Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 3 February 2017

TRB சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த சி.இ.ஓ.,க்கள் கூட்டம் திடீர் ரத்து 'காணொளிகாட்சி'யாக மாற்றம்.

சென்னையில் ஆசிரியர் தேர்வு வாரியம் (டி.ஆர்.பி.,) சார்பில் இன்று (பிப்.,3) நடக்க இருந்த அனைத்து மாவட்டமுதன்மை கல்வி அலுவலர்கள் (சி.இ.ஓ.,க்கள்) கூட்டம், திடீரென நேற்று ரத்து செய்யப்பட்டது.இதற்கு மாற்று நடவடிக்கையாக, 'வீடியோகான்பரன்சிங்' மூலம் சி.இ.ஓ.,க்களிடம் ஆலோசனை நடத்த, டி.ஆர்.பி., முடிவு செய்துள்ளது.
தமிழகத்தில் ஆசிரியர் தகுதி தேர்வு (டி.இ.டி.,) கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்படவில்லை.இதுகுறித்து கடும் சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஏப்.,29 மற்றும் 30ல் டி.இ.டி., தேர்வு நடத்தப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. கல்வி அமைச்சர் பாண்டியராஜனும்,"ஏப்., கடைசியில் தேர்வு நடத்தப்படும்," என தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், பிப்.,20 முதல் இதற்கான விண்ணப்பங்களை வழங்க டி.ஆர்.பி., நடவடிக்கை எடுத்து வருகிறது. இந்நிலையில் இத்தேர்வு குறித்து ஆலோசனை நடத்த சென்னையில், பிப்.,3ல் மாவட்ட சி.இ.ஓ.,க்கள் கூட்டத்திற்கு டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. ஆனால், 'தற்போது பிளஸ் 2 செய்முறை தேர்வுகள் நடந்து வருவதால் மாவட்டத்தில் இருந்து யாரும் சென்னையில் டி.ஆர்.பி., கூட்டத்திற்கு செல்லக் கூடாது,' என சி.இ.ஓ.,க்களுக்கு வாய்மொழி உத்தரவிடப்பட்டள்ளது.இதனால் வேறு வழியில்லாமல் அந்தந்த மாவட்டத்தில் இருந்தே 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்துள்ளது.

இப்பிரச்னை குறித்து கல்வி அதிகாரிகள் கூறியதாவது:கல்வித் துறையில் பல்வேறு பிரிவுகள் உள்ளன. மாவட்ட அதிகாரிகளுக்கு பிறப்பிக்கப்படும் எந்தவொரு உத்தரவும் செயலர், இயக்குனர் (புரொட்டாகால்) வழியாகத்தான் செல்ல வேண்டும். ஆனால் டி.ஆர்.பி.,யின் உத்தரவுகள் நேரடியாக முதன்மை கல்வி அலுவலர்களுக்கு பிறப்பிக்கப்படுவதாக சர்ச்சை எழுந்தது. இதற்கு காரணம் இரண்டு உயர்அதிகாரிகளுக்கு இடையே நீடிக்கும் 'ஈகோ பிரச்னை' தான் என்கின்றனர்.இதனால் 'டி.ஆர்.பி., கூட்டத்திற்கு யாரும் சென்னைக்கு வரவேண்டாம். பிளஸ் 2செய்முறை தேர்வு முடியும் வரை அந்தந்த மாவட்டங்களில் தான் சி.இ.ஓ.,க்கள் இருக்க வேண்டும்,' என தேர்வுத் துறை மூலம் அறிவுறுத்தப்பட்டது. இத்தகவலால் சி.இ.ஓ.,க்கள் குழப்பமடைந்தனர். டி.ஆர்.பி.,க்கும் இத்தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 'வீடியோகான்பரன்ஸ்' மூலம் சி.இ.ஓ.,க்கள் கூட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டது, என்றனர்.

TET & TNPSC தேர்வுகள் ஒரே நாளில் வருவதால் தேர்வர்கள் குழப்பம்!

ஒரே நாளில் தேர்வுகள்!

