Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Friday, 17 March 2017

தரம் உயர்த்தப்பட்ட 19-உயர்நிலைப் பள்ளிகளுக்கு பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப மற்றும் ஈர்த்து கொள்ளுவது சார்பான அறிவுரைகள்..

EMIS Latest News - Check Students AADHAAR Details ...

EMIS news:தற்போது EMIS online ல் ஆதார் எண் validation செய்யப்பட்டுள்ளது.

இதன் காரணமாக ஒரே ஆதார் எண்ணை இரண்டு மாணவர்களுக்கு பதிவு செய்திருந்தாலோ அல்லது ஆதார் எண்ணை தவறாக பதிவு செய்திருந்தாலோ அந்த மாணவர்களுக்கு எல்லாம் ஆதார் எண் delete செய்யப்பட்டுள்ளது.
அதனால் அனைத்து மாணவர்களின் ஆதார் பதிவை மீண்டும் ஒருமுறை EMIS இணைய தளத்தை open செய்து ஆதார் எண் உள்ளதா என பார்க்கவும்.அதில் எந்தெந்த மாணவர்களுக்கு ஆதார் எண் நீக்கம் செய்யப்பட்டுள்ளது என்பதை கண்டறிந்து அவர்களுடைய original ஆதார் அட்டையை எடுத்து வரச்செய்து சரிபார்த்து மீண்டும் பதிவேற்றம் செய்ய அனைத்து தலைமை ஆசிரியர்களும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

விரைவில் உங்கள் கனவு இல்லத்தை வாங்க 90 சதவீத பிஎப் பணத்தை முன்பே திரும்பப் பெறலாம்

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து 90 சதவீத சேமிப்பை வீடு வாங்குவதற்காகத் திரும்பப் பெறக்கூடிய திட்டத்தை 4 கோடி சந்தாதார்கள் பெற்றுப் பயன்பெறலாம் என்று பாராளுமன்றத்தில் புதன் கிழமை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி அமைப்பின் கீழ் வரும் வருங்கால வைப்பு நிதி கணக்கை பயன்படுத்தி வீட்டுக் கடன் மீதான ஈஎம்ஐ எனப்படும் மாதாந்திர தவணைகளையும் செலுத்தலாம்.
ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி புதிய திட்ட விதியின்படி ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி சந்தாதார்கள் கூட்டுறவுச் சங்கங்களில்10 உறுப்பினர்கள் கொண்ட கூட்டு அமைப்பாக இணைந்து இந்த அம்சங்களைப் பெறலாம் என்றும் கூறப்படுகின்றது.

தொழிலாளர் நலத்துறை அமைச்சர்
இதற்காக அரசு ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி திட்ட விதி 1952-இல் 68பிடி என்ற புதிய பத்தியைச் சேர்க்க வேண்டும் என்று தொழிலாளர் நலத்துறை அமைச்சர் பாந்த்ரூ தத்தாத்ரேயா மக்களவையில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவித்துள்ளார்.

கூட்டுறவுச் சங்கங்கள்
மேலும் இது குறித்துப் பதில் அளித்துள்ள அமைச்சர் கூட்டுறவுச் சங்கங்கள் மூலமாக 10 பேர் கொண்ட உறுப்பினர்களாக வரும் போது வீடு வாங்க அல்லது ஏற்கனவே உள்ள வீட்டை புதுப்பிக்க 90 சதவீதம் வரை வருங்கால வைப்பு நிதி கணக்கில் இருந்து பணமாகப் பெற முடியும்.

தவனை மற்றும் வட்டி
இந்தப் புதிய திட்டத்தின் மூலம் மாதாந்திர தவணையைத் திருப்பிச் செலுத்த மற்றும் அதன் வட்டியைச் செலுத்தவும் பிஎப் கணக்கை பயன்படுத்தலாம் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிஎப் கணக்கில் பங்களிப்புகள்
2016 மார்ச் 31-ம் தேதி கணக்கின் படி ஊழியர்கள் வருங்கால வைப்பு நிதி கணக்கு சந்தாதார்களாக 17.14 கோடி பேர் உள்ளதாக அந்த அறிக்கையில் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
2015-2016 நிதி ஆண்டில் மட்டும் 3.76 கோடி பேர் பிஎப் கணக்கில் பங்களிப்புகள் வந்துள்ளதாகவும் பாந்த்ரூ தெரிவித்தார்.

