Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Tuesday, 17 January 2017

பொங்கல் போனஸ் எப்போது கிடைக்கும்? எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்கள்

முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்த பொங்கல் போனஸ் எப்போது கிடைக்கும் என்ற எதிர்பார்ப்பில் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் உள்ளனர்.

பொங்கல் பண்டிகையையொட்டி அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கருணைத் தொகை வழங்கப்படும் என்று கடந்த 11ம் தேதி அறிவித்தார்.
''3000, 1000, 500 ரூபாய் என மூன்று வகையாக பொங்கல் போனஸ் வழங்கப்படும். இதனால் அரசுக்கு 325 கோடியே 20 லட்சம் ரூபாய் செலவு ஏற்படும்'' என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தின் செய்தி குறிப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது. பொங்கல் பண்டிகை முடிந்த பிறகும் இன்று வரை அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் ஜனார்த்தனன் கூறுகையில், "அரசு ஊழியர் சங்க மாநில மாநாடு திருவண்ணாமலையில் சமீபத்தில் நடந்தது. இந்த மாநாட்டில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக பொங்கல் போனஸ் வழங்க வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதன்பிறகு பொங்கல் பண்டிகைக்கு சில நாட்களுக்கு முன்பு போனஸ் தொடர்பான அறிவிப்பை தமிழக அரசு வெளியிட்டது.  மறைந்த முதல்வர் ஜெயலலிதா, மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையான ஊதியம் மற்றும் சலுகைகள் தமிழக அரசு ஊழியர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் வழங்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் மத்திய அரசு ஊழியர்களுக்கு கடந்த 2014-15ம் ஆண்டு முதல் பொங்கல் போனஸாக 7000 ரூபாய் வழங்கப்படுகிறது. ஆனால் தமிழகத்தில் போனஸ் தொகை உயர்த்தப்படவில்லை. மேலும், புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்யப்படும் என்று அ.தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் அதையும் இதுவரை தமிழக அரசு செய்யவில்லை. எனவே, 7 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், சிறப்பு காலமுறை ஊதியம், மதிப்பூதியம், தொகுப்பூதியம் பெறும் 3 லட்சம் அரசு ஊழியர்கள், 5 லட்சம் ஓய்வூதியதாரர்களுக்கு உடனடியாக பொங்கல் போனஸ் தொகையை வழங்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்றார். 

இரண்டுக்கு மேல் இருந்தால் பள்ளியில் 'சீட்' கிடையாது.

'இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பள்ளியில் 'அட்மிஷன்' மட்டுமல்லாமல், வேலை வாய்ப்பும் கிடையாது' என, டில்லியில் இயங்கி வரும் ஒரு பள்ளி நிர்வாகத்தின் அறிவிப்பால், பெற்றோர் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
டில்லியில் ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த, அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக உள்ளார். இங்கு, பிரபலமான, சல்வான் என்ற பள்ளி உள்ளது.

டில்லிவாசிகள், தங்கள் குழந்தைகளை, சல்வான் பள்ளியில் சேர்ப்பதை விரும்புகின்றனர். இந்நிலையில், வரும் கல்வி ஆண்டுக்காக நர்சரி வகுப்புகளில் மாணவர் சேர்க்கைக்குஅறிவிப்பு வெளியாகி உள்ளது.சல்வான் குழும பள்ளிகளில், தங்கள் குழந்தைகளை சேர்க்கவிண்ணப்பம் வாங்கிய பெற்றோர், அதில், 'இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், 'சீட்' கிடையாது' என்ற நிபந்தனையை பார்த்து, அதிர்ச்சி அடைந்தனர்.

மேலும், 'இந்த பள்ளியில் பணிபுரிய விரும்பி விண்ணப்பிப்பவர்களுக்கு, இரண்டு குழந்தைகளுக்கு மேல் இருந்தால், பணி வாய்ப்பு வழங்கப்படாது' என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.பிரபலமான இப்பள்ளியின் அறிவிப்பு, பெற்றோர் மற்றும் ஆசிரியர்களிடையே, அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.இது குறித்து சல்வான் பள்ளி குழும இயக்குனர் சுஷில் சல்வானிடம் கேட்டபோது, அதிகரித்து வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்த, பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில், இவ்வாறு அறிவித்துள்ளதாக கூறினார்.

ஏ.இ.இ.ஓ ; க்கள் மீது திடீர் கரிசனம் !!

சமச்சீர் கல்வியால் வேலையின்றி கணிணி பட்டதாரிகள் தவிப்பு !!

இலவச மின் நூல் தளம் - பயனுள்ள முகவரிகள் !!