டி.இ.டி., தேர்வு ஏப்.,29, 30ல் நடக்க வாய்ப்புள்ள நிலையில், அதே நாட்களில் டி.என்.பி.எஸ்.சி., 'குரூப் 7பி' மற்றும் 'குரூப் 8' பிரிவு தேர்வுகள் நடக்கின்றன.
இதில்பங்கேற்க 60 ஆயிரத்திற்கும் மேல் பட்டதாரிகள் விண்ணப்பித்துள்ளனர். மேலும் டி.இ.டி., 2ம் தாள் தேர்வுக்கு பி.எட்., இறுதியாண்டு படிக்கும் மாணவர்களும் விண்ணப்பிக்கலாம். ஏப்., கடைசி வாரத்தில் அப்போது பி.எட்., செய்முறை தேர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்.

EMIS பதிவு செய்யப்பட்ட மாணவர்கள் விவரத்தினை PDF வடிவில் பதிவிறக்கம் வசதி அறிமுகம்

🚨🚨 *Emisல் மாணவர்களின் விவரங்கள் சரிப்பார்க்க கீழ்காணும் முறையைப் பயன்படுத்தவும்.*

Step-1.
ஒரு பள்ளியை Open செய்த பிறகு அதில் வகுப்பு வாரியாக மாணவர்களின் Total இருக்கும்.

Step-2.
அதில் ஒரு வகுப்பை Click செய்யவும்.
Open ஆன வகுப்பிற்கு மேலே Download Child Profile என்று இருக்கும்.

Step-3.
அதை Click செய்யவும்.
Save செய்யவா என்று கேட்கும் பிறகு OK கொடுக்கவும்.

Step-4.
Save ஆன File யை Open செய்யவும் Excel Format இருக்கும். அதில் ஒரு வகுப்பில் நாம் செய்த அனைத்து மாணவர்களின் தகவல்களும் இருக்கும். அதை சரி பார்த்து மீண்டும் Update செய்யலாம். இதேபோல் ஒவ்வொரு பள்ளியிலும் ஒவ்வொரு வகுப்பையும் Print எடுத்து சரிபார்த்து Update செய்தால் நம்மால் சரியான புள்ளி விவரங்களை கொடுக்க முடியும்

TET தேர்வில் வெயிட்டேஜ் முறையில் மாற்றம்? அமைச்சர் விளக்கம்.

ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்து நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கல்வி அமைச்சர் பாண்டியராஜன் அவர்கள் நிருபர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.அதில்,

ஆசிரியர் தகுதித் தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 29-ம் தேதி தாள் 1க்கும்,30-ம் தேதி தாள் 2க்கும் நடைபெறும் என்று கூறினார்.மேலும் தகுதிகாண் முறையில் மாற்றம் செய்வது குறித்து கல்வியாளர்களுடன் ஆலோசித்து முடிவு செய்யப்படும் என்றும் தெரிவித்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்கான சட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை கொண்டு வந்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- 2012-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம் செய்து பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்துவதற்கும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அல்லது இந்தியாவுக்கு வெளியேயும் கல்வி பயிலும் மையங்களை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழகத்துக்கு அளிக்க அந்த சட்டத் திருத்தம் வகை செய்திருந்தது. 

இந்த நிலையில், தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வது என 2012-இல் முடிவு செய்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்கம் செய்திருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.

வாக்காளர் பட்டியலில் இடம் பெற்றுள்ள புதிய வாக்காளர்கள் இ-சேவை மையங்களில் இலவசமாக அடையாள அட்டை பெறலாம்

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி ராஜேஷ் லக்கானி நேற்று நிருபர்களிடம் கூறியதாவது: 2017ம் ஆண்டுக்கான புதிய வாக்காளர் பட்டியல் கடந்த மாதம் வெளியிடப்பட்டது.
அதன்படி தமிழகத்தில் மொத்தம் 5 கோடியே 92 லட்சத்து 71 ஆயிரத்து 593 வாக்காளர்கள் உள்ளனர். இதில் ஆண் வாக்காளர்கள் 2 கோடியே 93 லட்சத்து 50 ஆயிரத்து 264 பேரும், பெண் வாக்காளர்கள் 2 கோடியே 99 லட்சத்து 16 ஆயிரத்து 289 பேரும் உள்ளனர். மூன்றாம் பாலினத்தவர் 5040 பேர் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

