Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Thursday, 19 January 2017

போராட்டத்தின் எதிரொலி் நாளை (20.01.2017) விடுமுறை !!

மதுரை,விருதுநகர்,திருப்பூர்,திண்டுக்கல்,தேனி மாவட்டம் நாளை பள்ளிக் கல்லூரிகளுக்கு விடுமுறை.- மாவட்ட ஆட்சியர்கள் அறிவிப்பு !!

திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள அனைத்து வகை பள்ளிகளுக்கும் நாளை 20.1.2017 வெள்ளிக்கிழமை விடுமுறை-முதன்மை கல்வி அலுவலர் அறிவிப்பு

தொடக்கக் கல்வி - நிதியுதவி பெறும் தொடக்க / நடுநிலைப் பள்ளிகளுக்கு 2016ம் ஆண்டு இறுதி கற்பிப்பு மற்றும் பராமரிப்பு மான்யம் விடுவித்தல் சார்பான இயக்குனரின் அறிவுரைகள்







அரசாணை எண்: 14 பள்ளிக்கல்வி நாள்:13/01/17- 19 நடுநிலைப்பள்ளிகளை உயர்நிலை பள்ளிகளாக தரம் உயர்த்துதல் - ஆசிரியர் பணியிடங்களை தோற்றுவித்தல் - ஆணை வெளியிடப்படுகிறது





தேவகோட்டை பள்ளி மாணவர்கள் பாவை விழா போட்டிகளில் மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை 


தேவகோட்டை பள்ளி மாணவர்கள்
பாவை விழா போட்டிகளில்
மாவட்ட அளவில் முதலிடம் பிடித்து சாதனை 

தனியார் பள்ளி மாணவர்களுடன் போட்டியிட்டு அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக வெற்றி

தேவகோட்டை – தமிழ்நாடு இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மாவட்ட அளவில் சிவகங்கையில்  நடைபெற்ற பாவை விழா போட்டிகளில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக முதலிடம் பிடித்து சாதனை படைத்தனர்.இவர்களுக்கு பாராட்டு விழா பள்ளியில் நடைபெற்றது.
                          தமிழக அரசின் இந்து சமய அறநிலையத் துறை சார்பாக மாவட்ட அளவில் திருப்பாவை,திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டிகள் சிவகங்கை அருள்மிகு சுந்தரராஜ பெருமாள் கோவிலில் நடைபெற்றது.இதில் தேவகோட்டை சேர்மன் மாணிக்க வாசகம் அரசு உதவி பெறும் நடுநிலைப் பள்ளி மாணவர்கள் பங்கேற்று திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியில் பிரிஜித் என்கிற மாணவரும், திருவெம்பாவை ஒப்புவித்தல் போட்டியில் வெங்கட்ராமன் என்கிற மாணவரும் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பரிசுகளையும்,சான்றிதழ்களையும் வெற்றி பெற்றனர்.கடந்த ஆண்டும் திருப்பாவை ஒப்புவித்தல் போட்டியில் இப்பள்ளி மாணவியே முதலிடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.தொடர்ந்து இரண்டாவது ஆண்டாக இந்த சாதனை நிகழ்த்தப்பட்டுள்ளது பாராட்டுக்குரியது.இப்போட்டிகளில் கனிஷ்கா,திவ்ய ஸ்ரீ,ஜெயஸ்ரீ,ஆகாஷ்,அம்மு ஸ்ரீ,ஜனஸ்ரீ,கிஷோர்குமார்,சந்தியா,ராஜேஷ்,உமா மகேஸ்வரி  மாணவர்கள் பங்கேற்று சான்றிதழ்கள் பெற்றனர்.வெற்றி பெற்ற மற்றும் பங்கேற்று சான்றிதழ் பெற்ற மாணவர்களையும்,பயிற்சி அளித்த முத்து லெட்சுமி,முத்துமீனாள் ஆசிரியைகளையும் பள்ளி தலைமை ஆசிரியர் லெ.சொக்கலிங்கம் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினார்கள். தேவகோட்டை வட்டார அளவிலான போட்டிகளிலும் இப்பள்ளி மாணவர்கள் அதிக அளவில் முதலிடம் பிடித்து வெற்றி பெற்றனர் என்பது குறிப்பிடதக்கது.

