Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 18 January 2017

தேசிய அளவில் கல்வி நாயகி என்னும் புதுமைக்கான விருது பெற்று தஞ்சாவூர் மாவட்ட அரசுத் தொடக்க பள்ளி ஆசிரியை சாதனை...

தேசிய அளவில் *கல்வி நாயகி* என்னும் புதுமைக்கான விருது பெற்று தஞ்சாவூர் மாவட்ட அரசுத் தொடக்க பள்ளி ஆசிரியை சாதனை...

நடப்பு கல்வியாண்டில் அரசுப்பள்ளியில் பயிலும் மாணவர்களைக் கொண்டு *My Trolley* என்னும் சிறப்பு குழந்தைகள் பயன்படுத்தும் ஒரு சாதனைத்தை தயாரித்து தேசிய அளவில் புதுமைக்கான MP ரஞ்சன் விருதையும் கல்வி நாயகி என்னும் அங்கீகாரத்தையும் குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற டிசைன் பார் சேஞ்ச் என்னும் அமைப்பின் மூலம் தேர்வு செய்யப்பட்டு தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த கோபால் நகர் தொடக்கப் பள்ளியில் பணியாற்றும் மேரி மரிலாண்ட் அரிஸ்டா என்னும் இடைநிலை ஆசிரியர் பெற்று தமிழக கல்வித்துறைக்கும் தஞ்சை மாவட்டத்திற்கும் பெருமை சேர்த்துள்ளார்..

அவரை முதன்மை கல்வி அலுவலர் திருவளர்ச்செல்வி,மாவட்ட கல்வி அலுவலர் ரங்கநாதன், உதவித்தொடக்க கல்வி அலுவலர் ரமாபிரபா ஆகியோர் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனர்.

இனி வாக்காளர் நகலை நீங்களே எடுத்துகொள்ள - " ECI APP " - தேர்தல் ஆணையம் அறிவிப்பு


வாக்காளர்கள் மற்றும் தேர்தல் அதிகாரிஎன அனைவரும் பயன்பெறும் வகையில் , ECI APP என்ற புதிய செயலியை அறிமுகம்செய்துள்ளது தேர்தல் ஆணையம் 
புதிய செயலியில் என்னவெல்லாம்இருக்கும்?

எப்படி பெயர் சேர்ப்பது ?

வாக்கு சாவடி எங்கு அமைகப்பட்டுள்ளது ? உள்ளிட்ட பல விவரங்கள் உள்ளடிக்கிஇருக்கும் .

வாக்காளர்களுக்கு சாதகம் என்ன ?

வேட்பாளர்கள் வேட்பு மனுவின் போதுதாக்கல் செய்த பிரமான பத்திரங்களைநேரடியாக பார்க்க முடியும் என்பதுகுறிபிடத்தக்கது.

மேலும், வெற்றி பெற்ற அரசியல் கட்சிகளின்விவரங்களையும் பார்க்க முடியும் என்பதுகுறிபிடத்தக்கது.

ECI APP கூடுதல் அம்சங்கள் :

வாக்காளர் அடையாள சீட்டுகளை, நாமேநகல் எடுத்து க்கொள்ளலாம் .

பஞ்சாப், உத்திர பிரதேசம் உள்ளிட்ட 5 மாநிலசட்டப்பேரவை தேர்தலின் போது , இந்தசெயலி மிகுத்த பயனுள்ளதாக இருந்ததாகபொதுமக்கள் தெரிவித்துள்ளனர்.

இதன் காரணமாக இனி வரும் காலங்களில்குறிப்பாக தேர்தல் நேரத்தில்அனைவருக்கும் இந்த செயலிஉபயோகப்படும் என்பதில் எந்த மாற்றமும்இல்லை

தனியார் பாலிடெக்னிக் ஆசிரியர்களுக்கு பதவி உயர்வு வழங்குவது குறித்து 3 மாதங்களுக்குள் பரிசீலிக்கவேண்டும் உயர்கல்வித்துறைக்கு, ஐகோர்ட்டு உத்தரவு.

