Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 12 January 2017

தொடக்கக் கல்வி - உதவித் தொடக்கக் கல்வி அலுவலகங்களுக்கு சொந்த கட்டிடங்கள் கட்டுதல் சார்ந்து விவரம் கோருதல்


அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்றும், ஆய்வக உதவியாளர் 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள் என்றும் அமைச்சர் பாண்டியராஜன் பேட்டி

ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் இருந்து இப்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். 
நல்ஒழுக்கம் கற்பிக்க பயிற்சி தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் உயர்நிலை மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6-வது வகுப்பு முதல் 8-வது வகுப்பு வரை படிக்கும் மாணவ-மாணவிகளுக்கு 60 வகையான நல் ஒழுக்கத்தை கற்பிக்கவேண்டும் என்ற நோக்கத்துடன் அவர்களுக்கு கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டது. அதன்படி முதல் முறையாக சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தில் அதன் இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் ஏற்பாட்டில் நேற்று பயிற்சி தொடங்கியது. பயிற்சியை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.பாண்டியராஜன் தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:- ஆசிரியர்கள் நியமனம் பள்ளிக்கூடத்திற்கு மாணவ-மாணவிகள் அவர்கள் சார்ந்துள்ள மதத்தை பின்பற்றி அந்த சின்னத்தை உதாரணமாக விபூதி, குங்குமம், சிலுவை, பர்தா ஆகியவை அணிந்து வருவதில் தவறு இல்லை. இதுகுறித்து 4 புகார்கள் வந்தன. அந்த புகார்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளோம். மதத்தின் சின்னத்தை அணிந்து வருவது அவர்களின் நம்பிக்கை. எனவே மாணவர்கள் அணிந்து வந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்காதீர்கள் என்று ஆசிரியர்களுக்கு அறிவுரை வழங்கி உள்ளோம்.

 அரசு பள்ளிகளில் போதிய ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். ஆசிரியர் தகுதி தேர்வு உடனே நடத்த வேண்டிய அவசியம் இல்லை. ஏற்கனவே 30 ஆயிரம் பேர் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்று இருக்கிறார்கள். இப்போது அரசு பள்ளிகளில் காலியாக உள்ள ஆசிரியர்கள் பணியிடங்களை கணக்கெடுத்து வருகிறோம். கணக்கெடுத்தபிறகு காலியாக உள்ள ஆசிரியர்கள் பணிக்கு ஏற்கனவே ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் பட்டியலில் இருந்து ஆசிரியர்கள் நியமிக்கப்படுவார்கள். ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கு 4 ஆயிரத்து 900 பணியிடங்கள் விரைவில் நியமிக்கப்படுவார்கள். அவர்கள் உள்ளிட்ட ஆசிரியர் அல்லாத பணியிடங்கள் 8 ஆயிரம் உள்ளன. அந்த பணியிடங்கள் உடனடியாக நிரப்பப்படும். அரசு நலத்திட்டங்கள் பள்ளிக்கல்வித்துறையின் அனைத்து அரசு திட்டங்களும் முறையாக சென்று அடைய அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. அரசு உதவி பெறும் பள்ளிகளில் உள்ள ஆசிரியர்களின் பணியிடங்களும் நிரப்ப ஏற்பாடு செய்யப்படும். இவ்வாறு அமைச்சர் கே.பாண்டியராஜன் தெரிவித்தார்.

முன்னதாக ஆசிரியர் பயிற்சி தொடக்க விழாவில் பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளர் த.சபீதா, அனைவருக்கும் கல்வி திட்ட இயக்குனர் பூஜாகுல்கர்னி, தமிழ்நாடு பாடநூல் கல்வியியல் பணிகள் கழக நிர்வாக இயக்குனர் மைதிலி ராஜேந்திரன், பள்ளிக்கல்வித்துறை துணை செயலாளர் ராகுல்நாத், பள்ளிக்கல்வித்துறை இயக்குனர்கள் க.அறிவொளி, ச.கண்ணப்பன், ரெ.இளங்கோவன், அ.கருப்பசாமி, மு.பழனிச்சாமி, இணை இயக்குனர் வை.பாலமுருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது - உச்சநீதிமன்றம்