சிந்தித்து பதில் எழுதும் வினாக்கள் : பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்ப்பு

சிந்தித்து பதில் எழுதும் வினாக்கள் : பிளஸ் 2 தேர்வில் எதிர்பார்ப்பு
மாணவர்களின் சிந்தித்து பகுத்தாய்வு செய்யும் திறனை அதிகரிக்கும் வினாக்கள், பிளஸ் 2 பொதுத்தேர்வில் இடம்பெற உள்ளன. தமிழகத்தில், பிளஸ் 2 மற்றும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வில் பெறும் மதிப்பெண்களே, மாணவர்களின் உயர் கல்வியை தீர்மானிக்கிறது. 
அதனால் தான், இந்த இரு தேர்வுகளுக்கும், கல்வித் துறை மற்றும்பெற்றோர் அதிக முக்கியத்துவம் அளிக்கின்றனர்.பிளஸ் 2 பொதுத்தேர்வில், மாநில ரேங்க் பெறும் பல மாணவர்கள், மருத்துவம் அல்லது இன்ஜினியரிங்கில் சேர்ந்தாலும், முதல் செமஸ்டரிலேயே, மிக குறைந்த மதிப்பெண் பெறும் நிலை உள்ளது. அவர்களுக்கு, 'ஓரியன்டேஷன்' என்ற முன் தயாரிப்பு பயிற்சி வழங்க வேண்டியுள்ளது.இது குறித்து, அண்ணா பல்கலை மற்றும் தனியார் கல்லுாரி ஆசிரியர்கள், தேர்வுத் துறை அதிகாரிகளுக்கு ஆலோசனைகளை வழங்கி உள்ளனர்.

இதன்படி, இந்த ஆண்டு, பிளஸ் 2 பொதுத்தேர்வில், பாடங்களில் இருந்து மட்டுமே கேள்விகள் என்றில்லாமல், சிந்தித்து பதில் எழுதும் வகையில், பல கேள்விகள் இடம் பெறும் என, கூறப்படுகிறது.கடந்த ஆண்டு பொதுத்தேர்விலும், இந்த நடைமுறை அமல்படுத்தப்பட்டது. சமீபத்தில் முடிந்த அரையாண்டு தேர்வு வினாத்தாளும், இந்த வகையில் தான் அமைக்கப்பட்டிருந்தது. அதே போல், பொதுத்தேர்வு வினாத்தாளும் அமையும் என, கூறப்படுகிறது.

6 ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் மாற்றம்: தமிழக அரசு உத்தரவு

தமிழகத்தில் ஆறு ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். அவர்களில், தொழிலாளர் நலத் துறை ஆணையாளராக கா.பாலச்சந்திரன் நியமிக்கப்பட்டுள்ளார்.
இதுகுறித்து, தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன் புதன்கிழமை வெளியிட்ட உத்தரவு: (அதிகாரிகள் முன்பு வகித்த பதவி அடைப்புக்குறிக்குள்)
ஆர்.கண்ணன் -ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்ட இயக்குநர் (சென்னை மாநகராட்சி முன்னாள் துணை ஆணையாளர் -சுகாதாரம்)
எம்.லட்சுமி -வருவாய் நிர்வாக இணை ஆணையாளர் (விழுப்புரம் மாவட்ட முன்னாள் ஆட்சியர்)
கா.பாலச்சந்திரன் -தொழிலாளர் நலத் துறை ஆணையாளர் (தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முன்னாள் நிர்வாக இயக்குநர்)
என்.முருகானந்தம் -தில்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தின் முதன்மை உறைவிட ஆணையாளர் -2 (இந்திய துறைமுகங்கள் கூட்டமைப்பின் முன்னாள் நிர்வாக இயக்குநர்) மத்திய அரசுப் பணியில் இருந்து மாநில அரசுப் பணிக்குத் திரும்பிய அவருக்கு தில்லியிலே பணி வழங்கப்பட்டுள்ளது.
அசோக் டோங்ரே -விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் உறுப்பினர் செயலாளர் (மத்திய பாதுகாப்புத் துறை முன்னாள் இணைச் செயலாளர்) -மத்திய அரசுப் பணியில் இருந்து மாநில அரசுப் பணிக்குத் திரும்பினார்.
ஷில்பா பிரபாகர் சதீஷ் -தொழில் வழிகாட்டி மற்றும் ஏற்றுமதி அபிவிருத்தி நிறுவனத்தின் செயல் துணைத் தலைவர் (சென்னை மாநகராட்சி துணை ஆணையாளர் -கல்வி)

