Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 13 January 2017

கல்விச்சிறகுகளின் இனிய பொங்கல் நல் வாழ்த்துக்கள்

ஜனவரி 17 பொது விடுமுறை அறிவிப்பு வெளியீடு.

எம்.ஜி.ஆர்., நூற்றாண்டு விழாவை ஒட்டி, வரும் 17-ஆம் தேதியன்று அரசு விடுமுறை விட முடிவு செய்யப்பட்டிருந்தது.
முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். 100-வது பிறந்த நாளுக்கு பொதுவிடுமுறை அளித்து தமிழக அரசு உத்தரவிட்ள்ளது. எம்.ஜி.ஆர். பிறந்த நாளான ஜனவரி 17-ம் தேதி செவ்வாய்கிழமை பொதுவிடுமுறையாக தமிழக அரசு அறிவித்துள்ளது. விடுமுறையை அடுத்து ஜனவரி 17-ம் தேதி பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்கள், கூட்டுறவு வங்கிகள் இயங்காது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பிற நிறுவனங்களும் விடுமுறை அளிக்க தமிழக அரசு வலியுறுத்தியுள்ளது. 17-ம் தேதி பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் தமிழகத்தில் தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை ஆகும்.

பதக்கங்கள் அறிவிப்பு

பொங்கலை முன்னிட்டு 1685 காவலர்களுக்கு முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் பதக்கம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. காவலர், மற்றும் தலைமை காவலர் நிலைகளில் 1500 பேருக்கு முதலமைச்சர் பதக்கம் வழங்குவார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறையில் 119 பேருக்கு பதக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. சிறைத்துறையில் முதல்நிலை மற்றும் இரண்டாம் நிலை வார்டனுக்கு 60 பேருக்கும் பதக்கம் வழங்கப்பட உள்ளது. பதக்கம் பெறுவோருக்கு ரூ.200 மாதாந்திர பதக்கப்படியாக வழங்கப்படும் என்று முதல்வர் பன்னீர் செல்வம் அறிவித்துள்ளார்.

DSE PROCEEDINGS- ஜனவரி 17 முதல் ஜனவரி 23 வரை சாலை பாதுகாப்பு வாரம் -விழிப்புணர்வு ஏற்படுத்துதல் சார்ந்து செயல்முறைகள் மற்றும் சாலை பாதுகாப்பு உறுதிமொழி ....


மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்வு.

ஆதார் இணைப்பு

ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர்கள் நலத்துறை சார்பில்தன்னார்வ அமைப்புகளின் நிலைக்குழு கூட்டம் டெல்லியில் நேற்று நடைபெற்றது. அதில், பிரதமர் அலுவலக இணை மந்திரி ஜிதேந்திர சிங் கலந்து கொண்டார்.கூட்டத்தில் அவர் பேசியதாவது:–
நாட்டில் 50 லட்சம் முதல் 55 லட்சம் ஓய்வூதியதாரர்கள் உள்ளனர். அவர்களில் 88 சதவீதம் பேரின் ஓய்வூதிய கணக்குகளில் ஆதார் எண் இணைக்கப்பட்டுள்ளது.

பணிக்கொடை 2 மடங்கு உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு குறைந்தபட்ச ஓய்வூதியம் ரூ.9 ஆயிரமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல், பணிக்கொடை 2 மடங்குக்கு மேல் அதிகரிக்கப்பட்டுள்ளது. அதாவது, ரூ.10 லட்சம் முதல் ரூ.15 லட்சம்வரை இருந்த பணிக்கொடை, ரூ.25 லட்சம் முதல் ரூ.35 லட்சம்வரை உயர்ந்துள்ளது.மத்திய பணியாளர் நலத்துறை அமைச்சகம் இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

அனுபவம்

ஓய்வூதியதாரர்களின் அனுபவத்தில் இருந்து நாம் நிறைய கற்றுக் கொள்ளலாம். அவர்களின் அறிவு மற்றும் அனுபவத்தை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள ஒரு அமைப்பை உருவாக்க வேண்டும். அவர்களின் சக்தியை ஆக்கப்பூர்வ முறையில் உபயோகப்படுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.இக்கூட்டத்தில், மத்திய அரசு உயர் அதிகாரிகளும், ஓய்வூதியதாரர்கள் சங்க உறுப்பினர்களும் பங்கேற்றனர்.