பதவி உயர்வு கேட்டு தனியார் பாலிடெக்னிக் கல்லூரி ஆசிரியர்கள் கொடுத்த கோரிக்கை மனுக்களை 3 மாதங்களுக்குள் சட்டப்படி பரிசீலிக்கும்படி உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்டோருக்கு, சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. 
சென்னை வேப்பேரியில் உள்ள செங்கல்வராய நாயக்கர் பாலிடெக்னிக் கல்லூரியில் வேலை செய்பவர்கள் சிட்டிபாபு, சீனுவாசன், செல்வம், ரமேஷ், ஆனந்தன். இவர்கள் 5 பேரும், ஐகோர்ட்டில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:- அரசாணை ரத்து நாங்கள் 15 முதல் 23 ஆண்டுகளாக ஆசிரியராக பணியாற்றி வருகிறோம். எங்களுக்கு பயிற்றுவிப்பாளர் அல்லது விரிவுரையாளர் பதவி உயர்வு வழங்கவேண்டும். ஆனால், பல ஆண்டுகளாக பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. 1989-ம் ஆண்டு பயிற்றுவிப்பாளர் பதவியை அகற்றி தொழிற்கல்வித்துறை இணை இயக்குனர் அரசாணை பிறப்பித்தார். இந்த அரசாணையை எதிர்த்த ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசாணையை ரத்து செய்து கடந்த 2004-ம் ஆண்டு தீர்ப்பளித்தார். இந்த தீர்ப்பை எதிர்த்து அரசு செய்த மேல்முறையீட்டு மனுவும் கடந்த 2011-ம் ஆண்டு தள்ளுபடி செய்யப்பட்டுவிட்டது.

 ஆனால், 1989-ம் ஆண்டு அரசாணையை காட்டி, எங்களுக்கு பதவி உயர்வு வழங்கப்படாமல் உள்ளது. பதவி உயர்வு இதுகுறித்து விரிவான கோரிக்கை மனுவுடன் எங்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 8-ந்தேதி மனுக்களை கொடுத்தோம். ஆனால், எங்களது மனுக்களை உயர்கல்வித்துறை செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள் பரிசீலிக்காமல் உள்ளனர். எனவே, எங்களது மனுக்களை பரிசீலித்து, தகுந்த பதவியை உயர்வை வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிடவேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை நீதிபதி பி.ராஜேந்திரன் விசாரித்தார். பின்னர், அவர் பிறப்பித்த உத்தரவில், 'மனுதாரர்கள் கடந்த டிசம்பர் மாதம் கொடுத்த கோரிக்கை மனுவை தமிழக உயர்கல்வித்துறை செயலாளர், தொழில்கல்வித்துறை இயக்குனர், இணை இயக்குனர் ஆகியோர் சட்டப்படி பரிசீலித்து, தகுந்த உத்தரவினை 3 மாதங்களுக்குள் பிறப்பிக்கவேண்டும்'என்று கூறியுள்ளார்.

ஓய்வூதியதாரர்கள் உயிர்வாழ் சான்றிதழ் சமர்ப்பிக்கபிப்.28 வரை அவகாசம்

தொழிலாளர் வைப்பு நிதி வாரியத்தின் கீழ் வரும் ஓய்வூதியதாரர்கள் தங்களின் உயிர்வாழ் சான்றிதழ்களை இணையம் மூலம் சமர்ப்பிப்பதற்கான காலக்கெடு பிப்ரவரி 28-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தொழிலாளர் வைப்பு நிதி வாரியம் செவ்வாய்க்கிழமை அறிக்கை வெளியிட்டுள்ளது.

ATM இல் 3 முறைக்கு மேல் பணம் எடுக்க முடியாது - மத்திய அரசின் புது சட்டம்...!

ATM இல் 3 முறைக்கு மேல் பணம் எடுக்க முடியாது - மத்திய அரசின் புது சட்டம்...!
ஏ டி எம் மில் . மாதம் 5 முறை இலவசமாக பணம் எடுக்க முடியும். மேலும், பிற வங்கி ஏ டி எம்மிலிருந்து பணம் எடுக்க மாநகரங்களில் இருப்பவர்கள் 3 முறையும், மற்ற இடங்களில் உள்ளவர்கள் 5 முறையும் இலவசமாக பணம் எடுக்க முடியும். 
ஒருவேளை அதற்குமேல் எடுத்தால் அதற்கான
கட்டணம் ரூபாய் 20 வசூலித்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது ரூபாய் நோட்டு செல்லாது என பிரதமர் அறிவித்த பின்பு, பலரும் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறிவிட்டனர். இருந்தபோதிலும் அனைவராலும் ஒரு குறிபிட்ட சில நாட்களிலேயே டிஜிட்டல் பரிவர்தனைக்கு மாற முடியுமா என்றால் , நிச்சயம் முடியாது .