ஜல்லிக்கட்டு வழக்கில் உடனடியாக தீர்ப்பு வழங்க முடியாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கில் தற்போது தான் தீர்ப்பு எழுதப்பட்டு வருவதால் பொங்கல் பண்டிகைக்குள் தீர்ப்பு வழங்க இயலாது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. 
ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க கோரி தமிழக அரசு வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த ஆண்டிற்கான பொங்கல் பண்டிகைக்கு இன்னும் 2 நாட்களே உள்ள நிலையில், ஜல்லிக்கட்டிற்கு அனுமதி வழங்கி இடைக்கால உத்தரவு பிறப்பிக்குமாறு தமிழக வழக்கறிஞர்கள் உச்சநீதிமன்றத்தில் கோரினர். தமிழக அரசின் கோரிக்கையை நிராகரித்த உச்சநீதிமன்றம், இவ்விகாரத்தில் உடனடியாக தீர்ப்பு வழங்க இயலாது என திட்டவட்டமாக கூறியுள்ளது தமிழகத்தில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதே போல தீர்ப்பு வரும் முன் அவசர சட்டம் கொண்டு வர இயலாது என மத்திய அரசும் திட்டவட்டமாக கூறியுள்ளது. இந்நிலையில் உச்சநீதிமன்றமும் தற்போது விரைந்து தீர்ப்பு வழங்க முடியாது என கூறியுள்ளது. இதனால் சட்டரீதியாக அனுமதி பெற்று ஜல்லிக்கட்டு நடத்துவது இந்த ஆண்டும் கனவாகவே முடிந்து விடும் என்றே தெரிகிறது.

முன்னதாக ஜல்லிக்கட்டு போட்டிக்கு கடந்த 2014-ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தடை விதித்தது. உச்சநீதிமன்றத்தின் தடையால் கடந்த 2 ஆண்டுகளாக ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெறவில்லை. இந்த ஆண்டாவது ஜல்லிக்கட்டு போட்டி நடத்த அனுமதி வழங்க கோரி தமிழகம் முழுவதும் இளைஞர்கள், மாணவர்கள் என மிகப்பெரிய எழுச்சியுடன் ஒன்றிணைந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

தமிழக சட்டப்பேரவை ஜனவரி 23ல் கூடுகிறது.

 தமிழக சட்டப்பேரவை ஜனவரி 23ல் கூடுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 23ம் தேதி காலை 10 மணி அளவில் சட்டப்பேரவை கூடுகிறது சட்டப்பேரவை செயலாளர் ஜமாலுதீன் அறிவித்துள்ளார்.
23ம் தேதி நடக்கும் சட்டப்பேரவை கூட்டத்தொடரில் ஆளுநர் உரையாற்றுகிறார் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கிக் கணக்கு வைத்திருப்போர் அடுத்த மாதத்திற்குள் பான் அட்டைகளை வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் - மத்திய அரசு அறிவிப்பு.

வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் நிரந்தர கணக்கு எண் எனப்படும் Pan அட்டைகளை, அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. நாடு முழுவதும் பெருகிவரும் லஞ்சம், ஊழல் மற்றும் கருப்புப் பண பதுக்கலுக்கு எதிராக 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளை செல்லாது என அறிவித்து மத்திய அரசு அண்மையில் அதிரடி நடவடிக்கை மேற்கொண்டது. 
இதன் தொடர்ச்சியாக, மேலும் பல நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. வங்கிகளில் கணக்கு வைத்திருக்கும் அனைவரும் அடுத்த மாதம் 28-ம் தேதிக்குள் Pan அட்டைகளை சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்தக் காலக்கெடுவுக்குள் Pan அட்டைகளை அளிக்காதவர்கள் வருமான வரிச் சட்டத்தின்படி, Form-60 எனப்படும் படிவம் 60-ஐ பூர்த்தி செய்து வங்கிகளில் சமர்ப்பிக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. வரி ஏய்ப்பை தடுக்கும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அரசு தெரிவித்துள்ளது. இதற்காக, வருமான வரிச் சட்டத்தில் விதிமுறைகள் திருத்தம் செய்யப்பட்டிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வங்கிகளில் பூஜ்யம் இருப்பு எனப்படும் அடிப்படை சேமிப்புக் கணக்கு வைத்திருப்பவர்கள் மற்றும் ஜன்தன் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு இது பொருந்தாது என்றும், மத்திய அரசு தெரிவித்துள்ளது.

