Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Wednesday, 22 February 2017

7வது ஊதியக்குழு பரிந்துரைகளை அமுல்படுத்த 5 பேர் கொண்ட குழுவை அமைத்தது தமிழகஅரசு,30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவு.

7வது ஊதியக் குழுவின் அடிப்படையில் அரசு ஊழியர்களின் ஊதிய விகிதத்தை மாற்றியமைக்க 5 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார்.

முதல்வர் பழனிசாமி தலைமையில் சென்னையில் இன்று நடைபெற்ற கூட்டத்தில் இது குறித்த முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.

இது தொடர்பாக தமிழக முதல்வர் எடப்பாடி மு பழனிசாமி வெளியிட்ட அறிக்கையில், அரசுப் பணியாளர்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்ட முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 2016 சட்டமன்ற தேர்தல் அறிக்கையில் மத்திய அரசு ஊழியர்களுக்கான 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகள் அமல்படுத்தப்பட்டவுடன், தமிழக அரசுப் பணியாளர்களுக்கும் ஊதிய விகிதங்கள் மாற்றியமைக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவித்திருந்தார்கள். அவருடைய அறிவிப்பை செயல்முறைபடுத்த தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதுகுறித்து எனது தலைமையில் ஆலோசனைக் கூட்டம் இன்று இன்று நடத்தப்பட்டது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் வனத்துறை அமைச்சர்  திண்டுக்கல் சி. சீனிவாசன், பள்ளிக் கல்வி, விளையாட்டு மற்றும் இளைஞர் நலத் துறை அமைச்சர் கே.ஏ. செங்கோட்டையன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் பி. தங்கமணி உள்ளிட்ட அமைச்சர்களும், தலைமைச் செயலாளர் முனைவர் கிரிஜா வைத்தியநாதன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் பங்கேற்றனர்.

இந்தக் கூட்டத்தில், மத்திய அரசின் ஏழாவது ஊதியக்குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை தொடர்ந்து தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் பணியாளர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை அளிக்க “அலுவலர் குழு” ஒன்றை உடனடியாக அமைக்க உத்திரவிட்டுள்ளேன். இக்குழுவில் கீழ்கண்ட அலுவலர்கள் உறுப்பினர்களாக இருப்பர் :

1. கூடுதல் தலைமை செயலாளர், நிதித்துறை
2. முதன்மை செயலாளர், உள்துறை
3. முதன்மை செயலாளர், பள்ளிக் கல்வித்துறை
4. செயலாளர், பணியாளர் மற்றும் நிருவாகச் சீர்திருத்தத்துறை
5. Dr. பி.உமாநாத், – உறுப்பினர் செயலாளர்.

2) இந்த “அலுவலர் குழு” மத்திய அரசின் ஏழாவது ஊதியக் குழு பரிந்துரைத்துள்ள திருத்திய ஊதிய விகிதங்கள் குறித்து மத்திய அரசு எடுத்துள்ள முடிவுகளை ஆராய்ந்து, அவற்றை தமிழ்நாடு அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள் மற்றும் உள்ளாட்சி நிறுவனங்களில் பணியாற்றும் அலுவலர்களுக்கு ஊதிய விகிதங்களை மாற்றியமைப்பதற்கான பரிந்துரைகளை வழங்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. மேலும், இக்குழு மத்திய அரசு பரிந்துரைத்துள்ள திருத்திய ஓய்வூதியம் / குடும்ப ஓய்வூதியம் மற்றும் திருத்திய ஓய்வுக் கால பயன்கள் குறித்து ஆராய்ந்து அவற்றை தமிழ்நாடு அரசு ஓய்வூதியதாரர்கள் மற்றும் அலுவலர்களுக்கு விரிவுபடுத்துவது குறித்தும் தக்க பரிந்துரைகள் அளிக்க கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது. இக்குழு, இதர படிகள் தொடர்பாக மத்திய அரசு அமைத்துள்ள உயர்மட்ட குழு அளிக்கும் அறிக்கையினையும் ஆராய்ந்து உரிய பரிந்துரைகளை வழங்கும்.