பெரும்பாலான மக்கள், ரொக்க பரிவர்த்தனைக்கே அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். இந்நிலையில், ரொக்க பரிவர்த்தனையை குறைக்க , ஏ டி எம் களில் பணம் எடுபதற்கான எண்ணிகையை வெகுவாக குறைத்தால், மக்கள் டிஜிட்டல் பரிவர்த்தனைக்கு மாறுவார்கள் என ஆலோசிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மாதத்திற்கு மூன்று முறை மட்டுமே ஏடிஎம் இல் பணம் எடுக்க முடியும், அதற்கு மேல் எடுத்தால் அதற்கான கட்டணத்தை நம் வங்கி கணக்கில் இருந்த பெறப்படும் என தெரிவிக்கபட்டுள்ளது. இது குறித்த முக்கிய அறிவிப்பு அடுத்த மாத பட்ஜெட்டில் வெளியாகும் என தகவல் வெளியாகி உள்ளது.

ஜல்லிக்கட்டுக்காக இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயார் - பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் பாண்டியராஜன் கருத்து.

ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும்பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயாராக உள்ளதாக பள்ளி கல்வித் துறை அமைச்சர் பாண்டியராஜன் தெரிவித்துள்ளார்.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக சென்னை மெரினாவில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் இளைஞர்கள் குழுவுடன் அமைச்சர்கள் ஜெயக்குமார், பாண்டியராஜன் நள்ளிரவில் பேச்சு வார்த்தை நடத்தினர். பேச்சுவார்த்தைக்கு பின்னர் அமைச்சர்கள் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர்.அப்போது அமைச்சர் பாண்டியராஜன் கூறுகையில், இளைஞர்களின் உணர்வுகளை மதிக்கிறோம்.

 ஜல்லிக்கட்டு நடத்துவதற்கான அவசர சட்டத்தை மத்திய அரசு கொண்டுவர தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும். உங்கள் போராட்டத்தை எங்கள் போராட்டமாக அரசு நினைக்கிறது. அலங்காநல்லூரில்கைது செய்யப்பட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.மேலும், ஜல்லிக்கட்டு குறித்து 24 மணிநேரத்திற்குள் முதல்வர் பன்னீர்செல்வம் அறிக்கை வெளியிடுவார்.

நாடாளுமன்ற கூட்டத்தொடர் துவங்குவதற்கு முன் மத்திய அரசுக்கு, தமிழக அரசு அழுத்தம் கொடுக்கும் எனவும் ஜல்லிக்கட்டு விவகாரத்தில் தேவைப்படும் பட்சத்தில் இளைஞர்களுடன் இணைந்து போராட தமிழக அரசு தயாராக இருப்பதாகவும் அமைச்சர் பாண்டியராஜன் கூறினார்.மேலும் அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில், ஜல்லிக்கட்டுக்கு அவசர சட்டம் கொண்டு வர கொண்டுவர தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும். நாடாளுமன்றத்திலும் குடியரசுத்தலைவரிடமும் எம்.பி.க்கள் மூலம் அவசரச்சட்டம் கொண்டு அனைத்து முயற்சியும் மேற்கொள்ளப்படும் என்றார்.

பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்களா?

