமுறையில் உள்ளது.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டு, அரையாண்டு, முழு ஆண்டுத் தேர்வுகள் நடத்தப்படுகிறது. இது தவிர கீழ் வகுப்புகளில் படிக்கும்மாணவ, மாணவியருக்கு வாராந்திர, மாதாந்திர தேர்வுகள் நடத்தப்பட்டு, மாணவர்களின் கற்றல் திறனும் கவனிக்கப்பட்டு வருகிறது. மேல் வகுப்புகளுக்கு திருப்பு தேர்வுகள் என்ற அடிப்படையில் திறனறி தேர்வுகள் நடத்தப்படுகிறது. இருப்பினும், மாநில பாடத்திட்டத்தின் கீழ் படிக்கும் மாணவர்கள் தேசிய அளவிலான போட்டித் தேர்வில் கலந்து கொள்ளும் போது சிரமப்படுகின்றனர்.

இதையடுத்து, அனைத்து போட்டித் தேர்வுகளிலும் மாணவர்கள் பங்கேற்கும் வகையில் நவீன கருத்தியல், தொழில் நுட்ப அடிப்படையிலான பாடத்திட்டம் மற்றும் கருத்துருக்களை மாநில பாடத்திட்டத்தில் புகுத்தும் பணியில் பள்ளிக் கல்வித்துறை ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, ஒன்று முதல் பிளஸ் 2 வகுப்புகளுக்கு நடத்தப்படும் அனைத்து தேர்வுகளிலும் வழக்கமாக இடம் பெறும் கேள்வித்தாளில் மாற்றங்களை கொண்டுவரவும் முடிவு செய்துள்ளது. வகுப்புவாரியாக மாணவர்களின் வயதுக்கேற்ற திறன்களை மேம்படுத்தும் வகையில் கேள்விகளை புகுத்தவும் முடிவு செய்துள்ளது.

குறிப்பாக பத்தாம் வகுப்புக்கு படிக்கும் மாணவ, மாணவியருக்கு அந்த வயதில் 13 வகையான திறன்கள் பெற்றிருக்க வேண்டும். அந்த வகையில் கேள்வித்தாள்களை அமைக்க பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்துள்ளது.இதன்படி, கேள்வித்தாளில் Higher, Lower, Middle order thinking மாணவர்களுக்கு வரும் வகையில் கேள்விகள் கேட்கப்பட வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை கல்வி அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளது.

இதையடுத்து இனி வரும் கேள்வித்தாள்களில் மாணவர்கள் சிந்தித்து பதில் எழுதும்வகையிலான கேள்விகள் இடம் பெறும். பத்தாம் வகுப்பு மற்றும் பிளஸ் 2 பொதுத் தேர்விலும் கேள்வித்தாள் மாற உள்ளது. இது தொடர்பாக அனைத்து கல்வி அதிகாரிகளுக்கும் பள்ளிக் கல்வித்துறை அறிவுரை வழங்கியுள்ளது.

தொடர் போராட்டங்கள் நடத்த தயாராகும் 'ஜாக்டோ - ஜியோ

பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்யக்கோரி, தொடர் போராட்டங்கள் நடத்த, 'ஜாக்டோ - ஜியோ' கூட்டமைப்பு முடிவு செய்துள்ளது. 
பள்ளி கல்வி, தொடக்க கல்வி துறையில்பணியாற்றும் ஆசிரியர்களின், 28 சங்கங்கள் இணைந்து, 'ஜாக்டோ' என்ற அமைப்பும், அரசு துறையின் பல ஊழியர் சங்கங்கள் இணைந்து, 'ஜியோ' என்ற அமைப்பும் செயல்பட்டு வருகின்றன. இரு அமைப்புக்களும் இணைந்த கூட்டமைப்பு, 2003ல் நடத்திய போராட்டம், நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின், 2015, பிப்ரவரியில் மீண்டும், ஜாக்டோ - ஜியோ கூட்டுக்குழு உருவானது.

 'பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும்; காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்' எனக்கோரி, 2016ல், மார்ச் வரை, தொடர் போராட்டங்களை நடத்தியது. இந்நிலையில், ஜாக்டோ - ஜியோ ஆலோசனை கூட்டம், சென்னையில் நேற்று நடந்தது.வரும் பட்ஜெட்டில், தங்கள் கோரிக்கைகளை ஏற்று, அறிவிப்புகளை வெளியிட வலியுறுத்தி, தொடர் போராட்டங்கள் நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது. போராட்டம் குறித்த அறிவிப்பு, விரைவில் வெளியாகும் என, கூட்டுக்குழு நிர்வாகிகள் கூறினர்.