3) அங்கீகரிக்கப்பட்ட அலுவலர் மற்றும் ஏனைய சங்கங்கள் இவ்வலுவலர் குழுவிற்கு ஊதிய விகிதம் / ஓய்வூதிய திருத்தம் குறித்த தங்கள் கோரிக்கையை அனுப்பி வைக்கவும், அவற்றை உரியவாறு ஆராய்ந்து பரிந்துரைக்கவும் இக்குழுவிற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

4) இக்குழு தனது அறிக்கையை நான்கு மாத காலத்திற்குள், அதாவது 30.06.2017க்குள் அரசிற்கு அளிக்கும்படி உத்தரவிட்டுள்ளேன் என்று தெரிவித்துள்ளார்.

அரவைக்கு செல்லும் 7 லட்சம் TET, விண்ணப்பம்.

மாநிலத்தில் மூன்று ஆண்டுகளாக, ஆசிரியர் தகுதி தேர்வு(டி.இ.டி.,) நடத்தப்படவில்லை. கல்வி அமைச்சராக பாண்டியராஜன் நியமிக்கப்பட்ட பின், பலராலும் எதிர்பார்க்கப்பட்ட டி.இ.டி., தேர்வு, மார்ச் இறுதியில் நடத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்தார்.
அவரது அறிவிப்பிற்கு பின் சுறுசுறுப்படைந்த டி.ஆர்.பி., தேர்வுக்காக, முதற்கட்டமாக 7 லட்சம் புதிய விண்ணப்பங்களை அச்சிட்டு, பிப்., முதல் வாரத்தில் அனைத்து முதன்மை கல்வி அலுவலகங்களுக்கும், குறைந்தபட்சம் 20 ஆயிரம் முதல் 30 ஆயிரம் விண்ணப்பங்கள் வரை அனுப்பி வைத்தது.வினியோகம் துவங்கி பிப்.,28க்குள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, அந்தந்த கல்வி மாவட்டங்களில் ஒப்படைக்க வேண்டும் எனவும் முதன்மை கல்வி அலுவலர்களுக்கு (சி.இ.ஓ.,க்கள்) டி.ஆர்.பி., உத்தரவிட்டது. இந்நிலையில் டி.இ.டி., தேர்வு குறித்து சி.இ.ஓ.,க்களுக்கான ஆலோசனை கூட்டம் நடத்த டி.ஆர்.பி., ஏற்பாடு செய்தது. அப்போது டி.ஆர்.பி., தலைவர் விபுநாயருக்கும், கல்வி செயலர் சபிதாவுக்கும் இடையே ஏற்பட்ட கருத்துவேறுபாடால் அக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது.இதையடுத்து விபுநாயரும் பணியிடமாற்றம் செய்யப்பட்டார்.

புதிய உத்தரவு:

இந்நிலையில், டி.இ.டி., விண்ணப்பங்களில்இணைக்கப்பட்ட விபரப் பக்கங்களில் பிழை இருப்பதால், அதை வினியோகிக்க வேண்டாம் என டி.ஆர்.பி., திடீர் உத்தரவு பிறப்பித்தது.இதையடுத்து இரு நாட்களுக்கு முன் டி.இ.டி., விண்ணப்பங்களை, அரவைக்கு கொண்டு செல்வதற்காக கரூரில் உள்ள தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகிதம் நிறுவனத்திடம் (டி.என்.பி.எல்.,) ஒப்படைக்க அனைத்து சி.இ.ஓ.,க் களுக்கு வாய்மொழி உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. டி.ஆர்.பி.,யின் கவனக்குறைவால் அரசுக்கு நிதி விரையம் ஏற்பட்டுள்ளதாககுற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இதுகுறித்து டி.ஆர்.பி., அதிகாரி ஒருவர் கூறியதாவது: விண்ணப்பத்தில் சில பிழைகள் இருந்தன. நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, விபரப் பகுதியில் விதிமுறை குறிப்பிடப்படவில்லை. இதை வெளியிட்டால் சிலர் நீதிமன்றம் சென்று வழக்கு தொடர வாய்ப்புள்ளது. இதனால்அனுப்பி வைக்கப்பட்ட விண்ணப்ப கட்டுக்களை பிரித்து பார்க்காமலே அவற்றை அரவைக்கு அனுப்பி வைக்க அதிகாரிகளுக்கு டி.ஆர்.பி., உத்தரவிட்டது. புதிய விண்ணப்பம் அச்சடிக்கும் பணி விரைவில் துவங்கும், என்றார்.

பள்ளிகளில் செலவு செய்யப்படாத மானியத்தொகையினை மார்ச் 10க்குள் திருப்பி செலுத்த உத்தரவு.