பாதுகாப்பு பணி தேர்வுக்கு ஹால்டிக்கெட்.

ஒருங்கிணைந்த பாதுகாப்பு பணி தேர்வு பிப்ரவரி 5-ம் தேதி நாடு முழுவதும் 41 மையங்களில் நடைபெறவுள்ளது. இத்தேர்வுக்கு விண்ணப்பித்த தகுதியான நபர்களுக்கு ஆன்லைனில் ஹால்டிக்கெட் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. 
விண்ணப்பதாரர்கள் யுபிஎஸ்சி இணையதளத்தில் (www.upsc.gov.in)தங்கள் பதிவெண்ணை குறிப்பிட்ட ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விண்ணப்பம் நிராகரிக்கப்பட்ட ஹால்டிக்கெட்டில் புகைப்படம் அச்சிடப்படாவிட்டால் அத்தகைய விண்ணப்பதாரர்கள் 3 பாஸ்போர்ட் புகைப்படங்கள் மற்றும் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட அடையாள அட்டையுடன் தேர்வு மையத்துக்கு செல்லுமாறு யுபிஎஸ்சி அறிவுறுத்தி யுள்ளது.

17 ஆண்டு பழமையான விதியால் ஆசிரியர் பதவி உயர்வில் குளறுபடி.

பதினேழு ஆண்டுகளுக்கு முன் கொண்டு வரப்பட்ட, பதவி உயர்வு விதிகளை மாற்ற வேண்டும் என, பள்ளிக் கல்வி அமைச்சரிடம், பட்டதாரி ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.தொடக்க பள்ளி பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு வழங்குவதற்கான விதிகளில், குளறுபடி நீடிக்கிறது.
அதாவது, 'டிப்ளமா' ஆசிரியர் பயிற்சி முடித்து பணியில் சேர்ந்தவர்கள், தொடக்க பள்ளிகளில் தலைமை ஆசிரியராகவும், பின், பட்டதாரி ஆசிரியராகவும் பதவி உயர்வு பெறுகின்றனர். தொடர்ந்து, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியராக, பணிமூப்புஅடிப்படையில், பதவி உயர்வு பெறுகின்றனர்.

ஆனால், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம், மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட பட்டதாரி ஆசிரியர்களுக்கு, இந்த பதவி உயர்வு எதுவும் கிடைக்கவில்லை. 1999ம் ஆண்டு பிறப்பிக்கப்பட்ட அரசாணைப்படி, பட்டம் பெறாமல் பணியில் சேர்ந்த ஆசிரியர்களுக்கே, பதவி உயர்வில் முன்னுரிமை வழங்கப்படுகிறது.இதுகுறித்து, தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பினர், பள்ளிக் கல்வி துறை அமைச்சர் பாண்டியராஜனை சந்தித்து, இந்த குளறுபடிக்கு முற்றுப்புள்ளி வைக்க கோரிக்கை விடுத்துள்ளனர்.

 சங்க பொதுச்செயலர், பேட்ரிக் ரைமண்ட் கூறியதாவது: பட்டதாரிஆசிரியர்கள் இல்லாததால், 1999ல், இடைநிலை ஆசிரியர்களுக்கு முன்னுரிமை வழங்கும் வகையில், பதவி உயர்வு விதிகள் ஏற்படுத்தப்பட்டன. அதே நேரம், 14 ஆண்டுகளாக, பட்டதாரி ஆசிரியர்கள் நேரடி நியமனம் செய்யப்படுகின்றனர். ஆனால், பழைய விதிகளை மாற்றாமல், பதவி உயர்வு வழங்கப்படுவதால், நேரடி நியமனம் பெற்ற பட்டதாரி ஆசிரியர்களுக்கு, பதவி உயர்வு கிடைக்காமல், பாதிப்பு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.