வன சீருடைப் பணியாளர் தேர்வு: நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு.

வன சீருடைப் பணியாளர் தேர்வின் வனவர், கள உதவியாளர் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. உடற்தகுதி, நடைத்தேர்வில் தகுதிபெற்ற விண்ணப்பதாரர்களின் தாற்காலிகப் பட்டியல் www.forests.tn.nic.in  இணைய தளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
இதுதொடர்பான குறிப்பாணை, விண்ணப்பதாரர்கள் அனைவருக்கும் தனித்தனியே பதிவஞ்சல் மூலமாக அனுப்பப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் தங்களது அழைப்புக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடம், தேதி மற்றும் நேரத்தில், நேர்முகத் தேர்வில் தவறாது கலந்துகொள்ளும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை புத்தகக் கண்காட்சியில் மாணவர்களுக்கு பயனளிக்கும் ஆராய்ச்சி நூல்கள்.

சென்னையில் நடைபெற்று வரும் சென்னை புத்தகக் கண்காட்சியில் ஆராய்ச்சியாளர்களுக்கு பயன்படும் வகையிலான ஆய்வு நூல்கள் விற்பனைக்கு குவித்து வைக்கப்பட்டுள்ளன.சென்னையில் 40-ஆவது புத்தக கண்காட்சி தொடங்கி நடைபெற்று வருகிறது. 
புத்தகத் திருவிழாவில் நூற்றுக்கணக்கான பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் 700 அரங்குகளை அமைத்துள்ளனர். இதில்ஒவ்வொரு அரங்கிலும் பல விதமான தலைப்புகளில் புத்தகங்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த புத்தகங்களை வாங்கவும் பார்க்கவும் பலர் வந்தவண்ணம் உள்ளனர். பெண்கள், குழந்தைகள், முதியோர் என பல தரப்பினரும் தங்களுக்கு விருப்பமான புத்தகங்களை வாங்கிச் சென்றனர்.அறிவியல், உரைநடை, குழந்தைகளுக்கான புத்தகங்கள், நாவல்கள், இலக்கிய நூல்கள் எனப் பலவகை நூல்கள் கண்காட்சியில் பரவிக்கிடக்கின்றன. அதுமட்டுமல்லாமல் பிரபலான ஆய்வு நிறுவனங்கள் தங்களது ஆய்வு நூல்களை அரங்குகள் அமைத்து விற்று வருகின்றன.மொழி, சமுதாயம், கல்வி, இலக்கியம் ஆகியவை தொடர்பான ஆய்வுகளை நூல்களாக அச்சிட்டு வைக்கப்பட்டுள்ளன. இந்த ஆராய்ச்சி நூல்களை ஆராய்ச்சி மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் அதிகம் வாங்கிச் செல்கின்றனர்.

பிரபல ஆய்வு நிறுவனங்கள்:

 குறிப்பாக உலகத் தமிழ் ஆராய்ச்சி நிறுவனம், செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனம், சென்னைப் பல்கலைக்கழகம், தமிழ்ப் பல்கலைக்கழகம் ஆகியவை ஏராளமான ஆராய்ச்சி நூல்களை கொண்டு வந்துள்ளன. இதுபோன்ற தமிழ் ஆய்வு நூல்கள் தவிர,ஆக்ஸ்போர்டு யூனிவர்சிட்டி பிரஸ் போன்ற நிறுவனங்கள் ஆங்கில ஆய்வு நூல்களை வைத்துள்ளன.அரசு சார்பில் தொடங்கப்பட்ட ஆய்வு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சில பதிப்பகங்களும் ஏராளமான ஆய்வு நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளன.