 நிபந்தனைகள் உண்டு
பிஎப் கணக்கில் இருந்து இந்தத் திட்டம் மூலமாகப் பணத்தைத் திரும்பப் பெற பிஎப் சந்தாதார்கள் பரிந்துரைக்கப்படும் நிபந்தனைகளைப் பூர்த்திச் செய்யப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பிஎஸ்என்எல் அதிரடி! ஜியோவிற்கு பதிலடி.!

இந்திய அரசு நடத்தும் பிஎஸ்என்எல் நிறுவனமானது ரிலையன்ஸ் ஜியோவின் ப்ரைம் சேவைகளை எதிர்கொள்ளும் நோக்கத்தில் அதன் புதிய திட்டமொன்றை அறிமுகம் செய்துள்ளது.
ரிலையன்ஸ் ஜியோ நிறுவனம் ப்ரைம் ஆண்டு சந்தாவிற்கு ரூ.99/- மற்றும் மாதாந்திர சேவைக்கட்டணமாக ரூ.303/- என்றும் அதன் கட்டண சேவையை வகுத்துள்ள நிலையில் ஏற்கனவே ஏர்டெல் நிறுவனம் போட்டி முனைப்பு கட்டண திட்டங்களை அறிமுகம செய்த வண்ணம் உள்ளது. இப்போது யாரும் எதிர்பாராத வண்ணம் பிஎஸ்என்எல் நிறுவனம் அதன் அதிரடி சலுகையை அறிவித்துள்ளது.

ரூ.99/-
தற்போது அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்களின் விவரங்களை பொறுத்தம்மட்டில் நிறுவனத்தின் ரூ.99/- திட்டமானது வரம்பற்ற ஆன் நெட் அழைப்புகள் மற்றும் 28 நாட்களுக்கு 500எம்பி தரவு ஆகியவைகளை வழங்குகிறது.
  
ரூ.339/-
முன்னர் இதே திட்டத்தின் கீழ் வரம்பற்ற ஆன் நெட் அழைப்புகள் உடன் 300எம்பி தரவு மட்டுமே வழங்கபட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மற்றும் இதேபோல நிறுவனத்தின் ரூ.339/- திட்டமும் திருத்தி அமைக்கப்பட்டுள்ளது.
  
தினசரி 2ஜிபி தரவு
முன்பு 28 நாட்களுக்கு 1ஜிபி அளவிலான தரவு உடன் எந்த நெட்வொர்க் உடன்நன வரம்பற்ற அழைப்புகளை வழங்கிய ரூ.339/- திட்டம் இப்போது, ஒரு தினசரி 2ஜிபி தரவு எல்லை பயன்பாடு தொப்பி கொண்ட 28 நாட்கள் செல்லுபடியாகும் தரவுடன் எந்த நெட்வொர்க் உடனான வரம்பற்ற அழைப்புகளை வழங்கும்.
  
25 நிமிடங்கள்
எனினும், இந்த ரூ.339/- திட்டமானது பிஎஸ்என்எல்பிணையத்தில் பயனர்களுக்கு மட்டுமே, நாள் ஒன்றிற்கு 25 நிமிடங்கள் என்ற எல்லைக்கோடு கொண்டு வரம்பற்ற அழைப்புகளை செய்ய அனுமதிக்ககும். ஒவ்வொரு நாளின் 25 நிமிடங்களுக்கு பிறகு, ஒவ்வொரு பயனர் நிமிடத்திற்கு 25 பைசா வசூலிக்கப்படும் என்று அறிக்கை கூறியுள்ளதும் இங்கு குறிப்பிடத்தக்கது.
  
1ஜிபி
மேலும் வெளிப்படையாக ஜியோவுடன் போட்டிபோடும் முனைப்பில் மார்ச் மாத இறுதிக்குள் திட்டத்தை பெற்றால் ஒரு ஆண்டு நாள் ஒன்றுக்கு 1ஜிபி என்ற எல்லைகொண்ட தரவும், வரம்பற்ற அழைப்பையும் அனுபவிக்கலாம் என்றும் பிஎஸ்என்எல் அறிவித்துள்ளது.
  
