Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 28 January 2017

தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழியை அனைத்து கல்வி நிறுவனங்களும், பள்ளிகளும் 30.01.2017 காலை 11.00 மணிக்கு மேற்கொள்ள, தொடக்க கல்வி இயக்குநர் அவர்களின் செயல்முறைகள்



தொடக்க கல்வியில் கற்றலை வலுப்படுத்தும் ஐந்து மணி நேரம் பார்க்க கூடிய, கல்வி சார்ந்த 10 காணொளி படங்கள்

மொத்தம் 14GBயை உள்ளடக்கியது.
இவையனைத்தும் 300 DVD களில் பதியப்பட்டு, வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் உள்ள 101 அரசு தொடக்க, நடுநிலைப்பள்ளிகளுக்கு தலா மூன்று DVD வீதம் வழங்கப்பட்டது.

   27/01/2017 இன்று வேப்பனப்பள்ளி ஒன்றியத்தில் நடைபெற்ற தலைமையாசிரியர்கள் கூட்டத்தில், உதவி தொடக்க கல்வி அலுவலர் திரு. சம்பத் அவர்கள் குறுந்தகட்டை வெளியிட, கூடுதல் உதவி தொடக்க கல்வி அலுவலர் திருமதி. பெலிசிட்டா மேரி அவர்கள் பெற்றுக்கொண்டார். உடன் வட்டார வள மைய மேற்பார்வையாளர் திரு. முத்துசாமி அவர்கள்.

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கிருஷ்ணகிரி மாவட்ட தலைவர் திரு. A. அருண் பிரகாஷ்ராஜ், ஒன்றிய தலைவர்
திரு. லுத்தர் மகிமைதாஸ், இயக்கம் சார்பாக,
அரசுப் பள்ளி மாணவர்களின் கல்வித் தரத்தை உயர்த்தும் நோக்கில், ஒன்றியத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் குறுந்தகடுகளை, "முற்றிலும் இலவசமாக"  வழங்கத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்து கொடுத்ததில் பெரும் மகிழ்ச்சியடைகிறேன்.

By
ரகுபதி இநிஆ,
திம்மசந்திரம்,
வேப்பனப்பள்ளி ஒன்றியம்,
கிருஷ்ணகிரி மாவட்டம்.
Cell 7639814166.

வருமானவரிப் படிவம் நிரப்பல் ,மாத ஊதிய பட்டியல்( pay slip ) நகல் எடுக்க !!

மாதவாரியான ஊதிய விபரங்களைக் குறித்து வைக்கத் தவறியோர் வருமானவரிப் படிவத்தினை நிரப்பிட ஏதுவாகத் தங்களின்,

*ஊதியப்பட்டியல் (Pay Slip)

*ஆண்டு வருமான அறிக்கை (Annual Income Statement)

உள்ளிட்ட விபரங்களைப் பின்வரும் இணைய முகவரியில் இருந்து தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

http://epayroll.tn.gov.in/epayslip/

இதற்கான உள்நுழைவுச் சொற்களாகத் தங்களின் *ஓய்வூதியக் கணக்கு எண் & பிறந்த தேதி*யைக் குறிப்பிட வேண்டும்.

கல்வித்துறையில் பழைய ஓய்வூதியத் திட்டத்தினருக்கு TPF-ம் தன்பங்கேற்பு ஓய்வூதியத்தினருக்கு EDN-ம் பின்னிணைப்புச் சொல் (SUFFIX) ஆகும். மற்ற துறையினருக்கு அவர்கள் துறையின் பெயர் சார்ந்த சுருக்கச் சொற்களை இடவும். தொடக்க கல்வி துறை PTPF என இடவும்

```🔹Pay Slip🔹```

*தாங்கள் சார்ந்த ஊதிய அலுவலகத்தால் கருவூலகச் செலுத்து எண்ணின் வழியே தரவேற்றம் செய்திருந்தால் மட்டுமே தங்களின் ஊதியப் பட்டியலைத் தரவிறக்க இயலும்.