பொதுத் தேர்வு: 104 -இல் ஆலோசனை

பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வெழுதும் மாணவர்களுக்கான மனநல ஆலோசனைகள் தமிழக அரசின் 104 சேவை மூலம் புதன்கிழமை முதல் வழங்கப்படுகிறது.
இந்த ஆலோசனை வழங்குவதற்கான உளவியல் மருத்துவ நிபுணர்கள், உளவியல் ஆலோசகர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள் கொண்ட குழுவினர் தயாராக உள்ளனர். மாணவர்கள் 24 மணி நேரமும் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ளலாம். இதில் தேர்வுக்குத் தயாராகுதல், தேர்வு காலத்தின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகள், தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது என்று 3 பிரிவுகளாக ஆலோசனை வழங்கப்படும்.மேலும் உணவு முறை, மனஅழுத்தத்தைப் போக்குவது, நினைவாற்றலைப் பெருக்குவது, தேர்வு பயத்தைப் போக்குவது, தேர்வு முடிவுகளை எதிர்கொள்வது, தவறான முடிவுகளைத் தவிர்த்தல் உள்ளிட்டவை குறித்தும் ஆலோசனை வழங்கப்படும் என்று தமிழக அரசின் 104 மருத்துவ சேவையை அளித்து வரும் ஜிவிகே இஎம்ஆர்ஐ நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.

கடந்த ஆண்டுகளில் தேர்வு சமயத்தில் ஒரே நாளில் சுமார் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு இந்த சேவையின் மூலம் ஆலோசனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

நுழைவுத்தேர்வுகளுக்கு அரசு பள்ளியில் பயிற்சி.

அரசு பள்ளிகளில், 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, போட்டித் தேர்வுக்கான பயிற்சிகள் துவங்கியுள்ளன. நுழைவுத்தேர்வு மற்றும் போட்டி தேர்வுகளில், தமிழக மாணவர்களின் தேர்ச்சி விகிதம் பெருமளவு குறைந்துள்ளது. இதை சரி செய்யும் வகையில், அரசு பள்ளி மாணவர்களுக்கு, சிறப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.

மத்திய அரசின், அனைவருக்கும் இடைநிலை கல்வி திட்டத்தின் படி, 1,440 பள்ளிகளில், சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. இதற்காக, டில்லியைச் சேர்ந்த, பிரபல நிறுவனத்தின் புத்தகங்கள், தமிழக அரசு பள்ளிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு உள்ளன. இது குறித்து, அதிகாரிகள் கூறியதாவது: மருத்துவப் படிப்புக்கான, 'நீட்' தேர்வு, இன்ஜி., படிப்புக்கான, ஜே.இ.இ., தேர்வு, கல்வி உதவித்தொகை பெற உதவும், தேசிய திறனாய்வு தேர்வு மற்றும் தேசிய ஊரக திறனாய்வு தேர்வுகளுக்கு, சிறப்பு பயிற்சி தரப்படுகிறது. 8ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரையிலான மாணவர்கள், இதில் பங்கேற்கின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

ஜூன் 30 வரை இலவசங்கள் தொடரும்.. ஜியோ-வின் புதிய ஆஃபர்..!