ரூ.345/-
ரிலையன்ஸ் ஜியோவை எதிர்கொள்ளும் ஒரு முயற்சியில், ஏர்டெல் அதன் வரம்பற்ற அழைப்புகள் சேர்ந்த நாள் ஒன்றுக்கு 1 ஜிபி அளவிலான 4ஜி தரவு வழங்கும் ரூ.345/- என்ற புதிய சீரமைக்கப்பட்ட திட்டத்தை கொண்டு வந்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது. அந்த ஏர்டெல் திட்டத்தில் உள்ளூர் மற்றும் வெளியூர் குரல் அழைப்புகளுடன் இரவில் 500எம்பி மற்றும் பகலில் 500 எம்பி என மொத்தம் 1ஜிபி டேட்டாவை வழங்குகிறது.

பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை .

தமிழகத்தில் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை 2017-2018-ஆம் கல்வியாண்டில் மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும் என நிதிநிலை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

இது குறித்து தமிழக நிதிநிலை அறிக்கையில் கூறியிருப்பதாவது: புவியியல் தகவல் முறைமையின்படி தயாரிக்கப்பட்ட பள்ளி இருப்பிட வரைபடச் செயலி உதவியுடன் கல்வி வசதி இல்லாத பகுதிகள் கண்டறியப்பட்டு கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் இதுவரை 226 புதிய ஆரம்ப பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. புதிய பள்ளிகள் தொடங்குவதற்கு சாத்தியமற்ற பகுதிகளில் வசிப்பிடங்களுக்கு அருகே உள்ள பள்ளிகளில் குழந்தைகளின் சேர்க்கையை உறுதி செய்யும் வகையில் போக்குவரத்து உதவிகள் வழங்கப்படுகின்றன.
தமிழக அரசால் கண்டறியப்பட்டுள்ள பள்ளிக்குச் செல்லாத 36,930 குழந்தைகளை வரும் கல்வியாண்டில் (2017-2018) மீண்டும் சேர்க்க நடவடிக்கை எடுக்கப்படும்.
250 பள்ளிகள் தரம் உயர்த்தப்படும்: கடந்த 2011-ஆம் ஆண்டு முதல் 113 தொடக்கப் பள்ளிகள் நடுநிலைப் பள்ளிகளாகவும், 829 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 402 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப் பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. இதைத் தொடர்ந்து 2017-2018-ஆம் கல்வியாண்டில் 150 நடுநிலைப் பள்ளிகள் உயர்நிலைப் பள்ளிகளாகவும், 100 உயர்நிலைப் பள்ளிகள் மேல்நிலைப்பள்ளிகளாகவும் தரம் உயர்த்தப்படும்.

பள்ளிகளில் வகுப்பறைகள், அறிவியல் ஆய்வுக்கூடங்கள், குடிநீர் வசதி, சாய்வுதளங்கள், மாணவ-மாணவியருக்கான தனித்தனி கழிப்பறைகள் உள்ளிட்ட தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2016-2017-ஆம் ஆண்டில் ரூ.440.98 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. பள்ளிகளில் சுகாதாரத்தை பேணுவதற்காக உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பள்ளிகளுக்கு ரூ.57.63 கோடி வழங்கப்பட்டுள்ளது. வரும் கல்வியாண்டில் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் ரு.352 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தனியார் பள்ளிகளில் 3.28 லட்சம்

குழந்தைகள் சேர்ப்பு: குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ் சமுதாயத்தில் பின்தங்கிய, பொருளாதாரத்தில் நலிவடைந்த பிரிவுகளைச் சேர்ந்த குழந்தைகள் தனியார் பள்ளிகளில் சேர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டம் தொடங்கப்பட்டதில் இருந்து இதுவரை 3 லட்சத்து 28,910 குழந்தைகள் பயனடைந்துள்ளனர்.

அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகளில் 10, 11, பிளஸ் 2 வகுப்பு மாணவிகளின் பள்ளி இடைநிற்றலைக் குறைக்கும் வகையில் சிறப்பு ஊக்கத் தொகையாக ஒவ்வொருவருக்கும் ரூ.5,000 வழங்க ரூ.314 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மாணவர்களின் பள்ளிக் கல்விக்காக 2017-2018-ஆம் நிதியாண்டில் ரூ.26,932 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.

மார்ச் 24 வரை தமிழக சட்டசபை தொடர்!!!