```🔹Annual income statement🔹```

*இதில், கூட்டுறவு & காப்பீட்டுப் பிடித்தங்கள் இருக்காது. ஆனால் ஊதியப் பட்டியலில் முழு விபரங்களும் இருக்கும்.

*ஒரு சில நேரங்களில் ஊதிய / பஞ்சப்படி நிலுவை, ஒப்படைப்பு ஊதியம் உள்ளிட்டவை OFF-LINE மென்பொருளில் ஏற்றப்பட்டிருப்பின் அவ்விபரங்களை மேற்கண்ட இணைப்பில் காண இயலாது.

எனவே, அதுபோன்ற விடுபட்ட விபரங்களைக் காண பின்வரும் இணைய இணைப்பில் சென்று கேட்கப்படும் தாங்கள் சார்ந்த விபரங்களை உள்ளீடு செய்து, தங்களின் நிகர ஊதியத் தொகையை அறியலாம்.

http://treasury2.tn.gov.in/Public/gpf.aspx

ஊதிய அலுவலகச் செயல்பாட்டைப் பொறுத்து முதலில் உள்ள இணைய இணைப்பிலேயே நமக்குத் தேவையான அனைத்து விபரங்களும் கிடைத்து விடும்.

உங்களுக்கென ஒரு ரேடியோ சேனல் டேட்டா மெயில் அறிமுகம்!!!

டேட்­டா­ஜென் டெக்­னா­ல­ஜிஸ் நிறு­வ­னம், டேட்டா மெயில் என்ற பிராண்டு பெய­ரில்,

தமிழ், தெலுங்கு, ஹிந்தி உள்­ளிட்ட, பல பிராந்­திய மொழி­களில்,

மின்­னஞ்­சல் முக­வரி சேவையை வழங்கி வரு­கிறது.இந்­நி­று­வ­னம், டேட்டா மெயில் மின்­னஞ்­சல் சேவை­யு­டன், குரல் வழி அடிப்­ப­டை­யில் செய்­தி­களை அனுப்­பும் வகை­யில், சமூக ஊடக வச­தியை, தற்­போது அறி­மு­கம் செய்­துள்­ளது.

இது குறித்து, இந்­நி­று­வ­னத்­தின் 

தலைமை செயல் அதி­காரி அஜய் தத்தா கூறி­ய­தா­வது: டேட்டா மெயில் சேவை­யு­டன், ‘டேட்டா ரேடியோ’ வசதி இணைக்­கப்­பட்டு உள்­ளது. இந்த வசதி மூலம், டேட்டா மெயில் பய­னா­ளர்­கள், தங்­க­ளு­டைய பெய­ரில், ஒரு ரேடியோ சேனலை உரு­வாக்கி கொள்­ள­லாம். அதன் மூலம், செய்­தி­களை அனுப்­ப­லாம்.இதன் மூலம், பாலி­வுட் நட்­சத்­தி­ரங்­கள், விளை­யாட்டு வீரர்­கள், தனிப்­பட்ட நபர்­கள் என, அனை­வ­ரும், தங்­களின் தக­வல்­களை, தட்­டச்சு செய்­தும், குரல் வழி மூல­மா­க­வும், குழு­வில் உள்­ள­வர்­க­ளுக்கு அனுப்­ப­லாம்.இத­னால், சமூக வலை­த­ளங்­களில், பிர­பல நட்­சத்­தி­ரங்­களின் பெய­ரில், விஷ­மி­க­ளால் பரப்­பும் தொல்­லைக்கு முடிவு கட்­டப்­படும்.டேட்டா ரேடி­யோ­வில், தேவைக்­கேற்ப புதிய அம்­சங்­கள் அறி­மு­கப்­ப­டுத்­தப்­படும். இவ்­வாறு அவர் கூறி­னார்.

ஆதார் எண் அடிப்படையில் பணபரிவர்த்தனைகளை விரைவில் செயல்படுத்த மத்திய அரசு முடிவு - மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் தகவல்.