 அரசியல் ஆய்வுகள், சமூக ஆய்வுகள், ஒப்பாய்வுகள், வரலாற்று ஆய்வுகள் என பலதலைப்புகளில் நூல்கள் உள்ளன.மேலும் வ.உ.சி. நூலகம், டாக்டர் உ.வே.சாமிநாதய்யர் நூலகம் போன்றவையும் பல அரிய ஆராய்ச்சி நூல்களை விற்பனைக்கு வைத்துள்ளன. மத ரீதியிலான ஆராய்ச்சியாளர்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் பல மதம் தொடர்பான ஆய்வு நூல்கள் குறிப்பிட்ட மதம் சம்மந்தமான அரங்குகள் தவிர, பிற அரங்குகளிலும் உள்ளன.முதலாளித்துவம், கம்யூனிஸம் சார்ந்த பொருளாதார ஆய்வு நூல்களும் ஏராளமாக இருக்கின்றன.

பயன் பெற்ற ஆராய்ச்சியாளர்கள்:

இவ்வாறு புத்தகக் கண்காட்சியில் குவிக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான ஆராய்ச்சி நூல்கள் ஆராய்ச்சியாளர்களுக்கும், ஆராய்ச்சி மாணவர்களுக்கும் பெரிதும் பயன் அளித்து வருகின்றன.அவற்றை ஆராய்ச்சி மாணவர்கள் மட்டுமல்லாமல், பிற வாசகர்களும் வாங்கிச் செல்கின்றனர். இதனால் இலக்கியவாதிகள், கல்வியாளர்கள் மட்டுமல்லாமல், ஆராய்ச்சியாளர்களையும் இந்தாண்டு புத்தகக் கண்காட்சிதிருப்திபடுத்தியுள்ளது.

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை ரூ.2 லட்சமாக உயர்வு: தமிழக அரசு அறிவிப்பு...

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தில் சிறப்பு சிகிச்சைக்கான தொகை உயர்த்தப்பட்டுள்ளது. சிறப்பு சிகிச்சை முறைகளுக்கு வழங்கப்படும் ரூ.1.50 லட்சத்தை ரூ.2 லட்சமாக உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து மேலும் தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

முதலமைச்சர் காப்பீட்டு திட்டத்தை மேம்படுத்திடும் வகையில் மேலும் 312 சிகிச்சை முறைகள் சேர்க்கப்பட்டுள்ளன.

இதேபோல் திட்டத்திற்காக ஆண்டுக்கு ரூ.1,270 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படும் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது. ஏழை மக்களுக்கு உதவிடும் வகையில் மாநில அரசின் பங்களிப்பாக ரூ.35 கோடி தொகுப்புடன் நிதி உருவாக்கப்படும். சிறப்பு அறுவை சிகிச்சை செய்பவர்கள் எந்த செலவையும் செய்ய வேண்டியதில்லை.

இதுவரை 1.58 கோடி குடும்பங்கள் முதலமைச்சர் காப்பீட்டு திட்ட அட்டைகள் பெற்றுள்ளன. மேலும் திட்டம் குறித்து தகவல் மற்றும் புகார் அளிக்க 1800 425 3993 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம் என்று தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கற்றல் குறைபாடு மாணவர்களுக்கு செயல்முறை தேர்வு அறிமுகம்!!!

பள்ளிகளில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை, வாசித்தல், எழுதுதல் மற்றும் அடிப்படை கணக்குகளை போடுதல் உள்ளிட்ட செயல்பாடுகளில், பின்தங்கி இருக்கும் மாணவர்கள், கற்றல் குறைபாடுள்ளவர்களாக பிரிக்கப்படுகின்றனர்.

’டிஸ்லெக்ஷியா’ - வாசித்தல் குறைபாடு, ’டிஸ்கிராபியா’- எழுதுவதில் குறைபாடு, ’டிஸ்கால்குளியா’ - கணக்கு போடுதல் குறைபாடு, ’டிஸ்பிராக்சியா’, ’டிஸ்பேசியா’ என ஐந்து வகையாக, கற்றல் குறைபாடுகள் உள்ளன.

