Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Saturday, 4 March 2017

உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு.

TET தேர்வு நெருக்கடியில் 3200 அரசு உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள்

அடுத்த மாதம் நடக்கும் ஆசிரியர் தகுதி தேர்வில் (TET) தேர்ச்சி பெறாவிட்டால், 3000 பேரின் நியமனம் ரத்து செய்யப்படும்' என்ற அறிவிப்பால் ஆசிரியர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.
'அரசு, உதவிபெறும் பள்ளி களில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் நியமனத்திற்கு, 2010 முதல் TET தேர்வு கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது. கடந்த 2012ல் முதல் முறையாக இத்தேர்வு நடந்தது. ஆனால், மத்திய அரசின் இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டத்தின்படி, '23.8.2010க்குபின் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கும் TET தேர்ச்சி கட்டாயம்' என அறிவிக்கப்பட்டது.

இதன்படி, 'அரசு உதவிபெறும் பள்ளிகளில் நியமிக்கப்பட்ட 3,200 ஆசிரியர்கள் அடுத்த ஐந்து ஆண்டுகளில் நடக்கும்TET தேர்வு களில், தேர்ச்சி பெற வேண்டும்' என நிபந்தனை விதிக்கப்பட்டது; ஆனால், 2013க்கு பின் தேர்வு நடக்கவில்லை. இந்நிலையில், கல்வித்துறை இயக்குனர் நேற்று வெளியிட்ட உத்தரவில், '23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்கள் ஏப்.,29, 30 ல் நடக்கும் தேர்வில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும். இல்லாதபட்சத்தில் நியமனம் ரத்து செய்யப்படும்' என, தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இதுகுறித்து ஆசிரியர்களை அழைத்து, மாவட்ட கல்வி அலுவலர்கள் கடிதம் பெறுகின்றனர். இதனால், சிறுபான்மையினர் பள்ளிகள் தவிர மற்ற பள்ளிகளை சேர்ந்த 3௦00 ஆசிரியர்களின் நியமனம் கேள்விக்குறியாகி உள்ளது.ஆசிரியர் சங்க நிர்வாகி  கூறியதாவது:'குறுகிய கால அவகாசம் கொடுத்து, ஒரே வாய்ப்பில் தேர்ச்சி பெற வேண்டும்' என, அரசு நெருக்கடி கொடுப்பதை ஏற்க முடியாது. ஏழு ஆண்டுகளாக அரசு சம்பளம் பெற்றுள்ளனர். அவர்களின் குடும்ப சூழ்நிலையை கவனத்தில் கொள்ள வேண்டும்.

சிறுபான்மையினர் பள்ளிகளில், TET தேர்ச்சிஇல்லாமல் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்களுக்கு 'சிறப்பு பணியிடை பயிற்சி' அளித்து பணியில் தொடரவும், தேர்ச்சி மதிப்பெண் 82 எனவும் உத்தரவிட்டது போல், உதவிபெறும் பள்ளிகளில் 23.8.2010க்கு பின் நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கும் வாய்ப்பு அளிக்க வேண்டும்.கடந்த 2013 முதல் தேர்வே நடத்தாமல் திடீரெனஇப்போது அறிவித்து, அதில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என்பதை பரிசீலனை செய்ய வேண்டும்.இவ்வாறு கூறினார்.

பிளஸ் 2 விடைத்தாள் ஏப்.1ல் திருத்தம்

பிளஸ் 2 தேர்வில் விடைத்தாள் திருத்தம், ஏப்., 1 முதல் துவங்கும் என, ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில், பிளஸ் 2 தேர்வு, 2ம் தேதி துவங்கியது. இதில், 9.33 லட்சம் பேர் பங்கேற்கின்றனர். 
மொத்தம், 2,434 இடங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன; 4,000 பறக்கும் படைகள், தேர்வு நாட்களில் அதிரடி சோதனை நடத்தி வருகின்றன.இந்நிலையில், பிளஸ் 2 தேர்வுகள், 31ல் முடிகின்றன. கடந்த சில ஆண்டுகளாக தேர்வு நடக்கும் போதே, விடைத்தாள் திருத்தமும் துவங்கியது. அதனால், ஆசிரியர்கள் கடும் சிரமத்துக்கு ஆளாகினர். விடைத்தாள் திருத்துவதா; தேர்வு பணி பார்ப்பதா; பிளஸ் 1 மாணவர்களை கவனிப்பதா என, குழப்பம் ஏற்பட்டது.

இதை தடுக்க, இந்த ஆண்டு தேர்வு முடிந்த பின், ஏப்., 1 முதல் விடைத்தாள் திருத்தம் துவங்குகிறது. தமிழகம் மற்றும் புதுவையில், 150 விடை திருத்தும் மையங்கள் அமைக்கப்பட்டு, திருத்த பணிகள் நடக்க உள்ளதாக, தேர்வுத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர். ஏப்., 20க்குள், அனைத்து பாடங்களுக்கான திருத்தத்தையும் முடிக்க, தேர்வுத் துறையினர் திட்டமிட்டுள்ளனர்.