தமிழக அரசுப் பள்ளிகளில் பணிபுரியும் பகுதி நேர ஆசிரியர்களை (பயிற்றுநர்கள்) பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளிகளில், 2012-ஆம் ஆண்டு ரூ.5,000 தொகுப்பூதியத்தில் 16,549 பகுதிநேர ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டனர். வாரத்துக்கு 3 அரை நாள்கள் வீதம், ஒரு மாதத்தில் 12 அரை நாள்கள் பணியாற்ற பணிக்கப்பட்டனர்.அனைவருக்கும் கல்வி இயக்கத்தில் அனைத்து வகைப் பணிப் பிரிவினருக்கும் ஊதிய உயர்வு வழங்கியபோது, முதல் முறையாக பகுதிநேர ஆசிரியர்களுக்கும் (2014 ஏப்ரல் முதல்) ரூ.2,000 ஊதியம் உயர்த்தப்பட்டு, ரூ.7.000 வழங்கப்பட்டு வருகிறது.கடந்த 5 ஆண்டுகளில் ஒருமுறை மட்டுமே ஊதிய உயர்வு வழங்கப்பட்டது. பண்டிகைக் கால ஊக்கத்தொகை, பணியின்போது உயிரிழந்தவர்களுக்கு இழப்பீடு ஆகியவை வழங்கப்படவில்லை. பணி ஓய்வு பெற்றவர்களுக்கு பணப்பலன் மறுக்கப்படுகிறது.மகளிர் பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு மகப்பேறு கால விடுப்பு அனுமதிக்கப்படவில்லை. பணி நியமனம், பணி நிரவலின்போது தொலைதூரப் பள்ளிகளுக்கு பணி ஒதுக்கீடு வழங்கப்பட்டவர்களுக்கு இதுவரை அருகிலுள்ள பள்ளிகளில்பணிபுரியும் வாய்ப்பு வழங்கப்படவில்லை என பகுதிநேர ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் எஸ்.செந்தில்குமார் கூறியதாவது:14-ஆவது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரில், அப்போதைய முதல்வர் ஜெயலலிதா 110 விதியின் கீழ், 16,549 பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கும் ஓராண்டுக்கு12 மாதங்களுக்கான ஊதியத்தைக் கணக்கிட்டு அறிவித்ததை அமல்படுத்த வேண்டும்.கடந்த 5 ஆண்டுகளாக நிலுவையில் உள்ள மே மாதங்களின் தொகுப்பூதியத் தொகையான ரூ.51 கோடியே 30 லட்சத்து 19 ஆயிரத்தை பகுதிநேரப் பயிற்றுநர்களுக்கு வழங்க துறை ரீதியிலான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கோவா மாநிலத்தில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு மாதம் ரூ.15,000, ஹரியாணாவில் ரூ.10,000 வீதம் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது. மேலும், கேரளம், கர்நாடகம் மாநிலங்களில் பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஒன்றுக்கும் மேற்பட்ட பள்ளிகளில் வேலை வழங்கப்பட்டு, கூடுதல் தொகுப்பூதியம் வழங்கப்படுகிறது.

எனவே, அதே நடைமுறையை தமிழத்திலும் அமல்படுத்த வேண்டும். பகுதிநேர பயிற்றுநர்களை காலமுறை ஊதியத்தில் பணியமர்த்த ஆண்டுக்கு ரூ.400 கோடி கூடுதலாக நிதி ஒதுக்கீடு செய்து, அனைவரையும் பணி நிரந்தரம் செய்ய வேண்டும்.2015, 2016-ஆம் ஆண்டுகளில் ஜாக்டோ அமைப்பின் போராட்டங்களின்போது, பள்ளிகளை இயக்க அரசின் உத்தரவுப்படி முழுமையாகப் பயன்படுத்தப்பட்ட 15,000-க்கும் மேற்பட்ட பகுதிநேர பயிற்றுநர்களுக்கு ஊதிய உயர்வு வழங்கப்படவில்லை.

எனவே, பகுதிநேர பயிற்றுநர்களுக்கு 2011-12-ஆம் ஆண்டுமுதல் கணக்கிட்டு ஆண்டு வாரியாக ஊதிய உயர்வு வழங்க வேண்டும். பணியின்போது இறந்தவர்கள், ஓய்வு பெற்றவர்களுக்கு பணப் பலன்களை வழங்க வேண்டும். காலியாக உள்ள அரசுப் பணியிடங்களில் பகுதிநேர பயிற்றுநர்களை நியமித்து நிரந்தரம் செய்ய வேண்டும் என்றார் அவர்.

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் விடியல் பயணம் ...

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் ஆரம்ப கல்வி முதலே கணினி அறிவியல் பாடத்தை முக்கிய பாடமாக வருகின்ற கல்வியாண்டின் தொடக்கத்திலே
கொண்டுவரவேண்டி...