இவற்றில், வாசித்தல், எழுதுதல், மற்றும் கணக்கு போடுதல் தொடர்பான குறைபாடுகளே பெரும்பான்மையாக பள்ளி மாணவர்களுக்கு உள்ளது. இதனைக் கண்டறிந்து, அதற்கான பயிற்சி அளித்து, மாணவர்களை, மேம்படுத்தவே அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

கற்றல் குறைபாடுள்ளவர்கள், மற்ற மாணவர்களை ஒப்பிடுகையில், ஓரளவு மட்டுமே கல்வியில் பின்தங்கி இருப்பவர்களாக துவக்கத்தில் காணப்படுவர். இதனை சரிசெய்யாமல் விடுவதால், அடுத்தடுத்த வகுப்புகளில், அவர்களின் கற்றல் திறன் மட்டுமின்றி சிந்திக்கும் திறனும் பாதிக்கப்படுகிறது.

கடந்த நான்காண்டுகளுக்கு முன்பு, இக்குறைபாடுகளுக்கு போதியளவு முக்கியத்துவம் வழங்கப்படவில்லை. ’ஆல்பாஸ்’ முறையினால், இவ்வாறு கற்றலில் பின்தங்கும் மாணவர்கள் குறித்தும் பெரிதானதொரு விழிப்புணர்வு இல்லை. இதனால், பொதுத் தேர்வு வகுப்புகளில், மாணவர்களுக்கு அடிப்படை வாசித்தல் மற்றும் எழுதுதல் திறன் இல்லாமல், தேர்ச்சி விகிதம் சரிந்தது.

இக்குறைபாடுகளை துவக்கத்திலேயே கண்டறிந்து, அதற்கு முறையே பயிற்சி அளித்து, அவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த, கல்வித்துறை பல்வேறு தேர்வுகளை, நடத்த துவங்கியது. மாணவர்களின், கல்வித்திறன் மட்டுமின்றி, பல்வேறு இணை செயல்பாடுகள் மூலம், அவர்களின் சிந்திக்கும் ஆற்றல் அளவிடப்படுகிறது. இந்த அளவுகளைக் கொண்டு, அம்மாணவர் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை ஆசிரியர் பயிற்றுனர்கள் பதிவு செய்தனர்.

ஒருங்கிணைந்த கோவை, அனைவருக்கும் கல்வி இயக்கத்துக்குட்பட்ட, 22 வட்டாரங்களில் கடந்த 2014-15 கல்வியாண்டில் 40, 2015-16 ல் 39, நடப்பு கல்வியாண்டில், 43 குழந்தைகளும், கற்றலில் பின்தங்கியவர்களாக உள்ளனர்.

மாவட்ட திட்ட அலுவலர் ஒருவர் கூறுகையில், ”இதுவரை, ஆசிரியர் பயிற்றுனர்கள், மாணவர்களுக்கு அளித்த பயிற்சி அடிப்படையில், கற்றல் குறைபாடுள்ள குழந்தைகளை கண்டறிந்தனர்.

ஆனால், அதிகாரப்பூர்வமாக இதுவரை, கற்றல் குறைபாடுள்ள மாணவர்கள் பட்டியல் தயார்படுத்தப்படவில்லை. ஒரு மாணவர் நுாறு சதவீதம் கற்றல் குறைபாடுள்ளவரா என்பதை துல்லியமாக கண்டறிய, ’சிறப்பு செயல்திறன் பயிற்சியை, கல்வித்துறை அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு சில மாவட்டங்களில் இதன்படி, குழந்தைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

நடப்பு கல்வியாண்டுக்குள் அனைத்து மாவட்டங்களிலும் நடைமுறைக்கு வருமென கல்வித்துறை தெரிவித்துள்ளது. இதில், மாணவர்களுக்கு எழுத்து தேர்வு, செயல்திறன் என பல்வேறு தேர்வுகள் நடத்தப்படுகிறது, ” என்றார்.

மாணவர்களுக்கு ஒழுக்கம் போதிக்க 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி

அரசு பள்ளி மாணவர்களுக்கு, ஒழுக்கத்தை பயிற்றுவிக்க, 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி தரப்படுகிறது. அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களுக்கு, ஒழுக்க பண்புகளை கற்றுக் கொடுக்காததால், அவர்களின் செயல்பாடுகளில், பல பிரச்னைகள் ஏற்படுகின்றன. 