தமிழக பட்ஜெட் தாக்கல் செய்த பின்னர் சபாநாயகர் தனபால் தலைமையில் சட்டசபை அலுவல் ஆய்வுக்குழு கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில், பட்ஜெட் கூட்டத்தொடரை வரும் திங்கள் (மார்ச் 20 ) முதல் மார்ச் 24 வரை 5 நாட்கள் நடத்துவது 
எனவும், கடைசி நாளான மார்ச் 24 அன்று நிதியமைச்சரின் பதிலுரை இடம்பெறும் என முடிவு செய்யப்பட்டுள்ளது

விடைத்தாள் திருத்தும் பணி - ஏப்., 12க்குள் முடிக்க உத்தரவு!!!

டெட்’ தேர்வால், பத்தாம் வகுப்பு விடைத்தாள்கள் மதிப்பிடும் பணிகளை, ஏப்ரல், 12ம் தேதிக்குள் முடிக்க, அரசு தேர்வுகள் இயக்ககம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.

கோவை கல்வி மாவட்டத்தில், பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வை, 421 பள்ளிகளில் இருந்து,34 ஆயிரத்து 505 மாணவர்கள், 101 தேர்வு மையங்களில், எழுதுகின்றனர்.

இதேபோல், பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில், 98 பள்ளிகளில் இருந்து, 8 ஆயிரம் மாணவர்கள், 38 மையங்களில், பொதுத்தேர்வு எழுதுகின்றனர். தனித்தேர்வர்களுக்கு பிரத்யேகமாக, ஐந்து தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

பத்தாம் வகுப்பு பொருத்தவரை, தமிழ் முதல் தாள், இரண்டாம் தாள், ஆங்கிலம் முதல் தாள் தேர்வுகள் முடிவடைந்தன. ஆங்கிலம் இரண்டாம் தாள் தேர்வு, இன்று (மார்ச் 16ம் தேதி) நடக்கிறது. வரும் 30ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிவடைகின்றன.

பிளஸ் 2 மாணவர்களுக்கும், வரும் 31ம் தேதியுடன், அனைத்து தேர்வுகளும் முடிவடைகின்றன. ஆசிரியர் தகுதித்தேர்வு (டெட்), ஏப்ரல் 29, 30 ஆகிய இரு தேதிகளில் நடப்பதால், பொதுத்தேர்வு மதிப்பீட்டு பணிகளை முன்கூட்டியே முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

இதற்காக தற்போது, தேர்வு மையங்களில் இருந்து, நோடல் மையத்திற்கு வரும் விடைத்தாள்களை, தனித்தனியாக பிரித்து அடுக்கும் பணிகள் நடக்கின்றன. முதன்மை தேர்வாளர்கள், கூர்ந்தாய்வாளர்கள் கொண்ட குழு மேற்பார்வையில், வரும் 31ல், விடைத்தாள் திருத்தும் ஆசிரியர்கள் பட்டியல் தயாரிக்க உத்தர விடப்பட்டுள்ளது.

ஏப்., 1 - 12ம் தேதிக்குள், அனைத்து பாடங்களுக்கான விடைத்தாள் திருத்தி முடிக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

இதற்காக, கோவை கல்வி மாவட்டத்தில், அரசு உதவி பெறும் மணி மேல்நிலைப்பள்ளி, ஒண்டிப்புதுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளியும், பொள்ளாச்சியில், நகராட்சி மேல் நிலைப்பள்ளியும், விடைத்தாள் திருத்தும் மையங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

இதுகுறித்து, கல்வித்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ’பத்தாம் வகுப்புக்கான விடைத்தாள்களை, எந்த மாவட்டத்திற்கு, அனுப்ப வேண்டுமென, வரும் 28ம் தேதி தான், அரசு தேர்வுத்துறை சார்பில் அறிவிக்கப்படும்.

கோவை மாவட்டத்திற்கு வரும், விடைத்தாள்களின் எண்ணிக்கையை கொண்டு, மதிப்பிடல் பணிக்கு ஆசிரியர்கள் நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

’இதேபோல், பிளஸ் 2 தேர்வு விடைத்தாள்கள் திருத்த, கோவை கல்வி மாவட்டத்தில், ஆர்.எஸ்.புரம், ஸ்ரீ நேருமகா வித்யாலயா பள்ளி, சுங்கம், நிர்மலா மேல்நிலைப்பள்ளி மற்றும் பொள்ளாச்சியில், பி.கே.டி., மெட்ரிக் பள்ளியும், மையமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன.

