Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Monday, 6 March 2017

பள்ளிக்கல்வித்துறை செயலாளர் சபீதா மாற்றம் !!!

உயர்கல்வித்துறை செயலாளர் சபீதா  சிமெண்ட் கழக எம்.டி.யாக மாற்றம்

 
உயர்கல்வித்துறை முதன்மைச் செயலராக சுனில் பாலிவல் நியமனம்

சிறுபான்மை நலத்துறை செயலாளராக வள்ளலார் நியமனம்

கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சங்க மேலாண்மை இயக்குநராக காமராஜ் நியமனம்

போக்குவரத்துத்துறை ஆணையராக தயானந்த கட்டாரியா நியமனம்

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியராக பி.பொன்னையா நியமனம்

சென்னை மாவட்ட ஆட்சியராக அன்புச்செல்வன் நியமனம்

சென்னை ஆட்சியராக இருந்த மகேஸ்வரி , வணிக வரி இணை ஆணையராக நியமனம்

2016-17ஆம் ஆண்டிற்கு உயர் தொடக்கநிலை வரலாறு கற்பிக்கும் ஆசிரியர்களுக்கு "வரைப்படங்கள் வழியாக வரலாற்றை அறிந்துகொள்ளல்" என்ற தலைப்பில் 13.03.2017 அன்று வட்டார மைய அளவில் நடைபெறவுள்ளது!!

மார்ச் 10-தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.

நாகை மாவட்டத்துக்கு மார்ச் 10-தேதி உள்ளூர் விடுமுறை என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். நாகை மாவட்டத்தில் 
நாகூர் தர்காவில் கந்தூரி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சந்தன கூடு விழாவை முன்னிட்டு இந்த விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திண்டுக்கல் பொதுக்கூட்டம் (19.3.2017).

கணினி ஆசிரியர்கள் வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும் திண்டுக்கல் பொதுக்கூட்டம் (19.3.2017)...

அன்பார்ந்த!..

பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் மற்றும் பி.எட் பயிலும் இருபால் மாணவர்களுக்கும் ஓர் அன்பான அழைப்பிதல், வருகின்ற

நாள்:19.3.2017
காலை :9மணி.
இடம் :VGS மஹால்
(திண்டுக்கல் பேருந்து நிலையம்   அருகில்)
பொதுக் கூட்டம் நடைபெற உள்ளது.
[மதிய உணவு வழங்கப்படும்]

குறிப்பு :நேரில் வரும் அனைவருக்கும் உறுப்பினர் சேர்க்கை இலவசம்.
இக்கூட்டத்தில் பி.எட் கணினி ஆசிரியர்கள் அனைவரும் கலந்து கொண்டு
கணினி ஆசிரியர்கள் வேலைவாய்ப்பை உருவாக்கி உங்கள் வாழ்க்கை தரத்தையும் எதிர்கால மாணவர்களின் கல்வித் தரத்தையும் உயர்திட அனைவரும் இக்கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கிறோம்.

இலவச உறுப்பினர் சேர்க்கைக்காண முக்கிய குறிப்பு:
1.இரண்டு புகைப்படம்,
2.பி.எட் சான்றிதழ் நகல்,
3.வேலைவாய்ப்பு அட்டை நகல்,
இவற்றுடன் தங்களின்
சுயவிபரத்தை இணைத்து கொண்டுவரவும்).

பெண் கணினி ஆசிரியர்களுக்கு அன்பான வேண்டுகோள்:
(தங்கள் பெற்றோர் ,கணவருடன் பாதுகாப்பாக வாருங்கள்.)

முக்கிய குறிப்பு:
[விடியல் பயணம் திண்டுக்கல் மாவட்டத்தோடு
இனிதே நிறைவுபெற உ்ளளது].

உறுப்பினர்கள் சேர்க்கை இலவசமாக பெற :
கீழ்கண்ட மாவட்டங்கள் திண்டுக்கல் மாவட்டத்தில் நடைபெறும்  பொதுக் கூட்டத்தில்(திண்டுக்கல் கரூர் நாமக்கல் திருப்பூர் கோவை மதுரை தேனி இராமநாதபுரம் விருதுநகர் சிவகங்கை தூத்துக்குடி திருநெல்வேலி கன்னியாகுமரி தஞ்சை திரூவாரூர்  திருச்சி புதுக்கோட்டை)
மாவட்ட கனிணி ஆசிரியர்கள்

திண்டுக்கல் பொதுக் கூட்டத்தில்  தங்கள் அனைவரும் கலந்துகொண்டு பயன்பெறுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்

வெ.குமரேசன்,
மாநிலப் பொதுச்செயலாளர்,
9626545446,9789180422,9894372125.
தமிழ்நாடு பி.எட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம்655/2014.