 உயர் மதிப்பிலான ரூபாய்நோட்டு வாபஸ் பெறப்பட்ட பிறகுபணத்தட்டுப்பாடு உருவானதால்மக்கள் வேறு வழியின்றி கார்டு,

ஆன்லைன் போன்ற டிஜிட்டல்பரிவர்த்தனைக்கு மாறினர்.

 இதற்காக சமீபத்தில் கூடஸ்மார்ட் போன்களுக்காக 'பீம்' என்ற புதிய செயலியை மத்தியஅரசு அறிமுகம் செய்தது.

 இந்நிலையில், ஆதார் எண்அடிப்படையில் அனைத்துபரிவர்த்தனைகளையும்செயல்படுத்த மத்திய அரசுஉத்தேசித்துள்ளது.

 இதுகுறித்து மத்திய தகவல்தொழில்நுட்பத்துறை அமைச்சர்ரவிசங்கர் பிரசாத் நேற்றுகூறியதாவது.

 ஆதார் அடிப்படையில் பணம்செலுத்தும் முறை விரைவில்அறிமுகம் செய்யப்படஇருக்கிறது.

 இதன்படி, வணிகர்களிடம்பொருட்கள் வாங்கிவிட்டு பணம்செலுத்த மொபைல் போன் கூடஎடுத்துச்செல்ல வேண்டாம்.

 தங்களது ஆதார் எண்ணைகூறினால் போதும். பயோமெட்ரிக் முறையில் பணத்தைசெலுத்திவிடலாம்.

  தற்போது ஆதார் பேமன்ட்முறையில் 14 வங்கிகள்இணைந்துள்ளன.

  இந்த சேவைகள் விரைவில்வழங்கப்பட இருக்கிறது.

 பிற வங்கிகளிடமும் இந்ததிட்டத்தில் இணைவதுதொடர்பாக பேசி வருகிறோம்.

 பீம் ஆப், யுபிஐ ஆகியவையும்ஆதார் அடிப்படையில்இயங்குவதுதான்.

 நாடு முழுவதும் 111 கோடி பேர்ஆதார் எண் பெற்றுள்ளனர். 49 கோடி வங்கி கணக்குகளுடன்ஆதார் எண்இணைக்கப்பட்டுள்ளது.

 மாதத்துக்கு 2 கோடிகணக்குகளில் ஆதார் எண்சேர்க்கப்பட்டு வருகிறது.

  எனவே, ஆதார்அடிப்படையிலானபரிவர்த்தனை வெகு விரைவில்செயல்படுத்தப்படும்.

இவ்வாறு ரவிசங்கர் பிரசாத்கறினார்

2016-17ஆம் ஆண்டுக்கான கட்டிடப்பணிகள் - நிதி விடுவித்தல் மற்றும் கட்டிடப் பணிகள் மேற்கொள்ள அறிவுரைகள் வழங்குதல் தொடர்பான இயக்குனரின் செயல்முறைகள்



தொடக்க, நடுநிலைப் பள்ளி மாணவர்கள் கணக்கெடுப்பு : ஒரே ஆண்டில் 20 ஆயிரம் குழந்தைகள் இடைநின்றது அம்பலம்

மாணவர்கள் இடைநிற்றல் :

கடந்த 2000ம் ஆண்டு அனைவருக்கும் கல்வி இயக்கம் திட்டத்தை மத்திய அரசு அறிமுகம் செய்தது. இந்த திட்டத்தின்படி தொடக்க கல்வியில் புதிய கற்றல் முறைகள் கொண்டு வருவது, கற்பித்தல் முறைகள் புகுத்துவது, அடிப்படை வசதிகள் செய்வதற்காக மத்திய அரசு ஒவ்வொரு ஆண்டும் நிதி வழங்கி வந்தது. இந்நிலையில், 2010ம் ஆண்டு இந்த திட்டம் முடிவுக்கு வந்த நிலையில் மேலும், அந்த திட்டம் நீட்டிக்கப்பட்டு நடைமுறையில் உள்ளது. இந்த திட்டத்தை கண்காணிக்க மாநில திட்ட இயக்ககம் சென்னை கல்லூரி சாலையில் டிபிஐ வளாகத்தில் செயல்பட்டு வருகிறது
.