உங்கள் வீட்டில் மின்தடை எப்போது? : 10 நாட்களுக்கு முன் தெரியும் வசதி

பராமரிப்பு பணி மின் தடை விபரத்தை, 10 நாட்களுக்கு முன்பே, தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கி உள்ளது. துணை மின் நிலையம், மின் வழித்தடங்களில் பழுது ஏற்படாமல் இருக்க, மின் வாரியம், குறிப்பிட்ட இடைவெளியில், அவற்றில் பராமரிப்பு பணி செய்கிறது.
பராமரிப்பு பணி :

இதற்காக, அந்த பணி நடக்கும் இடங்களில், காலை, 9:00 மணி முதல், மதியம், 2:00 மணி வரை, மின் வினியோகம் நிறுத்தப்படும். அந்த விபரத்தை, மின் வாரியம், பத்திரிகைகள் மூலம், மக்களுக்கு முன் கூட்டியே தெரிவிக்கிறது. தற்போது, தமிழகம் முழுவதும் பராமரிப்பு மின் தடை செய்யும் பகுதிகளை, 10 நாட்களுக்கு முன் தெரிந்து கொள்ளும் வசதியை, மின் வாரியம் துவக்கியது.

இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:தமிழகத்தில், தினமும், பல இடங்களில் உள்ள மின் சாதனங்களில் பராமரிப்பு பணி நடக்கிறது. சென்னை, கோவை போன்ற முக்கிய நகரங்களில் வசிப்போருக்கு மட்டும், அந்த விபரம் தெரிகிறது; மற்ற நகரங்களில் வசிப்போருக்கு தெரிவதில்லை.

இணையதளம்: தற்போது, 10 நாட்களுக்கு முன், பராமரிப்பு நடக்கும் துணை மின் நிலையங்கள்; அவற்றில் மேற்கொள்ளப்படும் பணிகள் போன்ற விபரங்கள், மின் வாரிய இணையதளத்தில் விரிவாக வெளியிடப்பட்டு உள்ளன. அனைவரும், அதை பார்த்து, அதற்கேற்ப தங்கள் பணிகளை திட்டமிடலாம். இவ்வாறு அவர் கூறினார்.

CPS : புதிய ஓய்வூதியத் திட்டத்தை திரும்பப் பெற முடியாதா?

அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கையை ஏற்பதே சிறந்த தீர்வுஅரசு ஊழியர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் ஓய்வூதியமாக கடைசியாக அவர்கள் வாங்கும் சம்பளத்தில் பாதி கிடைத்துவந்தது.
அது மட்டுமல்லாமல், ஊழியர் இறந்துவிட்டால் அவரின் மனைவிக்கோ மகளுக்கோ அந்த ஓய்வூதியம் தொடர்வதாக 1957 முதல் நடைமுறையில் இருந்தது. ஆனால், தற்போது ஊழியரின் சம்பளத்தில் 10 சதவீதத்தைப்பிடித்து, அதை பங்குச் சந்தையிலும் கடன்பத்திரங்களிலும் முதலீடு செய்து, அதன் பயனை அவருக்குத் தருவதான புதிய ஓய்வூதியத் திட்டம் அமலுக்கு வந்தது.புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதை முக்கியமான கோரிக்கையாக வைத்து, தமிழ்நாடு ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக் குழு (ஜேக்டோ) போராடியது. ஆனால், மாநில அமைச்சர் “மத்திய அரசின் சட்டத்தின்படி உருவாக்கப்பட்டதால் புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாநில அரசால் திரும்பப் பெற முடியாது. அது சாத்தியமில்லாத விஷயம்’’ என்று விளக்கியுள்ளார். அவரின் விளக்கம் சரியானதல்ல.