தமிழகத்தில் மட்டும் ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் 5 லட்சத்து 66 ஆயிரத்து 25 பேர் கூடுதலாக உள்ளனர். கடந்த அக்டோபர் மாதம் நடந்த சிறப்பு முகாமில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் அளித்த 15 லட்சத்து 26 ஆயிரத்து985 பேரின் பெயர்கள் புதிதாக வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளது. இவர்களுக்கு 15ம் தேதிக்கு மேல் வீடு வீடாக வண்ண புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் அடையாள அட்டை வழங்கப்படும்.வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க புதிதாக விண்ணப்பித்தபோது, 2 லட்சத்து 32 ஆயிரத்து 974 பேர்தங்களது செல்போன் எண்களை தந்துள்ளனர். இப்படி செல்போன் எண் அளித்த 2.33 லட்சம் பேருக்கு தேர்தல் ஆணையம் மூலம் நேற்று முதல் ஒரு எஸ்எம்எஸ் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அந்த எஸ்எம்எஸ் தகவலில் ஒருமுறை பயன்படுத்தும் பாஸ்வேர்ட் எண் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த எண்ணை, தமிழகத்தில் உள்ள எந்த இ-சேவை மையங்களில்காட்டினாலும், அவர்களுக்கு இன்று முதல் இலவசமாக புதிய வாக்காளர் அட்டை வழங்கப்படும்.

 புதிதாக விண்ணப்பம் செய்தவர்கள் செல்போன் எண்கள் இதுவரை வழங்கவில்லை என்றாலோ அல்லது எஸ்எம்எஸ் வரவில்லை என்றாலோ தலைமை தேர்தல் அலுவலகத்தில் உள்ள கால்சென்டருக்கு 1950 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு, தங்களது செல்போன் எண்களை பதிவு செய்து கொள்ளலாம். அவர்களுக்கு தேர்தல் ஆணையம் மூலம்எஸ்எம்எஸ் அனுப்பி வைத்து, அவர்களுக்கும் இலவசமாக வாக்காளர் அட்டை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

ப்ளஸ்

செல்போன் எண்களை அளிக்காத வாக்காளர்கள் சுமார் 12.50 லட்சம் உடனடியாக அடையாள அட்டை வேண்டும் என்றால், இ-சேவை மையத்தில் பெயர், விலாசம் உள்ளிட்ட தகவலை கொடுத்து ரூ.25 கட்டணம் செலுத்தி வாக்காளர் அடையாள அட்டை பெறலாம்.

Emis இல் புகைப்படம் பதிவேற்ற ஓர் ஆண்ட்ராய்டு ஆப் !!

மாணவர்களின் புகைப்படத்தை உங்கள் போனில் எடுத்து,Edit optionஇல் சென்று தோராயமாக சதுரமாக Crop செய்து கொள்ளுங்கள்.
🖌பின்னர் கீழ்கண்ட App இல் போய் புகைப்படங்களை (பல படங்களை ஒரே 
நேரத்தில்) resize optionஇல் custom optionஇல் சென்று 200×200 தந்தால் புகைப்படங்கள் தயார்.https://play.google.com/store/apps/details?id=com.simplemobilephotoresizer

பள்ளிகளில் உபரி பணியிடம்திருப்பி ஒப்படைக்க உத்தரவு

அரசு உயர்நிலை,மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்களை திருப்பி ஒப்படைக்க பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்படுகின்றன. அதன்படி 2016 ஆக., 1 ல் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இதில் உபரி ஆசிரியர்களாக கணக்கிடப்பட்டோர் வேறு பள்ளிகளுக்கு இடமாறுதல் செய்யப்பட்டனர். ஆனால் ஆசிரியர் இல்லாத உபரி பணியிடங்கள் அப்படியே இருந்தன.