தற்போது தொடக்க கல்வித்துறையின் கீழ் இயங்கும் தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் சேர்க்கப்படும் மாணவர்கள் இடையில் பள்ளியில் இருந்து நின்று விடுகின்றனர். இதை தடுக்க பல முயற்சிகள் நடக்கின்றன. மாணவர்கள் இடைநிற்றல் ஒவ்வொரு ஆண்டும் அதிகரிக்கிறதா அல்லது குறைகிறதா என்பது குறித்த தகவல் மத்திய மனிதவள மேம்பாட்டு நிறுவனத்துக்கு அனுப்பி வைக்க வேண்டும். மேலும், மத்திய அரசு மாநில அரசுக்கு வழங்கும் நிதியில் செய்யப்பட்ட பணிகள் என்ன, எவ்வளவு செலவானது என்பது குறித்தும் மத்திய அரசுக்கு விவரம் தர வேண்டும். 

அப்போதுதான் அடுத்த கல்வி ஆண்டுக்கான நிதியை மத்திய அரசு வழங்கும். அதற்காக ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் மாதத்தில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் மாணவர்கள் கணக்கெடுக்கெடுக்கப்படுகிறது. அதில் மாணவர்கள் பெயர், குடும்ப சூழல், பள்ளிக்கும் மாணவர் இருப்பிடத்துக்கும் உள்ள இடைவெளி, பொருளாதார சூழல் உள்ளிட்ட பல்வேறு விவரங்களை திரட்டி பதிவு செய்ய வேண்டும். அந்த விவரங்கள் அனைத்தும் மாநில திட்ட இயக்குநருக்கு செல்லும். அவர் மத்திய அரசுக்கு அனுப்புவார்.

இந்த ஆண்டுக்கான கணக்கெடுப்பு தற்போது முடிந்துள்ளன. இந்த வார இறுதிக்குள் அந்தந்த பள்ளியின் தலைமை ஆசிரியர்கள் இந்த பட்டியலை மாநில திட்ட இயக்ககத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என்று மாநில திட்ட இயக்குநர் பூஜாகுல்கர்னி உத்தரவிட்டுள்ளார். 
இந்த கணக்கெடுப்பின்படி பார்த்தால் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 20 ஆயிரம் குழந்தைகள், மாணவ, மாணவியர் இடையில் நின்றுள்ள அதிர்ச்சி தகவல் தெரிய வந்துள்ளது.

* ஒன்று முதல் 8ம் வகுப்பு வரை 240 மாணவ, மாணவியர் இருப்பதற்கு பதிலாக 200 மாணவர்கள்தான் உள்ளனர்.

* ஒன்றாம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் 150 குழந்தைகளுக்கு பதிலாக 100 அல்லது 120 குழந்தைகள் உள்ளனர்.

பள்ளி மேலாண்மைக் குழு உறுப்பினர்களுக்கான மூன்று நாட்கள் பயிற்சி பள்ளி தொகுப்பு கருத்தாய்வு மைய அளவில் நடத்துதல் சார்ந்து இயக்குனரின் அறிவுரைகள்










தமிழக மாணவர்கள் பாணியில் கர்நாடக மாணவர்கள்!

கர்நாடகாவில் கம்பாலா போட்டி நடத்த தமிழகத்தில் நடத்திய ஜல்லிக்கட்டு பாணியில் போராட்டம் நடைபெற்று வருகிறது.