Swamy Vivekanandar Birthday & National Youth Day

Swamy Vivekanandar Birthday & National
Youth Day
Grand Rally Programme Starts from
Govt.Garden High School  to Bus Stand
on  12.01.17 Thursday(Tomorrow)
at 9.30 am at  Govt.Garden High School Opposite to Tirupattur Municipality. 
Chief Guest Dr.K.P.Karthikeyan I.A.S., Sub- Collector ,Tirupattur will Inaugurate the rally.

Mrs.Priyadharshini District Educational Officer
& Zone Vice President Jc.N.T.Imran Ahmed 
will Felicitate the Programme.
I request you all to Participate & Support to the  Programme.

Yours
Jc.S.Kishor  Prasad
President
94424 57976

Jc.Syed Thateeq Ahmed
Secretary
94423 91381

Jc.J.Jayamalan
Immediate Past President
99625 61484

Jc.R.Karthikeyan
Treasurer
98433 98567

கல்வி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதிய வடிவில் எங்களுடைய அப்ப்ளிகேஷனை google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

கல்வி தொடர்பான செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள புதிய வடிவில் எங்களுடைய அப்ப்ளிகேஷனை google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

https://play.google.com/store/apps/details?id=kalvisirugugal3834.vinebre

எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா: வரும் 17-இல் பொது விடுமுறைவிட அரசு முடிவு

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருக்கிறது.

 இதற்கான அதிகாரப்பூர்வ உத்தரவு வியாழக்கிழமை (ஜன.12) வெளியாகவுள்ளது. அதிமுக நிறுவனரும், முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த நாள் விழா வரும் 17-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இந்த தினத்தை ஒட்டி, தமிழகம் முழுவதும் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஆளும்கட்சியான அதிமுக ஏற்பாடுகளைச் செய்துள்ளது.

மேலும், ஆண்டு முழுவதும் எம்.ஜி.ஆர். பிறந்த தினத்தைக் கொண்டாடவும் அந்தக் கட்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

அரசு விடுமுறை: கட்சி சார்ந்த நிகழ்ச்சிகள் ஒருபுறம் இருக்க, எம்.ஜி.ஆரின் நூற்றாண்டு பிறந்த தினம் என்பதால் வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்கள் கூறியதாவது: அரசு பொது விடுமுறை விட வேண்டுமென்றால், அதற்கான கோப்புகள் பொதுத் துறையின் மூலமாக தயார் செய்யப்பட்டு முதல்வருக்கு அனுப்பி வைக்கப்படும். மேலும், இந்த பொது விடுமுறை என்பது ஊதியத்துடன் கூடியதாக இருக்கும். மத்திய-மாநில அரசுகளின் விடுமுறைப் பட்டியலில் இல்லாத தினங்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை அளிக்க முடியாது. எனவே, இதற்கென தனியான உத்தரவு பிறப்பிக்கப்படும் பட்சத்தில் ஊதியத்துடன் கூடிய விடுமுறை கொடுக்கப்படும்.

இந்த விடுமுறையை விடுவதற்கான கோப்புகள் கையெழுத்திடப்பட்டு, அதற்கான அறிவிப்பு வியாழக்கிழமை (ஜன.12) அல்லது வெள்ளிக்கிழமை (ஜன.13) வெளியாகும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஆசிரியர் தகுதி தேர்வு தாமதமாகும்: அமைச்சர்

''ஆசிரியர் தகுதித் தேர்வு அறிவிப்பு, இப்போது இல்லை,'' என, அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்தார். தமிழகத்தில், 2011 முதல், ஆசிரியர் தகுதித் தேர்வான, 'டெட்' தேர்வு நடத்தப்படுகிறது. தேர்வில், 'வெயிட்டேஜ்' மதிப்பெண் முறை, தர பட்டியல் தயாரித்தல் போன்றவற்றில், சில பிரச்னைகள் ஏற்பட்டன.