பல மாணவர்கள், பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் அறிவுரையைக் கேட்பதில்லை.ஊர் சுற்றுவது, மாணவியரை கிண்டல் செய்வது, சக மாணவர்களிடம் பிரச்னை செய்வது, ஆசிரியர்களை எதிர்த்து பேசுவது, வகுப்புகளுக்கு வராமல், பள்ளி வளாகத்தில் கூடி விளையாடுவது என, தேவையற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இந்நிலையை மாற்ற, மாணவர்களுக்கு ஒழுக்கக் கல்வியை கற்றுக் கொடுக்கும் வகையில், பாட நேரங்களிலேயே, மாணவர்களுக்கு சிறப்பு பயிற்சி அளிக்க, மத்திய அரசு உத்தரவிட்டது. இதையடுத்து, தமிழக பள்ளி கல்வித் துறையின், மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம், 15 ஆயிரம் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்க உள்ளது. முதல் பிரிவுக்கான பயிற்சி, பயிற்சி நிறுவன இயக்குனர், ராமேஸ்வர முருகன் தலைமையில், சென்னையில் நேற்று துவங்கியது. தமிழகம் முழுவதும், 6,700 பள்ளிகளில் படிக்கும், 20 லட்சம் மாணவர்களுக்கு, நல்லொழுக்க கல்வி கற்றுத் தரப்பட உள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்தனர்.

NHIS-2016 card Download...

NHIS -2016 card for the period 01.07.2016 to 30.06.2020 can be downloaded online in the above link by entering your NHIS - 2012 card No. & password. Password is date of birth in (DD/MM/YYYY)format.

CLICK HERE TO DOWNLOAD - NHIS - 2016 NEW CARD...

மார்ச் முதல் 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு : 'ஆதார்' விபரம் தந்தவர்களுக்கு கிடைக்கும்

தமிழகத்தில், மார்ச், 1 முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது. கடந்த, 2005ல் வழங்கிய, காகித ரேஷன் கார்டுக்கு பதில், 'ஸ்மார்ட் கார்டு' வழங்க, உணவு துறை முடிவு செய்தது. இதற்கான, ஒருங்கிணைப்பு பணிகள், 2015ல் துவங்கின. 

மக்களிடம் இருந்து, 'ஆதார்' விபரங்களை வாங்கி, அவற்றின் அடிப்படையில், ஸ்மார்ட் கார்டு வழங்க முடிவு செய்யப்பட்டது. அதன்படி, ரேஷன் கடைகளில், ஆதார் விபரம் வாங்கும் பணி, 2016ல் துவங்கியது. அதே ஆண்டு, அக்டோபர் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்க திட்டமிடப்பட்டது. ஆனால், பலர் ஆதார் விபரம் தராததால், கார்டு வழங்கப்படவில்லை. இந்நிலையில், மார்ச், 1ல் இருந்து, ஸ்மார்ட் கார்டு வழங்க, உணவு துறை முடிவு செய்துள்ளது.

இதுகுறித்து, உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது: மொத்தமுள்ள, 2.03 கோடி ரேஷன் கார்டுகளில், 1.91 கோடி கார்டுகள், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில் பதிவு செய்யப்பட்டுள்ளன. ஒரு ரேஷன் கார்டில், எத்தனை உறுப்பினர் பெயர் உள்ளதோ, அத்தனை பேரின் ஆதார் எண்களை, ரேஷன் கடையில் பதிவு செய்ய வேண்டும். அப்படி முழுமையாக பதிவு செய்த ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 93 லட்சம். குடும்ப தலைவரின் ஆதார் எண் மட்டும், பதிவு செய்த கார்டுகளின் எண்ணிக்கை, 87 லட்சம். 