சிவபெருமானின் மறு அவதாரமாகக் கருதப்படும் கத்ரி மஞ்சுநாதாவுக்கு நன்றிக்கடன் செலுத்தும்வகையில், அறுவடைக் காலத்தில் விவசாயிகள்எருதுகளைப் பூட்டி சேறும், சகதியுமான நிலத்தில் ஓடவிடுவதுண்டு. இதில் வெற்றிபெறும் விவசாயிகளுக்கு பரிசுகள் மற்றும் பாராட்டுகள் வழங்கப்படுவதுண்டு. 
இந்த எருதுப் போட்டி, பாரம்பரிய விளையாட்டாக 'கம்பாலா' என மாறியது. இதில் ‘புக்கரே கம்பாலா’, ‘பலே கம்பாலா' என இரு வகையுண்டு. பலே கம்பாலா, 900 ஆண்டுகளுக்கு முன்னரே கைவிடப்பட்டது. இதையடுத்து நடத்தி வந்த மற்றொரு போட்டிக்கும் தடை விதிக்கப்பட்டது. கடந்த ஆண்டு பீட்டா மற்றும் விலங்கு நல அமைப்பினர் இதையெதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் முறையிட்டபோது, கம்பாலா விளையாட்டுக்கு தடை விதிக்கப்பட்டது. 
இந்நிலையில், பாரம்பரிய விளையாட்டான கம்பாலா நடத்த வேண்டும் என்பதற்காக தமிழக மாணவர்களைப் பின்பற்றி கர்நாடக மாணவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். 
தமிழகத்தில் கடந்த ஒரு வாரமாக ஜல்லிக்கட்டு நடத்தக்கோரி மாணவர்களும் இளைஞர்களும் பொதுமக்களும் போராட்டம் நடத்தினர். இதற்கு முதலில் அவசரச் சட்டம் இயற்றப்பட்டது. ஆனால் நிரந்தரச் சட்டம் வேண்டும் என்று மாணவர்கள் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின், தற்காலிகமாக இயற்றப்பட்ட அவசரச் சட்டத்துக்குப் பதிலாக தமிழக சட்டசபையில் ஜல்லிக்கட்டு மசோதா சட்டமாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. 
இதுபோன்று, கம்பாலாவுக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்கக் கோரியும், பீட்டாவை தடை செய்யக் கோரியும் மங்களூருவில் மாணவர்கள் கல்விக்கூட வகுப்புகளைப் புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஹூப்ளியிலும் ஏராளமானோர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 
கம்பாலா போராட்டத்தில் ஈடுபட பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்நிலையில், கர்நாடகாவில் நாளை பெரிய அளவில் போராட்டம் நடைபெறவிருப்பதாகவும் கூறப்படுகிறது. 
கர்நாடக மாநிலம் மட்டுமின்றி, தமிழகத்தை முன்னுதாரணமாகக் கொண்டு பல்வேறு மாநிலத்தவரும் தங்களுடைய பாரம்பரிய விளையாட்டுகளை நடத்த போராடவுள்ளதாகக் கூறப்படுகிறது.

2017-18 பட்ஜெட்டில் என்ன மாற்றங்கள், அறிவிப்புகள், அம்சங்கள் இருக்கும்​ ?


பிப்ரவரி 1-ந்தேதி தாக்கலாகும் பொது பட்ஜெட்டில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நிதிப்பற்றாக்குறை, ரூபாய் நோட்டு தடை அறிவிப்பின் பாதிப்பு, வேலைவாய்ப்பு, வரி உயர்வு, வரி குறைப்பு உள்ளிட்ட பல அறிவிப்புகளும், பலசலுகைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

1. ரூபாய் நோட்டு செல்லாத அறிவிப்பு

பிரதமர் மோடியின் ரூபாய் நோட்டு தடை அறிவிப்பால் பல எதிர்ப்புகள் , விமர்சனங்கள் வெளியாகின. . அந்த திட்டத்துக்கு இறுதி வடிவம் கொடுக்கும் வகையிலும், பணப்பரிமாற்றத்தை குறைக்கும் வகையிலும் சலுகைகள், அறிவிப்புகள் வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. கிரெடிட், டெபிட் கார்டுகள், இ-வாலட்கள், மின்னனு பரிமாற்றம் ஆகியவைகள் மூலம் பணப்பரிமாற்றத்தை ஊக்குவிக்க பலசலுகைகள், வரி குறைப்புகளை மத்திய நிதி அமைச்சர் அருண்ஜெட்லி அறிவிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

2. ஜி.எஸ்.டி. வரி(சரக்கு மற்றும் சேவை வரி)