விழுப்புரம் மாவட்டத்தில் கணினி ஆசிரியர்கள் பொதுக் கூட்டம் 
29.1.2017ஞாயிறு அன்று நடைபெற உள்ளது.
(வேலையில்லாமல் வாடும் கணினி ஆசிரியர்களே உங்கள் பணி வாயப்பை உறுதி செய்ய அனைவரும்  
வாரீர்.)

இடம்:பிரசன்னா பவன்(tollgate),
உளுந்தூர்ப்பேட்டை,
விழுப்புரம் .
நாள் :29.1.2017
நேரம்:9.00 காலை மணி.

மதிய உணவு  வழங்கப்படும்.

குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.

இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு 
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவச  உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
இரண்டு புகைப்படம்,
பி.எட் சான்றிதழ் நகல்,
வேலைவாய்ப்பு அட்டை நகல்,

இவற்றுடன் தங்களின் 
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்.

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.

தொடர்புக்கு:
9790105381,9585361512, 9443482512.

வெ.குமரேசன் ,
மாநிலப் பொதுச் செயலாளர்,
9626545446.
தமிழ்நாடு  பி.எட்  கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் .
பதிவு எண்:655/2014

தீரச் செயல் புரிந்த 25 சிறுவர், சிறுமிகளுக்கு தேசிய விருது 23-ந் தேதி பிரதமர் மோடி வழங்குகிறார்

தீரச் செயல்புரியும் சிறுவர், சிறுமிகளுக்கு ‘பாரத்’ விருது மற்றும் சஞ்சய் சோப்ரா-கீதா சோப்ரா பெயரில் தேசிய விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. 2016-ம் ஆண்டுக்கான விருதுக்கு 13 சிறுவர்கள், 12 சிறுமிகள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

ஆற்று வெள்ளத்தில் சிக்கிய 2 தோழிகளை மீட்க முயன்று தனது உயிரை விட்ட அருணாசலபிரதேச மாநிலத்தின் 8 வயது சிறுமி தர் பிஜூவுக்கு (இறப்புக்கு பின்பு) பாரத் விருது வழங்கப்படுகிறது. கீதா சோப்ரா விருதை மேற்கு வங்காளத்தின் தேஜாஸ்வேதா (வயது 18), ஷிவானி (17) உள்பட 11 சிறுமிகளும், சஞ்சய் சோப்ரா விருதை உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 18 வயது சுமித் மம்காய்ன் உள்பட 13 சிறுவர்களும் பெறுகின்றனர்.

விபசார தொழிலுக்கு சிறுமிகளை கடத்தும் கும்பலை பிடிக்க துணிச்சலுடன் மாறுவேடத்தில் சென்று போலீஸ் மற்றும் சி.பி.ஐ.க்கு உதவியதற்காக தேஜாஸ்வேதா, ஷிவானி ஆகியோர் விருது பெறுகின்றனர். சுமித் மம்காய்ன் உறவினரின் உயிரை காப்பாற்றுவதற்காக தைரியத்துடன் சிறுத்தையுடன் போராடியவர் ஆவார்.

23-ந் தேதி டெல்லியில் நடைபெறும் விழாவில் பிரதமர் மோடி, தீரச் செயல் புரிந்ததற்கான விருதுகளை வழங்குகிறார். விருதுபெறும் சிறுவர், சிறுமியர்கள் 26-ந் தேதி நடைபெறும் குடியரசு தின அணிவகுப்பிலும் பங்கேற்கின்றனர்.

