Subscribe Our YouTube channel

எங்கள் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள எங்களுடைய அப்ப்ளிகேஷனை கீழேயே உள்ள இமேஜை கிளிக் செய்து google playstore இல் டவுன்லோட் செய்து கொள்ளுங்கள் நன்றி...!!!

Sunday, 19 March 2017

டான்செட்' தேர்வு குவிந்தது விண்ணப்பம்

அண்ணா பல்கலைக்கு உட்பட்ட கல்லுாரிகளில், எம்.பி.ஏ., படிக்க, கடந்த ஆண்டை விட, அதிக மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர்.
அண்ணா பல்கலை இணைப்பு கல்லுாரிகளில், எம்.பி.ஏ., - எம்.சி.ஏ., - எம்.இ., - எம்.டெக்., போன்ற படிப்புகளில் சேர, 'டான்செட்' என்ற, தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.வரும் கல்வி ஆண்டில், முதுநிலை படிப்பில் சேர்வதற்கான டான்செட் தேர்வு, மார்ச், 25 மற்றும் 26ல் நடக்கிறது.இதற்கான விண்ணப்ப பதிவுகள், ஜன., 29 முதல், பிப்., 20 வரை நடந்தன. இதில், கடந்த ஆண்டை விட, அதிகமானோர் விண்ணப்பித்துள்ளனர்.எம்.பி.ஏ., படிப்புக்கு, 17 ஆயிரத்து, 992; எம்.சி.ஏ., 6,448; எம்.இ., - எம்.டெக்., படிக்க, 16 ஆயிரத்து, 742 பேர் என, மொத்தம், 41 ஆயிரத்து, 182 பேர் தேர்வுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டு, 39 ஆயிரத்து, 930 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர். தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை, அண்ணா பல்கலையின் டான்செட் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என, டான்செட் செயலர் பேராசிரியர், மல்லிகா தெரிவித்துள்ளார்.

ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சிடும் பணி துவக்கம்!

சென்னையில், 'ஸ்மார்ட்' ரேஷன் கார்டுகள் அச்சடிக்கும் பணி துவங்கியுள்ளதால், அடுத்த மாதம், பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது உறுதியாகி உள்ளது.
தமிழகத்தில், ஸ்மார்ட் ரேஷன் கார்டு வழங்க, ரேஷன் கார்டுதாரர்களிடம் இருந்து, 'ஆதார்' எண், மொபைல் எண் உள்ளிட்ட விபரங்கள் வாங்கப்படுகின்றன. பெரும்பாலான கார்டுதாரர்களிடம் இவற்றை வாங்கும் பணி முடிந்து விட்டதால், ஸ்மார்ட் கார்டுகள் அச்சிடும் பணி, சென்னையில் துவங்கியுள்ளது.இது குறித்து, உணவு மற்றும் கூட்டுறவுத் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:கூறியதாவது:தற்போதைய நிலவரப்படி, அனைத்து உறுப்பினர்களின் ஆதார் விபரமும் பதிவு செய்த, ரேஷன் கார்டுகளின் எண்ணிக்கை, 1.40 கோடி; தினமும், 10 லட்சம்கார்டுகள் என, ஸ்மார்ட் கார்டு அச்சிடப்படுகிறது. இந்த பணி, வரும், 28ல் முடிவடையும்.அச்சிடப்பட்ட கார்டுகள், 29, 30ம் தேதிகளில், சென்னை தவிர்த்து, அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பப்படும். அங்கிருந்து, 31ல்,சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு அனுப்பப்படும்.ஏப்., 1ல், ரேஷன் கடைகளுக்கு அருகேயுள்ள பள்ளி, சமூகநலக் கூடங்களுக்கு மக்களை வரவழைத்து, புது கார்டுகள் இலவசமாக வழங்கப்படும்.