மும்பை: ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின் டெலிகாம் சேவைப் பிரிவான ஜியோ, வாடிக்கையாளர்களைப் பெறவும், 
தக்கவைத்துக்கொள்ளவும் வெல்கம் ஆஃபர் மற்றும் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் ஆகியவற்றை அறிவித்துச் சுமார் 7 கோடிக்கும் அதிகமான வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் ஹேப்பி நியூ இயர் ஆஃப்ர் முடிவடைவதால், ஜூன் 30ஆம் தேதி வரையிலான புதிய இலவச திட்டத்தை வடிவமைத்துள்ளது ஜியோ.
இதன் மூலம் மார்ச் 31ஆம் தேதிக்குப் பின்னும் ஜியோ வாடிக்கையாளர்களுக்குக் கொண்டாட்டம் தான்.

இலவச திட்டம்
ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் டெலிகாம் பிரிவான ஜியோ அறிமுகத்தின் போது இந்திய டெலிகாம் சந்தையில் இருக்கும் போட்டியை சமாளிப்பது கடினம் என்பதால் அதிக வாடிக்கையாளர் கொண்ட தளத்தை உருவாக்குவதே தனது முதல் திட்டமாக இருந்தது.
இதற்காகவே இலவசங்களை வாரி வழங்கியது.

2 திட்டங்கள்.. 6 மாதம்
அதிகளவிலான வாடிக்கையாளர் தளத்தை அமைக்க ஜியோ அறிமுகத்தின் போது, டேட்டா முதல் வாயஸ் கால் வரை அனைத்தையும் இலவசம் என வெல்கம் ஆஃப்ராக அறிவித்தது. இது டிசம்பர் 31 வரை நீடித்தது.
அதன்பின் ஹேப்பி நியூ இயர் என்ற பெயரில் இண்டர்நெட் டேட்டா பயன்பாட்டு அளவை மட்டும் குறைத்து வாய்ஸ் முற்றிலும் இலவசம் என்ற ஆஃபரை வழங்கியது. இந்த ஆஃபர் வருகிற மார்ட் 31ஆம் தேதி முடிய உள்ளது.
அடுத்த என்ன????

புதிய ஆஃபர்
தற்போது திட்டமிட்டுள்ள திட்டம் ஜூன் 30ஆம் தேதி வரையில் நீட்டிக்கும். இதில் இண்டர்நெட் டேட்டா மட்டும் குறைவான விலையில் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் வாய்ஸ் கால் முற்றிலும் இலவசம் என்ற புதிய திட்டத்தை ஜியோ வடிவமைத்துள்ளதாக தெரிகிறது.

100 ரூபாய் மட்டுமே
முகேஷ் அம்பானி தலைமையில் இயங்கும் ஜியோ நிறுவனத்தின் இப்புதிய திட்டம் ஜூன் 30ஆம் தேதி வரை நீடிக்கும் என இத்திட்டத்தைக் குறித்த அறிந்த சில உயர் அதிகாரிகள் மற்றும் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இப்புதிய திட்டத்தில் இண்டர்நெட் டேட்டாவிற்கு மட்டும் மாதம் 100 ரூபாய் வசூல் செய்யப்படலாம் எனவும் கூறியுள்ளனர்.

பிஸ்னஸ் ஸ்டார்ட்ஸ்
ஜியோ அதிகாரி ஒருவர், இப்புதிய திட்டத்தைக் குறித்து எக்னாமிக்ஸ் டைம்ஸ் கேட்டபோது மார்ச் 31ஆம் தேதிக்குப் பின் ஜியோ பணத்தை சம்பாதிக்கத் துவங்கும். இனி உண்மையான பிஸ்னஸ் துவங்கும் எனத் தெரிவித்துள்ளார்.

போட்டி
ஜியோவின் இலவசங்கள் மூலம் இந்நிறுவனம் சுமார் 7.2 கோடி வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது. மேலும் இதன் போட்டியை சமாளிக்க இந்தியாவில் மொபைல் சேவை அளிக்கும் ஏர்டெல், ஐடியா, வோடாபோன் ஆகியவை இண்டர்நெட் டேட்டா மற்றும் வாய்ஸ் கால் கட்டணத்தைக் குறைத்துள்ளது.
குறிப்பு: நேற்று ஏர்டெல் நிறுவனம் 4ஜிபி 3ஜி/4ஜி டேட்டாவிற்கு வெறும் 157 ரூபாய் கட்டணத்தை மட்டுமே வசூலித்துள்ளது. (மை ஏர்டெல் மூலம் ரீசார்ஜ் செய்யப்பட்டவை)