SSA - SPD PROCEEDINGS- ந.க .எண் 1589 நாள் 9/2/17 - நிதி மேலாண்மை அறிவுறுத்தலகள்சார்பு- வங்கி ஆரம்ப இருப்புத்தொகை ₹1000 வரை வைத்துவிட்டு மீதமுள்ள தொகையை வட்டாரவளமைய அலுவலகத்தில்,பள்ளிகள் மார்ச் 10 க்குள் திருப்பி அனுப்ப உத்தரவு.

3 துணைவேந்தர் பதவி : பிப்., 24ல் கவர்னர் முடிவு!!

சென்னை, மதுரை மற்றும் அண்ணா பல்கலைகளின் துணைவேந்தர்கள் குறித்து, இன்னும் இரு தினங்களில், கவர்னர் முடிவு எடுக்க உள்ளார்.
காமராஜர் பல்கலை.,
மதுரை காமராஜர் பல்கலையில், 2015 ஏப்., முதல், துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. இதில், புதிய

துணைவேந்தரை நியமிக்க, பேராசிரியர் முருகதாஸ் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழு, பல்கலை மானியக் குழுவின் பரிந்துரைப்படி, புதிய துணைவேந்தர் நியமன பணிகளை மேற்கொண்டு உள்ளது.

அண்ணா பல்கலை.,

அண்ணா பல்கலையில், 10 மாதங்களுக்கு மேலாக, துணைவேந்தர் பதவி காலியாக உள்ளது. புதிய துணைவேந்தரை நியமிக்க, தமிழ்நாடு திறந்தநிலை பல்கலை துணைவேந்தர் பாஸ்கரன் தலைமையில், குழு அமைக்கப்பட்டு உள்ளது.
சென்னை பல்கலை.,

சென்னை பல்கலையில், ஓராண்டாக துணைவேந்தர் இல்லை. அங்கு புதிய துணைவேந்தரை நியமிக்க, ஓய்வுபெற்ற அரசு அதிகாரி வேதநாராயணன் தலைமையில், தேடல் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுவில், முன்னாள் துணைவேந்தர்கள், பேராசிரியர்களின் தலையீடு இருப்பதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில், மூன்று பல்கலைகளின் தேடல் குழுக்களும், இறுதி பட்டியலை தயார் செய்து விட்டன. வரும், 24ல், தமிழகம் வரும் கவர்னர், இறுதி முடிவு எடுப்பார் என, உயர் கல்வி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

7வது ஊதிய குழு பரிந்­து­ரையின் சீராய்வு முடிந்­தது; மத்­திய அரசு ஊழி­யர்கள் ‘அலவன்ஸ்’ உய­ரு­கி­றது!!!

மத்­திய அரசு ஊழி­யர்­களின், ‘அலவன்ஸ்’ தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்­துள்ள பரிந்­து­ரையை, சீராய்வு செய்யும் பணி முடி­வ­டைந்து உள்­ளது. இதை­ய­டுத்து, புதிய அலவன்ஸ் மற்றும் அலவன்ஸ் உயர்வு குறித்த அறி­விப்பை, மத்­திய அரசு விரைவில் வெளி­யிடும் என, எதிர்­பார்க்­கப்­ப­டு­கி­றது. இதனால், 47 லட்சத்திற்கும் மேற்பட்ட மத்­திய அரசு ஊழி­யர்கள் பய­ன­டைவர்.