தற்போது அந்த பணியிடங்களை காலியிடங்களாக காட்டி ஆசிரியர்களை நியமிக்கக்கூடாது; அப்பணியிடங்களை பள்ளிக் கல்வி இயக்குனரின் பொதுத் தொகுப்பில் ஒப்படைக்க வேண்டும். அதனை பள்ளி அளவை பதிவேட்டில் (ஸ்கேல் ரிஜிஸ்டர்) பதிவு செய்ய வேண்டும் என, பள்ளிக் கல்வி இயக்குனர் கண்ணப்பன் உத்தரவிட்டுள்ளார்.

DSE - அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவ/மாணவியரின் வருவாய் ஈட்டும் தாய்/தந்தை விபத்தில் இறந்து விட்டாலோ அல்லது முடக்கம் அடைந்தாலோ அவர்களின் குழந்தைகளுக்கு கல்வி உதவி தொகை பத்திரம் பெற்று வழங்குதல் தொடர்பான ஆணை!!

'TET' தேர்ச்சி பெறாதவர்களை பள்ளிகளில் நியமிக்க தடை.

ஆசிரியர் தகுதிக்கான, 'டெட்' தேர்வு முடிக்காதவர்களை, தனியார் பள்ளிகளில் நியமனம் செய்ய, தமிழக பள்ளி கல்வித்துறை தடை விதித்துள்ளது. மத்திய அரசின் கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, 
தமிழகத்தில், அனைத்து பள்ளிகளிலும்,ஆசிரியர் பணி நியமனத்துக்கு, 2011 முதல், 'டெட்' தேர்வு கட்டாயமானது. ஆனால், அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகளில், 'டெட்' தேர்வு முடிக்காதவர்கள், ஆசிரியர்களாக நியமிக்கப்பட்டனர்.இவர்களில், சிறுபான்மை அந்தஸ்து பெற்ற பள்ளிகளின் ஆசிரியர்கள், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, 'டெட்'தேர்வில் இருந்து விலக்கு பெற்றுள்ளனர். மற்ற பள்ளிகளில், 'டெட்' தேர்வு முடிக்காதோருக்கு, சம்பளம் நிறுத்தப்பட்டு உள்ளது. 'இனி டெட் தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது' என, பள்ளிக்கல்வி இயக்குனரகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி இயக்குனர் கண்ணப்பன், பிறப்பித்துள்ள உத்தரவு:தமிழக அரசு உத்தரவுப்படி, அரசு மற்றும் அரசு உதவி பெறும் சிறுபான்மை மற்றும் சிறுபான்மையல்லாத பள்ளிகளில், ஆசிரியர் பணிக்கு, 'டெட்' கட்டாயம். 2012, 2013ல், 'டெட்' தேர்வுகள் நடத்தப்பட்டன. ஆனாலும், பல பள்ளிகளில், 'டெட்' தேர்ச்சி பெறாதவர்களை, ஆசிரியர் பணிக்கு சேர்த்துள்ளனர்.இது குறித்த ஆய்வில், 159 பேர், 'டெட்' தேர்ச்சி இன்றி,பணியில் சேர்ந்துள்ளனர். அவர்களில், 113 பேர் வழக்குமூலம் சம்பளம் பெறுகின்றனர். மீதம், 43 பேருக்கு இதுவரை சம்பளம் தரவில்லை. அவர்களுக்கு, அரசின் மானியம் பெற்று, சம்பளம் வழங்க, மாவட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிடப்படுகிறது.

எதிர்காலத்தில், சிறுபான்மை அந்தஸ்து பெறாத, தனியார் பள்ளிகள், 'டெட்' தேர்ச்சி பெறாத ஆசிரியர்களை நியமிக்கக் கூடாது. அரசு அனுமதி பெற்றே, ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