TET தேர்ச்சி பெறவேண்டும் என்ற உத்தரவிலிருந்து அரசு பள்ளி ஆசிரியர்களுக்கும் விலக்களிக்க வேண்டும்* _தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியர் கூட்டமைப்பு கோரிக்கை!!

DGE - அரசு தேர்வுகள் இயக்ககம் - மேல்நிலை / இடைநிலை பொதுத்தேர்வு எழுதும் உடல்நிலை பாதிக்கப்பட்ட மாணவர்கள் தாங்கள் கொண்டுவந்த அத்தியாவசிய உணவுகளை சாப்பிடலாம்..

தமிழக அரசின் 'வாட்' வரி திடீர் உயர்வு!!!

பெட்ரோல், டீசலுக்கான, 'வாட்' வரியை, தமிழக அரசு திடீரென உயர்த்தி உள்ளதால், அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் வாய்ப்பு உருவாகியுள்ளது.
பெட்ரோல் மீதான வாட் வரியை, 27 சதவீதத் தில் இருந்து, 34 
சதவீதமாகவும், டீசல் மீதான வாட் வரியை, 21.43 சதவீதத்தில் இருந்து, 24 சதவீதமாகவும் உயர்த்தி, தமிழக அரசு திடீரென உத்தரவிட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் பெட்ரோல் விலை லிட்டருக்கு, 3.78 ரூபாயும், டீசல் விலை லிட்ட ருக்கு, 1.76 ரூபாயும் உயர்ந்துள்ளது. தமிழகத்தில், அரசியல் ஸ்திரமற்ற ஆட்சி நடக்கும் நிலையில், மக்களை பாதிக்கும் இந்த விலைவாசி உயர்வு, ஏழை, நடுத்தர மக்களை கவலை யில் ஆழ்த்தி உள்ளது. தமிழக அரசின் வரி உயர் வுக்கு, பல தரப்பிலும் கண்டனங்கள் கிளம்பியுள்ளன.

இதுகுறித்து, தமிழ்நாடு உணவு பொருள் வியாபாரி கள் சங்க பொதுச் செயலர், வேல்சங்கர் கூறியதாவது:

வாட் வரியை உயர்த்தும் முன், அனைத்து மாநில கவுன்சிலை கூட்டி, மத்திய அரசு முடிவெடுக்கும். ஆனால், எந்த மாநிலமும், மத்திய அரசு நிர்ண யித்த அதிகபட்ச வரிக்கு அதிகமாக, வரியை உயர்த்த முடியாது.

இதுகுறித்து, அரசு தான் விளக்க வேண்டும். இந்த வரி உயர்வால், அத்தியா வசிய பொருட்களின் விலை கடுமையாகஉயரும்.பருப்பு, அரிசி போன்ற வற்றுக்கு,ஆந்திரா, கர்நாடகா, மகாராஷ்டிரா போன்ற மாநிலங் களை தமிழகம் நம்பி உள்ளது. அங்கிருந்து பொருட் களை கொண்டு வருவதற் கான, லாரி வாடகை அதிகரிக்கும் போது அவற்றின் சில்லரை விலையும் உயரும். இவ்வாறு அவர் கூறினார்.

அரிசி, பருப்பு விலை உயர்வு:

வாட் வரி உயர் வால், சரக்கு போக்குவரத்துக்கான லாரி வாடகை பெருமளவு அதிகரிக்கும். அதனால், அரிசி, பருப்பு, எண்ணெய், பழங்கள், காய்கறி கள், பால் பொருட்கள், மீன், கட்டுமான பொருட் கள், ஹோட்டல் உணவு பொருட்கள் போன்ற வற்றின் விலை உயரும். வாடகை ஆட்டோ, கார்கள் மற்றும் பள்ளி வாகன கட்டணங்களும் உயரும் அபாயம் உள்ளது.

State Bank of India - Revision of Service Charge from 01/04/2017

சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளர் பணி விண்ணப்பம் வரவேற்பு

சிவகங்கை மாவட்ட வேளாண்மைத்துறையில் அலுவலக உதவியாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கப்படுகின்றன.

கலெக்டர் மலர்விழி கூறியதாவது: மாவட்ட வேளாண்மைத்துறையில் 4 அலுவலக உதவியாளர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இப்பணிக்கு 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 2016 ஜன.,1ல் குறைந்தபட்சம் 18 வயது இருக்க வேண்டும்.

அதிகபட்சம் பொதுபிரிவினர் 30 வயதிற்குள், பிற்பட்டோர், மிகவும் பிட்டோர் 32 வயதிற்குள், ஆதிதிராவிடர், பழங்குடியினர் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கு வயது வரம்பில் 10 ஆண்டு சலுகை; முன்னாள் ராணுவத்தினருக்கு வயது வரம்பு இல்லை. அனைத்து பிரிவைச் சேர்ந்த ஆதரவற்ற விதவை 35 வயதிற்குள் இருக்க வேண்டும்; குறைந்தபட்ச கல்வித் தகுதியை விட கூடுதலாக படித்தோருக்கு வயது வரம்பு இல்லை.