சில அருமையான புத்தகங்கள் வாசிக்க கிடைத்தால் அன்ன ஆகாரத்தை கூட மறந்து விட்டு படிக்கத்தோன்றும். நல்ல புத்தகங்களை வாசிப்பதில் உள்ள சுவாரஸ்யமும் பயனும் வேறு எதிலும் இல்லை. காசு கொடுத்தாலும் கிடைக்காத நல்ல புத்தங்கள் பல இணைய தள புத்தக அலமாரிகளில் பதுங்கி கிடக்கிறது. இவற்றை

தேடிஎடுத்து இலவசமாக படித்து பயன் பெற சில தளங்களின் சுட்டிகளை தந்திருக்கிறேன். உங்ளுக்கு தெரிந்ததையும் எல்லோருக்கும் பயன்படுமானால் இங்கே பகிர்ந்து கொள்ளுங்கள்.

இலவச இணைய மின் நூலகங்கள்:
------------------------------------------
worldpubliclibrary.org/
archive.org/details/texts
bartleby.com/
onlinebooks.library.upenn.edu/lists.html
bibliomania.com/

planetebook.com/
e-book.com.au/freebookswww.netlibrary.net/
infomotions.com/
ipl.org/reading/

gutenberg.org/
forgottenbooks.org/
readprint.com/
en.wikibooks.org
e-booksdirectory.com/

free-ebooks-canada.com/
book-bot.com/witguides.com/
2020ok.com/
manybooks.net/

globusz.com/Library/new_ebooks.php
readeasily.com/
eserver.org/
starry.com/free-online-novels/ For free on line novels
memoware.com/ Free Ebook Titles for your PDA!

http://www.freebookspot.com/
http://obooko.com/
http://www.bookyards.com/
http://www.onlinefreeebooks.net/ - general books,computer,technical,user manuals and service manuals available.
http://digital.library.upenn.edu/books/
http://e-library.net/

cdl.library.cornell.edu/ selected digital collections of historical significance.bookboon.com/in you can download free books for students and travelers
arxiv.org/-Open access to e-prints in Physics, Mathematics, Computer Science, Quantitative Biology, Quantitative Finance and Statistics
bookmooch.com/ -புத்தகங்களை இங்கே பரிமாறிக்கொள்ளலாம்

மதுரை தமிழ் இலக்கிய மின் தொகுப்புத் திட்டம்
நூலகம் -இலங்கைத் தமிழ் இலக்கிய மின் பதிவுகள்.
TAMIL E-BOOKS DOWNLOADS
தமிழ் முஸ்லிம் நூலகம்
knowledge at fingertips
tamilvu.org- தமிழ் இணைய பல்கலை கழக நூலகம்

www.4shared.com தளத்திலிருந்து இலவச புத்தகங்கள் இங்கே பெறலாம்.
தமிழ் புத்தகங்கள் இங்கே பெறலாம்.

தமிழ் புத்தகங்கள் புதினங்கள் இங்கே வாசிக்கலாம்.
மின்னணுவியல் பொருட்களின் பயனர் கையேடுகளை (User Manual) இங்கே பெறலாம்.
Electronics Service manual,data-sheets,Schematic diagram

கணினியியல் நூல்கள் இங்கே இலவசமாக கிடைக்கிறது.
http://ebooks-library.blogspot.com/
http://www.zillr.org/
http://freecomputerbooks.com/

மருத்துவ நூல்கள் இலவசமாக இங்கே பெறலாம்.

EncyclopaediaBritannica 29 Volumes in djvu format. Use djvu viewer program to view the files

Maran Collects & Shares -Software related EBooks, Personality Development Books, Audiobooks, IT Certification Materials with Test Engines, Software Video Tutorials, Encyclopedia of All Kinds, Rare Collection of Tamil Songs, Tamil Devotional Songs, Indian Instrumentals & Many More.

http://www.magazinesdownload.com/   -Download Popular magazines from this site.

http://www.booksshouldbefree.com/  Download Audio books as mp3 files.

ATM-ல் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பு ரூ10000 உயர்வு

ஏடிஎம்மில் பணம் எடுப்பதற்கான உச்ச வரம்பை ரிசர்வ் வங்கி உயர்த்தியுள்ளது.  இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: -

இனி தினசரி ஏடிஎம்களில் ரூ.10 ஆயிரம்  வரை எடுக்கலாம் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.  

அதே போல் நடப்பு கணக்கு வைத்திருப்பவர்கள் வாரத்திற்கு 50 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றிருந்த உச்ச வரம்பு ஒரு லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது.

சேமிப்பு வங்கி கணக்குள்ளோர் ஏ.டி.எம் ல் வாரத்திற்கு 24 ஆயிரம் ரூபாய் வரை எடுக்கலாம் என்றும் அறிவித்துள்ளது. 

கழிப்பறைகளை கணக்கெடுக்க பள்ளிகளுக்கு உத்தரவு.