AEEO - நேரடி கல்வி அலுவலர்களுக்குஊக்க ஊதிய உயர்வு இல்லை

'நேரடியாக நியமிக்கப்பட்ட 64 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்களுக்கு உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு இல்லை' என, கல்வித்துறை தெரிவித்துள்ளது.
நடுநிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் பட்ட மேற்படிப்பு முடித்தால் முதல் ஊக்க ஊதிய உயர்வும்,எம்.பில்., அல்லது எம்.எட்., முடித்தால் இரண்டாவது ஊக்க ஊதிய உயர்வும் வழங்கப்படும். இவர்கள் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் உதவித் தொடக்கக் கல்விஅலுவலராக நியமிக்கப்பட்டாலும் ஊக்க ஊதிய உயர்வு தொடரும்.சில ஆண்டுகளுக்கு முன், ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 64 உதவித் தொடக்கக் கல்வி அலுவலர்கள் நேரடியாக நியமிக்கப்பட்டனர். அவர்கள் உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு கேட்டு, தொடக்கக் கல்வி இயக்குனரகத்திற்கு மனு அனுப்பினர்.ஆனால், இதற்கு தொடக்கக் கல்வி இயக்குனரகம் மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து ெவளியிடப்பட்ட உத்தரவில், 'நேரடியாக நியமன உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் பணியிடம், 'நிர்வாக அலுவலர் பணியிடமாக' கருதப்படுகிறது. இதனால், பதவி உயர்வு உதவித்தொடக்கக் கல்வி அலுவலர்களை போன்று ஊக்க ஊதிய உயர்வு வழங்க முடியாது' என தெரிவித்துள்ளது.

பள்ளி உதவியாளர் பணி நாளை கவுன்சிலிங்

பள்ளிக்கல்வித் துறையில், 256 உதவியாளர் பணிக்கான கவுன்சிலிங், நாளை நடக்கிறது.பள்ளிக்கல்வி இயக்குனர்கண்ணப்பன் அறிவிப்பு:
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., மூலம், 2014 - 15, 2015 - 16ம் ஆண்டுகளில், குரூப் - 2 ஏ பிரிவில், உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு நடந்தது.இதில், தமிழகத்தில், 256 இடங்களை நிரப்ப, டி.என்.பி.எஸ்.சி., ஒதுக்கீடு செய்தவர்களுக்கு, நாளை கவுன்சிலிங் நடக்கிறது. சென்னையில் உள்ள, தொடக்கக் கல்வி இயக்குனரகத்தின் கூட்ட அரங்கில், காலை, 11:00 மணிக்கு, கவுன்சிலிங் துவங்கும். ஒதுக்கீடு பெற்றவர்கள், உரிய ஆவணங்களுடன், ஒரு மணி நேரம் முன்னதாக, கூட்ட அரங்கிற்கு வர வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

ரேஷனில் 'ஆதார்' பதிவு கடைசியாக ஒரு வாய்ப்பு

ரேஷனில், 'ஆதார்' விபரத்தை பதியாதவர்கள், உணவு வழங்கல்உதவி ஆணையர் அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.தமிழகத்தில், வரும், ஏப்., முதல், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டு வழங்கப்பட உள்ளது. 
இதற்காக, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, ஆதார் எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் பெறப்படுகின்றன.இவை, ரேஷன் கடையில் உள்ள, டி.என்.இ.பி.டி.எஸ்., என்ற, 'மொபைல் ஆப்'பில், பதியப்படுகிறது.இதுவரை, நான்கு லட்சம் ரேஷன் கார்டுதாரர்கள், குடும்பத்தில் உள்ள ஒருவரது, ஆதார் விபரங்களை கூட பதியவில்லை. உணவு துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:ஆதார் விபரம் வழங்க, 10 மாதங்களுக்கு மேல் அவகாசம் தரப்பட்டு வருகிறது. ஆனால், பலர் விபரம் தராமல் அலட்சியமாக உள்ளனர். தற்போது, ஒரு குடும்பத்தில், ஒருவரின் ஆதார் கார்டு கூட பதியாதவர்களின், ரேஷன் கார்டுகள் முடக்கப்பட்டுள்ளன. அவர்கள், ரேஷன் கடைக்கும், உணவு வழங்கல் அலுவலகத்துக்கும், அலைவதாக தகவல் கிடைத்துள்ளது. அவர்கள்சிரமத்தை போக்க, ஒரு வாய்ப்பு வழங்கப்படுகிறது.