ஆபத்து
ஜியோ நிறுவனத்தில் இருக்கும் 7.24 கோடி வாடிக்கையாளர்கள் 90 சதவீதம் பேர் ஜியோவை பிரதான இணைப்பாகக் கருதவில்லை, இலவசங்களுக்காக மட்டுமே பயன்படுத்தி வருகின்றனர்.
இதனால் ஜியோ தனது வாடிக்கையாளர்களை எப்போது வேண்டுமென்றாலும் இலக்க நேரிடலாம் என அச்சம் இந்நிறுவனத்தின் மத்தியில் நிலவி வருகிறது.

முதலீடு
ஜியோ நிறுவனத்தில் ஏற்கனவே இதன் தலைவர் முகேஷ் அம்பானி 1.7 லட்சம் கோடி ரூபாய் முதலீடு செய்துள்ள நிலையில், தற்போது புதிதாக 30,000 கோடி ரூபாய் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளார் முகேஷ்.

நிதி திரட்டல்
இப்புதிய முதலீட்டைத் தனது உரிமைகள் விற்பனை மூலம் திரட்டவும் அதனை நிறுவனத்தின் வளர்ச்சிக்காக முதலீடு செய்யவும் ஜியோ நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

சேவை விரிவாக்கம்
ஜியோ வாடிக்கையாளர்கள் மத்தியில் இந்நிறுவனத்தின் டிஜிட்டல் சேவைகளுக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ள நிலையில், அதன் வளர்ச்சிக்கும், நெர்வொர்க் மேம்பாடு மற்றும் அளவுகளை உயர்த்த இப்புதிய முதலீடு பயன்படுத்த திட்டமிட்டுள்ள ஜியோ.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

ஜல்லிக்கட்டு போராட்டத்துக்கு ஆதரவாக தமிழ்நாடு முழுவதும் நாளை தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

நாளை விடுமுறை என தமிழ்நாடு சிபிஎஸ்இ மற்றும் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பொதுச்செயலாளர் நந்தகுமார் அறிவித்துள்ளார். 

ஜல்லிக்கட்டுப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து நடைபெறும் ஆட்டோ மற்றும் வாகனங்கள் ஸ்டிரைக் காரணமாக, பள்ளி மாணவர்களின் நலன் கருதி நாளை நர்சரி, பிரைமரி, மெட்ரிக், சிபிஎஸ்சி ஆகிய சங்கங்களைச் சேர்ந்த 4 ஆயிரம் பள்ளிகள் இயங்காது என்று தெரிவித்துள்ளார்.

நாளை அரசுப் பள்ளிகள் இயங்குவது குறித்து அரசு தரப்பில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகாத நிலையில், தனியார் பள்ளிகள் நாளை இயங்காது என்று அறிவிப்பு வெளியாகியுள்ளது.

99 ரூபாயில் விமான டிக்கெட்! : ஏர் ஏசியா !!

ஏர் ஏசியா விமான நிறுவனம் ரூ.99 என்ற குறைந்த கட்டணத்தில் டிக்கெட் விற்பனை செய்வதாக அறிவித்துள்ளது.

சென்னையைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் ஏர் ஏசியா இந்தியா நிறுவனம் குறைந்த கட்டணத்தில்சேவை வழங்கும் விமான நிறுவனமாக உள்ளது. இந்நிறுவனம் சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில் பெங்களூரு,கவுஹாத்தி, ஹைதராபாத், இம்பால் ஆகிய நகரங்களுக்கு ஒரு வழிப் பயணமாக ஏர் ஏசியா 
விமானத்தில் பயணம் செய்யஅடிப்படை கட்டணமாக 99 ரூபாய் என நிர்ணயித்துள்ளது. இந்த சிறப்புச் சலுகை திட்டத்தில் பயணம் செய்ய விரும்புவோர்வருகிற 22ஆம் தேதி வரை டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

அவ்வாறு முன்பதிவு செய்பவர்கள் வருகிற மே மாதம் 1ஆம் தேதியில் இருந்து அடுத்தாண்டு பிப்ரவரி மாதம் 6ஆம்தேதிக்கு இடைப்பட்ட காலத்தில் இச்சலுகையில் பயணிக்க இயலும். ஏர் ஏசியா விமான டிக்கெட் முன்பதிவெ செய்வதற்குairasia.com இணையதளம், mobile.airasia.com அல்லது ஏர் ஏசியாவின் ஆன்டிராய்டுசெயலி மூலமாகவும் டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.