ஆதார் விபரம் தர, ரேஷன் கடை தவிர்த்து, 'மொபைல் ஆப்' வசதியும் ஏற்படுத்தப்பட்டது. ஆனாலும், பலர் பதிவு செய்யவில்லை. சட்டசபையில், வரும், 23ல் கவர்னர் உரையாற்ற உள்ளார். அதில், ஸ்மார்ட் கார்டு அறிவிப்பு வெளியாகும். ஆதார் பதியாதவர்களுக்கு, பிப்., வரை அவகாசம் தரப்படும். அதற்குள், எத்தனை பேர் முழு ஆதார் விபரத்தை தருகிறார்களோ, அவர்களுக்கு, மார்ச் முதல், ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும். ஆதார் தராத கார்டுகள் ரத்து செய்யப்படாது. இவ்வாறு அவர் கூறினார்.

தீவிர சோதனை! : ஸ்மார்ட் கார்டுக்காக, ஆதார் விபரம் தராத வீடுகளில், ஊழியர்கள் ஆய்வு செய்து வருகின்றனர். ஸ்மார்ட் கார்டு வினியோகம் துவங்கிய பின், அவசரமாக ஆதார் பதிவு செய்வோர் ஆவணங்களை, தீவிர சோதனை செய்ய, அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஆவணங்களில் எழுத்து பிழை, முகவரி குழப்பம் உள்ளிட்டவை இருந்தால், ஸ்மார்ட் கார்டு பெறுவது கடினம். எனவே, அனைவரும் ஆதார் பதிவு செய்வது நல்லது.

தனியார் பள்ளிகளில் 'அட்மிஷன்': கண்டுகொள்ளாத கல்வி துறை

தனியார் பள்ளிகளில் விதிகளை மீறி, மாணவர் சேர்க்கை நடப்பதால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளை விட, தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்கவே, பெரும்பாலான பெற்றோர் விரும்புகின்றனர். ஆங்கில பேச்சு, மொழியறிவு, பொது அறிவு, பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்தல் போன்றவற்றுக்காக, தனியார் பள்ளிகளை தேடி, பெற்றோர் படையெடுக்கின்றனர். 

இதை பயன்படுத்தி, பல தனியார் பள்ளிகள், விதிகளை மீறி, அதிக நன்கொடை வசூலிக்கின்றன. மெட்ரிக் மற்றும் சி.பி.எஸ்.இ., பள்ளிகளில், ஒவ்வொரு பள்ளியும், ஒவ்வொரு விதமான விதிகளை பின்பற்றுகின்றன. கல்விக் கட்டணம், நன்கொடை வசூல், விண்ணப்ப கட்டணம், வினியோகம் என, அனைத்திலும், ஒவ்வொரு பள்ளியும், தனி வழியில் செயல்படுகின்றன. இதற்கு, அரசு தரப்பில், எந்த கண்காணிப்பும் இல்லாததால், எல்.கே.ஜி., அட்மிஷனுக்கே, பல லட்சம் ரூபாய் செலவு செய்ய வேண்டிய நிலை பெற்றோருக்கு உள்ளது.

இதை பயன்படுத்தி, பல இடைத்தரகர்களும், கல்வித் துறை ஊழியர்களில் சிலரும், தனியார் பள்ளி அட்மிஷனில், வசூல் வேட்டை நடத்துகின்றனர். இதை, மெட்ரிக் பள்ளி இயக்குனரகம், பள்ளிக் கல்வி இயக்குனரகம், மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகள், மாவட்ட மெட்ரிக் ஆய்வாளர்கள் என, யாரும் கண்டுகொள்வதில்லை. இந்த நிலைமையை மாற்ற, முதல்வர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஜியோவின் அடுத்த அதிரடி : ரூ.999 - ரூ.1,500/-க்கு 4ஜி ஸ்மார்டபோன்.

தொடங்கிவிட்டதுயன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக 4ஜி இணைய அணுகல் மட்டுமின்றி ரூ.2,990/- என்ற விலையில் இருந்து மிகவும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்களையும் வழங்கியது. இப்போது ரூ.2,990/- என்ற விலை நிர்ணயத்தை மேலும் பல படிகள் குறைத்து ரூ.1500/- என்ற விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

பல தொலைத்தொடர்பு புரட்சிகளை இந்திய சந்தையில் நடத்திய ரிலையன்ஸ் ஜியோ அதன் அடுத்த சந்தை புரட்சிக்கான நடவடிக்கைகளை தொடங்கிவிட்டது. அதாவது, ரூ.1500/-க்கும் குறைவான விலையில் 4ஜி வோல்ட் அம்சம் கொண்ட 4ஜி கருவிகளை அறிமுகம் செய்யவுள்ளது.
 