அமைச்சர்களின் உறுதிமொழி

தமிழ்நாடு அரசு ஊழியர்கள் பிப்ரவரி 10-ம் தேதி முதல்வேலைநிறுத்தம் செய்யப்போவதாக அறிவித்தனர். அவர்களின் முக்கியமான கோரிக்கையும் இந்தப் புதிய ஓய்வூதியத் திட்டத்தைத் திரும்பப் பெற வேண்டும் என்பதுதான்.அமைச்சர்கள் பேச்சுவார்த்தைக்கு அழைத்தனர். முதலமைச்சரின் கவனத்துக்கு கோரிக்கைகளைக் கொண்டுசெல்வதாகவும், நிதிநிலை அறிக்கை சமர்ப்பிப் பதற்காகக் கூடுகிற சட்டசபை கூட்டத்தொடரின்போது பிப்ரவரி 16-ம் தேதி இதற்கான அறிவிப்புகள் வெளியாகும் என்றும் உறுதியளித்தனர். ஆகவே, வேலைநிறுத்தத்தைக் கைவிடும்படி கேட்டுக்கொண்டனர். அமைச்சர்களின் உறுதிமொழியைச் சில சங்கங்கள் ஏற்றுக்கொண்டன.ஆனால், தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் புதிய ஓய்வூதியத் திட்டம் திரும்பப் பெறப்படும் என்பதை எழுத்துபூர்வமான உடன்பாடாக ஏற்படுத்திக்கொள்ளலாம் என்று கேட்டுக்கொண்டது. அப்படிச் செய்துகொண்டால், வேலைநிறுத்த முடிவை மறுபரிசீலனை செய்வதாகத் தெரிவித்தது. அரசு அதற்குச் செவிசாய்க்கவில்லை. அதனால் வேலைநிறுத்தம் நீடிக்கிறது.

எப்படி வந்தது?

முன்னாள் பிரதமர் வாஜ்பாய் தலைமையிலான அரசாங்கம்தான் இதை முதலில் அறிவித்தது. தனது ஆட்சியின் கடைசி ஐந்து மாதங்களுக்கு முன்பாக ஒரு நிர்வாக உத்தரவைப் போட்டது. அதன் மூலம்தான் மத்திய அரசு ஊழியர்களுக்கு புதிய ஓய்வூதியத் திட்டம் 1.1.2004 முதல் அமலாகியது.இதற்கான சட்டம் செப்டம்பர் 2013-ல்தான் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது. அப்போதைய காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு இந்தச் சட்டத்தை நிறை வேற்றியது. பாஜக இதை ஆதரித்ததில் ஆச்சரியமில்லை. 2014 பிப்ரவரி 1-ல்தான் இந்தச் சட்டம் அதிகாரபூர்வமாக அரசின் கெஜட்டில் அறிவிக்கப்பட்டது.தமிழகம்தான் எல்லாவற்றிலும் முன்னோடி ஆயிற்றே? இந்தப் புதிய ஓய்வூதியம் மத்திய அரசு ஊழியர்களுக்கு அமலாக்கப்பட்டதற்கு ஒன்பது மாதங்களுக்கு முன்பாகவேதமிழக அரசு ஊழியர்களுக்கு 1.4.2003 முதல் அப்போதைய அதிமுக அரசு அமல்படுத்திவிட்டது. 6.8.2003-ல் அரசாணையும் வெளியிட்டது. எனவே, தமிழக அரசு நினைத்தால்அதனைத் திரும்பப் பெறுவதில் எந்தத் தடையும் இல்லை.

ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையச் சட்டம்- 2013 (Pension Fund Regulatory and Development Authority Act - 2013) என்பது மத்தியஅரசின் சட்டத்துக்குப் பெயர். இந்தச் சட்டத்தின்3(4) வது பிரிவில், ‘எந்த மாநில அரசும் அல்லது எந்த யூனியன் பிரதேச நிர்வாகமும் ஒரு அறிவிக்கை மூலம் தேசிய ஓய்வூதியத் திட்டத்தை அதன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம்’ எனக் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த ஓய்வூதியத் திட்டத்துக்கு தேசிய ஓய்வூதியத் திட்டம் என்று பெயர். எனவே, மாநிலஅரசு விரும்பினால்தான், அந்த தேசிய ஓய்வூதியத் திட்டத்தைத் தன் ஊழியர்களுக்கு விரிவுபடுத்தலாம். விரும்பாவிட்டால், தன் ஊழியர்களை பழைய ஓய்வூதியத் திட்டத்திலேயே வைத்துக்கொள்வதைச் சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.எனவே, இந்தச் சட்டம் மத்திய அரசு ஊழியர்களுக்கு நேரடியாகப் பொருந்தும். ஆனால், மாநில அரசு ஊழியர்களுக்கோ வேறு தனியார், பொதுத்துறை அமைப்புகளுக்கோ நேரடியாகப் பொருந்தாது, கட்டுப்படுத்தாது என்பதுதான் உண்மையான நிலை.