வரும் ஏப்ரல் மாதம் ஜி.எஸ்.டி. வரி நடைமுறைக்கு வரும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மாநிலங்கள், மத்தியஅரசு இடையே சில விசயங்களில் கருத்து வேற்றுமை நிலவியதால், ஜூலை முதல் நடைமுறைக்கு வருகிறது. அது குறித்த வரி வீதம், மாநில அரசுகள் எவ்வளவு வரிவருவாயை பிரித்துக்கொள்ளும் உள்ளிட்ட அறிவிப்புகள் வெளியாகலாம். நாடுமுழுவதும் ஒரே சீரான மறைமுக வரி அமலுக்கு வருவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

3. வருமான வரி

ஜி.எஸ்.டி. வரியைத் தொடர்ந்து, வருமானவரியில் மிகப்பெரிய அளவில் சீர்த்திருத்தம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வைப்புத்தொகை, காப்பீடு ப்ரீமியம் எடுத்தல், பரஸ்பர நிதி ஆகியவற்றில் மிகப்பெரிய அளவில் வரிச்சலுகை இருக்கும். வருமான வரி உச்சரவரம்பும் அதிகரிக்கப்படும் எனத் தெரிகிறது.

4. கார்ப்பரேட் வரி

கார்ப்பரேட் வருமானவரியை பட்ஜெட்டில் 1.25 சதவீதம் முதல் 1.50 சதவீதம் வரை குறைத்து 28.50 சதவீதமாகக் கொண்டு வரப்படலாம் எனத் தெரிகிறது. மேலும், புதிய நிறுவனங்களை சந்தைக்குள் கொண்டு வருவதற்கான சலுகை அறிவிப்புகளும் இருக்கும் எனத் தெரிகிறது.

5. ரெயில்வே

ரெயில்வே பட்ஜெட், பொதுபட்ஜெட்டுடன் இணைக்கப்பட்டு முதல் முறையாக தாக்கல் செய்யப்படுகிறது. இந்த முறையால், ரெயில்வேயின் தனித்தன்மை பாதிக்கப்படாது என்றபோதிலும், ஆண்டுக்கு ஈவுத்தொகையாக ரூ. 10 ஆயிரம் கோடி அரசுக்கு கொடுப்பதை ரெயில்வே கொடுக்கத் தேவையில்லை. பயணிகளின் வசதிக்கும், பாதுகாப்புக்கும் முக்கியத்துவம் இருக்கும் என் எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், பயணிகள் கட்டணம் உயர்த்த அதிகமான வாய்ப்புகள் உள்ளன.

6. விவசாயம்

ரூபாய் நோட்டு தடையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் சுமையையும், வேதனையையும் குறைக்க நிதி அமைச்சர் அருண் ஜெட்லி பல சலுகைகளை அறிவிப்பார் எனத் தெரிகிறது. ஏற்கனவே நவம்பர்,டிசம்பர் மாத கடன் வட்டி தள்ளுபடி கொடுக்கப்பட்ட நிலையில், பல புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம் .

7. தொழில்துறை, உற்பத்திதுறை

பிரதமர் மோடியின் மேக் இன் இந்தியா திட்டத்தை முன்னெடுத்துச் செல்லும்வகையில் தொழில்துறைக்கும், வேலைவாய்ப்பை பெருக்கவும் அதிகமான சலுகைகள் அறிவிக்கப்படலாம். வேலைவாய்ப்பை அதிகரித்து, ஏற்றுமதியை ஊக்குவிக்க தனித்திட்டம் வகுக்கப்படலாம். சீனாவைப் போல், தொழிற்சாலைகளுடன், தொழிலாளர்களுக்கு தங்கும் இடங்கள், பள்ளிகள், மருத்துவமனைகள், பொழுதுபோக்கு வசதிகள், மால்கள் என அனைத்தும் ஒருங்கே இருக்கும் வகையில் திட்டம் அறிமுகமாகலாம்.