அவர்கள், ரேஷன் கார்டு, ஆதார் கார்டு நகல்களுடன், ரேஷன் கடை எண், மொபைல் எண்ணை ஒரு தாளில் எழுதி, உணவு வழங்கல் உதவி ஆணையர் அலுவலகத்தில் கொடுக்கலாம். அவற்றை, அலுவலக ஊழியர்களே பதிவு செய்து, அந்த விபரத்தை தெரிவிப்பர். இந்த வாய்ப்பை விட்டுவிட்டால், 'ஸ்மார்ட்' கார்டு கிடைப்பது சிரமம். இவ்வாறு அவர் கூறினார்.

பள்ளிக் கல்வி கலைத்திட்டத்தில் 'வயல் விவசாயம்'- அரசுக்கு பல்கலை. பாடத்திட்ட குழு உறுப்பினர் யோசனை

விவசாயம் கிராமப்புற மக்களுக்கானது என்பதை மாற்றி எதிர்காலத்தில் படித்த இளைஞர்களும் கையில் எடுக்க, பள்ளிக்கல்வி கலைத்திட்டத்தில் 'வயல் விவசாயம்' கொண்டு வர வேண்டும் என பல்கலைக் கழகங்களின் கல்வியியல் பாடத்திட்ட குழு உறுப்பினரும், காந்திகிராமம் கிராமிய பல்கலைக்கழக பேராசிரியருமான ஜாகிதா பேகம் தெரிவித்துள்ளார்.

நவீன யுகத்தில் கணினிக்கும், செல்பேசிக்கும், இணையத்திற்கும் தரப்படும் முக்கியத்துவம் விவசாயத்துக்கு கிடைப்பதில்லை. கடல் தாண்டி உழைக்க தயாராக இருக்கும் படித்த இளை ஞர்கள், விவசாயம் செய்ய முன்வருவதில்லை. அதற்கு விவசாயம், பற்றிய அடிப்படை அறிவு, அதன் வருவாய் ஆதாரம், வர்த்தகம் பற்றிய விவசாய நுண்ணறிவு இல்லாத கல்விமுறையே முக்கிய காரணம் எனக் கூறப்படுகிறது.

தற்போது மழையில்லாததால் இயற்கையும் சேர்ந்து விவசாயத்தை பழி வாங்கிவிட்டது. ஒருபுறம் வறட்சி, மறுபுறம் விவசாயத்தை புறக்கணிக்கும் இன்றைய தலைமுறையால் தமிழகத்தில் சாகுபடி பரப்பு குறைந்து உணவு உற்பத்திக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. அதற்கு விவசாயம் என்பது கல்வியறிவு இல்லாத கிராமப்புற மக்களுக்கானது என்பதை மாற்றி, படித்த இளை ஞர்களும் விவசாயத்தை வருமானத்துக்கான துறைபோல் கையில் எடுக்க பள்ளிக் கல்வி கலைத்திட்டத்தில் விவசாயத்தை கொண்டுவந்து பாடத்திட்டத்தை மறு சீரமைக்க வேண்டும் என திண்டுக்கல் காந்திகிராமம் பல்கலைக்கழக கல்வியியல் துறைத் தலைவர் ஜாகிதா பேகம் அரசுக்கு யோசனை தெரிவித் துள்ளார். இது குறித்து அவர் கூறியதாவது:

இயற்கையையும், வாழ்க்கை முறையையும் கற்றுத்தராத தற்போதைய கல்வி முறை மிக வேதனைக்குரியது. எழுத் தறிவையும் தகவல்களையும் அடிப்படையாகக் கொண்டு மனப்பாடம் செய்வதைத்தான் தற்போது கல்வி என்ற பெயரில் செய்து வருகிறோம். தற்போதைய காலகட்டத்தில் கல்வியை மீண்டும் வரையறை செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் நாட்டின் பண்பாட்டினையும், பாரம்பரியத்தையும் அறிவார்ந்த வழியில் கற்றுக்கொள்வதும், இயற்கையோடு இணைந்த வாழ்வினைத் கற்றுத்தருவதுமே கல்வியாகும். நாட்டின் கல்வி முறை பற்றிய திட்டங்களில் அரசியல் மற்றும் அதிகாரிகளின் குறுக்கீடும் இருக்கக்கூடாது.