மாணவர்களுக்கு பரிசு:முதல்வர் பழனிசாமி வழங்கினார்

கடந்த கல்வியாண்டில், அரசு பொதுத் தேர்வில், இரண்டு மற்றும் மூன்றாம் இடங்களைப் பெற்ற, மாணவ, மாணவியருக்கு, முதல்வர் பழனி சாமி பரிசுத் தொகை வழங்கினார்.அரசு பள்ளிகளில் படித்து, பிளஸ் 2 தேர்வில், முதல் மூன்று இடங்களை பிடித்தவர்களுக்கு, அரசு சார்பில் பரிசுத் தொகை வழங்கப்படுகிறது. 
2015 - 16ம் கல்வியாண்டில், பிளஸ் 2 அரசு பொதுத் தேர்வில், தமிழை மொழிப் பாடமாகக் கொண்டு, மாநில அளவில், முதலிடம்பெற்ற மாணவ, மாணவியருக்கு, ஏற்கனவே பரிசுத் தொகை வழங்கப்பட்டுள்ளது.

இரண்டாமிடம் பெற்ற, 21 மாணவர்களுக்கு, தலா, 30 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பெற்ற , 22 பேருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட உள்ளது. அதேபோல், 10ம் வகுப்பு பொதுத் தேர்வில், மாநில அளவில், இரண்டாம் இடம் பெற்ற, 69 மாணவ - மாணவியருக்கு, தலா, 20 ஆயிரம் ரூபாய்; மூன்றாம் இடம் பெற்ற, 424 மாணவர்களுக்கு, தலா, 15 ஆயிரம் ரூபாய் காசோலை வழங்கப்பட உள்ளது. இதில், சென்னை மாவட்டத்தை சேர்ந்த, ஏழு மாணவ - மாணவியருக்கு, 1.40 லட்சம் ரூபாய்க்கான காசோலைகள் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை, முதல்வர் பழனிசாமி, நேற்று தலைமை செயலகத்தில் வழங்கினார். பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களுக்கு, அமைச்சர்கள் மற்றும் கலெக்டர்கள் வழங்குவர்.

TPF TO GPF ACCOUNT SLIP

ஊராட்சி / நகராட்சி ஆசிரியர்களின்சேமநலநிதி கணக்கானது( TPF ) பொது வருங்கால வைப்புநிதிக்கு (GPF) மாற்றப்பட்டதால் 2014-2015ஆம் வருட கணக்கீட்டு தாள் சரிசெய்யும் பணி மாநில கணக்காயர் அலுவலகத்தில் நிறைவு பெற்று
( AG's OFFICE )பதிவேற்றம் செய்யும் பணி NATIONAL INFORMATION CENTER ( NIC ) மூலம் நடைபெற்று வருகிறது.விரைவில் 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுதாளை பதிவிறக்கம் செய்யலாம்.           

*ஆசிரியர் பொது வருங்கால வைப்புநிதி 2014 -2015 ஆம் ஆண்டு கணக்கீட்டுத்தாள் மார்ச் முதல் வாரத்தில் வெளியாக வாய்ப்பு

*கணக்கீட்டுத் தாளை சேமநலநிதி எண் மற்றும் பிறந்ததேதியை உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்யலாம்

ராணுவ கல்லூரியில் படிப்பு வரும் 31க்குள் விண்ணப்பிக்கலாம்.

ஏழாம் வகுப்புக்கு பின், இந்திய ராணுவ கல்லுாரியில் சேர, வரும், 31க்குள் விண்ணப்பிக்கலாம். உத்தரகண்ட் மாநிலம், டேராடூனிலுள்ள ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரியில், ஜனவரியில் மாணவர்கள் சேர்க்கப்படுவர்.
எட்டாம் வகுப்பு முதல், வகுப்புகள் நடத்தப்பட்டு, பின், ராணுவ அதிகாரிக்கான பயிற்சிகள் தரப்படும்; அதன்பின், பணியில் சேர்க்கப்படுவர்.இந்த கல்லுாரியில் சேர, நுழைவுத் தேர்விலும், நேர்முகத் தேர்விலும் தேர்ச்சிப் பெற வேண்டும். வரும்கல்வி ஆண்டில், மாணவர் சேர்க்கைக்கு, சென்னை உள்ளிட்ட முக்கிய நகரங்களில், ஜூன் 1, 2ல், எழுத்துத் தேர்வு மற்றும் நுழைவுத் தேர்வு நடக்கிறது. இதில், ஆங்கிலம், கணிதம், பொது அறிவு ஆகிய பாடங்களில், கேள்விகள் இடம் பெறும். தேர்வு எழுத, 2018 ஜன., 1ல், 11 வயது, ஆறு மாதங்கள் நிரம்பியும், 13 வயதை அடையாதவராகவும் இருக்க வேண்டும்.விண்ணப்பங்களை பெற, 550 ரூபாய்க்கு, எஸ்.பி.ஐ., கிளையில், டி.டி., எடுத்து, 'கமாண்டன்ட், ராஷ்ட்ரீய இந்திய ராணுவ கல்லுாரி, டேராடூன், உத்தரகண்ட், அஞ்சல் எண் - 248 003' என்ற, முகவரிக்கு, விரைவு அஞ்சல் அனுப்பி பெற வேண்டும்.

'பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, வரும், 31க்குள், தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்' என, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது. இது குறித்த விபரங்களை, டி.என்.பி.எஸ்.சி., இணையதளத்திலும் தெரிந்துக் கொள்ளலாம்.