சென்னையில் மட்டும்,ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் முடிந்ததும், ஸ்மார்ட் ரேஷன் கார்டுகள் வினியோகம் துவங்கும். இவ்வாறு அவர் கூறினார்.ஸ்மார்ட் ரேஷன் கார்டு, 'பான் கார்டு' வடிவில் இருக்கும். அதன் முதல் பக்கத்தின் மேல் பகுதியில், அரசு முத்திரையுடன், 'உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை' என, அச்சிடப்பட்டிருக்கும்.அதற்கு கீழ், குடும்ப தலைவர் பெயர், கணவர் அல்லது தந்தை பெயர், பிறந்த தேதி, புகைப்படம், தனி குறியீட்டு எண், முகவரி போன்றவை இருக்கும். பின்புறம், உறுப்பினர்கள் பெயர், ரேஷன் கடை எண், ஆண்டு மற்றும் 'கியூ.ஆர்.,' என்ற ரகசிய குறியீடு இருக்கும். கார்டின் கீழ் பகுதியில், 'இந்த கார்டை முகவரிக்காக பயன்படுத்தக் கூடாது' என, எழுதப்பட்டிருக்கும்.ரேஷன் கார்டுதாரரின் பொருளாதார நிலையை ஆய்வு செய்து, முன்னுரிமை மற்றும் முன்னுரிமை அல்லாதவை என, ரேஷன் கார்டுகள் பிரிக்கப்பட்டு உள்ளன. மொத்தமுள்ள, 1.90 கோடி கார்டுகளில், 38 சதவீதம் முன்னுரிமை கார்டுகள்; 62 சதவீதம், முன்னுரிமை அல்லாதவை.

முன்னுரிமை கார்டில், குடும்ப தலைவராக பெண் படம்; மற்ற கார்டில், ஆண் படம் இடம் பெறும். அரிசி கார்டுதாரர்களில் சிலர், முன்னுரிமை அல்லாத பிரிவில் இருந்தாலும், வழக்கம் போல், ரேஷனில் அனைத்து பொருட்களும் தரப்படும்.ஸ்மார்ட் கார்டுகள், ஐந்து வகைகளில் இருக்கும். அதன்படி, கார்டில், புகைப்படம் அருகில், 'பி.எச்.எச்., - ரைஸ்' என்றிருந்தால், அனைத்து பொருட்களும்; 'பி.எச்.எச்., - ஏ' என்றிருந்தால், 35 கிலோ அரிசி உட்பட, அனைத்து பொருட்களும் தரப்படும். என்.பி.எச்.எச்., என மட்டும் இருந்தால், அரிசி உள்ளிட்ட அனைத்து பொருட்களும் தரப்படும். 'என்.பி.எச்.எச்., - எஸ்' என்றிருந்தால், சர்க்கரை; 'என்.பி.எச்.எச்., - என்.சி.,' என்றிருந்தால், எந்த பொருட்களும் வழங்கப்படாது.

ரூ.12க்கு விபத்து காப்பீடு: தபால் துறையின் புதிய சலுகை.

தபால் துறை சார்பில், 12 ரூபாய்க்கு, இரண்டு லட்சம் ரூபாய் வரையிலான, விபத்து காப்பீடு வழங்க அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. 
தபால் அலுவலக கணக்குகளில் குறைந்த பட்சமாக, 50 ரூபாய் இருப்பு தொகை வைத்திருந்தாலே, ஏ.டி.எம்., கார்டு வழங்கப்படுகிறது. இந்த வசதி, தலைமை தபால் நிலையங்கள், துணை தபால் நிலையங்களில் துவக்கப்படும் கணக்குகள் அனைத்துக்கும்வழங்கப்படுகிறது.சேமிப்புக்கணக்கு துவங்குவோர், 12 ரூபாயை கூடுதலாக செலுத்தினால், இரண்டு லட்சம் ரூபாய்க்கான விபத்து காப்பீடு பாலிசியும் கிடைக்கிறது.தபால் நிலையங்களில்வழங்கப்படும் ஏ.டி.எம்., கார்டுகளை, அனைத்து வங்கி, ஏ.டி.எம்.,களிலும், சேவை வரி இல்லாமல் உபயோகப்படுத்திக்கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு, அருகில் உள்ள தபால் நிலையங்களை அணுகலாம்.