முன்னுரிமையுள்ள பொதுப்பிரிவினர் (பொது), ஆதிதிராவிடர் அருந்ததியினர், மிகவும் பிற்பட்டோர் (பொது), பிற்பட்டோர் (பொது) ஆகிய 4 பிரிவுகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. அடிப்படை ஊதியம் 4,800 ரூபாய், தர ஊதியம் 1,300 ரூபாய். விண்ணப்பத்தில் பெயர், கல்வித்தகுதி, ஜாதி, வீட்டு முகவரி, கைபேசி எண் ஆகியவற்றை குறிப்பிட்டு சமீபத்திய புகைப்படத்துடன் சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பத்தை வேளாண்மை இணை இயக்குனர், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், சிவகங்கை-630561 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும். தகுதியுள்ளோர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர், என்றார்.

TNTET - 2017:ஆசிரியர் தகுதித் தேர்வு: இன்று முதல் விண்ணப்பம் விநியோகம்

தமிழகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெறவுள்ள ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான விண்ணப்பங்கள், திங்கள்கிழமை (மார்ச் 6) முதல் வழங்கப்படவுள்ளனதமிழக அரசின் வழிகாட்டுதலின்படி, 
ஆசிரியர் தகுதித் தேர்வு தாள் 1 மற்றும் 2 ஆகியவை, ஏப்ரல் மாதம் 29, 30 ஆகிய நாள்களில் நடைபெறவுள்ளது.
இதற்கான விண்ணப்பங்கள்,  ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ள மையங்களில் திங்கள்கிழமை (மார்ச்6) முதல் மார்ச் 22-ஆம் தேதி வரை காலை 9 முதல் மாலை 5 வரை விநியோகிக்கப்படும்.ஒரு விண்ணப்பத்தின் விலை ரூ.50 ஆகும். ஒரு நபருக்கு ஒரு விண்ணப்பம் மட்டுமே வழங்கப்படும்.இரண்டு தேர்வுகளையும் எழுத விரும்புவோர் தனித்தனியான விண்ணப்பிக்க வேண்டும் என ஆசிரியர் தேர்வு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

தொற்று நோய்களுக்கான சிறப்பு தற்செயல் விடுப்பு நாட்கள் நீடிப்பு சார்பான அரசாணை


ஏப்ரல் 2-இல் போலியோ சொட்டு மருந்து முகாம்

தமிழகம் முழுவதும் முதற்கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 2-ஆம் தேதி நடைபெற உள்ளது.இதன் மூலம் தமிழகத்தில் 70 லட்சத்துக்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் போலியோ சொட்டு மருந்து முகாம் பொதுவாக ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடைபெறும்.ஆனால் இந்த ஆண்டு தட்டம்மை ரூபெல்லா தடுப்பூசி முதன்முறையாக அறிமுகப்படுத்தப்பட்டதால், போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் மாதம் நடைபெறுகிறது.5 வயதுக்குட்பட்டவர்கள்: தமிழகத்தில் உள்ள 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு முதல் தவணையாக ஏப்ரல் 2-ஆம் தேதி போலியோ சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது.43 ஆயிரம் மையங்கள்: ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், அங்கன்வாடி மையங்கள், சத்துணவு மையங்கள், பள்ளிகள் என முக்கியமான இடங்களில் 43 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மையங்கள் அமைக்கப்படும். மேலும் முக்கிய பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், விமான நிலையங்களில் சுமார் 1,500 நகரும் மையங்கள் நிறுவப்படும்.தொலை தூரம், எளிதில் செல்ல முடியாத பகுதிகளில் 1,000 நடமாடும் குழுக்கள் மூலமாக சொட்டு மருந்து வழங்கப்படும். இந்தப் பணிகளில் சுமார் 2 லட்சத்துக்கும் மேற்பட்ட சுகாதாரப் பணியாளர்கள், அங்கன்வாடிப் பணியாளர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்கள் ஈடுபட உள்ளனர்.

இது தொடர்பாக பொது சுகாதாரத் துறை இயக்குநர் டாக்டர் குழந்தைசாமி கூறியது:தமிழகம் போலியோ இல்லாத நிலையை அடைந்துள்ளது. இந்த நிலையை தக்க வைத்துக் கொள்ளவும், குழந்தைகளை போலியோ வைரஸ் பாதிப்பிலிருந்து பாதுகாப்பது மிகவும் அவசியமாகும். எனவே அனைத்து தாய்மார்களும் இந்த முகாமைபயன்படுத்திக் கொள்ள வேண்டும்.இரண்டாம் கட்ட போலியோ சொட்டு மருந்து முகாம் ஏப்ரல் 30-ஆம் தேதி நடைபெறும் என்றார்.