பள்ளி மாணவ, மாணவியரின் வீட்டு கழிப்பறை எண்ணிக்கையை கணக்கெடுத்து, அறிக்கை தாக்கல் செய்ய, பள்ளி ஆசிரியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
மத்திய அரசின், 'துாய்மை இந்தியா' திட்டத்தில், திறந்தவெளி கழிப்பறைகளை மாற்றி, வீடுகளிலும், பொது இடங்களிலும் கழிப்பறைகள் கட்ட பிரசாரம் மேற்கொள்ளப்படுகிறது. இதையொட்டி, அனைத்து அரசு, தனியார் பள்ளிகளில் படிக்கும் மாணவ, மாணவியர் மத்தியில், கழிப்பறை பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த, மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, பள்ளி மாணவ, மாணவியரின் வீடுகளில் கழிப்பறை உள்ளதா என, ஊரக வளர்ச்சித் துறையுடன் சேர்ந்து, பள்ளிக் கல்வித் துறை கணக்கெடுக்கிறது.

இது குறித்து, மாவட்ட முதன்மை கல்வி அதிகாரி அலுவலகத்தில் இருந்து, பள்ளிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில், 'அனைத்து அரசு, அரசு உதவிபெறும் மற்றும் மெட்ரிக் பள்ளிகள், மாணவ, மாணவியரிடம் பேசி, கழிப்பறைகள் இல்லாத வீடுகளின் பட்டியலை, ஜன., 18க்குள், ஒப்படைக்க வேண்டும்' என கூறப்பட்டுள்ளது.

இன்ஜினியரிங் படிப்புக்கு விரைவில் தேசிய நுழைவுத்தேர்வு

'நீட்' தேர்வு போல், இன்ஜினியரிங் படிப்புக்கும், தேசிய அளவில் நுழைவுத் தேர்வு நடத்த, மாநில அரசுகளிடம், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., கருத்து கேட்க உள்ளது. 
பிளஸ் 2 தேர்வில் வெறும் தேர்ச்சி பெற்றவர்கள் கூட, தனியார் கல்லுாரிகளில் நன்கொடை கொடுத்து, மருத்துவ படிப்பில் சேர்வதாக, மத்திய அரசுக்கு தொடர்ந்து புகார்கள் வந்தன.

இதையடுத்து, மருத்துவ படிப்பில் சேர, அனைத்து மாணவர்களுக்கும், 'நீட்' எனப்படும் நுழைவுத் தேர்வு நடத்தப்படும் என, இந்திய மருத்துவ கவுன்சிலான, எம்.சி.ஐ., அறிவித்தது. அதன்படி, தேர்வு நடத்துவது கட்டாயம் என, உச்ச நீதிமன்றமும் உத்தரவிட்டது. இதை போல, தகுதி அடிப்படையில், இன்ஜினியரிங் கல்லுாரிகளில் மாணவர்களை சேர்க்கும் வகையில், தேசிய நுழைவுத் தேர்வு நடத்த, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. இதற்கு, மத்திய மனிதவளத் துறையும் அனுமதி அளித்துள்ளது. அதற்கு, பல தரப்பிலும் எதிர்ப்பு எழுந்துள்ளது. எனவே, நுழைவுத் தேர்வின் அவசியம் குறித்து, மாநிலங்களிடம் கருத்து கேட்க, ஏ.ஐ.சி.டி.இ., முடிவு செய்துள்ளது. விரைவில், இந்த கருத்து கேட்பு துவங்கும் என, உயர்கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன.

காசோலைகளை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிப்பு.

சிவகங்கை மாவட்டத்தில் பெண் கல்விக்கான உதவித்தொகை கோடிடப்பட்ட காசோலைகளாக வழங்கப்பட்டதால்,அவற்றை மாற்ற முடியாமல் அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள் தவிக்கின்றனர்.
பெண் கல்வியை ஊக்குவிக்கும் வகையில் கிராமப்புறங்களில் பயிலும் மிகவும் பிற்பட்ட மாணவிகளுக்கு ஆண்டுதோறும் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

இந்த தொகை பிற்பட்டோர் நலத்துறை மூலம் அரசு தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் 3 முதல் 8 வகுப்பு வரை பயிலும் மாணவிகளுக்கு வழங்கப்படுகிறது. ஐந்தாம் வகுப்பு வரை 500 ரூபாய், 5 முதல் 8 ம் வகுப்பு வரை ஆயிரம் வழங்கப்படும். கடந்த ஆண்டு வரை உதவித்தொகைக்கான காசோலை கோடிடப்படாமல் (கிராஸ்) தலைமைஆசிரியர்களுக்கு வழங்கப்பட்டது.