சி.ஏ. இறுதித் தேர்வு: லக்னெள மாணவி முதல் இடம்


கணக்குத் தணிக்கையாளர் (சி.ஏ.) இறுதித் தேர்வு- பொது செயல்திறன் தேர்வுகளின் (சிபிடி) முடிவுகளை இந்தியன் சார்டர்ட் அக்கவுண்டட் நிறுவனம் (ஐசிஏஐ) செவ்வாய்க்கிழமை வெளியிட்டது. இதில், லக்னெள மாணவி எடி அகர்வால் அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
பள்ளிப் படிப்பை முடித்தோர் சிபிடி தேர்வு, இடைநிலைத் தேர்வுகளான (ஐபிசி) குரூப்-1, குரூப்-2 தேர்வுகள் ஆகியவற்றில் அடுத்தடுத்து தேர்ச்சி பெற்று சி.ஏ. இறுதித் தேர்வை எதிர்கொள்ள வேண்டும். பட்டப் படிப்பை முடித்தோர் நேரடியாக இடைநிலைத் தேர்வுகளை எழுதி தேர்ச்சி பெற்று, சி.ஏ. இறுதித் தேர்வைச் சந்திக்கலாம்.
இறுதித் தேர்வும், சிபிடி தேர்வும் ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படும். இந்த நிலையில், 2016 நவம்பரில் நடத்தப்பட்ட சி.ஏ. இறுதித் தேர்வு முடிவையும், டிசம்பரில் நடத்தப்பட்ட சிபிடி தேர்வு முடிவையும் ஐசிஏஐ வெளியிட்டது.
நாடு முழுவதிலுமிருந்து சி.ஏ. இறுதித் தேர்வை எழுதிய 36,768 பேரில் 4,256 பேரும், சிபிடி தேர்வு எழுதிய 70,321 பேரில் 32,658 பேரும் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சி.ஏ. இறுதித் தேர்வில் 800-க்கு 599 மதிப்பெண்களை லக்னெளவைச் சேர்ந்த மாணவி எடி அகர்வால் பெற்று அகில இந்திய அளவில் முதல் இடம் பெற்றுள்ளார். பிவாண்டியைச் சேர்ந்த பியூஷ் ரமேஷ் லோஹியா 574 மதிப்பெண்களுடன் இரண்டாம் இடமும், ஆமதாபாத்தைச் சேர்ந்த ஜோதி முகேஷ்பாய் மகேஸ்வரி 566 மதிப்பெண்களுடன் மூன்றாம் இடமும் பிடித்துள்ளனர்.
தமிழகத்துக்கு சிறப்பிடம் இல்லை: 2015 நவம்பரில் சென்னையைச் சேர்ந்த ஜேம்ஸ் ஜான் பிரிட்டோ 595 மதிப்பெண்களுடன், 2016 மே மாதத்தில் சேலத்தைச் சேர்ந்த மாணவர் எஸ். ஸ்ரீராம் 613 மதிப்பெண்களுடன் அகில இந்திய அளவில் முதலிடங்களைப் பெற்றிருந்தனர். ஆனால், இந்த முறை தமிழக மாணவர்கள் பின்தங்கிவிட்டனர்.

தொலைதூர கல்விக்கு விண்ணப்பிக்க 31ம் தேதி கடைசி நாள்!!

புதுச்சேரி பல்கலைக்கழக தொலை துார கல்வி இயக்கக மாணவர்கள் சேர்க்கை வரும் 31ம் தேதியுடன் முடிகிறது.

புதுச்சேரி பல்கலைக்கழக தொலை துார கல்வி இயக்ககத்தில் பொது, நிதி, மார்க்கெட்டிங், சர்வதேச வர்த்த கம், மனித வள மேம்பாட்டு பிரிவு களில் எம்.பி.ஏ., படிப்புகள் உள்ளன.

இதுமட்டுமின்றி எம்.காம்., நிதி, எம்.ஏ., ஆங்கிலம், சமூகவியல், இந்தி படிப்புகள் உள்ளன. இந்த படிப்புகளுக்கான தொலைதுார மாணவர் சேர்க்கை தற்போது நடந்து வருகிறது. இம்மாதம் 31ம் தேதிக்குள் டிகிரி முடித்த மாணவர்கள் விண்ணப்பிக்கலாம்.

எம்.பி.ஏ., படிப்புகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 24,925 ரூபாய், எம்.காம்., எம்.ஏ., படிப்புகளுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு 11,425 ரூபாய் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கு பல்வேறு யூனியன் பிரதேசங்கள், மாநிலங்களின் ஸ்காலர்ஷிப் உண்டு.

மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு 100 சதவீத கல்வி கட்டண சலுகை உண்டு. கைதிகள், மூன்றாம் பாலினத்தவர், முன்னாள் ராணுவ வீரர்கள், கணவனை இழந்த பெண்கள், புதுச்சேரி பல்கலைக்கழக ஆசிரியர் அல்லாத ஊழியர்களுக்கு 50 சதவீத கட்டண சலுகை உண்டு.

www.pondiuni.edu.in என்ற இணை யதளத்தில் ஆன்-லைன் மூலமாகவோ அல்லது விண்ணப்பங்களை டவுண்லோடு செய்தே விண்ணப்பிக்கலாம். மேலும் விபரங்களுக்கு 0413-2654439, 2654441 ஆகிய என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

TRB:இன்ஜி., உதவி பேராசிரியர் நாளை சான்றிதழ் சரிபார்ப்பு.