தமிழகத்தால் முடியும்

பல மாநிலங்களில் நவம்பர் 2015 வரை 28 லட்சம் மாநில அரசு ஊழியர்கள் தேசிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். மேற்குவங்கத்தில் திரிணமூல் கட்சி ஆட்சிக்கு வந்தாலும் பழைய ஓய்வூதியத் திட்டமே நீடிக்கிறது. திரிபுராவும் அப்படியே.

இந்த மாநிலங்களில் பழைய திட்டம் தொடர்வதை மத்திய சட்டம் எந்த வகையிலும் தடுக்கவில்லை.எனவே, தமிழக அரசு உண்மையாகவே விரும்பினால், ஒரு மறு அறிவிக்கையை வெளியிட்டு, அனைத்து அரசு ஊழியர்களையும், ஆசிரியர்களையும் பழைய ஓய்வூதியத் திட்டத்துக்குத் திரும்பக் கொண்டுவர முடியும். மொத்தஅரசு ஊழியர் ஆசிரியர்கள் என்ணிக்கையில் 60% பேர் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் சேர்க்கப்பட்டுவிட்டனர். மீதியுள்ளோர் பழைய ஓய்வூதிய திட்டத்திலேயே நீடிக்கின்றனர்.புதிய ஓய்வூதிய சட்டத்தில் இணைந்த ஊழியர்களின் பணம் ரூ.4,661 கோடி. அரசின் பங்களிப்பு ரூ.3,791 கோடி. மொத்தம் ரூ.8452 கோடி. இந்த தொகையை மாநிலத்தை ஆண்ட திமுக, அதிமுக அரசுகள் ஓய்வூதிய நிதி ஒழுங்காற்று மேம்பாட்டு ஆணையத்துக்கு பங்குச் சந்தையிலும் கடன் பத்திரங்களிலும் முதலீடு செய்ய கடந்த 12 ஆண்டுகளாக அனுப்பிவைக்கவில்லை. இந்தக் காலத்தில் 3,404 பேர் ஓய்வுபெற்றுள்ளனர். 1,890 பேர் இறந்துள்ளனர். அவர்களுக்கு எந்தப் பணமும் தரப்படவில்லை.

விருப்பம் இல்லையா?

மத்திய அரசுக்கு அனுப்பிவைக்காத அந்தத் தொகை மாநில அரசின் கையில் இருக்கிறது. அரசு விரும்பினால், தன் பங்களிப்புத் தொகையான ரூ.3,797 கோடியை எடுத்துக்கொள்ளலாம். மீதியை அரசு ஊழியர்களின் சேமநல நிதியில் சேர்க்கலாம்.புதிய ஓய்வூதியத்துக்கான சட்டம் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்புக்கு வந்தபோது, இடதுசாரிகளுடன் இணைந்து அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்த்து வாக்களித்தார்கள். திமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தனர்.

 இந்த திட்டத்தை மறுபரிசீலனை செய்வோம்என்று 2011 சட்டமன்றத் தேர்தலில் பிரச்சாரத்தின் கடைசி நாளன்று ஜெயலலிதா சென்னையில் அறிவித்தார். ஆனால், இப்போது அதிமுக அமைச்சர் ‘‘இது மத்திய சட்டம். அதனைத் திரும்பப் பெற மாநில அரசால் முடியாது’’ என்று கூறுவது இந்த விஷயத்தில் அரசுக்கு விருப்பம் இல்லை என்பதையே காட்டுகிறது.சமீபத்தில் பங்குச் சந்தையில் சரிவு ஏற்பட்டது. 3 லட்சம் கோடி ரூபாய்களுக்கும் மேலான முதலீட்டாளர்களின் பணம் பறிபோனது. இத்தகைய நிலையில்லாத, சூதாட்டம் போன்ற பங்குச் சந்தை விளையாட்டுகளில் ஊழியர்களின் வாழ்நாள் சேமிப்பைப் போட்டு அரசு விளையாட வேண்டாம் என்றுதான் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்திருக்கிறார்கள். அதை நிறைவேற்றுவதே சிறந்த தீர்வு.