அந்த காசோலையில் உதவித்தொடக்கக் கல்வி அலுவலரிடம் மேலொப்பம் பெறப்பட்டு, வங்கியில் மாற்றப்பட்டது. இந்த ஆண்டு தலைமைஆசிரியர் சேமிப்பு கணக்கில் செலுத்தி பணமாக்கும் வகையில் காசோலையில் கோடிடப்பட்டுள்ளது.

'தலைமைஆசிரியர்' என்ற பெயரில் எந்த பள்ளியிலும் சேமிப்பு கணக்கு கிடையாது. இதனால் காசோலையை மாற்ற முடியாமல் தலைமைஆசிரியர்கள் தவிக்கின்றனர்.

தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலாளர் முத்துப்பாண்டியன் கூறியதாவது: தொடக்க, நிடுநிலைப் பள்ளிகளில் 'தலைமைஆசிரியர்' பெயரில் சேமிப்பு கணக்கு இல்லை. இதனால் கோடிடப்பட்ட காசோலைகளை சேமிப்பு கணக்கில் செலுத்தி மாற்றுவதில் சிக்கல் உள்ளது. அவற்றை திரும்ப பெற்று, பழைய முறைப்படி கோடிடப்படாமல் வழங்க வேண்டும், என்றார்.

கைத்தறி இயக்குனர் தேர்வு : நாளை கடைசி நாள்

கைத்தறி உதவி இயக்குனர் தேர்வுக்கு விண்ணப்பிக்க, நாளை கடைசி நாள் என, அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழக அரசின் கைத்தறி மற்றும் துணிநுால் துறையில், 14 உதவி இயக்குனர் பணியிடங்கள் காலியாக உள்ளன. 
இந்த பதவியில் தகுதியான நபர்களை நியமிக்க, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., சார்பில், ஏப்., 8ல் தேர்வு நடக்கிறது.

இதற்கான, ஆன்லைன் விண்ணப்ப பதிவு, டிச., 15ல் துவங்கியது; ஜன., 12ல் முடிவதாக இருந்தது. தற்போது, நாளை வரை விண்ணப்பிக்கலாம் என, அவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது.

தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் 10 நாட்களுக்கு தொடர்ச்சியாக மழை: தமிழ்நாடு வெதர்மேன் கணிப்பு!

ஜனவரி 20 க்கு மேல் தமிழகத்தில் 100 மி.மீ வரை மழை பெய்ய வாய்ப்பிருப்பதாக தனியார் வானிலை ஆர்வலரான தமிழ்நாடு வெதர்மேன் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். ‘தமிழக விவசாயிகளின் வேதனை கலந்த மழை இரைஞ்சுதல் கடவுளின் காதுகளில் விழுந்திருக்கலாம். 
ஏனெனில் ஜனவரி மாதத்தின் கடைசி 10 நாட்களுக்கு தமிழகத்தில் தொடர்ச்சியாக மழை பெய்ய வாய்ப்பு உண்டு. தமிழக விவசாயிகளுக்கு விரும்பத் தகுந்த மழைப்பொழிவைத் தரும் ஆற்றல் மிக்க வடகிழக்கு பருவமழை இந்த ஆண்டு வானிலை நிலைய அறிவிப்புகளின் படி பொய்த்துப் போன பின்னும். சைபீரியன் ஹை இப்போதும் வலிமையுடன் இருப்பதால் மேற்கு பசிபிக் பருவக் காற்று தற்போது மேலும் வலுப்பெற்று வங்கக் கடலில் ஈரப்பதமான காற்று வீசத் தொடங்கி இருக்கிறது. இதனால் தமிழகத்தில் ஜனவரி 20 க்கு மேல் முந்தைய மழை வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் 100 மிமீ அளவில் நீடித்த மழை நிச்சயம்’ என்கிறார் தமிழ்நாடு வெதர்மேன். தமிழக மழைப் பதிவு வரலாற்றில் இதற்கு முந்தைய வறட்சி ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில் இது 5 மடங்கு அதிக மழைப்பொழிவு என்பது தமிழ்நாடு வெதர்மேனின் கணிப்பு.

இவரது கணிப்பின்படி தமிழகத்தில் மக்களின் குடிநீர் தேவையை நிறைவு செய்யும் அளவுக்காவது குறைந்த பட்ச மழைப் பொழிவு இருந்து, தமிழ்நாட்டிற்கு வரவிருக்கும் குடிநீர் பஞ்சம் நீங்கினால் சரி!

TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017

TAMIL NADU OPEN UNIVERSITY RECRUITMENT 2017 | TN0U - CHENNAI | RECRUITMENT NOTIFICATION| NAME OF THE POST - CONTROLLER OF EXAMINATIONS | NO. OF VACANCIES 1 | LAST DATE 31.01.2017

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகம் பத்தாவது பட்டமளிப்பு விழா