8. அன்னிய முதலீடு

வெளிநாடு வாழ் இந்தியர்கள், அன்னிய நிறுவனங்கள் ஆகியவற்றில் இருந்து முதலீட்டை ஈர்க்க திட்டங்கள், சலுகைகள் அளிக்கப்படலாம். அவர்கள் அதிகளவு முதலீடு செய்யும் வகையில், விதிகள் தளர்த்தப்படலாம்.

9. ஸ்டார்ட் அப் நிறுவனங்கள்.

புதிய தொடங்கப்படும் ஸ்டார்ட் அப் நிறுவனங்களை ஊக்கப்படுத்தவும், வளர்ச்சிக்கு கொண்டு செல்லவும் புதிய திட்டங்கள், அறிவிப்புகள் இருக்கலாம். புதிய தொழில் தொடங்க விரும்பம் உள்ளவர்கள் அரசிடமிருந்து தேவையான உதவிகள், ஒப்புதல்களை வேகமாக பெறுதல், வரிச்சலுகையை ்3 ஆண்டில இருந்து 5 ஆண்டாக அதிகரிப்பது உள்ளிட்ட பல விசயங்கள் இருக்கும்

மின் வாரிய உதவி பொறியாளர் தேர்வு 'கட் - ஆப்' மதிப்பெண் வெளியீடு.

உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு மின் வாரியம், உதவி பொறியாளர்களை, எழுத்து, நேர்முகத் தேர்வு மூலம் நியமிக்க முடிவு செய்தது. 
அதன்படி, எலக்ட்ரிக்கல், சிவில், மெக்கானிக்கல் ஆகிய பிரிவுகளில், 375 உதவி பொறியாளர்களை தேர்வு செய்ய, 2016 ஜன., மாதம் எழுத்துத் தேர்வு நடத்தியது. அண்ணா பல்கலை நடத்திய இந்த தேர்வை, பல ஆயிரம் பேர் எழுதினர்.

தேர்வில் விலக்கு கோரி, சிலர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இதனால், தேர்வு முடிவை வெளியிடுவதில் சிக்கல் ஏற்பட்டது. பின், நீதிமன்ற அனுமதியில், தேர்வர்களின் மதிப்பெண் மட்டும் வெளியிடப்பட்டது. தற்போது, வழக்கில், மின் வாரியத்துக்கு சாதகமாக தீர்ப்பு வந்துள்ளது. இதையடுத்து, 'கட் - ஆப்' மதிப்பெண் விபரத்தை, மின் வாரியம் வெளியிட்டுள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது:உதவி பொறியாளர் தேர்வுக்கான, 'கட் - ஆப்' மதிப்பெண்கள்படி, தகுதியானவர்களுக்கு, நேர்காணல் தொடர்பான தகவல், விரைவில் தெரிவிக்கப்படும். அரசு விதிப்படி, நேர்காணல் நடத்தி, எழுத்து மற்றும் நேர்முக தேர்வில், அதிக மதிப்பெண் வாங்கியவர்கள் தேர்வு செய்யப்படுவர். இவ்வாறு அவர் கூறினார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் : உதவி பொறியாளர் நேர்காணலை, மின் வாரியத்தில் பணிபுரியும், தலைமை, மேற்பார்வை பொறியாளர்கள் நடத்த உள்ளனர். அவர்களால், அரசியல் குறுக்கீடுகளை எதிர்கொள்ள முடியாது. இதனால், தேர்வில் முறைகேடு நடக்கும். எனவே, முன்னாள் மின் வாரிய தலைவர்கள் மற்றும் முன்னாள் அரசு செயலர்கள் மூலம் நேர்காணல் நடத்த வேண்டும். நேர்காணலை, வீடியோ பதிவு செய்யவும் கோரிக்கை எழுந்துள்ளது.