இது குறித்து, உச்ச நீதிமன்றத்தில் தாக்கலான மனு, இரு மாதங்களுக்கு முன், தள்ளுபடி செய்யப்பட்டது. இதனால், ஆசிரியர் தகுதித் தேர்வு, மூன்றாண்டுகளாக நடத்தப்படவில்லை.இந்நிலையில், உச்ச நீதிமன்றத்தில் வழக்கு முடிவுக்கு வந்ததால், விரைவில் ஆசிரியர் தகுதித் தேர்வு நடத்தப்படும் என, பள்ளிக் கல்வி அமைச்சர் பாண்டியராஜன் கூறியிருந்தார்.இந்நிலையில், சென்னையில் நேற்று நடந்த நிகழ்ச்சியில், அமைச்சர் பாண்டியராஜன் பங்கேற்றார்.

பின், அவர் கூறியதாவது:பள்ளிக் கல்வித் துறையில், ஆசிரியர் மற்றும் பணியாளர் பதவிக்கு, 8,000 காலியிடங்கள் உள்ளன; அவை விரைவில் நிரப்பப்படும். ஏற்கனவே, ஆசிரியர் தகுதித் தேர்வு முடித்தவர்கள் காத்திருப்பதால், அவர்கள் மூலம், காலி இடங்கள் நிரப்பப்படும்.எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வை, உடனடியாக நடத்த வேண்டிய அவசியம் எழவில்லை. புதிதாக தேர்வை நடத்தினால், அதில் தேர்ச்சி பெற்றவர்கள், தங்களுக்கும் வேலை இல்லை என்று கூறுவர். எனவே, ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான அறிவிப்பு, தாமதமாகவே வெளியாகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிளஸ் 2 மாணவர்களுக்கு 'ஆன்லைனில் டிப்ஸ்'

பிளஸ் 2 மாணவர்கள், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறும் வகையில், ஆன்லைனில், 'டிப்ஸ்' வழங்கி, தனியார் பள்ளி ஆசிரியர், இலவச சேவையாற்றி வருகிறார்.

தமிழகத்தில், தற்போதைய நடைமுறைகளின் படி, மருத்துவம் படிக்க, பிளஸ் 2வில், அதிக மதிப்பெண் பெற வேண்டும்; அதிலும், உயிரியலில் அதிக மதிப்பெண் பெறுவது, மிக அவசியம். வேளாண் படிப்பு, விலங்கியல் படிப்புக்கும், உயிரியல் மதிப்பெண்கள் முக்கியம்.இந்நிலையில், உயிரியல் பாடத்தை மாணவர்கள் புரிந்து படித்து, அதிக மதிப்பெண்கள் பெற வசதியாக, சென்னை, புரசைவாக்கம், எம்.சி.டி., முத்தையா செட்டியார் ஆண்கள் மேல்நிலை பள்ளி ஆசிரியர், சவுந்தர பாண்டியன், ஆன்லைனில் மாணவர்களுக்கு, இலவச பயிற்சி அளிக்கிறார்.

முக்கிய பாடங்கள், தாவரங்கள், விலங்குகளின் அறிவியல் பெயர்கள், அதிக மதிப்பெண் பெறும் வகையில், விடைகளை எழுதும் முறை என, பல தகவல்களை, 'வாட்ஸ் ஆப், பேஸ் புக்' மற்றும் rspbiology@gmail.com என்ற, இ - மெயில் மூலமும், இலவசமாக பகிர்ந்து வருகிறார். 

இது குறித்து, சவுந்தர பாண்டியன் கூறியதாவது: சென்னையை தவிர, மற்ற மாவட்ட மாணவர்களுக்கும், தரமான பயிற்சி முறை தேவை என்பதால், ஆன்லைன் பயிற்சியை இலவசமாக நடத்துகிறேன். மாணவர்களின், இ - மெயில் முகவரி, வாட்ஸ் ஆப் எண்களை அளித்தால், அவர்களுக்கு, படங்களுடன் குறிப்புகள், 'பவர் பாய்ன்ட் பிரசன்டேஷன்' பைல்கள் போன்றவற்றை, இலவசமாக அனுப்புவேன். இவ்வாறு அவர் கூறினார்

8000 புதிய ஆசிரியர்கள் இது சாத்தியமா?