அரசு இன்ஜினியரிங் கல்லுாரி உதவி பேராசிரியர் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு, நாளை சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது. 
அரசு இன்ஜினியரிங் கல்லுாரிகளில், காலியாக உள்ள, 192 இடங்களை நிரப்ப, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் எழுத்து தேர்வு, 2016, அக்., 22ல் நடத்தப்பட்டது; 28 ஆயிரம் பேர் பங்கேற்றனர். எழுத்து தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, இட ஒதுக்கீட்டு விதிகள், மதிப்பெண் அடிப்படையில், சான்றிதழ் சரிபார்ப்பு, வரும், 19, 20ல், சென்னை, கிழக்கு தாம்பரத்தில் உள்ள ஜெய்கோபால் கரோடியா தேசிய மேல்நிலைப் பள்ளியில் நடக்கிறது. இதற்கான அழைப்பு கடிதங்கள், டி.ஆர்.பி., இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

NEET EXAM :மே 7-ல் நீட் நுழைவுத் தேர்வு.

எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் படிப்புகளுக்கான நீட்  நுழைவுத்  தேர்வு மே 7-ம் தேதி  நடைபெறும் என அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நீட் நுழைவுத் தேர்வை  எழுத விரும்புவோர் வரும் 23ம்தேதி முதல் விண்ணப்பிக்கலாம். www.cbseneet.nic.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.

'ஆதார்' தராத ரேஷன் கார்டு: முடக்கி வைக்க முடிவு.

'ஆதார்' விபரம் தராத ரேஷன் கார்டுகளை முடக்க, உணவுத் துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.

தமிழகத்தில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்க, ஏற்கனவே உள்ள ரேஷன் கார்டுதாரரிடம் இருந்து, 'ஆதார்' எண் வாங்கப்படுகிறது.
பலர், ஆதார் கார்டு விபரம் தராமல் அலட்சியமாக உள்ளதால், ஸ்மார்ட் கார்டு வழங்கும் பணி தாமதமாகி வருகிறது.
இதனால், ஆதார் விபரம் பதியாத ரேஷன் கார்டை முடக்கி வைக்க, உணவு துறை அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து, உணவு துறை அதிகாரி
ஒருவர் கூறியதாவது:
தற்போது, 2.03 கோடி ரேஷன் கார்டுகள் உள்ளன. அதில், 93 லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், தங்கள் குடும்பத்தில் உள்ள அனைத்துஉறுப்பினர்களின், ஆதார் விபரத்தையும் பதிவு செய்துள்ளனர்.

முடக்க, முடிவு

மீதி கார்டுதாரர்கள், தங்களது குடும்பத்தை சேர்ந்த ஒருவரின் ஆதார் விபரம் மட்டும் வழங்கியுள்ளனர். ஆனால், நான்கு லட்சம் கார்டுதாரர், ஆதார் விபரம், மொபைல் எண் என, எதையும் ரேஷன் கடைகளில் பதிவு செய்யவில்லை.

பதிவு செய்ததும் பொருட்கள்

எனவே, இவர்களின் கார்டுகளை மட்டும், ரேஷன் கடைகளில் உள்ள, 'பாயின்ட் ஆப் சேல்' கருவியில், 'பில்' போட முடியாதவாறு முடக்க, முடிவு செய்யப்பட்டு உள்ளது.

உணவு வழங்கல் உதவி ஆணையர், வட்ட வழங்கல் அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு, அவர்களுக்கு தெரிவிக்கப்படும். அதிகாரிகள், அவர்களிடம் விசாரணை நடத்திய பின், கார்டு மீதான முடக்கத்தை ரத்து செய்வர். பின், அந்த கார்டுதாரர், ரேஷன் கடைக்கு சென்று, ஆதார் பதிவு செய்ததும், பொருட்கள் வழங்கப்படும். எனவே, அனைத்து ரேஷன் கார்டுதாரர்களும், விரைவாக, ஆதார் பதிவு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.