’ஏப்., 3ம் தேதி முதல், பிளஸ் 2 விடைத்தாள் திருத்த, அறிவிப்பு வரலாம் என எதிர்பார்க்கப்படுகிறது’ என்றார்

பள்ளி கல்வித்துறை செயலாளரிடம் தலைமையாசிரியர் வலியுறுத்தல்

தமிழகத்தில் மேல்நிலைப்பள்ளி நிர்வாக கட்டமைப்பை சீரமைக்க வேண்டும் என்ற கருணாகரன் கமிட்டி பரிந்துரையை செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்,' என கல்வித்துறை செயலாளர் உதயசந்திரனிடம் அரசு பள்ளி தலைமையாசிரியர்கள் வலியுறுத்தினர்.

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி தலைமையாசிரியர் கழகம் சார்பில் மாநிலத் தலைவர் பொன்முடி, பொருளாளர் சண்முகநாதன், கவுரவ ஆலோசகர் ராதாகிருஷ்ணன், மதுரை மாவட்ட 
தலைவர் அனந்தராமன் ஆகியோர் சென்னையில் உதயசந்திரனை சந்தித்தனர்.அப்போது, தமிழகத்தில் மேல்நிலை பள்ளிக்கான தனி இயக்குனரகம், டி.இ.ஓ.,க்கள் பதவி உயர்வு, மேல்நிலைப் பள்ளி நிர்வாகக் கட்டமைப்பு சீரமைக்கப்பட வேண்டும் உட்பட பல்வேறு பரிந்துரைகளை ஓய்வு பெற்ற கல்வி இயக்குனர் கருணாகரன் கமிட்டி அரசுக்கு அளித்துள்ளது.
இதை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். அடிப்படை பணியாளர்கள் சம்பளம் உயர்வு, பொதுத் தேர்வு விடைத்
தாளின் முகப்பு தாள்களை தைக்கும் பணிக்காக ஒரு விடைத்தாளுக்கான ஊக்க ஊதியம் ரூ.2.50ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

10ம் வகுப்பு ஆங்கில தேர்வில்அச்சு பிழையால் குழப்பம்

பத்தாம் வகுப்பு ஆங்கில தேர்வில், மொழி பெயர்ப்பு பகுதியும், உரையாடலும் கடினமாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில், நேற்று ஆங்கிலம் இரண்டாம் தாளுக்கு தேர்வு நடந்தது. பெரும்பாலான வினாக்கள் எளிமையாக இருந்ததாக, மாணவர்கள் தெரிவித்தனர்.
வேடசந்துார் செல்லக்குட்டியூர் அரசு உயர்நிலைப் பள்ளி ஆங்கில ஆசிரியர், சுப்ரமணி கூறுகையில், ''நன்றாக படிக்கும் மாணவர்கள், 'சென்டம்' எடுக்கலாம். மற்ற மாணவர்கள், எளிதாக தேர்ச்சி பெற முடியும். உரையாடல் பகுதியில், தொடர்ச்சியாக இரு வார்த்தைகள் கேட்கப்பட்டதால், மாணவர்கள் தடுமாறி உள்ளனர். 
ஐந்து மதிப்பெண்களுக்கான படத்திற்கு விளக்கம் எழுதும் பகுதி, எளிமையாக இருந்துள்ளது,'' என்றார்.மாணவர்கள் கூறுகையில், 'மொழி பெயர்ப்பு பகுதியில், 'சுற்றுப்புறத்தை துாய்மையாக வைத்திருங்கள்' என்ற வார்த்தையில், 
தவறான அச்சுப்பதிப்பால் கூடுதலாக, இரு எழுத்துக்கள் இடம் பெற்றதால் குழப்பம் ஏற்பட்டது' என்றனர்.

குரூப் - 4 தேர்வர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு

குரூப் - 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 20 முதல், ஏப்., 13 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.

குரூப் - 4ல் அடங்கிய, இளநிலை உதவியாளர் பதவிக்கு, 2016 நவ., 6ல், எழுத்துத் தேர்வு நடந்தது. தேர்வு முடிவுகள், பிப்., 21ல் வெளியாகின. தேர்ச்சி பெற்றவர்களுக்கு, வரும், 20 முதல், ஏப்., 13 வரை, சான்றிதழ் சரிபார்ப்பு நடக்கிறது.
சான்றிதழ் சரிபார்ப்புக்கு அழைக்கப்படும் அனைவருக்கும், பணி நியமனம் வழங்கப்படும் என்பதை, உறுதி கூற இயலாது என, அரசு பணியாளர் தேர்வாணையமான, டி.என்.பி.எஸ்.சி., அறிவித்துள்ளது.