நண்பர்களே வணக்கம், ஆசிரியர் தகுதித்தேர்வு 2013 வரை வெற்றி பெற்றவர்களை கொண்டு ஆசிரியர் காலி பணியிடங்கள் நிரப்பப்படும் என்று தமிழக அமைச்சர் அறிவித்துள்ளார் இந்த அறிவிப்பு தற்போது எல்லா ஊடகங்களிலும் வெளியாகியுள்ளது. தற்போது பல பள்ளிகளில் ஆசிரியர்கள் மாணவர்களின் எண்ணிக்கையை விட அதிகமாக இருப்பாதாகவும் அதாவது

மாணவர்களின் எண்ணிக்கை குறைவாக இருப்பாதகவும் இதனை கருத்தில் கொண்டு தற்போது கணக்கெடுக்கும் பணி நடைபெற்றது இதில் பல பள்ளிகளில் மாணவர்கள் எண்ணிக்கை மிக குறைவாக உள்ளதாக தகவல் அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டது. பல ஆசிரியர்கள் வேறு வேறு இடங்களுக்கு மாற்றபட இருப்பதாகவும் தகவல்கள் வந்து கொண்டிருந்த நேரத்தில் தற்போது 8000 பணியிடங்கள் என்றதும் அனைவரும் ஆச்சிரியமாகவும் சந்தோசமாகவும் பார்த்தனர் ஆனால் இவற்றில் எந்த ஆசிரியர் பணியிடம் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியிடங்களையும் சேர்த்து பள்ளிக்கல்வித்துறையில் உள்ள காலிபணியிடங்களின் மொத்த தோரய மதிப்பா என்பது மட்டுமே தற்போது கேள்விக்குறி ஆனால் கண்டிப்பாக தற்போது புதிய ஆசிரியர் தகுதித்தேர்வு இல்லை, ஏற்கனவே  தகுதித்தேர்வில் வெற்றி பெற்றவர்களை கொண்டே இந்த புதிய பணியிடங்கள் நிரப்பப்படும் என்பதை அமைச்சரே தெளிவாக விளக்கியுள்ளார் எப்படியும் பிப்ரவரி மாதத்துக்குள் இந்த நியமனங்கள் முடிவடையும் என்று எதிர்பார்க்கபடுகிறது. பணியிடங்களின் எண்ணிக்கையை பொறுத்தே இந்த அறிவிப்பு மகிழ்ச்சி அளிப்பதா என்பதை பார்க்க வேண்டும் ஆனால் கண்டிப்பாக பணியிடங்கள் நிரப்புவார்கள் அந்த விதத்தில் இந்த அறிவிப்பு  நுாலிழையில் வாய்ப்பை தவறவிட்டவர்களுக்கு வரபிரசாதம் இத்தனை காலம் கழித்து இப்படி ஒரு அறிவிப்பு தமிழக அரசு மற்றும் அமைச்சர் மூலம் கிடைக்கபெற்றதே தற்போது நமக்கு கிடைத்திருக்கும் மகிழ்ச்சி. பல இடங்களில் இருந்து வந்து கொண்டிருக்கும் தகவல் பல பள்ளிகளில் ஆசிரியர்களுக்கு மாணவர்கள் இல்லை எனவே பொறுத்திருந்து பார்ப்போம். உண்மையில் 8000 பணியிடங்கள் நிரப்பட்டால் மகிழ்ச்சி. 

பள்ளிக்கல்வி - இடைநிலை / சிறப்பாசிரியர் பணியிலிருந்து தமிழ் பட்டதாரி ஆசிரியராக பதவி உயர்வு கலந்தாய்வு 12.01.2017 அன்று நடைபெறவுள்ளது.