45 வயதுக்கு குறைந்தால் பதவி இல்லை : தமிழ்நாடு பல்கலை நிபந்தனை !!

'தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 45 வயதுக்கு மேற்பட்டோர் மட்டுமே, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக நியமிக்கப்படுவர்' என, அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு திறந்தநிலை பல்கலையில், 2014 முதல், தனியார் கல்லுாரி பேராசிரியர் முகமது ஜாபர், தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரியாக பணியாற்றினார். துணைவேந்தராக 

இருந்த, சந்திரகாந்தா ஜெயபாலனால் நியமிக்கப்பட்டவர். 2016 செப்டம்பரில், புதிய துணைவேந்தராக, பாஸ்கரன் பதவியேற்றதும், முகமது ஜாபர் பணி நீக்கம் செய்யப்பட்டார். தொடர்ந்து, நான்கு மாதங்களாக, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடம் காலியாக உள்ளது. பதிவாளர் விஜயனும், பின், பேராசிரியர் பாலசுப்பிரமணியனும், தேர்வு பொறுப்புகளை கவனித்து வந்தனர். 


இந்நிலையில், உயர் கல்வித்துறையின் அறிவுரைபடி, தேர்வு கட்டுப்பாட்டு அதிகாரி பணியிடத்தை நிரப்ப, பல்கலை நிர்வாகம், விளம்பரம் வெளியிட்டுள்ளது.


நிபந்தனை என்ன?


● உதவி பேராசிரியராக, 15 ஆண்டுகள் அல்லது இணை பேராசிரியர்களாக, எட்டு ஆண்டுகள் அனுபவம் உள்ளோர், ஜன., 30க்குள் விண்ணப்பிக்கலாம்

● இதற்கு, 45 வயதுக்கு குறைவானோர், விண்ணப்பிக்க முடியாது. ஆசிரியர் பணியில் இருந்தால், 57; நிர்வாக பணியில் இருந்தால், 55 வயதும் நிரம்பி இருக்க வேண்டும் என, அறிவிக்கப்பட்டுள்ளது.

ஜல்லிக்கட்டு போராட்டங்கள் காரணமாக கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.

பல்வேறு அரசு கலை கல்லூரிக்கு இன்று விடுமுறை

1.கோவை அரசு கலை கல்லூரிக்கு இன்று விடுமுறை.

2.சென்னை: 31 அரசு, தனியார் கல்லூரிகளுக்கு இன்று முதல் விடுமுறை அறிவிப்பு ஜனவரி.

3.அம்பேத்கார் பல்கலை.,கீழ் செயல்படும் கல்லூரிகளுக்கு 2 நாள் விடுமுறை ஜனவரி.

4.சிதம்பரம் அண்ணாமலை பல்கலை.,22-ம் தேதி வரை விடுமுறை.

IAS அலுவலர்கள் பணி மாறுதல்

SMC Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள்

SMC  Uயிற்சியில் கலந்து கொள்ள வேண்டியவர்கள் 
தலைமை ஆசிரியர் 
SMC தலைவர்
Parent of CWSN 

ஆக 3 பேர் 
SMC  பயிற்சி நடை பெறும் நாள்

30/31/ பிப்ரவரி 1

இடம்: பள்ளித் தொகுப்பு கருத்தாய்வு மையம்

பயிற்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை குறையும் ட்சத்தில் ஒரு Uள்ளிக்கு 4 உறுப்பினர் களும் கலந்து கொள்ள வேண்டி இருக்கும்

ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்கக் கோரியும்,போராடும் மாணவர்களுக்கு ஆதரவாகவும் 19.01.2017 அன்று தமிழகம் முழுவதும் அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்!!