பள்ளிகள், கல்லூரிகளில் கலைத்திட்டத்தை மறுசீரமைத்து திட்டமிடல் வேண்டும். ஐந்து முதல் பதினைந்து வயது வரை எத்தகைய கல்விமுறையை மாணவர்கள் படிக்கின்றனரோ அதை அடிப்படையாக கொண்டே அவர்கள் வாழ்க்கை முறை அமைந்து விடுகிறது. ஒரு சில சதவீதத்தினர் மட்டுமே விதிவிலக்காக கல்விக்கு அப்பாற்பட்டு சாதிக்கின்றனர். அதனால், கல்விமுறையை தொலைநோக்குப் பார்வையுடன் கொண்டு சேர்க்கும் வகையில் கல்வியாளர்களும், அரசும் பள்ளிக் கல்வி கலைத்திட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டும்.

ஆசிரியர் கல்வி திட்டம் மேம்பட, மேன்மையான ஆசிரியர்கள் கிடைத்திட அரசியல் அதிகாரங்கள் குறுக்கீடு இல்லாத கல்விமுறை நம் நாட்டுக்குத் தேவை. அதற்கு பள்ளிக் கல்வித் திட்டத்தில் முக்கியமாக இடம்பெற வேண்டியது விவசாயம்தான். வேளாண்மையின் முக்கியத்துவத்தையும், இயற்கை விவசாயத்தையும், தமிழகத்தில் பயிர் செய்யும் முறையும், கால்நடைகள் பராமரிப்பு பற்றியும் புத்தகங்களாக மட்டுமின்றி செயல்முறை கல்வியாக மாணவர்களுக்கு கற்றுத்தரப்பட வேண்டும்.

பள்ளிகளில் பல்வேறு சோதனைக்கூடங்கள் இருந்தாலும், ஒவ்வொரு பள்ளியிலும் 'வயல்' என்னும் வேளாண்மைக்கூடமும், கால்நடை வளர்ப்பும், பராமரிப்பும் தேவை. இந்த வயல் வெளி கல்வி முறை எல்கேஜி, யூகேஜி முதல் கற்றுத்தரப்பட வேண்டும். இந்த கல்வித் திட்டத்தில் இயற்கையோடு இணைந்த வாழ்க்கைமுறை, நல்வாழ்வுக்கான பாரம்பரிய விஷயங்கள் முதலிய வற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். இதற்கான கல்வித்திட்டங்களை கல்வியா ளர்களும், அரசும் கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இத்தகைய கல்விக்கூடங்களையும் மக்கள் வரவேற்க வேண்டும். மேற்கத்திய ஆதிக்கம் சார்ந்த கல்விமுறையை ஒழிக்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்பு அங்கீகாரம் ரத்து: சட்ட மசோதா நிறைவேறியது.

அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் தொலைநிலை படிப்புக்கு அங்கீகாரம் வழங்கியதை நீக்கம் செய்து பேரவையில் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 

இதற்கான சட்டத்தை உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் புதன்கிழமை கொண்டு வந்தார். அந்த மசோதாவில் கூறப்பட்டுள்ளதாவது:- 2012-ஆம் ஆண்டு அண்ணாமலை பல்கலைக்கழகச் சட்டமானது திருத்தம் செய்து பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளை அண்ணாமலைப் பல்கலைக்கழகம் நடத்துவதற்கும், இந்தியாவின் எந்தப் பகுதியிலும் அல்லது இந்தியாவுக்கு வெளியேயும் கல்வி பயிலும் மையங்களை ஏற்படுத்துவதற்கான அதிகாரத்தை பல்கலைக்கழகத்துக்கு அளிக்க அந்த சட்டத் திருத்தம் வகை செய்திருந்தது. 

இந்த நிலையில், தொலைதூரக் கல்வி முறை மூலமாக பயிலும் படிப்புகளுக்கு வழங்கப்பட்ட அங்கீகாரத்தை ரத்து செய்வது என 2012-இல் முடிவு செய்து, அண்ணாமலைப் பல்கலைக்கழகச் சட்டத்தை நீக்கம் செய்திருந்தது. இதற்கு செயல்வடிவம் கொடுக்கும் வகையில் சட்ட மசோதா கொண்டு வரப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த மசோதா குரல் வாக்கெடுப்பில் நிறைவேறியது.