வருகின்ற 12.01.2017 வியாழக்கிழமை அன்று தற்போது காலியாக உள்ள 58 பட்டதாரியாசிரியர் (தமிழ்) காலிப்பணியிடங்களுக்கு 01.01.2016 நிலவரப்படி இடைநிலை மற்றும் சிறப்பாசிரியர் பணி நிலையில் இருந்து
பட்டதாரி ஆசிரியர் (தமிழ்) பதவி உயர்வுக்குத் தகுதி வாய்ந்தோர் பட்டியலில் இருந்து வரிசை எண் 302 ல் இருந்து 616 வரை உள்ள நபர்களுக்குஅழைப்பு விடுக்கப்பட்டு அந்தந்த முதன்மைக் கல்வி அலுவலகத்தில் கலந்தாய்வு நடத்தப்பட உள்ளது.

கடந்த ஜூன் மாதமே ஜல்லிகட்டு நடத்தும் வகையில் சட்டத்திருத்தம் கொண்டு வருவதற்கு ஆட்சேபனை இல்லை என சட்ட அமைச்சகம் தெரிவித்துள்ளது


DSE PROCEEDINGS- அனைத்து வகை பள்ளி மாணவர்களுக்கு நன்னெறி போதனை வழங்குதல் மற்றும் ஆலோசனைப்பெட்டி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல் சார்பு

பட்டயத் தேர்வர்களுக்கு 18-இல் மதிப்பெண் சான்றிதழ்

பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, வரும் ஜன.18-ஆம் தேதி மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.

 இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும்
பயிற்சி நிறுவன முதல்வர் கி.மணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: தருமபுரி மாவட்டத்தில் கடந்த 2016 ஜூன் மாதத்தில் தொடக்கக் கல்வி பட்டயத் தேர்வு எழுதிய தனித் தேர்வர்களுக்கு, வரும் 18-ஆம் தேதி தருமபுரி அருகே புலிகரையில் உள்ள மாவட்ட ஆசிரியர் கல்வி மற்றும் பயிற்சி நிறுனத்தில் மதிப்பெண் சான்றிதழ் வழங்கப்பட உள்ளது.
 எனவே, தேர்வு எழுதியவர்கள் தேர்வு எண் மற்றும் அடையாள அட்டைச் சான்றை சமர்ப்பித்து தங்களது மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக்கொள்ளம் என்று தெரிவித்துள்ளார்.

காமராஜர் பல்கலை.முதுநிலை பட்டபடிப்பு தேர்வு முடிவுகள்

மதுரை காமராஜர் பல்கலைக்கழக முதுநிலைப் பட்டப்படிப்பு (சிபிஎஸ்சி) பருவமுறை நவம்பர் 2016 தேர்வு முடிவுகள்

வெளியிடப்பட்டுள்ளன.

எம்.கா.ம், எம்.காம் நிதி, எம்.காம்.கணினி அப்ளிகேசன்ஸ், எம்.டி.எம்., எம்.எஸ்.சி  கணிதம், இயற்பியல், கணினி அறிவியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழில்நுட்பம், கணினி அப்ளிகேசன், எஸ்.எஸ்.டபிள்யூ, எம்.ஏ.ஆங்கிலம், எம்.பி.ஏ. ஆகியவற்றுக்கான தேர்வு முடிவுகளை பல்கலைக்கழக இணையத்தில் (www.mkuniversity) பார்க்கலாம்.

 மறுமதிப்பீட்டிற்கு விண்ணப்பிக்கவிரும்புவோர் இணையம் மூலமாகவே அதற்குரிய விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 19 ஆம் தேதி மாலை 5 மணிக்குள் தேர்வாணையர் அலுவலகத்தில் கிடைக்குமாறு அனுப்பவேண்டும்.

 மறுமதிப்பீட்டுக் கட்டணத்தை கேட்பு வரைவோலை (டிடி) ஆகவோ அல்லது எஸ்பிஐ ஆன்லைன் பேமெண்ட் ஆகவோ மட்டுமே செலுத்த வேண்டும். தாமதமாக வரும் விண்ணப்பம் ஏற்றுக்கொள்ளப்படமாட்டாது. செலுத்திய பணமும் திரும்ப வழங்கப்படமாட்டாது என பல்கலைக்கழக தேர்வாணையர் பி.விஜயன் தெரிவித்துள்ளார்.