மத்­திய அரசு ஊழி­யர்­களின் ஊதிய உயர்வு தொடர்­பாக, ஏழா­வது ஊதியக் குழு அளித்த பரிந்­து­ரைக்கு, 2016 ஜூன், 29ல், மத்­திய அமைச்­ச­ரவைக் குழு ஒப்­புதல் வழங்­கி­யது. அதே சமயம், அலவன்ஸ் குறித்த பரிந்­து­ரைகள் மீது மட்டும் முடிவு எடுக்­காமல், ஒத்தி வைத்­தது. இதை­ய­டுத்து, அலவன்ஸ் தொடர்­பான பரிந்­து­ரை­களை சீராய்வு செய்ய, நிதித் துறை செயலர் அசோக் லாவாசா தலை­மையில், குழு அமைக்­கப்­பட்­டது. இக்­குழு, ஏழா­வது ஊதியக் குழு தெரி­வித்த, அலவன்ஸ் பரிந்­து­ரை­களை சீராய்வு செய்யும் பணியை மேற்­கொண்டு வந்­தது. தற்­போது, இப்­ப­ணிகள் முடி­வ­டைந்து விட்­ட­தாக தகவல் வெளி­யாகி உள்­ளது.
உ.பி., – மணிப்பூர் உள்­ளிட்ட மாநி­லங்­களில் தேர்தல் நடை­பெற்று வரு­வதால், புதிய அலவன்ஸ் குறித்த அதி­கா­ர­பூர்வ அறி­விப்பை, மத்­திய அரசு வெளி­யி­டாமல் ஒத்தி வைத்­துள்­ளது. ‘மார்ச், 11ல், தேர்தல் முடி­வுகள் வெளி­யான பின், மத்­திய அரசு ஊழி­யர்­க­ளுக்­கான புதிய அலவன்ஸ், அலவன்ஸ் உயர்வு ஆகி­யவை குறித்த அறி­விப்பு வெளி­யாகும்’ என, அரசு உய­ர­தி­காரி ஒருவர் தெரி­வித்தார்.
அவர், மேலும் கூறி­ய­தா­வது: ஏழா­வது ஊதியக் குழு, நடை­மு­றையில் உள்ள, 193 வகை­யான அல­வன்­சு­களை ஆராய்ந்­தது; அவற்றில், 51 அல­வன்­சு­களை நீக்­கவும், 37 அல­வன்­சு­களை சீரமைக்கவும், மத்­திய அர­சுக்கு பரிந்­து­ரைத்து இருந்­தது. இப்­ப­ரிந்­து­ரையை, அசோக் லாவாசா குழு, சீராய்வு செய்து முடித்­துள்­ளது. இக்­குழு, மத்­திய அரசு ஊழி­யர்­களின் வீட்டு வாடகை, பயண அலவன்ஸ் ஆகி­ய­வற்றை, கணி­ச­மாக உயர்த்த பரிந்­து­ரைத்­துள்­ள­தாக தெரி­கி­றது. மத்­திய அரசின் அறி­விப்­பிற்கு பின், புதிய அலவன்ஸ் நடை­முறை, வரும் ஏப்., முதல் அம­லுக்கு வரும். இவ்­வாறு அவர் கூறினார்.
அதி­க­ரிப்பு:நடப்பு நிதி­யாண்டு பட்­ஜெட்டில், மத்­திய அரசு ஊழி­யர்­களின் அலவன்ஸ் செல­வி­னங்­க­ளுக்கு, 64,677 கோடி ரூபாய் ஒதுக்­கப்­பட்­டது. இது, 2017 – 18ம் நிதி­யாண்­டிற்கு, 69,222 கோடி ரூபா­யாக உயர்த்­தப்­பட்டு உள்­ளது. இதே காலத்தில், பயண அலவன்ஸ், 4,323 கோடி ரூபாயில் இருந்து, 4,714 கோடி ரூபா­யாக அதி­க­ரிக்­கப்­பட்டு உள்­ளது. வரும் நிதி­யாண்டில், பயண அலவன்ஸ் தவிர்த்து, இதர அல­வன்­சு­க­ளுக்­கான ஒதுக்­கீடு, 7 சத­வீதம் உயர்த்­தப்­பட்டு உள்­ளது.

யு.பி.எஸ்.சி தேர்வு முடிவுகள் வெளியீடு !!

இந்தியா ஆட்சி பணிகளுக்கான தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன.

தேர்வு எழுதியோர் முடிவுகளை upsc.gov .in என்ற இணையத்தளத்தில தெரிந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

EMIS NEWS: 1 முதல் 8 வரை அனைத்துவகுப்புகளுக்கும் New Entry செய்யும் வசதிதரப்பட்டுள்ளது. Common pool ல் இல்லாத மாணவர்களை பதிவு செய்து கொள்ளலாம்


EMIS portal is open from 1 to 8 std from today.Please update and enter all the students those who not having EMIS number. Please completeit within 28.02.2017.EMIS

இணையதளத்தில் 1முதல் 5 வகுப்புவரை புதிய மாணவர் பதிவு செய்யும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. அனைத்துப்பள்ளி தலைமை ஆசிரியர்களும் இந்த வாய்ப்பை பயன்படுத்தி 1-5 New entry போட்டு முடிக்கவும்.