மத்திய அரசின் ரூ.2,750 கோடி போச்சு:பள்ளி கல்வித்துறையில் பரிதாபம்

பள்ளிக் கல்வி வளர்ச்சிக்கு பயன்படும், 2,750 கோடி நிதியை, மத்திய அரசிடம் பெறாமல், தமிழக அரசு இழந்துள்ளது. கட்டாய கல்வி உரிமை சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில், இலவசமாக மாணவர்களை சேர்க்கவும், மத்திய அரசு நிதி வழங்குகிறது.
இதற்காக,ஆண்டுதோறும், பல கட்டங்களாக நிதி ஒதுக்கப்படும். அதில், நான்கு ஆண்டுகளில் மட்டும், தமிழகத்துக்கு வந்து சேர வேண்டிய, 2,750 கோடி ரூபாயை, தமிழக அரசு இழந்துள்ளது.இதுகுறித்து, பட்ஜெட் அறிக்கையில் வெளிப்படையாக அறிவிக்கப்பட்டுள்ளது.அனைவருக்கும் கல்வி இயக்ககத்தில், 1,476 கோடி ரூபாய்,அனைவருக்கும் இடைநிலை கல்வி இயக்ககத்தில், 1,266 கோடி ரூபாய் மத்திய அரசு வழங்கவில்லை. ஆனால், இதற்கான நிதியை, தமிழக அரசே ஒதுக்கீடு செய்துள்ளது என, கூறப்பட்டுள்ளது.

இதுகுறித்து, கல்வித்துறை வட்டாரத்தில் கிடைத்த தகவல்கள்:எந்த ஒரு திட்டத்திலும், தமிழக பள்ளிக் கல்வித்துறை முறையாக பணிகளை மேற்கொண்டு, உரிய காலத்தில் முடிப்பது இல்லை. மத்திய அரசு தெரிவிக்கும்விதிகளின்படி, 'டெண்டர்' அறிவித்தல், திட்டங்களை செயல்படுத்துதல், கட்டாய கல்வி சட்டத்தில், மாணவர்களை சேர்த்தல் போன்ற பணிகளை மேற்கொள்வதில்லை.

இதுதொடர்பாக, பள்ளிக்கல்வி செயலரை அழைத்து, மத்திய அரசு அதிகாரிகள் பல முறை அறிவுரை வழங்கியுள்ளனர். ஆனால், எந்த முன்னேற்றமும் இல்லை. அதனால், மத்திய அரசிடம் நிதி பெற முடியவில்லை.இவ்வாறு பள்ளிக் கல்வி வட்டாரங்கள் தெரிவித்தன

CPS : தமிழக அரசு ஊழியர்களுக்கு பணிக்கொடை இல்லை.

4 ஆண்டாக அவதிப்படும் ஆசிரிய பயிற்றுநர்கள் பள்ளிகளுக்கு மாற வாய்ப்பு உண்டா ?

மார்ச் 25 மற்றும் 26 இல் கணினி பயிற்சி

4 செயற்கை கோள்களை செலுத்த இஸ்ரோ அடுத்த முயற்சி!!!

இந்திய மண்ணிலிருந்து, நான்கு செயற்கைக்கோள்களை, விண்ணில் செலுத்த இஸ்ரோ திட்டமிட்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி 
நடக்கிறது.கோல்கட்டாவில், 'இஸ்ரோ' என்கிற இந்திய விண்வெளி ஆய்வு கழகத்தின் இயக்குனர், டி.ஜி.கே.மூர்த்தி, நிருபர்களிடம் கூறியதாவது: இன்னும், இரண்டு மாதங்களில், ஜி.எஸ்.எல்.வி., மார்க் - 3 ராக்கெட்டை விண்ணில் செலுத்த, 'இஸ்ரோ' திட்டமிட்டுள்ளது.

விரைவில், இந்திய மண்ணிலிருந்து, நான்கு செயற்கைக்கோள்களை விண்ணில் செலுத்தவும் திட்டமிட்டுள்ளோம். சார்க் நாடுகள் பயன் பெறும் வகையில், தனியாக ஒரு செயற்கைக்கோள் செலுத்தப்பட வேண்டும் என, பிரதமர் மோடி விருப்பம் தெரிவித்தார். அதை ஏற்று, செயற்கை கோள் தயாரிக்கப்பட்டு, அடுத்த மாதம் விண்ணில் செலுத்தப்பட உள்ளது .

சூரியன் மற்றும் சர்வதேச தட்பவெப்ப மாற்றத்தை ஆய்வு செய்ய, தனி செயற்கைக்கோள் அனுப்பவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கு, 'ஆதித்யா - எல்1' என பெயரிடப்படும். இந்த செயற்கைக்கோள், 400 கிலோ எடை கொண்டதாக இருக்கும். ஆய்வுக்காக, இஸ்ரோ பயன்படுத்தும் சாதனங்களில், 90 சதவீதம், இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை. இவ்வாறு அவர் கூறினார்.