இந்திய தொலைத்தொடர்புத் துறையின் ஒரு கேம் சேஞ்சர் ஆக திகழும் ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம், அதன் வாடிக்கையாளர்களுக்கு அதிவேக 4ஜி இணைய அணுகல் மட்டுமின்றி ரூ.2,990/- என்ற விலையில் இருந்து மிகவும் மலிவான 4ஜி ஸ்மார்ட்போன்களையும் வழங்கியது. இப்போது ரூ.2,990/- என்ற விலை நிர்ணயத்தை மேலும் பல படிகள் குறைத்து ரூ.1500/- என்ற விலைக்கு ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் கொண்டு வந்துள்ளது.

TET ARTICLE :ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு ஆசிரியர்களின் கோரிக்கை!

மாண்புமிகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அவர்களுக்கு-
கடந்த 2013 ல் நடந்த TET தேர்வில் தேர்ச்சி பெற்று மூன்று வருடங்களாக எந்த விடையும் தெரியாத எங்களுக்கு தங்களின் தற்போதைய அறிவிப்பு ஒரு வித நிம்மதியாக உள்ளது.
அதே சமயம் நாங்கள் பள்ளி செல்லும் காலத்தில் பள்ளி செல்வதே சிரமமான சூழலில் பள்ளிகளில் போதிய ஆசிரியர்களுமின்றி படித்து தேர்ச்சி பெறுவதே போராட்டமாக இருந்தது. அத்தகைய சூழலில் படித்து அன்றைய சூழலில் அதிக மதிப்பெண் பெற்று( இன்றைய சூழலில் அது குறைந்த மதிப்பெண்)தேர்ச்சி பெற்று பட்டம் பெற்றோம்.என்றாவது ஒருநாள் எங்களின் ஆசிரியர் கனவு நனவாகும் என்ற நம்பிக்கையில் காத்திருந்த எங்களுக்கு தமிழக அரசின் ஆசிரியர் தகுதித் தேர்வு பெரும் சவாலாக அமைந்தது.பணிக்குச் சென்று குழந்தைகளையும் குடும்பத்தையும் கவனித்து கஷ்டத்திலும் நம்பிக்கை விடாது படித்து தகுதித் தேர்வில் தேர்ச்சியும் பெற்றோம்.ஆனால் தற்போது TET தேர்ச்சி பெற்றும் வெயிட்டேஜ் முறையால் எங்களின் முயற்சிகள் செல்லாக்காசாகி நிற்பது எங்களுக்கு பெரும் மனவேதனையை தருகிறது.நாங்கள் 140 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றாலும் ஆசிரியராக முடியாத ஒரு சூழலை காணமுடிகிறது.எனவே தாங்கள் எங்களின் மீது கருணை உள்ளம் கொண்டு யாரையும் பாதிக்காத வண்ணம் தேர்வு செய்யும் முறையை மாற்றி அமைத்திட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கும் எங்களுக்கு வேலை வாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் நியமனம் செய்து உதவிட வேண்டும் என்றும் பணிவோடு வேண்டுகிறோம்.இம்முறை அறிமுகம் செய்தால் இன்றில்லை என்றாலும் என்றாவது ஒரு நாள் ஆசிரியர் பணி கிட்டும் என்ற நம்பிக்கையிலாவது எங்கள் வாழ்க்கைச் சக்கரம் ஓடும்
                          இப்படிக்கு
      ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ள வேலை வாய்ப்பு அலுவலக பதிவுமூப்பு(40 வயதை கடந்த) ஆசிரியர்கள்.

பருவத்தேர்வு விடுமுறைகளை ஈட்டிய விடுப்பின் முன் இணைப்பாக துய்க்கமுடியும்-தொடக்கக்கல்வி அலுவலரின் ஆணை நகல்

CRC Date changed‬: Upper primary- 21.01.17. Primary - 28.01.17 - SPD Proceeding!!