NMMS:8ம் வகுப்பு மாணவர்களுக்கு இன்று 'ஸ்காலர்ஷிப்' தேர்வு

கல்வி உதவித்தொகை பெறுவதற்கான, தேசிய வருவாய் வழி தேர்வு, இன்று நடத்தப்படுகிறது. குறைந்த வருவாய் பெறும் குடும்பத்தினரின், எட்டாம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு, மத்திய, மாநில அரசுகள் சார்பில், கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. 
பிளஸ் 2 வரை, இந்த உதவித் தொகை பெறுவதற்கு, மாநில அளவில், என்.எம்.எம்.எஸ்., என்ற, தேசிய வருவாய் வழி மற்றும் திறன் தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டுக்கான தேர்வு, இன்று தமிழகம் முழுவதும், 542 மையங்களில் நடக்கிறது. இதில், 1.55 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். காலை, 9:00 மணிக்கு தேர்வு துவங்கும். மொத்தம் இரண்டு தாள்களுக்கு, மாணவர்கள் தேர்வு எழுத வேண்டும் என, தேர்வுத்துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.

சி.பி.எஸ்.இ., தேர்வு தேதியில் மாற்றம்

சி.பி.எஸ்.இ., 10ம் வகுப்பு, பிளஸ் 2 பொதுத் தேர்வு தேதிகள் மாற்றப்பட்டு உள்ளன.

சி.பி.எஸ்.இ., பாடத் திட்டத்தில், 10ம் வகுப்பு மற்றும் பிளஸ் 2வுக்கு, மார்ச் 9ல், பொதுத்தேர்வு துவங்குகிறது. 
இதில், 10ம் வகுப்புக்கு, தமிழ், என்.சி.சி., போன்ற பாடங்களுக்கும், பிளஸ் 2வில், உடற்கல்வி, சமூகவியல் உட்பட, ஐந்து பாடங்களுக்கும், தேர்வு தேதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதற்கான பட்டியல், சி.பி.எஸ்.இ., இணையதளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்?

தமிழகத்தில், உள்ளாட்சி தேர்தல் எப்போது நடக்கும்' என, சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. தேர்தல் தேதி விபரங்களை, 31ம் தேதி தெரிவிக்கும்படி, மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டுள்ளது.

உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல், 2016 அக்., 17, 19ம் தேதிகளில் நடத்தப்படும் என, மாநில தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டிருந்தது. இதையடுத்து, 'உள்ளாட்சி அமைப்புகளில், பழங்குடியினருக்கு முறையான ஒதுக்கீடு செய்யப்படவில்லை' என, சென்னை உயர் நீதிமன்றத்தில், தி.மு.க., பிரமுகர் ஆர்.எஸ்.பாரதி மனு தாக்கல் செய்தார். மனுவை விசாரித்த, நீதிபதி கிருபாகரன், முறைப்படி தேர்தல் அறிவிப்பு வெளியிடவில்லை எனக்கூறி, உள்ளாட்சி தேர்தல் அறிவிப்பை ரத்து செய்தார். கடந்த, 2016 டிசம்பருக்குள் தேர்தலை நடத்தி முடிக்கவும், புதிய அறிவிப்பை வெளியிடவும், மாநில தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மனுவை விசாரித்த, டிவிஷன் பெஞ்ச், தனி நீதிபதியின் உத்தரவுக்கு தடை விதிக்க மறுத்து விட்டது.

இந்நிலையில், இவ்வழக்கு, நீதிபதிகள் நுாட்டி ராமமோகன் ராவ், எஸ்.எம்.சுப்ரமணியம் அடங்கிய, 'டிவிஷன் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது. உள்ளாட்சி தேர்தலுக்கான அறிவிப்பாணை, எப்போது வெளியிடப்படும் என, நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அதற்கு, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் ஆஜரான, வழக்கறிஞர் குமார், ஏப்ரலுக்குள் தேர்தலை நடத்த நடவடிக்கை எடுப்பதாக கூறினார். இதை ஏற்க, நீதிபதிகள் மறுத்து விட்டனர். உள்ளாட்சி தேர்தலை எப்போது நடத்த முடியும் என்பதை, தேர்தல் ஆணையம் தெரிவிக்கும்படி, டிவிஷன் பெஞ்ச்

உத்தரவிட்டு, விசாரணையை, ஜன., 31க்கு தள்ளி வைத்தது.